நேர்காணல்
 |
பூ. இராமசாமி - இதுதான் இவரின் பெயர். பூமிநாதன் - ஜானகி இவரின் பெற்றோர்கள். சிவகங்கை மாவட்டம், விசவனூரில் வசிக்கும் ஒரு சாதாரண விவசாயக் குடும்பம் இவருடையது. ஒரு சகோதரரும், 3 சகோதரிகளும் உடன் பிறந்தவர்கள்.
லயோலா கல்லூரி மாணவர் :
ஆரம்பக் கல்வியைக் கிராமத்தில் முடித்த இராமசாமி, இளங்கலை சமூகவியல் படிப்பை (ba-Socioligist) சென்னை லயோலா கல்லூரியில் தொடங்குகிறார். மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு, முதுகலைப் படிப்பிற்கு புதுதில்லி செல்ல கனவு காண்கிறார். உள்ளூரில் படிக்க வைப்பதற்கே சிரமப்படும் சூழலில், முதுகலைப் படிப்பிற்கு புதுதில்லியா? என இவரின் பெற்றோர்கள் விழியை விரிக்கின்றனர். ஆனாலும் அவர்களுக்குச் சமாதானம் கூறி, தன்னுடைய இருபதாவது வயதில் இந்தியத் தலைநகருக்குச் சிறகை விரிக்கிறார்.
காவல்துறையில் ஆராய்ச்சிப் பணி :
புதுதில்லி சென்ற இராமசாமி டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் முதுகலை சமூகவியல் படிப்பில் சேர்கிறார். அக்கல்லூரியில்-தான் நோபல்பரிசு பெற்ற அமர்த்தியா சென் படித்திருக்கிறார். அதேபோல இந்திய அளவில் புகழ்பெற்ற ஆந்திரபெத்தே (andre petteille) என்கிற பேராசிரியர் இக் கல்லூரியில்தான் பணிபுரிந்திருக்கிறார். அவரிடம் இராமசாமி கல்வி பயின்றுள்ளார். இயல்பாகவே கம்யூனிச சிந்தனை கொண்டவராக இவர் இருந்துள்ளார்.
ஒருபுறம் கல்லூரி மாணவராக இருந்த நிலையில் இவரின் சமூக உணர்வும், தேடல்களும் இவரைப் பல நண்பர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது. அப்படி அரிய நண்பராக இவருக்குக் கிடைத்தவர்தான் கிரண்பேடி. இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கிரண்பேடி, அப்போது தில்லி காவல்துறை ஆராய்ச்சி மையத்திற்கு (Delhi police Foundation) தலைவராக இருந்துள்ளார். இருபது வயது நிரம்பிய தமிழன் இராமசாமியின் துடிப்பான செயல்பாடுகளை அறிந்த கிரண்பேடி, இவரை தில்லி காவல்துறை ஆராய்ச்சி மையத்தின் ஊழியராக நியமித்-துள்ளார். சற்றொப்ப 4 ஆண்டுகள் அத்துறையில், ஆராய்ச்சிப் பணியில் இராமசாமி ஈடுபட்டுள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதே காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் காவல்-துறையில் பெண்களின் பங்கு குறித்து ஆராய்ச்சி செய்து பாராட்டு பெற்றவர் இவர். ஒரு பக்கம் கல்வி, மறுபுறம் ஆராய்ச்சி என ஈடுபட்ட இவருக்கு, வளர்ந்து வரும் ஏராள-மான மாணவர்களை அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எப்.எஸ் படிக்க வைத்து அவர்களை சாதனையாளராக்கி, தானும் சாதனை படைக்க வேண்டும் என விரும்பியுள்ளார்.
அய்.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் இரண்டாமிடம்: அவர் நினைத்தது போலவே தில்லியில் இராமசாமி இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்மினிஸ்டிரேட்டிவ் சர்வீஸ் (Rias- Ramasamy Institute administrative service) எனும் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்-கியுள்ளார். முதல் ஆண்டில் 2 மாணவர்கள் அய்.ஏ.எஸ் பயின்றுள்ளனர். அதில் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சத்தியபிரகாஷ் இந்திய அளவில் 2 ஆம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இன்றைக்குத் தில்லியில் 2 கிளைகளோடு 500 மாணவர்களுக்கு அய்.ஏ.எஸ் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சாதாரண தொழிலாளர்-களின் வீட்டுப் பிள்ளைகளையும் இவர் அய்.ஏ.எஸ் நிலைக்கு உயர்த்தியுள்ளார்.
தில்லி தமிழர் தஞ்சை வருகிறார்.!
சமூக உணர்வு கொண்ட பேராசிரியர் இராமசாமி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் புரா திட்டம் குறித்துக் கேள்விப்படுகிறார். இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் அடிக்கடி புரா திட்டம் குறித்துக் கூற, இதுபற்றி மேலும் அறியும் ஆர்வத்தை இவர் விரிவு-படுத்தியுள்ளார். இந்நிலையில் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளராக இருக்கும், மதுரையைச் சேர்ந்த தமிழர் பொன்ராஜ் மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தொடர்பு கிடைக்கிறது. பெரியார் குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசும் பேராசிரியர் இராமசாமி, ஈவெ.இராமசாமி இல்லா-விட்டால், இந்த இராமசாமிக்கு தில்லியில் என்ன வேலை? என ஒரே வரியில் அய்யா தத்துவத்தை விவரித்துப் பேசுகிறார். தந்தை பெரியாரின் இடஒதுக்கீட்டுக் கொள்கை தமிழர்களை உலகம் தழுவிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளதைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.
கோவிலுக்குச் செல்வதிலோ, செலவழிப்-பதிலோ எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் நான் ஒன்றை யோசிப்பதுண்டு. பிச்சைக்காரன் ஒவ்வொருவரிடமும் சென்று பிச்சை எடுக்-கிறான். அப்படி உழைத்து பிச்சை எடுத்து அதிலிருந்து கோவில் உண்டியலுக்குப் போடுகிறான். ஆனால் பணக்காரன் பிறரிட-மிருந்து திருடி அல்லவா கோவிலுக்குக் கொடுக்கிறான் என்கிறார்.
எளிமையின் தோற்றம் வேந்தர் கி.வீரமணி!
இந்திய அளவில் அய்.ஏ.எஸ் தொடர்பான பயிற்சி கொடுத்து வந்த பேராசிரியர் இராமசாமி, பெரியார் மணியம்மை பல்கலைக்-கழகச் செயல்பாடுகளை அறிந்து, இப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து பணியாற்ற முன்வருகிறார். முதல் கட்டமாக அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எப்.எஸ் தேர்வுகள் என்றால் என்ன? அவற்றை எப்படி அணுக வேண்டும்? அவற்றின் சாதக, பாதகம் என்ன? எளிதில் எப்படி வெற்றி பெறலாம்? என்பது குறித்த விழிப்புணர்வுப் பயிற்சியை சற்றொப்ப 700 மாணவர்களுக்கு 10.02.2008 அன்று சொல்லி சென்றுள்ளார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைக் கண்ட பேராசிரியர் இராமசாமி ஒரு கணம் திகைத்துப் போகிறார். அய்யா வீரமணி அவர்களை நான் அறிந்து வைத்துள்ளேன். ஆனால் அது இந்த அளவிற்கு விசுவரூபமாக இருக்கும் என நான் நினைத்ததில்லை. தில்லியில் அரசியல், சமூகம் கல்வி தொடர்பான பலரோடும் நான் பழகி வருகிறேன். ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதே அரசியல், சமூகம், கல்வி, இயக்கம் இப்படி பலவற்றோடும் நேரடித் தொடர்பில் இருக்கும் கி.வீரமணி அவர்-களுக்கு இவ்வளவு எளிய தோற்றமா? தோற்றம், பேச்சு, அணுகுமுறை அத்தனையிலும் எளிமையை இவரிடம் நான் காண்கிறேன். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை மக்கள் பல்கலைக் கழகமாக ஆக்கும் காரி-யத்தை வேந்தர் கி.வீரமணி அவர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார் என பேராசிரியர் இராமசாமி நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.
உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் அரசு சார்பான அய்.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் சிறப்புப் பேராசிரியராகவும் இவர் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய நிறுவனத்தில் வாய்ப்-பற்ற, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி கட்டணத்தில் சிறப்புச் சலுகையையும் இவர் வழங்கி வருகிறார்.
ஏராளமான மாணவர்களை இந்திய ஆட்சிப் பணிகளுக்கு அனுப்பிவரும் இந்தத் தமிழரை நாம் பெருமையோடும், தலை-நிமிர்ந்தும் வாழ்த்தலாம்! அதேநேரம் ஒடுக்கப்-பட்ட, வாய்ப்பற்ற என்ற வார்த்தை-களுக்குப் பின்னாலும், கட்டணச் சலுகை என்கிற சிந்தனைக்குப் பின்னாலும் ஈவெ.-இராமசாமி என்கிற தந்தை பெரியார் தானே இருக்கிறார்!
- சந்திப்பு - வி.சி. வில்வம் |