தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சுயமரியாதை இயக்கம்
1929 பிப்ரவரி 17-18
வரலாறு
சிறுகதை
ஹாலிவுட் கலை - 14
கவிதை
புதையல்
சிறந்த நூலிலிருந்து
கற்பனையும்
நூல் அறிமுகம்
1929 சுயமரியாதை
தமிழர்கள் மீதான்
சமூக அநீதி்
பெட்டிச் செய்திகள்

 

 

கற்பனையும் அறிவியலும்

கற்பனையும் அறிவியலும் வெவ்-வேறானவை. ஆனால் இரண்டையும் முடிச்சுப்போட்டு பொய் பேசிப் புலம்பும் மதம் ஒன்று உள்ளது. அது பார்ப்பன மதம் என்ற வேதமதம். அதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்துமதம் என்று பெயர் சூட்டப்-பெற்றது. சூட்டியது யார் என எழுதப் போனால் அது நீளும். அதைவிட்டு விடுவோம். பார்ப்பனீயம் தான் வாழ - வாய்க்கு வந்ததை-யெல்லாம் உளறி அவையெல்லாம் சடங்குகள் சாஸ்திரங்கள் என நடைமுறைப்படுத்தி விட்டது. அதையும் நம்பும் தமிழர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.
நன்றாக நீங்கள் கவனத்தீர்களேயானால் உங்களுக்குத் தெரியும். ஏதாவது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டால், அது எங்கள் வேதங்களில் அன்றே சொல்லப்-பட்டுள்ளது என்று புளுகுவார்கள்.
பறவையைக் கண்ட மனிதன் ஏன் தானும் பறக்கக்கூடாது எனக் கருதினான். உடலில் ரெக்கையைக் கட்டிப் பறந்து பார்த்தான். பறக்க முடியவில்லை. பின்னர் தொடர்ந்து முயன்றான். ரைட் சகோதரர்கள் என்னும் அறிவியல் அறிஞர்கள் விமானம் ஒன்றை வடிவமைத்து பறந்து சென்று சாதித்தார்கள். அதாவது காற்றழுத்தம், அதன் போக்குகளும் கண்டு அதற்கேற்ப வடிவமைத்து விமானத்தை உருவாக்கினார்கள். இன்று அது பலநூறு கி.மீ. வேகத்தில் பறக்கும்விமானம் வரை வந்து விட்டது. இதைக் கண்டுபிடிப்பு வந்தவுடன் இங்குள்ள இந்து மதச் சிரோன்மணிகள் புளுகினார்கள். எங்கள் வேத இதிகாசங்களில் புஷ்பக விமானம் இருந்தது; அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்றான். இராவணன் சீதையைத் தூக்கிப் பறந்தான்; அப்படியே பாய்-போன்ற பொருளில் உட்கார்ந்து கொண்டு பறந்து சென்றார்கள் என்றெல்லாம் புளுகினார்கள்.
இவர்கள் சொல்லும் இந்த இத்தியாதி இத்தியாதிகளுக்கும் இன்றைய விமானங்-களுக்கும் வடிவமைப்பில் நிறைய வேறு-பாடுகள் உண்டு. கற்பனையில் கற்கோட்-டைகூட பறக்கலாம். ஆனால் நிஜத்தில் பறக்க வேண்டுமானால் அது எப்படிப் பறக்கிறது என்பதை காரணகாரிய விளக்கங்களோடு அதன் தொழில்நுட்பத்தை விளக்கி சோதித்துக் காட்டவேண்டும்.

காரணகாரிய விளக்கமெல்லாம் சொல்லா-மல் அவர் கடவுள், சர்வசக்தி பெற்றவர் அப்படியே பறப்பர் என்றெல்லாம் கற்பனை-யைக் காட்டி அந்த விமானம் தான் இதற்-கெல்லாம் முன்னோடி என்று இன்றும் புளுகி வருகிறது பார்ப்பனீயம். சரி - ஒரு வாதத்திற்கு அதெல்லாம் இருந்திருக்கலாம் என்று ஒத்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அந்த புஷ்பக விமானமெல்லாம் இப்போது எங்கே போனது? அன்று பயன்படுத்தியவர்கள் அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருக்கலாமே? குறைந்த பட்சம் எப்படிப் பறந்தார்கள்; அதற்-கான தொழில் நுட்பம் என்ன என்பதையாவது எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கலாமே?
எதனையும் நாங்கள்தான் அன்றே செய்-தோம் என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் புளுகுவதுதான் பார்ப்பனியம். இப்போது இக்கட்டுரையை எழுத வந்த காரணம், மருத்துவ அறிவியலையும் கொச்சைப்படுத்த இந்து மதம் துணிந்து விட்டதால் தான்.
பிரபல செக்ஸ் டாக்டர் ஒருவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் டாக்டர் பிரகாஷ். இணைய தளத்தின் மூலம் ஆபாசப் படங்களைக் காட்டி வியாபாரம் செய்து, அதனால் கைதாகி அண்மையில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்-பட்டுள்ளார்.
இந்த டாக்டர் பிரகாஷ் 15 வயதிலிருந்து மகாபாரதம் படித்தவராம். இப்போது சிறையில் மகாபாரதத்தை இங்கிலீசில் மொழி பெயர்த்து வருகிறாராம். மகாபாரதத்தை மொழி பெயர்க்கும் அளவுக்குப் படித்ததாலோ என்னவோ செக்ஸ் டாக்டராகப் புகழ் பெற்று விட்டார் போலும்.
இந்த டாக்டர் தனது டேமேஜ் ஆன இமேஜை மகாபாரதம் மூலமாக தூக்கி நிறுத்த முடிவு செய்துள்ளார் போல. இப்ப நம்ம கண்டுபிடிச்சிருக்கிற பல விஷயங்கள் மகாபாரதத்-திலேயே சொல்லப்பட்டிருக்கு என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
ஆண்மைக் குறைவு பற்றியும், டெஸ்ட் டியூப் பேபி பற்றியும் அப்பவே சொல்லப்பட்டிருக்கு. அதை எல்லாம் என் புஸ்தகத்தில் விளக்-கியிருக்கேன் என்ற பிரகாஷ் துரியோதனின் அப்பா திருதராஷ்டிரன் தனக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலையில் இருந்தான். மனைவி காந்தாரியும் குழந்தைக்காக ஏங்க - துர்வாச முனிவரிடம் சென்று தங்கள் குறையை சொன்னார் மன்னராக இருந்த திருதராஷ்டிரன். துர்வாச முனி-வரும் மன்னருக்காக ஒரு யாகம் வளர்க்-கிறார். அதனால் காந்தாரி கர்ப்பமானாள். ஆனால் 11 மாதம் ஆகியும் குழந்தை பிறக்க-வில்லை. அதனால் மீண்டும் ஒரு யாகம் நடத்தி குழந்தை பிறக்க வைக்கிறார் துர்வாசர். ஆனால் காந்தாரிக்குபிறந்த குழந்தை கை, கால், தலை என்று இல்லாமல் ஒரு மனிதப் பிண்டமாக இருக்கிறது. இதனால் மனம் வெதும்பி துர்வாச முனிவரிடம் புலம்புகிறான் திருதராஷ்டிரன். துர்வாசர் அந்த மனிதப் பிண்டத்தை 100 துண்டாக்கி அவற்றை மண்பானையில் அடைத்து உயிரணுக்களைச் சேர்த்து பதப்-படுத்துகிறான். 90 நாட்களுக்குப் பிறகு அந்த பானையில் இருந்து முதல் குழந்தையாக துரியோதனன் வெளியே வருகிறான். அதன் பின் மற்ற 99 கவுரவர்களும் வருகிறார்கள். மண்பாண்ட டெக்னாலஜிதான் டெஸ்ட் டியூப் டெக்னாலஜி. ஒரே மாதிரியான 100 பேரை உருவாக்கி குளோனிங் முறையையும் அப்போதே சொல்லிவிட்டார் வியாசர். இவை எல்லாம் மொழிபெயர்ப்பில் அடிபட்டுப் போய்விட்டன. அதைப் பற்றி என் புத்தகத்தில் விவரித்திருக்கிறேன். (நக்கீரன், 13.2.2008) என்கிறார் இந்த செக்ஸ் டாக்டர். எப்படி இருக்கிறது கதை. மகாபாரதக் கதைப்படியான செய்திகள் முழுக்க முழுக்க கற்பனையே தவிர அறிவியல் அல்ல. மனிதப் பிண்டத்தை 100 துண்டாக்கினால் அது 100 மனிதப் பிண்டங்களாகத்தான் ஆகும். அதை மண்பாண்டத்தில் அடைத்து வைத்தால் நாற்றமெடுத்து விடும். சில நாளிலேயே அழுகிப் போய்விடும். அந்தப் பானையில் இருந்து துரியோதனன் பிறந்தானாம். இந்த டெக்னாலஜி-தான் டெஸ்ட் டியூப் டெக்னாலஜி என்கிறார் இந்த இந்து மதப் பிரசங்கி.
டெஸ்ட் டியூப் டெக்னாலஜி என்பது உயிரோடு உள்ள நல்ல ஆரோக்கியமான ஆணின் விந்து மூலம் உயிரணுவை எடுத்து - அதை, அதேபோன்ற ஆரோக்கியமான பெண்ணின் சினை முட்டையுடன் சோதனைக் குழாய் மூலம் இணைத்து, கருவை உருவாக்கி, அதனை சரியான வெப்ப நிலையில் பராமரிக்க ஏதுவாக - பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி 10 மாதம் அந்தக் கரு வளர்ந்து குழந்தையாவது தான் சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கம்.
இயற்கையாக ஆணின் உயிரணு பெண்ணின் சினை முட்டையோடு சேர்ந்து எப்படி கரு உருவாகிறதோ அப்படியேதான் சோதனைக் குழாய் மூலமும் கரு உருவாக்கப்படுகிறது. அதாவது உடலுறவு மூலமான ஆண்-பெண் சேர்க்கையில்லாமல், தனியே கருவை உருவாக்குதல் என்பது தான் சோதனைக் குழாய் முறை.
ஆனால் டாக்டர் பிரகாஷ் கூறும் மகா-பாரதக் கதையில் உயிரணுக்களைச் சேர்த்து பதப்படுத்தி குழந்தை வந்தது என்கிறார். ஒரு குழந்தை உருவாக ஆணின் உயிரணு மட்டும் போதாது. அத்துடன் பெண்ணின் சினை முட்டையும் வேண்டும். மகாபாரதத்தில் கூறியபடி மனிதப் பிண்டத்தில் இருந்து உயிரணுவை எப்படிப்பெற முடியும்? பெண்ணின் சினை முட்டை பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே? சரி - இந்த மருத்துவத் தொழில் நுட்ப முறைகளையெல்லாம் மகாபாரதம் விவரித்துள்ளதா? வியாசர் அவற்றையெல்லாம் ஏன் எழுத மறந்து போனார்?
ஏன் இவையெல்லாம் இல்லை தெரியுமா? இவையெல்லாம் கற்பனைகள். அதனால்தான் தனக்கு கதையெழுத 100 பாத்திரங்கள் வேண்டும். இப்படி உருவாக்குவது என்று யோசித்து வியாசர் மண்பாண்ட பிண்ட வழி கவுரவர்களை உருவாக்கி விட்டார்- அவ்வளவு-தான். தவிரவும் சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறை என்பதும், க்ளோனிங் (நகலாக்கம்) முறை என்பதும் வெவ்-வேறானவை. இரண்டு முறையும் ஒன்றல்ல. க்ளோனிங் முறைக்கும் பல ஆய்வு முறைகள் உள்ளன. ஆகவே இந்த மகாபாரதக் கதை என்பதெல்லாம் பூதம் கொடுத்த பாயாசம் குடித்து கரு உருவானது என்பது போல, (இராமன் பிறப்பை ஒரு கதை) விந்து சிந்தியதால் கையிலேயே பிறந்தான் (கையப்பன் - அய்யப்பன்) என்பது போல வசதிக்காக எழுதிக் கொள்ளப்பட்டது தான்.
இவர்களின் கற்பனைக் கடவுள்களைப் பற்றி, மதங்களைப்பற்றி, வேத புராண இதிகாசங்களைப் பற்றி கேள்விகேட்டால் அது எங்கள் நம்பிக்கை விட்டு விடுங்கள் என்பார்-கள். இல்லையென்றால் அன்றே அது எங்கள் புராணங்களில் இருக்கிறது என்பார்கள். இதுதான் பார்ப்பனியம்.
அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தாலொழிய கடவுள் அழிவைத் தடுக்க முடியாது என்று பெரியார் கூறினார். அறிவியல் வளர வளர கடவுளும் அதனைப் பரப்பும் எல்லா கற்பனை-களும் மறைந்து கொண்டு தானிருக்கின்றன. இதன் மூலம் பிழைக்கும் பார்ப்பனியம் அறிவியலில் துணையுடனே தங்கள் புளுகுப் புராணங்களைக் காக்க முயல்கிறது. அதன் ஒரு வேலைதான் இந்த மகாபாரதக் கதையில் அன்றே சொல்லியிருக்கிறார்கள் என்ப-தெல்லாம். சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கம் பற்றி தந்தை பெரியார் 1944ஆம் ஆண்டு தனது இனி வரும் உலகம் என்ற நூலில் ஒரு விஞ்ஞானி போல அதன் காரண காரிய விளக்கங்களோடு எழுதினார். அந்த நூலின் அட்டையிலேயே ஒரு விஞ்ஞானி கைகளில் சோதனைக் குழாயைப் பிடித்தபடி அதனுள்ளே குழந்தை இருப்பதுபோல படம் பேட்டார் (தனி பெட்டிச் செய்தி காண்க) பெரியார் இந்நூலை எழுதும்போது தொலை-பேசிக் கருவி வந்துவிட்டது. அதன் அடுத்தடுத்த கட்டம் வளர்ச்சி என்பது இன்றைய செல்போன் வடிவில் வந்து விடும் என்று உணர்ந்த பெரியார், ஒவ்வொருவர் சட்டைப் பையிலம் கம்பியில்லாத் தந்தி சாதனம் இருக்கும் என்கிறார். இப்படி அறிவியலின் அடுத்தடுத்த நிலைகளைச் சிந்திப்பது என்பது வேறு; கனவு கண்ட கற்பனைகளை யெல்லாம் எழுதி வைப்பது என்பது வேறு.
பார்ப்பனியத்தின் அன்றைய தேவைக்காக எழுதிக் கொள்ளப்பட்டதே மகாபாரதமும் ராமாயணமும். அதைத்தாண்டி அவற்றில் அறிவியல் எதுவும் இல்லை. இன்றைய கணினி யுகத்தில் தாங்கள் படைத்த கடவுளும் மதமும் காணாமல் போய்க் கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத பார்ப்பனியம் இப்படி-யெல்லாம் பசப்புகிறது.
நினைப்பதையெல்லாம் எழுதி வைப்பது அந்தக்காலம்; எதையும் நேரில் கண்டே நிச்சயிப்பது இந்தக் காலம்
என்ற கலைவாணரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.