தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சுயமரியாதை இயக்கம்
1929 பிப்ரவரி 17-18
வரலாறு
சிறுகதை
ஹாலிவுட் கலை - 14
கவிதை
புதையல்
சிறந்த நூலிலிருந்து
கற்பனையும்
நூல் அறிமுகம்
1929 சுயமரியாதை
தமிழர்கள் மீதான்
சமூக அநீதி்
பெட்டிச் செய்திகள்

 

 

தந்தை பெரியார்

மதச்சார்பற்ற அரசு என்பது எப்படு இருக்க வேண்டம்?

இந்திய தேசியக் காங்கிரசின் கொள்கைகளை விளக்குவதில் கீழ்க்கண்ட விஷயங்களைக் கவனிக்க வேண்டுகிறோம்:-
இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்பவர்களில் பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்பதாக மூன்று பிரிவுகள் சட்டத்திலும் அனுஷ்டானத்-திலும் பல ஆதாரங்களிலும் இருந்து வருகிறது. இந்தப் பிரிவின் படி - பண்டித நேரு பிராமணராகவும், காந்திஜி சூத்திரராகவும், அம்பேத்கர் ஹரிஜனாகவும் கருதப்படுகிறார்கள்.
இந்திய அரசாங்கம் சாதிப் பிரிவு, சாதிச் சலுகை, சாதித் தொகுதி, சாதிப் பிரதிநிதித்துவம் இல்லாத அரசாங்கமாக இருக்கும் என்று அடிக்கடி பிராமண வகுப்பில் வருகிற தலைவர்களாலும், காங்கிரஸ் பிரமுகர் - பிரச்சாரகர்களாலும் சொல்லப்பட்டு வருகிறது.
இப்போதுள்ள பிரிட்டிஷ் ஆதிக்கம் நீங்கின இந்திய யூனியன் அமைப்பு முறையிலும் சாதி வகுப்பு விஷயமாய்ச் செய்யப்படப் போகும் விதிகளில் - பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற வார்த்தை-களுக்கு இடம் அளிக்கப்--படுமா? சட்டங்கள், இந்துமத சமுதாய ஆதாரங்கள், இடங்கள் முதலிய-வைகளில் பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற வார்த்தைகள் இருக்க இடம் அளிக்கப்படுமா? அந்தப்படி இருப்பவைகளை சர்க்-கார் அங்கீகரிக்குமா? என்கின்ற விஷயம் இதுவரையில் தெளிவாக்-கப்படவில்லை.
இந்த விஷயங்கள் தெளிவாக்கப்-படாமல், சாதிகளின் பேரால் தொகுதியில்லை, பிரதிநிதித்து-வமில்லை, சலுகையில்லை என்று சொல்லப்படுவது- பிரிவினையின் காரணமாகக் கீழ் நிலையில் இருக்கும் மக்களுக்குப் பெருத்த அநீதியாகவும், குறை-பாடாகவும், அசவுகரியமாகவும், முன்னேற்றத் தடையாகவும் இனியும் இருக்க இடமாகிறது.
ஆகவே, இந்திய யூனியன் கான்ஸ்டிடி-யூஷனிலும், இந்திய தேசியக் காங்கிரஸ் கான்ஸ்டிடியூஷனிலும் - இந்திய யூனியனில் உள்ள மக்களில் அல்லது இந்துக்கள் என்கின்ற சமுதாயத்தில் - அரசியலின் பேராலும், மத இயலின் பேராலும், சமுதாய இயலின் பேராலும் பிராமணர், சூத்திரர், ஹரிஜனன் என்கின்ற பிரிவு எந்த முறையிலும் அனுஷ்டிக்கப்படமாட்டாது; இந்த வார்த்தைகள் அரசியல், மத இயல், சமுதாய இயல் கொண்ட எந்த ஆதாரங்-களிலும் உபயோகிக்கப்படமாட்டாது என்ப-தோடு, இவைகள் இருக்கவும் இடம் கொடுக்கப்பட மாட்டாது; அப்படிப்பட்ட வார்த்-தைகள் இருக்கும்படியான ஆதாரங்-களைச் சர்க்கார், காங்கிரஸ் மரியாதை செய்யாது; ஆதரிக்காது; கல்வி, கலைத் துறையிலும் இவ் வார்த்தைகளுக்கு - பிரிவு-களுக்கு இடம் இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்பவை தெளிவாக விளங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டு விட்டால், இந்த யூனியனில் வகுப்பு வாதங்களோ, வகுப்பு ஸ்தாபனங்-களோ, வகுப்புக் கலவரங்களோ என்பவை இருக்க இடமில்லாமல் போய்விடும்; வகுப்புக் குறைகளைச் சொல்லிச் சலுகைகளோ, பிரதிநிதித்துவங்களோ, உரிமைகளோ கொண்-டா-டவும் கேட்கவும் இடமில்லாமல் போய்-விடும். இந்திய யூனியனும் பிறவியின் பேரால் பிரிவு, சாதிப் பிரிவு, வகுப்பற்ற ஒரே சமுதாயமாக விளங்க முடியும்.
அந்தப்படிக்கில்லாமல், பிராமணன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற பிரிவுகளை, சாதிகளை வைத்துக் கொண்டு - இதன் காரணத்-தால் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் குறை நீங்கத் தக்கதாக சலுகைள், பிரதிநிதித்துவங்கள் இல்லையென்று தடுப்பது கொடுமையான அநீதியாகும்.
ஆகவே, இதை அரசியல் நிர்ணய சபையும், காங்கிஸ் விதிமுறை அமைப்புச் சபையும் கவனிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

- குடிஅரசு, அறிக்கை 24.4.1948


மதச்சார்பற்ற என்ற சொல்

இவர்கள் எந்த நாட்டைப் பார்த்து எந்த மொழியில் - செக்குலர் ஸ்டேட் என்று குறிப்பிட்டார்களோ, அந்த நாடு-களில் அந்த மொழிக்கு - செக்குலர் என்-பதற்கு என்ன பொருள் இருக்கிறதோ - அவர்கள் எந்தப் பொருளில் அதைப் பயன்-படுத்தியிருக்கிறார்களோ, அந்தப் பொருளில்-தானே நாமும் பயன்படுத்த-வேண்டும்? அதை விட்டுவிட்டு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, செக்குலர் என்றால் மதச் சார்பற்றது என்று பொருளல்ல; எல்லா மதங்-களையும் ஒன்றுபோலக் கருதவேண்டும் என்றுதான் பொருள் என்று பார்ப்-பனர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் ஒரு மாநாடு நடத்து-கிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும், பெண்கள் பதிவிரதைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு - பதிவிரதை என்றால் எல்லா ஆண்-களையும் தங்கள் கணவனைப் போலக் கருதி நடந்து கொள்ள வேண்டும். அது தான் பதிவிரதத் தன்மை என்று அர்த்தம் சொல்வது எவ்வளவு அயோக்கியத்-தனமானதோ, அதைவிட, அயோக்கியத்-தனமாகும் - மதச் சார்பற்ற என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்றுபோலக் கருத வேண்டுமென்பது! எனவே, மதச் சார்பற்ற என்றால், எந்த மதத்தையும் சாராத என்பதுதான் பொருள்.
(புத்தகம்: மதச்சார்பின்மையும் நமது அரசும், பதிப்பு: 1968)