தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
சுயமரியாதை இயக்கம்
1929 பிப்ரவரி 17-18
வரலாறு
சிறுகதை
ஹாலிவுட் கலை - 14
கவிதை
புதையல்
சிறந்த நூலிலிருந்து
கற்பனையும்
நூல் அறிமுகம்
1929 சுயமரியாதை
தமிழர்கள் மீதான்
சமூக அநீதி்
பெட்டிச் செய்திகள்

 

 

சமூக அநீதி

அய்அய்.டிக்கு விரிவாக்கம் என்ன வென்று யாராவது கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்றா? அப்படியானால் உங்களுக்கு உலக நடப்பு தெரியவில்லை என்று பொருள். அய்யர் அய்யங்கார் டிபார்ட்மெண்ட் என்பது தான் இதன் சரியாக விரிவாக்கம். தந்தை பெரியார் அடித்து விரட்டிய ஆரியப் பாம்புகள் கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்து-கொண்டன. எஞ்சியவை அய்.அய்.டி. காடுகளுக்குள்ளும் புகுந்துகொண்டன போலும்.
அய்.அய்.டி.யின் முடி முதல் அடி வரை அவாள் மயம்தான். மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டவுடன் உயர் கல்வி நிறுவனங்கள் என்ற பெயரால் குறிப்பிடப்-படுகிற டெல்லி எய்ம்ஸ் முதல் சென்னை அய்.அய்.டி. வரை எங்கெங்குமுள்ள பூணூல்க-ளெல்லாம் கொதித்துப் போய் குரல் கொடுக்கின்றன. இத்தகைய சமூகநீதிக்-கெதிரான குரல்களை இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விடுவதோடு மட்டுமல்லாமல் தங்கள் ஆதரவை வெளிப்-படையாகத் தெரிவிக்கவும் செய்கின்றனர். எந்த மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளார்களோ, அந்தத் துறையின் அமைச்சர் மீதே விமர்சனக்-கணைகள் தொடுக்கவும், அவர்களுக்கதிராய் மாணவர்களை போராடத் தூண்டவும் செய்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு, அதே வரிப்பணத்தில் படித்துக் கொண்டு அதே மக்களுக்கெதிராய் போராட்டம் செய்கிற கொழுப்பு என்றுமே இவர்களுக்கு உண்டு.
இப்படி அதிகாரத்தின் உச்சியில் இருப்-போர் பற்றிய செய்திகள் சந்தி சிரிக்கின்றன. சென்னை அய்.அய்.டியின் இயக்குநராக இருப்பவர் ஆனந்த் என்ற அய்யங்கார் பார்ப்பனர். இவரது பதவிக்காலம் 23.12.2006 அன்று முடிந்து விட்டது. ஆனால் அதன் பிறகு சுமார் 6 மாத காலம் பதவி நீட்டிப்புப் பெற்று இப்போது அதே பதவியில் மீண்டும் நியமிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைதான் இப்போது நீதிமன்றப் படிக்கட்டுகளை எட்டியிருக்கிறது.

  • முதலில் இந்த அய்யங்கார் பார்ப்பனரின் முதல் பதவிக்காலத்துக்கான (2001-2005) பணியமர்த்தலுக்கே இந்திய அரசிடமிந்து உரிய ஆணை பெறப்படவில்லை. அப்போதைய அய்.அய்.டி. தலைவர் மற்றும் அய்.அய்.டி. ஆளுநர் குழுவினர் அளித்த ஆணை மூலம்தான் ஆனந்த்-ன் முதல் நியமனமே நடந்துள்ளது. சரி முதல் அய்ந்தாண்டு காலத்தை அய்.அய்.டி. இயக்குநராக இருந்து கழித்த பிற்காவது பதவி ஆசை விடுகிறதா? அதெப்படி? அதுவா பூணூல் குணம்.
  • பதவி முடிந்த 23.12.2006க்கு பிறகு 24.12.2006 முதல் 30.6.2007 வரை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையிடமிருந்து எந்தவொரு உரிய நீட்டிப்பு ஆணையும் இல்லாமல், அய்.அய்.டி.யின் சட்டப்படியான வருகையாளரின் (குடியரசுத் தலைவர்) அனுமதியும் இல்லாமல் பதவி வகித்திருக்கிறார்.
  • இதில் மிகப் பெரிய நகைச்சுவை என்னவென் றால் இயக்குநர் பதவியிலிருந்த ஆனந்த் தனக்குக்கீழ் பதிவாளர் பணியாற்றிய அதிகாரியிடமிருந்து பதவி நீட்டிப்பு ஆணை பெற்றதுதான். இந்தக் கூத்தும் 20.2.2007 அன்று நடந்திருக்கிறது. 4 2006 டிசம்பர் முதல் 2007 ஜூன் வரையிலான பதவி நீட்டிப்புக்கு இக்கடிதம் தான் அனுமதியாகக் காட்டப்பட்டிருக்கிறது. சரி, இந்த நீட்டிப்பும் 30.6.2007 உடன் நிறைவடைகிறதே. அதன் பிறகு யார்? இதற்கான நேர்காணல் தில்லியில் நடந்தது.
  • அந்த நேர்காணலில் அய்.அய்.டி. இயக்குநர் என்ற முறையில் ஆனந்த் அய்.அய்.டி. கவுன்சில் உறுப்பினராகத் தான் அமர்ந்திருக்க வேண்டும். ஆசை வெட்கமறியாது என்பார்கள். பதவி ஆசை எதையுமே அறியாது அல்லவா? அய்.அய்.டி. இயக்குநர் என்ற முறையில் வேறு யாரையாவது முன்னிறுத்த வேண்டிய ஆனந்த், தன்னைத் தானே முன்னிறுத்திக் கொண்டு நேர்-காணலுக்கு சென்றிருக்கிறார்.
  • மற்ற போட்டியாளர்களெல்லாம் பேராசிரியர்களாகக் களத்தில் நிற்க, இவர் மட்டும் தான் ஏற்கனவே இருக்கும் பதவியில் இயக்குநராகவே சென்று இயக்குநர் பதவிக்-கான நேர்காணல் போட்டியில் பங்கெடுத்திருக்-கிறார். (என்ன கொடுமை சார்!)
  • மீண்டும் இவரையே இயக்குநராக நியமித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திட மிருந்து ஆணை வராமல் கடிதம் வந்திருக்கிறது. இவர் பதவியில் அமர்ந்த பிறகு தான் அது குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்கே அனுப்பப்பட்டிக்கிறது.
  • இதையெல்லாம் விட முக்கிய செய்தி என்னவென்றால், இப்படி மறு பணியமர்த்தல் (Re-appointment) என்பதற்கு அய்.அய்.டி. தனிச்சட்டத்தில் இடமே இல்லை.
    அய்.அய்.டி. சட்டம் பிரிவு 15(3)ன் படி அய்.அய்.டி.யின் இயக்குநராக தகுதியான ஒருவரை அய்.அய்.டி. கவுன்சில் நியமிக்க வண்டும். அந்த பதவிக்காலமும் அய்ந்தாண்டு-களுக்கு மேல் இருக்கக் கூடாது. ஒருவேளை பணி நீட்டிப்பு தருவதாயின் வருகையாளரிடம் (இந்தியக் குடியரசுத் தலைவர்) முன்கூட்டியே உரிய ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்று இருக்கிறது. மறு பணியமர்த்தல் என்பதற்கே இதில் இடமில்லை. ஆனந்த்தின் மறுபணியமர்த்தல் உத்தரவை பதவி நீட்டிப்பு எனவும் கணக்கிட முடியாது. ஏனெனில் நேர்காணல் வைத்து தேர்வு நடந்திருக்கிறது எண்ணும்போது அது பதவி நீடிப்பு (Renewal) அல்ல; மறு பணியமர்த்தல்(Reappointment) என்றாகி விடுகிறது.
  • அண்மையில் அய்.அய்.டி. பேராசிரியர்-களின் பணி ஓய்வு வயதை 62-லிருந்து 65 ஆக உயர்த்தியிருக்கிறது மத்திய அமைச்சகம். ஆனால் இது இயக்குநர் பதவிக்குப் பொருந்தாது.

எனவே அனைத்து விதத்திலும் முறை-கேடான, சட்டத்திற்குப் புறம்பான, நீதிக்கு விரோதமான அய்.அய்.டி. இயக்குநர் ஆனந்தின் மறு நியமனத்தை ரத்து செய்து உத்தர-விடவேண்டும் என்றுகோரி சென்னை அய்.அய்.டி.யின் முன்னாள் மாணவர் முனைவர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதி-மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவ்வழக்கு நீதிபதி பிரபா சிறீதேவன் முன்னிலையில் வந்து அய்.அய்.டி. இயக்குநர் ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உயர் அதிகாரத்திலிருப்பவர்களின் அருகதை இப்படியிருக்கிறது என்றால், இவர்-களது மேற்பார்வையில் நிரப்பப்படும் பணியிடங்கள் எப்படியிருக்கும்? சமூகநீதி என்றால் எந்த ஆய்வகத்தின் விளை பொருள் என்று கேட்பவர்களாயிற்றே இவர்கள். இவர்களின் அக்கிரமத்தை இப்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரே கண்டித்திருக்கிறார். அய்.அய்.டி. ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை சுத்தமாகப் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தாங்கள் இட ஒதுக்கீடு முறையிலிருந்து விலக்கு பெற்றிருப்பதாக இந்நிறுவனங்கள் கூறியிருந்தன. அப்படி ஒரு விலக்கும் அளிக்கப்படவில்லை என்பது மேற்கொண்ட விசாரணை மூலம் தெரிய வந்தது. அரசின் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டே, அவ்வரசின் சட்டத்திற்கும் கொள்-கைக்கும் விரோதமான இவர்களின் செயல்-பாட்-டைப் பற்றி கடந்த பிப்ரவரி 11ஆம் தேதியன்று அய்.அய்.டி. இயக்குநர் கூட்டத்தைக் கூட்டி விளக்கம் கேட்டிருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங்.
இந்த இட ஒதுக்கீட்டுப் புறக்கணிப்புக்கு சென்னை அய்.அய்.டியையே மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். இங்கு பணியாற்றும் 432 பணியாளர்களில் தாழ்த்தப்பட்டோர் எவ்வளவு பேர் தெரியுமா? 15 துறைகளிலும் சேர்த்து ஒரே ஒரு பேராசிரியர், 2 இணை பேராசிரியர்கள், 3 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் ஆறே பேர்தான் தாழ்த்தப்பட்டோர். முழுமையாக பல இடங்களில் இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கே இந்நிலை என்றால், இதர பிற்பத்தப்பட்ட பிரிவினருக்கு இன்னும் சிக்கலான சூழலில் இருக்கும் இடஒதுக்கீட்டைப் பற்றி கேட்கவே வேண்டாமே! அது மட்டுமல்லாமல் கடந்த இரண்டாண்டுகளாக நூற்றுக்கணக்கான பணியிடங்களுக்கு புதிய பேராசிரியர்களை நிரப்பி வருகிறார்கள். இப்போது நிரப்பப்படும் பணியாளர்களுக்கெல்லாம் குறைந்த பட்சம் இன்னும் 30 முதல் 35 ஆண்டு பணிக்காலம் இருக்கிறது. இவர்களெல்லாம் எப்படி நிரப்பப்படுகிறார்கள் தெரியுமா? முறையாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து... ம்ஹூம்... முறையாக என்பதற்கும் அய்.அய்.டி.க்கும் தான் தொடர்பே இல்லையே!
டெல்லி உள்ளிட்ட பிற அய்.அய்.டி.-களெல்லாம் வரி விளம்பரம் அளவுக்காவது பத்திரிகைகளில் விளம்பரம் தந்து பணியாளர்-களை சேர்க்கிறார்கள். ஆனால் சென்னை அய்.அய்.டியிலோ அவர்கள் இணைய தளத்தில் மட்டும்தான் விளம்பரம். நினைத்த போதெல்லாம் நேர்காணல். நேர்காணலில் பூணூல் தட்டுப்பட்டால் பணியமர்த்தல் என்று பார்ப்-பனப் பண்ணையம் கொடி கட்டிப் பறக்கிறது அய்.அய்.டி. கோட்டையில்! அய்அய்.டி. வேலிகளெல்லாம் மேய்ந்து மேய்ந்து பயிர்களையே காணவில்லை அங்கு. வெறும் பதர்களாக விளைவித்துக் கொண்டிருக்-கிறது அக்கிரகார அய்.அய்.அடி. இதற்குத் தான் மக்கள் வரிப்பணத்தைக் கோடி கோடியாய்க் கொட்டி அழுகிறது மத்திய அரசு.