தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா
 |
உ.வே.சா. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாத அய்யரை, தமிழ்த் தாத்தா என்றும் சுவடிகள் காத்த சுரங்கம் என்று உச்சி மீது வைத்து கொண்டாட தமிழகம் தயங்கியதே இல்லை. ஆனால் இப்பெரியவரின் மறுபக்கம் நம்மை திடுக்கிட வைக்கிறது. தமிழ், தமிழர் என்ற போர்வையில் தமிழ் இனமே வஞ்சிக்கப்பட்ட நடைமுறை நிகழ்வுகளைப் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகளை சென்னை ஆனந்தபோதினி அச்சகத்தில் அச்சடிப்பது வழக்கம். இதன் உரிமையாளர் முனிசாமி முதலியார். நிர்வாகப் பொறுப்பு - ஜீவா என்று புனை பெயரில் அழைக்கப்பட்ட நாரண துரைக்கண்ணனிடம் இருந்தது. நாரண துரைக்-கண்ணன்கள் இறக்கும் மரபில் பிறந்-தாலும் தமிழை விரும்பிக் கற்றார். மறைமலை அடிகள், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், திரு.வி.க. சீனி வேங்கடசாமி, பா.வே.மாணிக்கம், கா.நமச்சிவாயம் போன்ற அறிஞர் பெருமக்களிடம் உறவாடி தமிழ் பயின்றார்.
பிரசண்ட விகடன் என்ற இதழை ஆனந்த போதினி அச்சகத்தில் அச்சிட்டு, ஆசிரியராக இருந்து வெளியிட்டார். சிறுகதை, நாவல், நாடகங்கள், படைப்பதில் வல்லவர். இவரது உயிரோவியம் என்ற நாவல் அந்தக் காலத்தில் 60,000 படிகள் விற்று சாதனை படைத்தது. அடுப்பூதும் பெண்களுக்கு படிக்கும் பழக்கம் இவரால் ஏற்பட்டது; கல்கிக்கும் இவர் முந்தியவர்.
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகள் என்றும் வழக்கம்போல் ஆனந்த போதினி அச்சகத்திற்கு அச்சுக் கோர்க்கப் போனது. அதில் இருந்த பாடலில் பிழைகண்ட நாரண துரைக்கண்ணன் அதைத்திருத்தியே அச்சடித்-தார். தவறை காலதாமமாக உணர்ந்த உ.வே.சா. தன் உதவியாளர் இராசகோபால் அய்யங்காரை விரைந்து அனுப்பி, பிழை திருத்தி அச்சேற்றும்படி அனுப்பி வைத்தார். அதற்கு முன்பே படிகள் அச்சாகி விட்டன. ஆனால் பிழை திருத்தப்பட்டது கண்டு வியந்து போய் உதவியாளர் அய்யங்கார், நாரண துரைக்கண்ணனின் தமிழறிவை வெகுவாகப் பாராட்டியதுடன், அவர் சம்மதித்தால், உ.வே.சா.விடம் மேலும் தமிழ்ப்பாடம் பயின்று, அறிவை பட்டை தீட்ட ஏற்பாடு செய்வதாய் சொல்லிச் சென்றார்.
அதற்கு உ.வே.சா. ஒப்புதல் தரவில்லை. அதற்கு உ.வே.சா. சொன்ன காரணம் நம்மை சிலிர்க்கவும் வீறு கொண்டு எழவும் செய்கிறது.
நான் சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.
ஆனால் அவர் தமிழ் கற்றது மட்டும் கும்பகோணத்தில் இருந்த திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தான்.
இன்னொரு நிகழ்வு. திருவாவடுதுறை ஆதீனம் - சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு ஒரு இருக்கை ஏற்படுத்தி நிதி உதவி செய்தார். ஆண்டு தோறும் வித்வான் படிப்பில் முதன்மையாகத் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் ஆயிரம் பரிசளிப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.
1930இல் தெ.பொ.மீ. என்ற மீனாட்சி சுந்தரம் (பின்னை நாளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் - ஓய்வு பெற்றபின் மேலமருவத்தூரில் ஆன்மிகப் பணி) முதலாவதாக தேறி இருக்க, அவரை ஒதுக்கி விட்டு தனக்கு நெருக்கமான மாணவன் கி.வா.ஜ என்ற ஜகன்நாதனுக்கு அப்பரிசை தந்தார்.
தமிழ்ப் பற்றாளராக இருப்பதைவிட தன் இனப் பற்றாளராக பார்ப்பனர் இருந்தனர் என்பதற்கு பல நடப்புகள் உண்டு.
செந்தமிழ்ச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும் அமராவதி (ஆந்திரம்) சிறையில் ஆங்கில அரசால் சிறைப்பட்ட போது, ம.பொ.சி. சிறையில் கம்ப இராமாயண வகுப்பு எடுப்பது பொழுது-போக்கு. சத்தியமூர்த்தி அய்யரும் சொற்பொழிவை கேட்டார். ஆனால் இடையிடையே எழுந்து கம்பனை விட வால்மீகியே உயர்வு என வாதிப்பாராம். ம.பொ.சி. கம்பனே பண்பானவன், உன்னதமான படைப்பாளி எனப் பல சான்றுகள் கூறி, சத்தியமூர்த்தியின் வாயை அடைப்பாராம். இதைத் தாங்க முடியாமல், சத்தியமூர்த்தி ஒரு கட்டடத்தில் கை கலக்கவே முனைந்தாராம். பெரும்பான்மையோர் ம.பொ.சி பக்கம் என்பதால் அடங்கிப் போவாராம். இதெல்லாம் இனப் பற்றுக்கு எடுத்துக்காட்டு.
புதுவைக் குயில் பாவேந்தர் சிறக்கப் பாடியுள்ளார்: வீட்டிலே தூத்தம் என்பார். வெளியிலே தண்ணீர் என்பார் பிழைப்-புக்காக.
உன் போல் கிள்ளாய்!
அடடா! வைர வரிகள்; ஒவ்வொரு எழுத்தும் கோடி பெறும் அண்ணாவே சொன்னாரே - தமிழ் பேசுவோரெல்லாம் தமிழராக முடியாது!
- சந்தனத் தேவன் |