தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

தலையங்கம்

கடந்த 21.2.2008 அன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் தற்போதுள்ள மொத்த நீதிபதிகள் (Supreme Court Judgess Strength) எண்ணிக்கை 26 என்பதை 31 ஆக - மேலும் 5 இடங்கள் அதிகப்படுத்தி நியமிப்பது என்ற முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
(சுப்ரீம் கோர்ட்) உச்சநீதிமன்ற எண்ணிக்கை பற்றிய 1956 ஆம் ஆண்டுச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப் பட்டதாக அரசின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
1986 ஆம் ஆண்டு அதற்குமுன் உச்சநீதிமன்றத்தில் இருந்த 18 நீதிபதிகள் என்ற எண்ணிக்கை, தேவை கருதி 25+1 (1 என்பது தலைமை நீதிபதி) உயர்த்தப்பட்டது.
தற்போதுள்ள 26 நீதிபதிகளின் எண்ணிக்கையை 31 ஆக உயர்த் துவதன் காரணம் தற்போது நிலுவையில் உள்ள உச்சநீதிமன்ற வழக்குகள் 46,926 ஆகும்!
2002 இல், உச்சநீதிமன்ற ஆணை ஒன்று, படிப்படியாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை முடித்து வைக்க அவ்வப்போது நீதிபதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு உயர்த்திட வேண்டும் என்று குறிப்பிட்டது.
சுமார் 37 லட்சம் வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் பைசலா காமல் இன்றைக்கும் அப்படியே கிடக்கின்றன.
ஒப்புக்கொள்ளப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண் ணிக்கை நாடு முழுவதும் மொத்தம் 877 ஆகும்.
இதில் நிரப்பப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 593 தான்!
உயர்நீதிமன்றங்களில் கூடுதல் எண்ணிக்கைபற்றி மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவே இல்லை!
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தற்போதுள்ள நியமன முறை மாற்றப்படவேண்டும்.
அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ். (IAS, IFS, IPS, IRS) போன்று India Judcial Servce Commisso என்ற சுதந்திரமான அனைத்துப் பிரிவு மக்களின் பிரதிநிதிகளும் போதிய அளவில் இடம்பெறும் அளவுக்கு (Adequate Representato) இடம்பெற்று - அதில் சட்ட வல்லுநர்கள், ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி கள், பொது அறிஞர்கள் எல்லாம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷ னில் இருப்பதுபோல இருக்கலாம்.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அவ்வப்போது ஊடி-டியீவ முறையில் அந்தந்த இடங்களுக் குரிய தேர்வு செய்யப்படு கையில் இடம்பெறலாம்!
பிறகு அதை குடியரசுத் தலைவர் (பிரதமர் - மத்திய அமைச்ச ரவை) ஒப்புக்கொண்டு அறிவிக்கை விட்டு ஆணை வெளியிடலாம்!
இதற்குத் தேசிய நீதித்துறை தேர்வுக் கமிஷன் என்றேகூட பெயரிடலாம்!
இதெல்லாம் செய்யாமல், தற்போதுள்ள கொலிஜியம் மூத்த மூன்று நீதிபதிகளே முடிவு செய்யும் முறை முற்றாக மாற்றப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் மூத்த மூன்று நீதிபதிகளும் வெளிமாநிலத்தவர். தமிழ்நாட்டின் மண்ணின் மனோபாவம் என்ன (Soil Psycology) என்றே அறியாத வர்கள். சமூகநீதி பற்றி அறவே அறி யாத உயர்ஜாதியி னர் ஆவார்கள்.
தலைமை நீதி பதி குஜராத் - அடுத்த மூத்த நீதிபதி பிகார் - அடுத்த மூத்த நீதிபதி ஒரிசா. தமிழ்நாட்டவர் எவரும் அத்தகைய மும்மூர்த்திகளில் ஒருவர்கூட கிடையாது! இவர்கள், அவர்கள் இஷ்டம்போல் அளவுகோல் வைத்து நீதிபதி களின் இடத்தை - புதிய நீதிபதிகளின் நியமனத்தை நடத்து கின்றனர்.
இதில் மிகப்பெரிய கொடுமை மத்திய சட்ட அமைச்சராக ஒரு பச்சைப் பார்ப்பனர் இருந்துகொண்டு, தனிக்காட்டு ராஜாவாக, ராஜ்ய பாரம் செய்து கொண்டுள்ளார்!
நண்டைச் சுட்டு, நரியைக் காவல் வைத்த அசல் கேலிக்கூத்து அரங்கேறி ஆட்டம் போடும் அவலம் நீடிக்கிறது!
மேலிடத்துச் செல்வாக்கு உள்ள என்னை அசைக்க முடியாது என்று அவர் மார்தட்டுவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது!
பாரதீய ஜனதா கட்சி மத்தியில் இருந்தால் எப்படி நீதித்துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கு கொடிகட்டிப் பறக்குமோ, அப்படியே தற்போதுள்ள அய்க்கிய முற்போ க்குக் கூட்டணி (UPA) ஆட்சியிலும் தலைவிரித் தாடுகிறது!
உச்சநீதிமன்றத்தில் 26 நீதிபதிகள் இருக்கின்றனர். இவ்வளவு காலங்கழித்து (60 ஆண்டுகளுக்குப்பின்) ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் தலைமை நீதிபதியாக வந்துள்ளார் என்பது ஆறுதல் தரும் வரவேற்கவேண்டிய ஒன்று என்றாலும்,
அவருக்கே எதிரான போக்குதான், அங்குள்ள உயர்ஜாதி ஆதிக்க ஆணவப் போக்கு வெளிச்சம் போடுவதாகத் தெரிகிறது!
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதித்துவம் எங்கே?
மொத்தம் உள்ள 26 நீதிபதிகளில், தாழ்த்தப்பட்டவர், மலைவாழ் நீதிபதிகள் இருவர்தான். பிற்படுத்தப்பட்டவர் ஒரே ஒருவர் மட்டுமே!
நாட்டில் உள்ள மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட, மலைவாழ் மக்கள் எண்ணிக்கை 90 விழுக்காடு. ஆனால், அவர்களுக்குப் பிரதிநிதிகள் இவ்வளவுதானா?
பிற்படுத்தப்பட்ட சமூக நீதிபதி ஒருவர் மட்டும் கடந்த ஒரு ஆண்டாகத்தான் இருக்கிறார்.
அந்த எண்ணிக்கை அதிகமாக்கப்பட வேண்டாமா?
தமிழ்நாட்டிலிருந்து 3, 4 நீதிபதிகள் உச்சநீதி மன்றத்தில் இருந்த காலம் இல்லை - தற்போது!
மேலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அங்கே நியமிக்கப் படவேண்டும்.
அனுபவம் வாய்ந்த மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்குரிய வாய்ப்பினை மத்திய அரசு வழங்கிட வற்புறுத்திட வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சமூகநீதிக்காக இடைவிடாது குரல் கொடுப்பவர் ஆவார்!
புதிய நியமனங்களில் சமூகநீதிக்கு முன்னுரிமை தரவேண்டிய அவசியத்தை வற்புறுத்தி தமிழக முதல்வர் அவர்கள் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைப்பின் தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையார் அவர்களுக்கும் எழுதியோ, பேசியோ அவருக்குரிய முறையில் சமூகநீதி தற்போதுள்ள நிலையினை தெரிய வைக்க, தெளிய வைக்க சகல உத்திகளையும் கையாள வேண்டுமென்பது, ஒடுக்கப்பட்டோர் பலரது உணர்வுகளாகும். நாம் அதைத்தான் இதன்மூலம் வெளியிடுகின்றோம், உரிமையுடன் வற்புறுத்துகின்றோம்.
தமிழ்நாட்டில் கூடுதல் எண்ணிக்கை உயர்நீதி மன்றத்திற்கு வரும்போது, அத்தனையிலும் மகளிர் உள்பட பார்ப்பனர், முன் னேறிய ஜாதியினரே நிரப்பப்படுவர் என்ற நிலை - அதைவிட வெந்த புண்ணில் வேலைச் செருகும் கொடுமை வேறு உண்டா?
எனவே, இதனை வற்புறுத்தி மாநிலத் தலைநகராம் சென்னை யிலும், மாவட்டத் தலைநகர்களிலும் 8.3.2008 சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டங்கள் திராவிடர் கழகத்தின் சார்பில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் என்பதை அறிவிக்கின்றோம்.

கி. வீரமணி
ஆசிரியர்