தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சுயமரியாதை இயக்கம்
1929 பிப்ரவரி 17-18
வரலாறு
சிறுகதை
ஹாலிவுட் கலை - 14
கவிதை
புதையல்
சிறந்த நூலிலிருந்து
கற்பனையும்
நூல் அறிமுகம்
1929 சுயமரியாதை
தமிழர்கள் மீதான்
சமூக அநீதி்
பெட்டிச் செய்திகள்

 

 

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : கடந்த பாராளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி. சந்திப்பதற்கு முன் இந்தியா ஒளிர் கிறது என்றனர். வரும் பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து பி.ஜே.பி. ஒளிர்வது போல குஜராத் தேர்தலைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பி.ஜே.பி. பயனடையுமா?

- ஆர். ஜீவிதா, சே.பேட்டை

பதில்: குஜராத் வெற்றி என்பதால் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்பது தப்புக்கணக்கு. காங்கிரஸ், கலைஞர் போன்ற முதிய அரசியல் ஞானிகளிடம் கலந்து வியூகம் வகுத்தால் முன்பைவிட அதிக இடங்களை 2009இல் பெறக்கூடும்.

கேள்வி: தமிழக அரசு கட்டடங்கள், பாலங்கள் மற்றும் பல அரசால் கட்டப்படும் கட்டடங்களுக்கு பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், பூமி பூஜை போடுவதை ஏன் தமிழக அரசு தடுக்காமல் உள்ளது?

- சு. கொண்டல்சாமி, ஒட்டநத்தம்

பதில்: சமூக சீர்திருத்தக் குழுவினர் முதல் அமைச்சர் அவர்களைச் சந்தித்து உரிய முறையில் வற்புறுத்த வேண்டும்.

கேள்வி: மதங்களில் மண்டிய மூடநம்பிக் கைகளை எரிக்க கடவுள் அனுப்பிய பெரு நெருப்பு பெரியார் ஈ.வெ.ரா., கடவுளை வணங்குவதைவிட உணருவது தான் முழுமை யான ஆன்மீகம், பலப்பல சமய சடங்குகள் பரம்பரையின் பலம்; சில மட்டுமே மனிதனையும் இறைவனையும் இணைக்கும் உயிர்ப்பலம் எனச் சமயச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் - தினத்தந்தி பொங்கல் மலரில் பதில் கூறியுள்ளாரே?

- மன்னை சித்து, மன்னார்குடி - 1

பதில்: அவர் சமய சொற்பொழிவாளர். அதனால் அப்படி சமயத்திற்கு ஏற்ப பேசுகிறார்.

கேள்வி: பஞ்ச கவ்வியம் என்ற ஒன்றைத் தயாரித்து அதை அருந்தினால், உடம்புக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்களே? அது பற்றி...

- பாவலர் அறிவரசன், திருலோக்கி

பதில்: நீண்டகாலமாக பார்ப்பனர் செய்யும் வேலைதானே இது! புதிதல்ல. எத்தனை டிகிரி முட்டாள் என்பதை அளக்க முடியும்.

கேள்வி: 90 வயதைக் கடந்த நிலையிலும், சராசரி ஆண்டு ஒன்றுக்கு 200 கூட்டங்களில் உத்வேகத்துடன் உரையாற்றிட, தந்தை பெரியார் அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது!...?

- ந. அதியமான் பரிதி, தருபுமரி - 1

பதில்: உடல் வலிமையைவிட மனத் திண்மையும், கொண்ட கொள்கையின் உறுதியும்.

கேள்வி: திராவிடர் கழகம் தோன்றி நூற்றாண்டு விழா கொண்டாட நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கழகம் - சமுதாயத்திற்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் செய்த தொண்டினை சிறு நூலாக வெளியிடுவீர்களா?

- கோ. ரமேஷ், சே.பேட்டை, செஞ்சி வட்டம்

பதில்: நல்ல யோசனை - சாதனைகள், வெற்றிகள் கொண்ட களஞ்சியங்களை உருவாக்கலாம்.

கேள்வி: இரட்டை வாழ்வு வாழும் தலைவர்கள் - மக்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்துக் கொள்வார்களா?

- வடகாடு கரு. காளிமுத்து

பதில்: பூனை கண்ணை மூடினால் பூலோகம் அதற்கு இருண்டு விடுவது வாடிக்கைதானே?

கேள்வி: பெற்றோர் உயிருடன் இருந்தபோது உதவாத கவனிக்காத பிள்ளைகள் - தை அமாவாசைக்கும், ஆடி அமாவாசைக்கும் தானம் கொடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்களே!

- வீர. செல்வம், பூம்புகார்

பதில்: ஊர் மெச்ச, நரக பயத்தை போக்கும் மூடநம்பிக்கையான சுயநலம் - அவ்வளவுதான்!

கேள்வி: அரசியலில் விஜயகாந்த் தாக்குப் பிடிப்பாரா?

- அ. தமிழ்குமரன், ஈரோடு

பதில்: பொதுத் தேர்தல் - கனவுகளைக் கலைத்து விடுவது உறுதி!

கேள்வி: அனைத்துக் கட்சிக்காரர்களும் சாதியில்லை, மதமில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் சாமியில்லை, பூதமில்லை என்பதை மட்டும் ஒத்துக்கொள்ளத் தயங்குகிறார்களே! ஏன்?

- உள்ளிக்கோட்டை விசயலெட்சுமி, மன்னார்குடி

பதில்: பலவீனம்; பயம்; பேராசை - இவைகளே மூல காரணங்கள்