நூல் அறிமுகம்
விழித்தெழு! நியாயம் செய்!

அறிஞர் ரா.மோனிகுமார்
அய்ரேனிபுரம் - 629 172 கன்னியாகுமரி மாவட்டம் பக்கம் 116,
நூலிலிருந்து...
குழந்தைகள் அனுபவிக்கும் நியாயமின்மை
இன்றைய மக்கள் தொகையில் எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்ளோ அக்குழந்தைகளில் 70 சதவீதத்திற்கு மேல் தங்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த 70 சதவிகிதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்தது முதலே தங்கள் உரிமைகளை இழந்து தங்கள் தேவைகள் சந்திக்கப்படாமல் வருவதை நாம் பார்க்கிறோம். ஏழை பெற்றோர்க்கு குழந்தையாக பிறக்கும் ஒரே காரணத்திற்காக கொடுமைகள் பல அவாகள் அனுபவிக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள். பிறந்த உடனேயே குளிர், பசி, ஆடையின்மை, சுகாதாரமின்மை, நோய், பாதுகாப் பற்ற இல்லம் இவைகள் அவர்களை வாட்டுகிறது. நாம் கணக்கெடுத்துப் பார்த்தால் தெரியும். இன்றை க்கு இந்தியாவில் எத்தனை பேர் கண்பார்வை இல்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் 100க்கு 90 சதவிகிதம் பேருக்கு மேல் ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள். எததனை பேர் பல விதமான உடல் ஊனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர் களிலும் 90 சதவிகிதத்துக்கு மேல் ஏழை குடும் பங்களில் பிறந்தவர்கள் தான். இவைகளை பார்க்கும் போதே நமக்கு புரிகிறதல்லவா! குறிப்பிட்ட சமயத்தில் கொடுக்கப்பட வேண்டிய கவனிப்புகளை, சிகிச்சை களை கொடுக்க இயலாத பெற்றோருக்கு பிறந்த காரணத்திற்காக வாழ்நாள் முழுவதும் பார்வை இழந்த வாழ்க்கை மற்றும் பல உடல் ஊனங்களுக்கு ஆளாகி வாழ வேண்டிய சூழ்நிலை.
இவைகள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த குடும்பங்களில் மேலோங்கி நிற்கும் வறுமைதான். இந்த நாட்டிலிருந்து இந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைத்திருந்தால் இந்த குழந்தைகள் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுப விக்க வேண்டியிருக்காது.
முழுப்புரட்சியை முன் மொழிந்தவன்

பாவலர் தணிகைச் செல்வன்
தமிழம்மா பதிப்பகம், 59 விநாயகபுரம், அரும்பாக்கம், சென்னை - 600 106 பக். 16 ரூ. 5
நூலிலிருந்து...
சமூகப் புரட்சி பற்றிய சிந்தனையே ஒரு புரட்சிக் கவிஞனை முழுமைப்படுத்துகிறது. பாரதி வேதகால மகிமைகளைக் கெண்டாடியவன். எனவே சாதி ஒழிப்பு அவன் இலக்காக இல்லை. எல்லா வண்ணங்களையும் கொண்ட ஒரு தாய்ப் பூனையின் குட்டிகள் ஒன்றாக வாழ்வது போல் எல்லா வர்ணங்களின் மக்களும் ஒன்றுபட்டு வாழ முடியாதா என்பது பாரதியின் கேள்வி. வர்ண ஒழிப்பு, வர்ணாசிரம ஒழிப்பு என்பதைப் பாரதி தன் பாடு பொருளாகத் தேர்வு செய்யவில்லை. அவன் காலத்திலேயே முளைவிட்ட திராவிடச் சிந்தனையை அவன் வெறுத்தான். இந்தியாவை ஆரிய நாடு என்றழைப்பதிலே அவன் மகிழ்ந்தான்.
இவற்றில் பாரதிதாசன் பாரதிக்கு நேர் எதிர் முனையில் நின்றான். வேதியக் கருத்தியலையும் சாதிய ஒடுக்கு முறைகளையும் தன் உள்ளீடாகக் கொண்ட பார்ப்பனியத்தைக் கடுமையாகச் சாடினான்; ஆரிய மொழியால் ஆரியப் பண் பாட்டால் தமிழர் அழிவுற்ற சீர்கேட்டைக் களைய ஆரியத்தை அழிப்பதொன்றே வழி எனக் கருதினான். சாதி ஒழிப்பின் எல்லை தீண்டாமை ஒழிப்பே என்றும் பாடினான்.
சதுர்ய வர்ணம் வேதன் பெற்றால்
சாற்றும் பஞ்சமர் தம்மை
எது பெற்றுப் போட்டதடி - சகியே
எது பெற்றுப் போட்டதடி?
என்று வினவுகிறான் பாரதிதாசன், நான்கு வர்ணங்களைப் பிரம்மன் படைத்தான் என்கிறீர் களே. அவ்வாறெனில் அய்ந்தாம் வர்ணமான பஞ்சமரை (தலித்துகளை) யார் படைத்தது என்பது பாரதிதாசனின் கேள்வி. இந்த வினாவுக்கு ஆரியம் இன்றுவரை விடையளிக்கவில்லை. |