தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சுயமரியாதை இயக்கம்
1929 பிப்ரவரி 17-18
வரலாறு
சிறுகதை
ஹாலிவுட் கலை - 14
கவிதை
புதையல்
சிறந்த நூலிலிருந்து
கற்பனையும்
நூல் அறிமுகம்
1929 சுயமரியாதை
தமிழர்கள் மீதான்
சமூக அநீதி்
பெட்டிச் செய்திகள்

 

 

1929 சுயமரியாதை மாநாட்டு திராவிடன் மலரிலிருந்து...

எழு ளயது சிறுமியன் உரை

ஸ்ரீமதி லலிதா என்னும் 7வது சிறுமி ஆமாதித்துப் பேசுகையில், நான் ஒரு சிறுமி உங்களுக்கு அதிக விஷயங்கள் சொல்ல முடியாது. ஆனாலும், நான் சுயமரியாதையைப் பின்பற்றி நடக்க அதிக ஆவலாக இருக்கிறேன். (கரகோஷம்) நமது தத்துவம் மற்ற சாஸ்திரங்களை போலில்லை. அதுவே நாட்டின் பெரிய இயக்கம். அது ஒருவன் தாழ்ந்தவன் - மற்றொருவன் உயர்ந்தவ-னென்னும் கொள்கையை அனுஷ்டிக்க-வில்லை. நாம் இப்போது படிப்ப-தெல்லாம் என்ன? கண் இல்லாதவன் குருடன்! வாயில்லாதன் ஊமை என்று எழுதப்பட்டிருப்பது தான். (நகைப்பு) இதெல்லாம் சிறு குழந்தைத்தனமென்று சொல்லலாம். இதோடு ராமாயணம் பாரதக் கதை. இராமாயணத்தில் ஹனுமார் 7 கோடி யோஜனையுள்ள சமுத்திரத்தைத் தாண்டினாராம். ஒரு குரங்கால் தாண்ட முடியுமா? (கரகோஷம்) சிறு குழந்தையும் சிரிக்கும், பார்ப்பனப் பித்தைப் போதிக்கிற படிப்பை சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனால் தான் நம் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்க்க முடியுமா? பெண்கள் விஷயத்திலும் சிரத்தை எடுத்து, பார்ப்பனரல்லாதாருக்குப் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தி, பார்ப்பன உபாத்தியாயர்களை விலக்க வேண்டு-மென்று உங்களைத் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டு என் பேச்சை நிறுத்திக் கொள்ளுகிறேன். திருவண்ணாமலை முனிசிபல் சேர்மன் முத்துக் குமார-சாமிக்கு ஜே! கண்ணப்பருக்கு ஜே! (கரகோஷம்)
திரு.தண்டபாணி: நான் ஆண்-பிள்ளைகள் சார்பாக இதை ஆமோதிக்-கின்றேன். (நகைப்பு)


சுயமரியாதை இயக்க நிர்வாக சபை அங்கத்தினர்கள்

கீழ்க்கண்டவர்கள் முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் தெரிந்-தெடுக்கப் பெற்றார்கள்:
1. தலைவர்: டபிள்யூ. பி.எ. சவுந்திரபாண்டியன் எம்.எல்.சி, ராமநாதபுரம் ஜில்லா போர்ட் தலைவர்.
2. உபதலைவர்கள்: ஈ.வெ.ராமசாமி
3. உபதலைவர்கள்: ராவ்பகதூர் எ.டி.பன்னீர்செல்வம், பாரிஸ்டர், தஞ்சை ஜில்லா போர்ட் தலைவர்.
4. காரியதரிசி: எஸ்.ராமநாதன் எம்.ஏ., பி.எல்., ஈரோடு.
5. பொக்கிஷதார்: வைசு. ஷண்முகம், காரைக்குடி.
6. அங்கத்தினர்கள்: ராவ்பகதூர் எம்.கிருஷ்ணசாமி பி.ஏ., செங்கல்பட்டு ஜில்லா போர்டு தலைவர்.
7. ராவ்பகதூர் சி.எஸ்.இரத்தின
ச-பாபதி எம்.எல்.சி., கோயமுத்தூர் ஜில்லா போர்டு தலைவர்.
8. ஆர்.கே.ஷண்முகம் பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ.,
9. வி.பி.காயாரோகணம், நாகை.
10. ஆர்.சின்னையா, மாயவரம்.
11. ஜே.எஸ்.கண்ணப்பர் ``திராவிடன்'' பத்திராதிபர்.
12. வி.கனகசபை, பொறையார்.
13. பிச்சப்பா சுப்பிரமணியம் (அமராவதிப்புதூர்) காரைக்குடி.
14. கி.ஆ.பெ.விஸ்வநாதம், திருச்சி.
15. ஆரியர் எம்.ஏ., சென்னை.
16. சிவராஜ் பி.எ., பி.எல்., எம்.எல்.சி.
(திராவிடன், 12.2.1929)