தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

மார்ச்-8 மகளிர் தினம்

பெண்கள் இனி...

- மணிமகன்

தினமும் நினைக்கப்படவேண்டிய பல சிக்கல்-களை மக்களும் சமூகமும் நினைக்க மறந்து போய்விட்டதாலோ என்னவோ, ஆண்டுக்கு ஒரு தினமாவது அந்தச் சிக்கல் குறித்துப் பேசித் தொலையுங்கள் என பல தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. இவற்றில் சில தினங்கள் மனித இனத்தின் பல நிலைகளில் உள்ளவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தும் தினங்களாக இருப்பது சற்றே ஆறுதலானது.
பல ஆண்டுகளாக அதாவது சென்ற நூற்றாண்டு தொடங்கி, உலகம் கொண்டாடி வரும் தொழிலாளர் தினம் போல, கடந்த சில ஆண்டுகளாக மகளிர் தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் 8ஆம் நாள் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில் மகளிர் உரிமை குறித்த கோரிக்கைகள் வலுவாக எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் சிறப்பு இதழ்கள் வெளியிடுவதும், அரசியல், சமூக அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்துவதும் தனி நபர்கள் அளவில் வாழ்த்துக்கூறுவதுமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 கழிகிறது.
பெரியார் தொண்டர்களும் உலகம் இப்போதா-வது மகளிர் பற்றி சிறப்பிக்கத் தொடங்கிவிட்டதே என்று மகிழ்ந்து அன்றைய நாளில் நிகழ்ச்சிகள் வாயிலாக மகளிர் உரிமைக்கு கொஞ்சம் அழுத்தமாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். இங்கு அழுத்தமாக என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. ஏனெனில் பெரியார் தனது இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்தே அதன் முதன்மை இலக்குகளில் ஒன்றாக பெண்ணுரிமையை வலியுறுத்தத் தொடங்கியவர். அன்றுதொட்டு ஒவ்வொரு போராட்டத்திலும், நிகழ்வுகளிலும் பெண்ணுரிமை பற்றி பேசியே வந்துள்ளார்கள். தமது ஒவ்வொரு இதழ்களிலும் பெண் விடுதலையை வலியுறுத்தாத பக்கங்களே இல்லை. பெரியாரின் இயக்கமே பெண்ணுரிமை இயக்கம். ஆகவே மார்ச் 8இல் உலகத்தோடு இணைந்து அழுத்தம் கொடுக்கிறோம்.
மகளிருக்கு 35 சதவிகிதம் இடஒதுக்கீடு இன்னும் மத்தியில் சாத்தியப்படவில்லை. ஒவ்வொரு மார்ச் 8இன் போதும் இந்தக் கோரிக்கை எழுப்பப்படுகிறது.
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கணிசமாக முன்னேறியிருந்தாலும் உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளில் இன்னும் அதிக அளவில் இடம்பெறவில்லை. தகவல் தொழில் நுட்பக் கல்வியை இப்போது ஏராளமாக பெண்கள் படிக்க ஆரம்பித்து விட்டனர். நல்ல ஊதியத்துடன் பணிக்குச் செல்கின்றனர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே வெளியூர்களில் தங்கி வேலை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.
சுய சார்பும், தற்காப்பும் மனத்துணிவும் இன்றைய இளம் தலைமுறை மகளிர்க்கு வசப்பட்டுள்ளது. கடின உழைப்பில் ஈடுபட்டு இரவு பகல் பாராமல் உழைப்பில் ஆர்வம் கொள்ளும் அளவுக்கு பொருளாதார சுதந்திரம் அளிக்கப்பட்டுவிட்டது.
சவால் மிகுந்த ஊடகத் துறைகளில் சில ஆண்டுகளாக பெண்கள் ஏராளமாக வரத் தொடங்கிவிட்டனர். நான்கு சுவர்களுக்குள் செய்தித் தயாரிப்புப் பணியில் ஈடுபடு-வதிலிருந்து சம்பவ இடங்களுக்குச் சென்று செய்தி சேகரிப்பது வரை துணிச்சலாகச் செயல்படுகின்றனர்.
தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் அறிவு சார்ந்த விவாதங்களில் பெருமளவுக்கு பெண்கள் பங்கேற்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் இளம் பெண்கள், பணிபுரியும் பெண்கள் அத்தனை விவாதங்களிலும் இடம் பெறு-கின்றனர்.
அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தில் தாலி என்பது ஒரு உலோகப் பொருள் அவ்வளவே, அதற்கு மேல் அதில் எந்தப் புனிதமுமில்லை என ஓர் இளம் பெண் வாதிட்டார். அந்த அளவுக்கு சிந்திக்கும் துணிவு இன்றைய இளம் பெண்களுக்கு வந்துள்ளது.
தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை, நடனம், நடிப்பு போன்ற கலைப் போட்டிகளில் இப்போதெல்லாம் பெண்கள் ஏராளமாகப் பங்கெடுக்கின்றனர். பலர் முன்னிலையில் பேசுவதும், ஆடுவதும், அவமானம் என்று கருதி வந்த சமூகக் கருத்தாக்கம் உடைக்-கப்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
பெண் பங்கேற்பாளர்களுடன் அவர்களது பெற்றோரும் கலந்து கொண்டு ஊக்கப்-படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் நல்ல மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
தமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை தனக்கே உரியது; அதில் தன் விருப்பம் தான் முக்கியமானது என்பதை பெரும்பாலான பெண்கள் உணரத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக காதல் திருமணங்கள் அதிகரிக்-கின்றன. இவற்றால் ஜாதி ஒழிந்து வருவது நல்ல அறிகுறி.
கணவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் இன்றைய இளம் பெண்கள் மிகவும் எச்சரிக்-கையாக இருக்கிறார்கள் என்று அண்மையில் ஓர் ஆய்வு கூறியுள்ளது. ஜாதி முக்கியமில்லை; நல்ல வருவாய் ஈட்ட வேண்டும்; நல்ல கல்வி பெற்றிருக்க வேண்டும்; தனது சுயவிருப்பங்களுக்கு குறுக்கே நிற்கக்கூடாது என 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் கருதுகிறார்கள். இதில் இன்னொரு சுவாரசிய-மான அதே நேரம் மிகவும் சரியான பார்வையை இன்றைய இளம் பெண்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதாவது புகைப்பிடிக்கும் ஆண்களை 63 சதவிகித இந்திய இளம் பெண்களுக்குப் பிடிக்கவில்லையாம். ஆரோக்கிய-மான உடல் நலம் உள்ளவரையே மணம் புரிவது என்ற மனநிலை நல்ல மாற்றம்தான். ஒரு காலத்தில் புகைபிடிப்பது ஆண்மையின் அடையாளம் எனக் கருதப்-பட்டது என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள்.
மண வாழ்வில் மகிழ்ச்சியோடு அனைத்-தையும் அனுபவிப்பது, நுகர்வுகளில் மனநிறைவு அடைவது, சுயவிருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்வது போன்றவற்றில் இன்றைய பெண்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். நகர்ப்புற வாழ்க்கை இவற்றை சாத்தியமாக்கியிருக்கிறது. குழந்தை பெற்றுக்-கொள்ளுதலைத் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை அரும்பத் தொடங்-கியுள்ளதை சென்னை போன்ற மாநகரங்களில் காணமுடிகிறது.
இத்தனை நல்ல அம்சங்களும் நகர வாழ்வில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளன. மாறாக சிற்றூர் வாழ்வில் இன்னும் மாறுதல்கள் வர வேண்டியுள்ளது என்றே கூறவேண்டும்.
இது சுயவிருப்பமான காதலை ஜாதி காரணமாக எதிர்க்கும் பெற்றோர் இன்னும் கிராமப்புறங்களில் அதிகமாகவே உள்ளனர். நகரங்களில் இது சற்று குறைந்துள்ளது எனலாம்.
கலாச்சாரக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சங்பரிவார் கும்பல் இந்த ஆண்டு காதலர் தினத்தின்போது (லவ்வர்ஸ் டே) செய்த அத்து மீறல்கள் அருவருக்-கத்தக்கதாக அமைந்தன. ஒரு சில ஊர்களில் காதலர்களிடம் தாலி கட்டச் சொல்லி வற்புறுத்திய அடாவடித் தனங்கள் நிகழ்ந்தன. இந்துப் பண்பாடு என்று இல்லாத ஒன்றைக் காப்பாற்ற பார்ப்பன அடியாட்களான ஜாதியின் காவலர்களுக்கு இணைய தளம் வழியாக காதல் திருமணங்கள் பெருகுவதும் அதன் வழி சாதிகள் ஒழிந்து வருவதும் அதிர்ச்சியான செய்தி. அதனால் இப்படி சில்லரை வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்தக் கெடுபிடிகளையும் மீறி காதலர் தினம் கொண்டாடப்பட்டது இளம்-பெண்களின் துணிச்சலைத்தான் காட்டுகிறது.
இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்து வந்த போதிலும் இன்னும் சில அடிப்படையான அறிவுத் தளத்தில் சிந்திக்கப்படவேண்டியவை இருக்கவே செய்கின்றன. 20 வயது வரை இறுக்கமான மத, ஜாதி கட்டுமானத்தில் வளர்க்கப்பட்ட பெண்கள் அந்தக் கட்டுக்கள் ஏன் என்பது குறித்து சிந்திக்க முன் வர வேண்டும். மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படு-வதும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதும் பெண்களை மேலும் மேலும் அறிவு நிலையில் வளர்ச்சி பெற விடாமல் தம்மை அடிமைப்படுத்தும் கருவிகள் என்பதை உணர வேண்டும்.
படிப்பறிவு பெற்று நல்ல பணிக்குச் சென்று வருவாய் ஈட்டும் அளவுக்கு வந்துவிட்ட பெண்கள் இன்னும் தங்களின் பகுத்தறிவுக்கு போதிய அளவு வேலை கொடுக்கவில்லை.
அண்மையில் சென்னையில் நடந்த ஒரு சினிமா படப்பிடிப்பின்போது வேப்பமரத்தில் பால் வடிகிறது என்று ஒரு கும்பலே நின்று வேடிக்கை பார்த்ததாம். ஒரு துணை நடிகை அருள் வந்து ஆடினாராம். வேப்ப மரத்தில் சில வேதி வினைகளில் வெண்மையான நிறத்தில் வெளிவரும் ஒரு வகைத் திரவம் அது. அது பாலாக இருந்தால் அதைப் பிடித்து காப்பி போட்டு குடித்திருக்கலாமே. இது ஒரு சாதாரண செய்தி, இயல்பான செய்தி; மரங்களில் உண்டாகும் வேதி மாற்றம். அதற்கு கடவுள் சக்தி; பக்தி என்ற மூடநம்பிக்கையைப் பிடித்துப்பூசி பத்திரிகைகள் வதந்தி பரப்பு-கின்றன. இப்படி சின்னச் சின்ன மூடநம்பிக்கை தொடங்கி கடவுள் நம்பிக்கை என்ற பெரிய மூட-நம்பிக்கை வரை ஆட்பட்டிருக்கும் பெண்கள் அதிலிருந்து மீளவேண்டும். மகளிர் இனத்திற்கு கல்வியும் பொருளா-தாரச் சார்பும் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் பகுத்தறிவு பாடம் கற்றலே இனி பெண்-களுக்குத் தேவையானது. அதுவே முழுமை-யான தன்னம்பிக்கை அளிப்பது.
பள்ளியும், கல்லூரியும் இந்த அறிவு சார்ந்த அடிப்படை கல்வியைப் போதிக்காதபோது, நூலகங்களிலும், இணையம் வழியான தேடலிலும் பகுத்தறிவைப் பெண்கள் பெற வேண்டும் என்பதே இந்த மகளிர் நாளில் நாம் முன் வைக்கும் சிந்தனை. மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை பெற்றால் மட்டுமே அது முழு விடுதலை.