தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சுயமரியாதை இயக்கம்
1929 பிப்ரவரி 17-18
வரலாறு
சிறுகதை
ஹாலிவுட் கலை - 14
கவிதை
புதையல்
சிறந்த நூலிலிருந்து
கற்பனையும்
நூல் அறிமுகம்
1929 சுயமரியாதை
தமிழர்கள் மீதான்
சமூக அநீதி்
பெட்டிச் செய்திகள்

 

 

வரலாறு

ஒரே இனம், ஒரே மொழி பேசுகின்ற மக்களது நாட்டில் அவர்களது மொழி, எண்களைத்தான் அவர்களது நாட்டின் ஆட்சி மொழியாக எண்களாகவும் அந்த நாட்டில் பயன்படுத்துகிறார்கள்.
ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளையும் வடக்கு தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகளிலும் நான்கு மாறுபட்ட இன மக்களை கொண்ட இந்தியாவிற்கு உலக நாடு-கள் அனைத்தும் பொது மொழியாக ஏற்று கொண்ட ஆங்கிலம் மட்டுமே இந்தியர்களை இணைக்கும் பொதுமொழியாகவும், ஆட்சி மொழியாகவும் விளங்கவேண்டுமே அன்றி தேவநாகரி (சமஸ்கிருத) எழுத்துக்களோடு எண்-களைக் கொண்ட ஹிந்தியோ, அல்லது வேறெந்த மொழியோ அதன் எண்களோ இருக்கக் கூடாது. ஆட்சி மொழியாக்கிவிடக் கூடாது.
இளவரசராக மேதகு அய்ந்தாம் ஜார்ஜ் இருந்த காலத்தில் இந்திய வைசிராய் லார்டு கர்சன் பிரபு 1905-இல் வங்கத்தை மத அடிப்படையில் கிழக்கு, மேற்கு என இரண்டு மாநிலங்களாக்கினார். அவ்விரு மாநிலங் மக்களது எண்ணங்களை அறிந்துகொள்ள இந்தியாவிற்கு இளவரசர் தன் மனைவி மேரியுடன் இந்தியாவிற்கு வந்தார். 1905-இல் பம்பாய்க்கு வந்தார். 1906 ஜனவரி 24-இல் சென்னைக்கு வருகை புரிந்தார். சென்னை நகராட்சி, இராணி விக்டோரியா பொதுக்-கூட்டத்தில் பிரமாண்டமான பாராட்டுக் கூட்டத்தைக் கூட்டி ஓர் நினைவுப் பரிசையும் இளவரசருக்கு வழங்கியது.
1882-இல் இருந்த நகராட்சி மன்றத்திலே கமிஷனராக விளங்கிவந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர், இளவரசரது பாராட்டுக் கூட்டத்தில் பேசும் பொழுது, மதராச பட்டணம் எனப்பட்டு வந்த தனது தொகுதி ஆங்கில வர்த்தக குழுவினரால் Black Town அதாவது கருப்பர் நகரம் எனப் பெயர் மாற்றப்-பட்டுள்ளது எனக் கூற, அதற்கு இளவரசர் இனி அது கருப்பர் நகரமல்ல. இந்தியர்களாகிய நீங்கள் என் மக்களே. இனி அந்நகரம் ஜார்ஜ் டவுன் என்றுதான் அழைக்கப்படும் என்றும் இந்தியர்களாகிய நீங்களும் என் மக்களே என்றும் கூறினார்.
சொல்லோடு மட்டும் நிறுத்திக் கொள்-ளாமல் இந்தியராகிய திரு. தியாகராயரது இல்லத்திற்கே இளவரசர் சென்று அவரிடம் இந்திய இனங்களைப்பற்றியும் கேட்டு தெரிந்து-கொண்டார்.
இளவரசர்களையும் அவரது மனைவி மேரியையும் ஆங்கிலேயரின் ஆட்சியையும் புகழ்ந்து பாராட்டி, அதற்கு முன் முகமதியர் ஆட்சியின்போது அவர்களால் இந்தியர்கள் பட்ட துன்பங்களையும் பாரதி ஒரு கவிதையாக வடித்து அதை 1906 ஜனவரி 9-ல் சுதேச மித்திரன் இதழில் வெளியிட்டார். அதே ஆண்டில் பாரதி தன் மனதை முற்றிலும் மாற்றிக் கொண்டு திலகரது தீவிரவாத கொள்கையை முழு-மையாக ஏற்று அதன் வழியில் செலவிட்டார்.
திலகரது தீவிரவாதத்தில் ஒன்று இந்திய நாட்டை பாரத தேசம் எனப்பட வேண்டும் என்பது, மற்றொன்று ஆரியரின் தேவ நாகரி (சமஸ்கிருதம்) எழுத்துக்களும் எண்களைக் கொண்ட ஹிந்தியை இந்தியர்களை இணை-க்கும் பொது மொழியாகவும் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் கொண்டு வரவேண்டும் என்பது. திலகரது மொழிக் கொள்கையே தனது கொள்கையாகக் கொண்ட பாரதி இந்தியாவின் பொது மொழியாக ஆங்கிலம் ஆகிவிடக் கூடாது.
தமிழர்கள் ஹிந்தியில் பயிற்சி பெறுதல் மிகவும் அவசிமென எழுதி அதை இந்தியா என்ற இதழில் 1906 டிசம்பர் 15-இல் வெளியிட்டார். அவ்விதழில் The Hindi page - ஹிந்தி பாஷைப் பக்கம்.
இந்தப் பக்கத்திலே ஹிந்தி பாஷையிலிருந்து சில விஷயங்கள் எழுதி அதை மொழி பெயர்த்துக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணம் கொண்டிருக்கிறோம். தமிழர்களாகிய நாம் இந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். தமிழ் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க ஹிந்தி பாஷையை அப்பியஸிக்க என்ன அவசியம் இருக்கிறது என்று சொல்லுகிறோம்.
இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலேயே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும்.
தமிழர்கள் தமிழும், ஹிந்தியும், தெலுங்-கர்கள் தெலுங்கும் ஹிந்தியும் பெங்காளத்தார் பெங்காளியும் ஹிந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்-களானால், நமக்குப் பொது பாஷை ஒன்றிரு-க்கும். ஹிந்தி இல்லாமல் இப்போது நமக்குள் அதிகமாகப்பழக்கமுற்று வருகின்ற இங்கிலீஷ் பாஷையே, பொது மொழியாகி விடக்கூடாது.
இங்கிலீஷ் பாஷை அன்னியருடையது. நமது நாட்டிற்குச் சொந்தமானதன்று. நமது நாட்டில் எல்லா வகுப்பினர்களுக்கும் ஸ்திர-மாகப் பதிந்து விடும் இயற்கை உடையதன். ஹிந்தியோ அங்ஙனமன்று
முதலில் நாகபியிலே ஹிந்தி பாஷை எழுதப்பட்டிருக்கிறது. அதற்கப்பால் தமிழ் லிபியிலே (கிரந்தம் கலந்து) மேற்படி பாஷை எழுதப்படுகிறது. அதற்கப்பால் தமிழ்மொழி பெயர்ப்புக் கொடுத்திருக்கிறோம். ராஜபுத்திர மஹா வீரனாகிய பிரதாபஸிங், மஹாராணா-வின் சரித்திரம் எழுதப்பட்டிருப்பதால், ஹிந்தி பாஷையில் விருப்பமில்லாதவர்கள்கூட இதை கருத்துடன் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்த இதழிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் ஹிந்தி பக்கமென்று மூன்று பத்திகள் ஒதுக்கப்-பட்டு பிரதாபஸிங் மஹா ராணாவின் சரித்திரம் எழுதப்பட்டு வருகிறது என்று உள்ளது.
ஒரு அணா நாணயம்
தீவிரவாதியான திலகரும் அவரது ஆதரவாளர்களும் இந்தியாவை இணைக்கும் பொதுமொழியாகவும், ஆட்சி மொழியாகவும் ஆகிய மொழிகளை ஹிந்தியை கொண்டுவர முயலுகிறார்கள் என்பதை அறிந்த இளவரசர் அய்ந்தாம் ஜார்ஜ் 1907-இல் முதன் முதலில் ஒரு அணா நாணயத்தை அறிமுகப்படுத்தி, அந்த நாணயத்தில் ஒரு புறம் முடி சூட்டிய தலையுடன் தனது தந்தை மேதகு ஏழாவது எட்வர்டு மன்னரது முகத்தையும், மறுபுறம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு திசைகளிலும் வாழும் நான்கு இன மக்களின் இனத்திற்கு ஒரு மொழியான முறையே ஹிந்தி, தெலுங்கு, பெங்காளி, உருது ஆகிய மொழிகளில் நாணயத்தின் மதிப்பையும், மத்தியில் உலகப் பொது எண்ணில் ஒன்றும் என்றும் ஆங்கிலத்தில் ஹயே (அணா) என்றும் அதன் மத்தியில் அச்சிட்டு வெளியிடச் செய்தார்.
இந்தியாவின் பொது மொழியாக ஆங்கிலம் தான் விளங்கவேண்டும்
1890-இல் தோற்றுவிக்கப்பட்ட திராவிட மகா சபையின் தலைவரான அயோத்தி தாச பண்டிதர் இந்திய நாட்டில் ஆங்கிலம்தான் பொது மொழியாக விளங்கவேண்டும், ஹிந்தி, சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் அனைத்தையும் பொது மொழியாக்குவது என்பது இயலாத காரியமாகும் என்று எழுதி தமிழன் இதழில் 1911 பிப்ரவரி 22-இல் வெளியிட்டார். அவ்விதழில்:
இந்திய நாட்டில் ஆங்கிலம் தான் பொது மொழியாக விளங்கவேண்டும். ஆங்கிலத்திற்குப் பதிலாக ஒரு சிலர் ஹிந்தியையும் ஒரு சிலர் சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்ளும்படி கூறி வருகிறார்கள்.
நல்லொழுக்கங்களை கெடுக்கும் வகையிலும், ஜாதி பேதங்களை தூண்டும் கட்டுக் கதைகள் நிறைந்த ஹிந்தி சமஸ்கிருதத்தையும் மற்ற இந்திய மொழிகள் அனைத்தையும் பொது மொழியாக்குவது என்பது இயலாத காரியமாகும்.
ஆங்கிலம் கற்பதைவிட்டுவிட்டு ஹிந்தி, சமஸ்கிருதத்தை கற்றால் உயர்வு, தாழ்வு, ஜாதி மதபேதங்களும், மத ஆச்சாரங்களும் அற்றுப்போய் விடுமா? ஹிந்தி சமஸ்கிருதத்தை அனைவரும் கற்றால் ஜாதி சமயங்கள் இல்லாதவரும் (பஞ்சமர்களாகிய இனக் கலப்பில்லாதவர்களாகிய திராவிடர்களும்) ஜாதி, சமயங்களை உண்டாக்கிக் கொண்டு அதனால் வீணாக பிரிவினைகள் மேலும் மேலும் உண்டாகி, ஒற்றுமை குலைந்து சமூகச் சீர்கேடுதான் நேரிடும்.
ஹிந்தி கற்றவர்கள் அம்மொழியின் அறிவைக் கொண்டு இதுவரையில் என்ன கண்டு பிடித்தனர் அல்லது இந்த நாட்டிற்குத்-தான் என்ன நன்மைகள் செய்துள்ளனர் என்றால் ஒன்றுமில்லை. காசிக்குப் போய் வருவோர் ஹிந்தியை கற்றால் போய்வரும் வழியில் பேச்சுத் துணைக்-குத்தான் அம்மொழி பயன்படும். ஆங்கிலத்தை உலகநாடுகள் அனைத்தும் பொது மொழியாக ஏற்றுக் கொண்டு மதிப்பதால் ஆங்கிலத்தை கற்றோர் உலகில் அனைத்து நாடுகளுடன் தொடர்பு கொண்டு பேசி பழகி அம்மக்களது நட்பை பெறுவதுடன், கல்வியிலும் அறி-வாற்றலிலும் மிக்கவராய் சிறந்து விளங்கு-கிறார்கள்.
ஆங்கிலத்தைக் கற்றவர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் பொறாமைப்படும் செயலை விட்டு ஜாதி, சமய பேதங்களையும் மறந்து மனிதனை மனிதனாகப் பாவிக்கும் விவே-கமுடையவர்களாகவும், கல்வி அறிவு நிறைந்த-வர்களாகவும் விளங்குகிறார்கள். எனவே ஆங்கிலத்தைக் கற்று இந்தியா முழுவதும் ஆங்கில மொழியை பரவச் செய்வோமாயின் ஆங்கிலத்தை கற்றறிந்தவர்களைப்போல் அனைவரும் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து மனிதர்களை மனிதர்களாகப் பாவிக்கும் எண்ணத்துடன் ஒன்றுபட்டு அமைதியுடன் வாழ்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.