தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

பதிலடி

மொட்டைத் தலைக்கும் முழங்-காலுக்கும் முடிச்சுப் போடுவது, பட்டுக்-கோட்டைக்கு வழிகேட்டால் கொட்-டைப்பாக்குக்கு விலை சொல்வது. கடவுள் மறுப்பு வாதத்திற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதவர்கள். இப்படித்தான் சம்பந்தமே இல்லாமல், புத்திசாலித்தனமாக பதில் சொல்லி-விட்டதாக நினைத்து வாய்நீளம் காட்டு-வார்கள். சோக்களில் தொடங்கி சுஜாதா வரை இதில் அடக்கம். கல்கி மட்டும் விதிவிலக்கா என்ன? 3.2.2008 கல்கியில் தராசு பகுதியில் இப்படி ஒரு கேள்வி - -பதில்
கேள்வி: மருந்து மாத்திரை சாப்பிட்டு டாக்டர்களிடம் செல்லும் ஆத்திகர்கள்கூட நாத்திகர்கள்தான் என சத்யராஜ் சமீபத்திய டி.வி. பேட்டியில் கிண்டலடித்திருக்கிறாரே?
பதில்: மனைவியின் உணர்வுகளை மதிக்கிறேன்; ஆகவே அவர் கோயிலுக்குச் செல்வதைத் தடுப்பதில்லை என்று பெருமை பேசும் நாத்திகர்கள் கூட உறவுகள் மூலம் பாதுகாப்பு தேடும் ஆத்திகர்கள்தான்!
கேள்விக்கும் பதிலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? கேட்ட கேள்வி பகுத்தறிவு பற்றியது. சொன்ன பதிலோ தனிமனித உரிமை பற்றியது. கேள்வியில் உள்ள பகுத்தறிவுவாதத்திற்கு நேரடியான பதிலை ஏன் கல்கியாரால் சொல்ல முடியவில்லை? (இருந்-தால்தானே சொல்ல முடியும்) பகுத்தறிவுக்கு சரியான எதிர்வாதத்தையல்லவா எடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லாம் கடவுள் செயல் என்று கூறி-விட்டு மருத்துவர்-களையும் மருந்து-களையும் தேடி ஓடலாமா? அப்படி ஓடினால் அவர் கடவுளை நம்பவில்லை; மருத்துவத்தைத்தான் நம்புகிறார் என்றுதானே பொருள். இதை எந்த ஆத்திகராவது மறுக்க முடியுமா? அதனால்-தான் கல்கியாராலும் மறுக்க முடியாமல் மழுப்பல் பதிலைத் தந்துள்ளார்.
நாத்திகராக உள்ள கணவர் தனது மனைவி ஆத்திகராக இருக்கும் பட்சத்தில் அவரது உரிமைக்குத் தடை போடுவதில்லை. காரணம், அவர் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்-பளிக்கிறார் என்று பொருள், தன் கருத்தை தன் மனைவிக்குச் சொல்லுவார்; அதனால் ஏற்படும் நன்மைகளை விலக்குவார். அவ்வளவுதான். தனது கருத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரது உரிமை என்ற அளவில் ஜனநாயகவாதியாகத் திகழ்கிறார். இதுதான் நாத்திகத்தைப் பின்பற்று-கிறவர்களின் நனி நாகரிகம்; உயரிய பண்பாடு. ஆனால் ஆத்திகர்கள் அப்படியா என்பதை கல்கியாரின் மனசாட்சியே சொல்லட்டும்.
இனமுரசு சத்யராஜ் அவர்கள் 15 ஆண்டு-களுக்கு முன் முதல்முதலாக பெரியார் திடலுக்கு வந்து உரையாற்றிய போதே இதே கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் பேசியும் வருகிறார். தற்போது பெரியார் திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் பல பேட்டிகளில் அவரது கருத்துகள் பெரும்-பாலும் பெரியார் பற்றியும் பகுத்தறிவு பற்றியுமே உள்ளது (பல சினிமா விழாக்-களிலும் வெளுத்து வாங்கிவிடுகிறார்) இதுதான் கல்கி-களுக்கு உறுத்துகிறது. அதனால்தான் இப்படி ஒரு கேள்வி. இப்படி ஒரு பொருத்தமில்லாத பதில்.
- பெரியாரிடி