தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சுயமரியாதை இயக்கம்
1929 பிப்ரவரி 17-18
வரலாறு
சிறுகதை
ஹாலிவுட் கலை - 14
கவிதை
புதையல்
சிறந்த நூலிலிருந்து
கற்பனையும்
நூல் அறிமுகம்
1929 சுயமரியாதை
தமிழர்கள் மீதான்
சமூக அநீதி்
பெட்டிச் செய்திகள்

 

 

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஆசிரியர்: என். சொக்கன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018 பக். 168 ரூ. 75
நூலிலிருந்து...
நெப்போலியன் பதினைந்து வயதிலேயே, தன்னுடைய சக மாணவர்களைக் காட்டிலும் ராணுவம், போர் முறைகளைப் பற்றி நிறைய படித்துத் தெரிந்துகொண்டிருந்தான். அதை-யெல்லாம் நிஜத்தில் செயல்படுத்திப் பார்ப்-பதற்காக, பல புதுமையான விளையாட்டு-களைக் கண்டறிந்தான்.
குளிர்காலத்தில் பெய்கிற பனியைக் கொண்டு, நெப்போலியனும் அவனுடைய தோழர்களும் பொம்மைக் கோட்டை ஒன்றைக் கட்டுவார்கள். அதன்பறிகு, அந்தக் கோட்டைக்-குள் சிலர், அதற்கு வெளியே சிலர் என்று இரண்டு குழுக்களாகப் பிரிந்து கொள்வார்கள்.
பொம்மைக் கோட்டையைத் தாக்கித் தகர்ப்பது தான் நெப்போலியனின் நோக்கம். எதிர் அணியில் இருக்கிறவர்கள், அந்தத் தாக்கு-தலைத் தடுத்து, தங்களுடைய கோட்டையைக் காப்பாற்ற வேண்டும்.
இதற்காகத் தன்னுடைய அணியில் இருக்கும் மற்ற மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்துத் தயார் செய்வது, தாக்குதலுக்குத் திட்டமிவது, சூழ்நிலைகேற்ப அதில் மாற்றங்கள் செய்வது செயல்படுத்துவது என்று ஒவ்வொரு விஷயத்-திலும் நெப்போலியன் மிகக் கவனமாக ஈடுபடுவான்.
இதனால், வெளியிலிருந்து பார்க்கிறவர்-களுக்கு அது ஒரு விளையாட்டாகத் தோன்-றாது. நிஜமாகவே ஒரு கோட்டையைக் கைப்பற்ற விரும்புகிறவர்கள் எப்படியெல்லாம் யோசிப்பார்கள் என்று கற்பனை செய்து, அதற்காகத் தான் புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொண்ட போர் நுணுக்கங்களை-யெல்லாம் பயன்படுத்துவான் நெப்போலியன்.

ராணுவத்தில் ஒரு சாதாரணப் படை வீரனாகச் சேருகிற வயது, தகுதி கூட அப்-போது அவனுக்கு இல்லை. ஆனாலும், மனத்தில் ஒரு போர்த் தளபதி போல் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.
நெப்போலியனின் புதிய ஆட்சிக்கு எதிரான சலசலப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மிகக் குறுகிய காலகட்டத்-திற்குள், உள்நாட்டுக் கலவரங்கள் முற்றிலுமாக நின்று போய்விட்டன.
இதனால், நெப்போலியன் எல்லைப்புறப் பாதுகாப்பில் கவனம் செலுத்த முடிந்தது. எதிரி நாடுகள் அமைக்கும் ராணுவங்களைப் பற்றித் தகவல் திரட்டி, உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்வது சாத்தியமானது.
உண்மையில், நெப்போலியனுக்கு யாரு-டனும் போரிட வேண்டிய அவசியமோ, விருப்பமோ அப்போதைக்கு இல்லை. காரணம், உள்நாட்டில் சரி செய்யவேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருந்தன. ஆகவே, பிற அய்ரோப்-பிய நாடுகளுடன் நல்லுறவு வளர்த்துக் கொள்வதையே நெப்போலியன் விரும்பினார்.
ஆனால், மற்ற நாடுகள் நெப்போலியனை மதிக்கத் தயாராக இல்லை. பிரான்ஸில் மறுபடியும் மன்னராட்சி கெண்டு வரப்படும்-வரை, அங்கே அமைகிற எந்த ஆட்சியையும் நாங்கள் அங்கீகரிக்க முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.
இந்தப் பிடிவாதத்துக்கு அடிப்படைக் காரணம், நெப்போலியன் முயற்சிகளால் பிரான்ஸில் பெரிய அளவு மாற்றங்கள் நிகழ்ந்தது, எல்-லோரும் சந்தோஷமாக, தன்னிறைவோடு வாழத் தொடங்கி விட்டார்கள் என்றால், அந்த முன்னு-தாரணம் மற்ற அய்ரோப்பிய தேசங்களில் நிச்சயமாக ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்-குமோ என்ற பயம்தான்.
இன்றைக்கு பிரான்ஸ் ஆட்சியைப் பிடித்தவர், நாளைக்கே அது போதவில்லை என்று அக்கம் பக்கத்து ராஜ்ஜியங்-களைக் கைப்பற்ற வந்து-விட்டால்? அது இன்னும் விபரீதமாகிவிடும்.
இப்படிப் பல காரணங்-களால், கடைசிவரை அவர்கள் நெப்-போலியனின் ஆட்சியை அங்கீகரிக்கவே இல்லை. அலட்சியப்படுத்தினார்கள்.
இதனால், அடச்சே! சும்மா இருக்க நினைத்தாலும் விட மாட்டேன் என்கிறார்-களே என்று போருக்காகத் திட்டமிட ஆரம்பித்தார் நெப்போலியன். உள்நாட்டுச் சீர்திருத்தங்களைக் கொஞ்சம் ஒத்திப் போட்டு-விட்டு, ராணுவத்தைப் பலப்படுத்தத் தொடங்கினார்.
பிரான்ஸின் தலைமைக் குடிமகனாகப் பொறுப்பேற்ற பிறகு, நெப்போலியன் சந்தித்த முதலாவது ராணுவச் சவால், ஆஸ்திரியர்-களிடமிருந்து.
அதே பழைய கதைதான். ஆஸ்திரியர்கள் மீண்டும் இத்தாலிக்குள் புகுந்தார்கள். முன்பு நெப்போலியன் ஜெயித்த பகுதிகள் பலவற்-றையும் கைப்பற்றினார்கள்.
இருங்கடா, இதோ வந்துட்டேன் என்று புறப்பட்டார் நெப்போலியன்.
அப்போது பிரெஞ்சுப் படைகள் அத்தனை வலிமையோடு இல்லை. சரியான போர்ப் பயிற்சி இல்லாமல் ஒழுங்கற்றுச் சிதறியிருந்-தார்கள். அவர்களையெல்லாம் பழையபடி ஒருங்கிணைத்க் கொண்டுதான் கிளம்ப வேண்டியிருந்தது.
கடுமையான குளிர்காலம் அது. ஆனால், அதையெல்லாம் பார்த்துத் தயங்கிக் கொண்டிருந்தால், ஆஸ்திரியர்கள் இத்தாலி-யைப் பிய்த்துச் சாப்பிட்டு விடுவார்-கள். ஆகவே, தேவையான பாதுகாப்பு ஏற்பாடு-களைச் செய்து கொண்டு, நெப்-போலியனின் படை உடனடி-யாகப் புறப்பட்டது.
ஆஸ்திரிப் படைகள் சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து அவர்களைத் தாக்கிச் சிதறடிக்க வேண்டும் என்பதுதான் நெப்-போலியனின் திட்டம். இதற்-காக ஆல்ப்ஸ் மலைத் தொட-ரைத் தேர்ந்தெடுத்தார்.
நெப்போலியனின் படையினருக்கு, அவருடைய இந்த யோசனை பெரும் அதிர்ச்-சியளித்தது. காரணம், இந்தக் குளிர் காலத்தில், ஆல்ப்ஸ் மலை மீது ஏறு-வதைப் பற்றி யாராலும் கற்பனை கூடச் செய்ய முடிய-வில்லை. தவிர, இத்தனை வீரர்கள், குதிரைகள், துப்பாக்-கிகள், பீரங்கிகளோடு ஆல்ப்ஸ் மலையைத் தாண்டிக் கடப்பது மிக மிகச் சிரமம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
அதுதான் எனக்கு வேண்டும் என்றார் நெப்போலியன், குளிர் காரணமாக, ஆல்ப்ஸ் மலைப்பக்கம் யாரும் வரமாட்டார்கள் என்று ஆஸ்திரியப் படைகள் அலட்சியமாக இருக்கும்-தானே? அந்த நேரம் பார்த்து, நாம் அவர்களை வீழ்த்திவிடலாம்.
என்னப்பா இது, பைத்தியக்காரத்தனமான யோசனையா இருக்கு என்று பிரெஞ்சுப் படை மொத்தமும், பல்லைக் கடித்துக்கொண்டு மலையேறத் தொடங்கியது. கோவேறு கழுதை மேல் ஏறிக்கொண்டு நெப்போலியன் அவர்-களை வழி நடத்திச் சென்றார். கடும் பனி காரணமாக, வழக்கத்தைவிட மிக மெதுவாக, மிக எச்சரிக்கையாக அவர்கள் முன்னேறிச் சென்றார்கள்.
நெப்போலியனின் மிகப் பெரிய பலம், அவருடைய கனவு காணும் குணம்தான். முன்னேறிய பிரான்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பிரம்மாண்டமான கனவை அவர் தனக்குள் வளர்த்துக் கொண்டி-ருந்தார். அதை நிஜமாக்குவதற்கு என்ன-வெல்லாம் செய்ய வேண்டும் என்கிற ஒரே சிந்தனைதான் அவருக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது.
பிரான்ஸை முன்னேற்றுவதற்கு நெப்-போலியன் எடுத்துக் கொண்ட முதலாவது விஷயம், சமூகச் சமநிலை.
பிரான்ஸ் மட்டுமல்ல, அப்போது பெரும்-பாலான உலக நாடுகளில் இந்தச் சமூகச் சமநிலை இல்லை. ஒரே சமூகத்தில், சிலர் மேலும் மேலும் பணக்காரர்களாக, மதிப்போடு வாழ்வதும் வேறு சிலர் அடிமைகளாகக் கீழே தள்ளி நசுக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக இருந்தது.
இந்த அவலம், பிரான்ஸில் இனி தொடரக்-கூடா என்றார் நெப்போலியன். எல்லோரும் சமம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், யார் வேண்டுமானாலும், எந்த நிலையிலிருந்தும் எந்தப் பதவிக்கும் உயர முடியும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
இதற்கு, தன்னையே ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்டார் நெப்போலியன். ஒரு சாதாரணப் படை வீரன் என்கிற நிலைமையி-லிருந்து, நாட்டின் முதல் குடிமகன் என்கிற பதவிக்குத் தன்னால் உயர முடிந்திருக்கிறது என்றால், மற்றவர்களாலும் அது முடியும், முடியவேண்டும். அடுத்தப்படியாக, பிரெஞ்சுச் சட்டங்களை ஒழுங்குப்படுத்துகிற முயற்சியில் இறங்கினார்.
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, அந்நாட்டின் சட்டங்கள், அதற்கேற்ப மாற்றம் செய்யப்பட வில்லை. இதனால், மக்களாட்சி அமைத்தும், சட்டங்கள் பழைய ராஜா காலத்துச் சாயம் பூசிக் கொண்டிருந்தன. மக்களுக்கு முழு உரிமைகள் சென்று சேரவில்லை.
அன்றைய பிரான்ஸில், நெப்போலியன் கொண்டு வந்த சில முக்கியமான சட்ட மாற்றங்கள்:
கல்வி உரிமை: எல்லோருக்கும் கல்வி, பொதுப் பள்ளிகள், அனைவருக்கும் ஒரே-மாதிரியான பாடத் திட்டம். பிரெஞ்சுச் சமூகத்தில் எல்லாத் தரப்பினரும் படிக்க ஆரம்பித்ததும் படைக்க ஆரம்பித்ததும் சமூக முன்னேற்றத்துக்குப் பங்களிக்க ஆரம்பித்ததும் நெப்போலியனின் காலத்தில்தான்.
கருத்துச் சுதந்தரம்: அரசாங்கத்தை, ஆட்சியாளர்களை யார் வேண்டுமானாலும் விமரிசிக்கலாம்.
- பெண் உரிமை சார்ந்த சட்டங்கள்
- யாரும் எந்தத் தொழிலும் செய்யலாம் என்கிற சம உரிமை
- நில உரிமைச் சட்டங்கள்
- திருமண / விவாகரத்துச் சட்டங்கள்
- எல்லோருக்கும், சிறுபான்மையினருக்குக் கூட மத உரிமைகள்: அப்போது உலகெங்கும் ஒடுக்கப்பட்ட யூதர்கள் கூட, நெப்போலியன் ஆட்சியில் அடிப்படை உரிமைகளோடு வாழ முடிந்தது.
- அரசு நிர்வாகத்தில் மத குருமார்கள் / சர்ச் தலையிடாமல் தடுப்பதற்கான சட்டங்கள்.
பெரும்பாலான சட்டங்கள், மத்தியதரக் குடும்பங்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்-பட்டிருந்தன. இவர்கள்தான் நாட்டில் பெரும்பான்மை என்பதால், அவர்களுடைய நலன் காக்கும் வகையில் சட்டங்கள் அமைய வேண்டும் என விரும்பினார் நெப்போலியன்.