தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

ஹாலிவுட் கலைவாணர் - 15

- சு. அறிவுக்கரசு

மோசியோ வெர்தோ படத்தின் தோல்வி பற்றி சாப்ளினின் நண்பர்கள் வெகு-வாகக் கவலைப்பட்டார்கள். விமர்சகர்களும் வருத்தப்-பட்-டார்கள். சாப்ளினின் நகைச்சுவை ஊமைப்-படங்களுக்குத்தான் பொருத்தம். வசனம் பேசி நடி-க்கும் பேசும் படங்களுக்கு அம்மாதிரிக் காட்சி அமைப்பு-கள் ஏற்றவை-யல்ல என்று விமர்சகர்கள் கருதினர். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சார்லி சாப்ளின் தன் அடுத்த படத்தை எடுக்கத் தொடங்-கினார். அந்தப் படம் லைம்லைட் (Lime Light).
1952இல் எடுக்கப்பட்ட படம் அது. ஒரு கோமாளி நடிகனின் வாழ்க்கை பற்றிய படம். சரியான வருமானம் இல்லாது அல்லல்படும் நடிகனின் வாழ்வு பற்றிய படம். பல முயற்சி-களில் ஈடுபட்டும் வெற்றி அடைய முடியாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, அடிமைப்பட்டு, மக்களால் மறக்கப்பட்டு மரணம் அடைந்த நடிகனின் கதையைப் படமாக்கினார்.

அமெரிக்காவில் பிரபலமாக அந்தக் காலத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டன் (Buster Keaten) என்பவரை நடிக்க வைத்துப் படம் எடுத்தார். ஊமைப்படக் காலத்தில் சிறந்த நகைச்சுவை நடிகராக இவரைப் போலவே விளங்கியவர் இவர். சில தொழில்நுட்ப விவகாரங்களில் சாப்ளினை-விடச் சிறந்தவர். சாப்ளினைப் போலவே இவரும் திரைப்படங்களை இயக்கியவர். அவர் இயக்கித் தயாரித்த ப்ளே ஹவுஸ் (Play House) எனும் படத்தில் ஒரு காட்சியில் மேடையில் 9 பேர் கொண்ட இசைக்குழு நிகழ்ச்சி நடத்தும்.
இந்தக் காட்சியில் இசைக்கருவிகளை இயக்கும் 9 பேரும் ஒரே நடிகர். அவர் கீட்டனே! ஒரே ஃபிரேமில் ஒரே நேரத்தில் ஒன்பது கீட்டன்கள் தோன்றும் காட்சியை அன்றைக்-கிருந்த காமிராவை வைத்தே எடுத்து அதிசயத்தை நிகழ்த்தினார். அது எப்படி என்று இன்று வரை யாருக்கும் விளங்கவில்லை.
அதனினும் ஆச்சரியமான காட்சி ஒன்றும் அந்தப் படத்தில் உண்டு. இசைக்குழு இடம் பெற்ற காட்சியைக் காட்டிவிட்டுக் காமரா-வைப் பார்வையாளர் பக்கம் திருப்புவார். அரங்கத்தில் அமர்ந்திருவர்கள் அத்துணைப் பேரும் பஸ்டர் கீட்டன்களே! எப்படி எடுத்-தார்? கிராபிக், மார்ஃபிங் எதுவுமே இல்லாத அந்தக் காலத்தில் எப்படி இந்தச் சாதனை சாத்தியமாயிற்று? இன்றுவரை விளங்கவே இல்லை! அவரே சொன்னால்தான் உண்டு. அதற்-கும் வாய்ப்பில்லை! அவர் இறந்து விட்டாரே!
அப்பேர்ப்பட்ட திறமைசாலி நடித்த லைம் லைட் படத்தில் அவரின் நடிப்பு - சாப்ளினின் நடிப்பைவிடச் சிறப்பாக அமைந்திருந்தது என்பதைத் திறனாய்வாளர்கள் குறிப்பிட்டனர். சாப்ளின் இதை எதிர்பார்த்தவரைப் போல இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்தார்; சில காட்சிகளை நீக்கியே விட்டார்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அய்ரோப்பிய நாடுகளுக்குச் சென்றார், தம் மனைவி குழந்தைகளுடன் ஆறு மாத காலம் கழித்து அமெரிக்கா திரும்ப முயன்றார். முடியவில்லை. அவருக்கு விசா தர அமெரிக்கா மறுத்துவிட்டது. பல ஆண்டுக்காலம் அமெரிக்-காவில் வசித்தாலும் அவர் அமெரிக்கக் குடிமகனாக ஆகவில்லையே! பிரிட்டிஷ் குடிமகனாகவே இருந்த காரணத்தால் விசா தேவை. அதைத் தர அமெரிக்கா தயாராக இல்லை.
விசித்திரமான நிலை என்னவென்றால், அமெரிக்காக்காரர்களில் பாதிப் பேருக்கு மேல், பிரிட்டிஷ்காரர்களாக இருந்தவர்கள்தாம். இருந்தாலும் இப்போது அமெரிக்கர்கள் சி.அய்.ஏ. புலனறிக்கை, கம்யூனிஸ்ட் எனக் கருதப்-பட்ட நிலை, அமெரிக்கக் குடியுரிமைக்கு விண்ணப்பம் போடாதது எல்லாமாகச் சேர்ந்து அவரைப் பழி வாங்கியது அமெரிக்கா. ஆனாலும் அவர் அசரவில்லை.
தம் அமெரிக்க மனைவி ஊனாவை அமெரிக்-காவுக்கு அனுப்பினார். தமது படப்-பிடிப்பு ஸ்டுடியோ, மாளிகை முதலிய எல்லா சொத்துக்களையும் விற்றுக் காசாக்கி வரச் சொன்னார். அவரும் அம்மாதிரியே செய்து திரும்பினார். ஸ்விட்ஜர்லாந்து நாட்டில் ஒரு பெரிய மாளிகையை வாங்கி சாப்ளின் தம் மனைவி மக்களுடன் வாழ்ந்தார்.
லைம்லைட் படம் வெற்றி பெறவில்லை. ஆனால் படத்தின் பின்னணி இசை மிகப்-பெரும் பாராட்டைப் பெற்றது. பின்னணி இசை அமைப்பாளர்கள் மூவரில் சாப்ளின் ஒருத்தர். பின்னணி இசையில் வயலின் வாசித்த-வரும் சாப்ளின்தான்.
1952இல் படம் அய்ரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் வெளிவந்தது. ஆனால் அமெரிக்காவில் வெளியாகவில்லை. காரணம் தெரிந்ததே! அரசியல். ஒரு கலைஞனை அமெரிக்க அரசு வெறுத்ததே காரணம். ஆனாலும் என்ன..
1972இல் அமெரிக்காவில் திரையிடப்-பட்டது. சிறந்த பின்னணி இசைக்காக லைம் லைட் சினிமா உலகின் மிக உயர்ந்த பாராட்டு விருதான ஆஸ்கார் விருது இந்தப் படத்திற்கு அளிக்கப்பட்டது.
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமோ? என்றார் புரட்சிக் கவிஞர்.
ஆனாலும் அமெரிக்க அரசு தன் விசயத்தில் கொண்டிருந்த வஞ்சகத்தை அவரால் மறக்க முடியவில்லை. பணத்திற்கு முக்கியத்துவம் தரும் முதலாளித்துவ நாடான அமெரிக்கா, மனிதாபி-மானமற்ற முறையில் செயல்பட்டதை (gLtij) அவரால் மன்னிக்க முடியவில்லை. மனித நேயமிக்-கவர்கள் யாராவது அமெரிக்கா-வில் தென்-பட்டால் அவர்களைக் கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தும் போக்கைக் கண்டிக்-காமலிருக்கவும் முடியவில்லை.
இந்த நக்கீரக் கோபம், இதையே மய்யமாக வைத்து ஒரு படம் எடுத்தால் என்ற எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தியது. திரைக்கதையை எழுதத் தொடங்கி விட்டார்.
படம் 1957இல் வெளிவந்தது. “எகிங் இன் நியூயார்க்“ (A King in Newyork) நியூயார்க்கில் ஒரு அரசன் என்ற படம்தான் அது. இந்தப் படத்தில் அரசனாக நடித்தார் சாப்ளின். அரசியல் காரணங்களினால் ஒரு நாட்டை விட்டு வெளியேறும் நிலைமைக்கு ஆட்பட்ட ஓர் அரசன், சொத்து, நகை, பணம் எல்லாவற்-றையும் மூட்டை கட்டிக் கொண்டு பெரும் பணத்துடன் நியூயார்க் நகரை அடைகிறார். இந்நகரில் சுகமாக வாழலாம் என வந்தவருக்கு அதிர்ச்சி தரும் நிலை ஏற்பட்டு விட்டது. அவருடன் வந்திருந்த அவரது மந்திரி எல்லா-வற்றையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டான். அரசன் ஆண்டியாகித் திண்டாடுகிறான்.
அமெரிக்க வாழ்க்கை, தொழில், வணிகம் போன்ற பல அம்சங்களைக் கேலி செய்து படம் எடுத்-திருந்தார். பிரச்சார நெடி அதிகமிருந்தது. மக்கள் அதை ரசிக்கவில்லை. ஆனால், ஃபிரான்சு நாட்டில் நல்ல வரவேற்பு. ஆனாலும் என்ன... படம் வணிக ரீதியாகத் தோல்விதான்.
சாப்ளின் அதையெல்லாம் பொருட்படுத்த வில்லை. அடுத்த படத்தைப் பற்றியச் சிந்-தனையில் ஆழ்ந்து விட்டார். பெரும் பணக்-காரன் ஒருவன் தூதுவராகப் பணியேற்க கப்பலில் அமெரிக்காவுக்குச் செல்கிறான். அவர் மனைவி கொஞ்ச காலமாக அவரை விட்டுப் பிரிந்து ஹவாய்த் தீவில் தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு புதிய பதவியில் அமர ஆசைப்படுகிறார் பணக்காரர். ஹாங்காங்கில் இருந்து புறப்படும் கப்பலில் ஏறுகிறார். அந்தக் கப்பல் பலவிதமான ஆடம்பரச் சொகுசு அமைப்புகளைக் கொண்டது.
கப்பல் புறப்பட்டு விட்டது. அவருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட அறையில் ஓர் அழகி ஒளிந்து கொண்டிருக்கிறாள். அழகும் கவர்ச்-சியும் கொண்ட பேரழகுப் பெட்டகம். ரஷ்யாவைச் சேர்ந்தவள். தன் அழகைக் காட்டிப் பலருக்கும் தன் உடலைக் காட்டி வாழ்ந்து கொண்டிருந்தவள், அமெரிக்கா போனால், புதுவாழ்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் புறப்பட்டுப் போகிறவள் பணக்-காரனின் அறையில் பதுங்கிக் கொள்கிறாள்.
அவளை அந்த அறையிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறான் செல்வந்தன். அவள் நகர மறுக்கிறாள். எல்லாரையும் காட்டி அவனு-டைய காதலி எனக்கூறிப் பகிரங்கப்படுத்தி அவரின் தூதுவர் வேலைக்கு வேட்டு வைத்து விடுவேன் என மிரட்டுகிறான். மிரண்டு போன பணக்காரன் சரி, தொலை என்று தன் அறையில் தங்க அனுமதிக்கிறான். பல தொல்-லைகளையும் அதன் காரணமாக அனு-பவிக்கிறான்.
கப்பல் ஹவாய்த் தீவை அடைகிறது. மனைவி வந்து அவளைப் பார்த்து விட்டால் ஏற்படும் பூகம்பத்தைக் கற்பனை செய்து பார்த்து பயப்படுகிறார். அவனிடம் ஒரு யோ-சனையைத் தெரிவிக்கிறார். அவறைத் தன் அந்-தரங்கப் பணியாளரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறார். இப்படியே போகிறது படம்.
அமெரிக்கச் செல்வந்தனாக நடித்தவர் உலகப் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோ. முயன்றால், மார்லன் பிராண்டோ, சிவாஜி கணேசனைப் போல் நடிக்கலாம் என்ற புகழ்மிக்க அண்ணாவின் வரிகளில் குறிப்பிடப்-பட்ட சிறந்த நடிகர். ஹாங்காங் பெண்ணாக நடித்தவர் கோஃபியா லாரென் என்ற இன்னொரு புகழ்பெற்ற நடிகை. இருபெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படம் எடுபடவில்லை. படம் பார்த்தவர்களின் மனதில் பதிந்த ஒரே ஒரு காட்சி. இது மட்டுமே. ஒரு காட்சியில், கோபியா லாரென் சுற்றுப் புறத்தில் நிகழ்வது எதையும் கவனிக்காமல் பத்திரிகையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருப்-பார். அந்தக் காட்சியில் மக்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள். காரணம், அவர் செய்தித்தாளைத் தலை கீழாகப் பிடித்துக் கொண்டிருப்பார்! இந்தக் காட்சியை இந்தியப் படங்கள்கூடக் காப்பியடித்தன.
படத்தின் பெயர் என் கவுண்டஸ் ஃபிரம் ஹாங்காங் (A Countness From Hongkong) இது சார்லி சாப்ளின் எடுத்த வண்ணப்படம். 1967இல் வெளிவந்தது. இதுதான் சாப்ளினின் கடைசிப்படம்.
படம் தோல்வியடைந்தாலும் அமெரிக்கா சார்லி சாப்ளினைப் பற்றிய தன் கருத்தை மாற்றிக் கொண்டது. சாப்ளினின் பெருமையை உணராமல் அவமானப்படுத்தி விட்டோம் என்கிற குற்ற உணர்வுக்கு ஆளானார்கள்.
கழுவாய் தேடுவது போல, 1971இல் அவருக்குச் சிறப்பு ஆஸ்கர் பரிசு அளித்துப் பெருமைப்படுத்தினார்கள். திரைப்படத்தை ஒரு கவின் கலை என்றாக்கி பெருமை இவருக்கு உண்டு என விதில் பொறிந்தார்கள். காலங்கடந்த ஞானோதயம் தான்!
இவையெல்லாம் சார்லி சாப்ளினின் இறுதிக் காலத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. அமெரிக்கா தொடர்ந்து அவருக்குச் சிறப்பு-களைச் செய்து கொண்டே இருந்தது. அவரும் தம் மனைவி, நிறைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவே இருந்தார்.