தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்

தைராய்டு குறைபாடும் விளைவு-களையும் முன் இதழில் கண்டோம். தைராய்டு மிகுதியால் ஏற்படும் விளைவுகளை இனி நோக்குவோம்.
சிலருக்கு கழுத்தின் முன்புறம் வீக்கம் தோன்றி அது மெதுவாக வளர்ந்து கொண்டே வரும். இதை முன் கழுத்துக் கழலை என அழைக்கி-றோம். தைராய்டு சுரப்பி, வழக்கத்-தைவிட பெரியதாக வளர்ச்சி அடைவதால் ஏற்படும் வீக்கமே அது. இந்த வீக்கத்தால் அதிக அளவு தைராக்சின் உற்பத்தியாகக் கூடும். அதனால் பல விளைவுகளை இந்நோய் உண்டாக்கும். சாதாரணமாக இந்நோய் இளம் பெண்களையே அதிக அளவு தாக்கும்.
நோய்க் காரணீயம் (Aetiology) : விபத்து, பயம், மனதளவில் திடீரென ஏற்படும் பாதிப்புகள் (Emotional Shocks) நீண்டநாள் உடல் நலக் குறைவு, அறுவை மருத்துவம் போன்றவை காரணமாக தைராய்டு சுரப்பி அதிக அளவு செயலாற்றக் கூடிய நிலை ஏற்படும். இதனால் தைராக்சின் மிகுதியாகி விளைவுகளை ஏற்படுத்தும். பரம்பரையாகக் கூட மிகச் சிலர் இந்நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.
நோய் கூற்றியல் (Pathology): தைராக்சின் சுரப்பை கட்டுபடுத்தும் தைராய்டு தூண்டும் சுரப்பு (Tyroid Stimulating Hormone - TSH) மூளையின் அடிப்பாகத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிறது. தைராக்ஸின் தேவைக்-கேற்ப இச்சுரப்பு சுரப்பதால் தைராக்சின் அளவு சீராக இரத்தத்தில் காக்கும் வாய்ப்பு ஏற்படும். தைராய்டு தண்டும் சுரப்பி மிகுதிப்-பாட்டால், நீண்ட நேரம் தைராய்ட் சுரப்பைத் தூண்டும் நோய் எதிர்ப்புப் புரதம் (Long Acting Thyroid Stimulator) ஒன்று தோன்றுகிறது. இது உடனடியாக இரத்தத்திலிருந்து குறையாது. அதனால் தைராக்சின் சுரத்தல் தொடர்ச்சியாக நடைபெறும் சூழல் உண்டாகி தைராய்டு மிகுதிப்பாடு குறைபாடுகள் தோன்றுகின்றன. எதனால் இந்த புரதம் தோன்றுகிறது என இதுவரை அறியப்படவில்லை.
நோயின் அறிகுறிகள்: ஆரம்ப நிலையில் நரம்புத் தளர்ச்சி, எதற்கெடுத்தாலும் பயப்-படுதல் அமைதியின்மை, கைவிரல்களில் நடுக்கம், களைப்பு, வியர்த்தல் உணர்ச்சிவசப்-படுதல், சிறிது உழைத்தாலும் மூச்சிரைத்தல், அதிக நாடித் துடிப்பு படபடப்பு ஆகியவை உண்டாகும். மலம் கழிக்கும் இடைவெளி குறுகும் நோயாளியின் உடல் வெப்பமாக இருக்கும். முக்கியமாக கைகளில் வெப்பத்தை நன்கு உணரலாம். உணர்ச்சி வசப்படும் வேளையில் கை, கால்கள் திடீரென சில்லிட்டுப் போகும் நிலையும் ஏற்படும். நோயாளியின் கைகளை நேராக நீட்டிக் காட்டச் சொல்லும் பொழுது, கை விரல்களில் லேசான நடுக்கம் ஏற்படும். இதுவே பெரும்பாலான நேரங்களில் ஆரம்ப அறிகுறியாகவும் தோன்றும். சாதாரண-மாக தைராய்டு சுருப்பி பருக்கத் தொடங்கும். இது சில நேரங்களில் கண்களுக்குப் புலப்-படாமலும் இருக்கும். சில நேரங்களில் கழுத்தின் இரு புறச் சுரப்புகளும் பருக்கலாம் அல்லது ஒன்று மட்டுமே கூடு பருக்கலாம். இவ்வாறு ஒருபுறம் மட்டும் பருக்கும் தைராய்டு சுரப்பால் கழுத்து வீக்கம் சமமாக இல்லாத நிலை ஏற்படும். பெரிதாகும் தைராய்டு சுரப்பிகள் மிகவும் பெரிய அளவுகூட பெரியதாகத் தோன்றும். இப்படி பருக்கின்ற தைராய்டு சுரப்பியையே முன் கழுத்துக் கழலை (Goitre) என்கிறோம். இதனுடைய பருதத அளவிற்கும், தைராக்சின் சுரப்பதற்கும் பெரிய அளவு தொடர்பு தெரியாது. வீங்குகின்ற தைராய்டு சுரப்பிக்கு அதிக அளவு இரத்த ஓட்டம் உண்டாகும். அதனால் தமனித்-துடிப்பை சாதாரணமாகவே பார்க்க முடியும். கண்களில் மாற்றம் ஏற்படும். கண்ணிமைகள் மேல் நோக்கி மடங்கிவிடும். கண்கள் துருத்திக் கொண்டு, முட்டை கண்கள் போல் தெரியும் (Exopthalmos) கண் சதைகள் தளர்ச்சியடையும் நிலை மெல்ல ஏற்படும். சில நேரங்களில் கண்களையே மூட முடியாத நிலைக்கூட தோன்றக்கூடும். கண் சதைகளில் ஏற்படும் பாதிப்பால் இருபார்வை (Diplopia) கோளாறு ஏற்படலாம். கண் இமைகளில் வீக்கம் ஏற்படும். தைராய்டு மிகுதியால் கண் பாதிப்புக்கள் அதிக அளவு ஏற்படும். கண்களுக்கு அடுத்து இதயப் பாதிப்பு அதிக அளவு ஏற்படும். நெஞ்சு படபடப்பு உண்டாகும். தூங்கும்பொழுது கூட இந்தப் படபடப்பை உணர முடியும். நாடித்-துடிப்பு அதிகமாகும். இரத்தக் குழாய்கள் விரி-வடையும். அதனால் தோல் சூடாகத் தோன்றும். சிறு சிறு தந்துகளில் கூட நாடித் துடிப்பை உணர முடியும். நாள் பட்ட நிலையில் இதயத்தின் இயக்கமே பாதிக்கப்-படும் நிலை ஏற்படும். வயதானவர்களுக்கு கண்ணில் மாற்றம் ஏற்படுவதைவிட, இதயப் மாதிப்பே அதிகளவு உண்டாகும். வளர்சிதை மாற்றம் பாதிப்படையும். பசி அதிகளவு எடுக்கும்.அதிகளவு வளர் மாற்றம் ஏற்படும்-பொழுது அதிக அளவு உணவு உட்கொள்ளும் நிலை உண்டாகும். மாற்றத்தின் தேவைக்கேற்ப உணவு உட்கொள்ளாவிடில் உடல் இளைக்கத் துவங்கும். நாளாவட்டத்தில் உடல் கடுமையாக மெலிந்துவிடும். சில நேரங்களில் வளர்-தேவைக்கு மேல் உணவு உட்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டால், உடல் பருமனடையும். சில நேரங்களில் சிறு நீரில் சர்க்கரைச் சத்து வெளிப்படும். ஆனால் தைராய்டு மிகுதிப்-பாட்டை சரி செய்யும் பொழுது இதுவும் சரியாகி விடும். மலம் கழிக்கும் இடைவெளி குறுகும். மாதவிலக்கு குறையும் அல்லது வராத நிலைகூட ஏற்படும். பெரும்பாலான அறிகுறிகள் பல நேரங்களில் தெரியா-விட்டாலும், எடைக்குறைவு, உடல் மெலிவு, மலம் கழிக்கும் நிலைகளில் மாற்றம், தைராய்டு சுரப்பியில் உள்ள வீக்கம் போன்றவற்றைக் கொண்டு நோயைச் சந்தேகிக்கலாம்.
நோய் ஆய்வு: ஆய்வுக்கூட ஆய்வுகள் மூலம், இந்நோயை எளிதில் கண்டறியலாம். அயோடின், தைராய்டு சுரப்பிகளால் உறிஞ்சும் அளவை வைத்து இந்நோயை எளிதில் கண்டறியலாம். இச்சோதனை கருவுற்ற பெண்-களுக்கு செய்யக்கூடாது. அதேபோல் இரத்தத்-தில் அயோடின் அளவை கணக்கிடுவது மூலமும் இந்நோயை அறியலாம். சாதாரண நிலையில் உடலின் வளர்மாற்ற அளவு (Metabolic Rate) சீராக இருக்கும். தைராய்டு அதிக அளவு சுரக்கும் நிலையில் வளர்மாற்ற அளவு அதிகமாகி விடும். அதே சமயம் இரத்தத்தில் கொழுப்பு அளவு மிகவும் குறையக்கூடும்.
மருத்துவம்: தைராய்டு மிகுதியால் ஏற்படும் விளைவுகளை எளிதில் கட்டுப்படுத்தலாம். மருந்துகள் மூலமும், அறுவை மருத்துவம் மூலமும் இந்நோயை முழுமையாக குணமாக்-கலாம்.
மருந்துகள்: தைராய்டு எதிர்ப்பு மருந்துகள் கண்டறியப்படும் முன்பு, பெரும்பாலும் தைராய்டு சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் எடுத்து விடும் நிலையே இருந்தது. ஆனால் கார்பிமசோல் போன்ற தைராய்டு எதிர்ப்பு மருந்துகள் கண்டறியப்பட்ட பின்பு இந்நிலை பெரிதாக மாறிவிட்டது. தைராய்டு எதிர்ப்பு மருந்துகள் முதலில் அதிக அளவு கொடுத்து தைராய்டு அளவை குறைத்து விட்டு, பின் மருந்தின் அளவு குறைக்கப்படும். ஆனால் மருந்தை நிறுத்தாமல் தொடர்ச்சியாக சாப்பிடவேண்டும். ஏறக்குறைய 12 மாதங்கள் சாப்பிட்டபின் தைராய்டு அளவு சாதாரணமாக இருப்பதை உறுதி செய்து கொண்டபின் மருந்தை நிறுத்தலாம். ஆனால் மருந்தை நிறுத்தியபின் சிறிது காலம் கழித்து மீண்டும் நோயின் அறிகுறி தெரியத் தொடங்கலாம். அந்நிலையில் மீண்டும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை உண்டாகலாம். சில நோயாளி-களுக்கு கார்பிடிசோல் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். அந்நோயாளிகளுக்கு மூதைல் தையோ யூரோசில் என்ற மருந்தை கொடுக்கலாம். சில சமயம் இம்மருந்துகளால் தைராய்டு சுரப்பி பெருக்கத் தொடங்கும். அவ்வேளைகளில் மூச்சுக்குழலை அழுத்தி மூச்சுத் திணறல் ஏற்படக் கூடும். சில நேரங்களில் வெளியே, கழுத்தின் வெளிப்புறம் பருத்து, பார்வைக்கு அசிங்கமாகத் தோன்றும், தைராய்டு எதிர்ப்பு மருந்துகள் பக்க விளைவு-களை உண்டாக்கும் தன்மையுடையவை. எனவே சரியான மருத்துவ ஆய்வுகளின் மூலம் தைராக்ஸின் அளவை அறிந்து அதற்கு தகுந்தவாறு, சரியான மருத்துவ ஆலோசனைப் படி இம்மருந்துகளை எடுக்கவேண்டும். மருத்துவ முறையில், அயோடின் நோயாளிக்குக் கொடுப்பதன் மூலம், நல்ல பலன் கிடைக்கும் கதிரியக்க அயோடின் (Radio Active Iodine) நல்ல பலனை கொடுக்கும் மருந்தாகும். கருவுற்ற மகளிருக்கும் இதை கொடுக்கலாம். அறுவை மருத்துவம் செய்ய இயலாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கும் மற்ற தைராய்டு எதிர்ப்-பான்கள் பக்க விளைவை உண்டாக்கக் கூடிய நிலையில் கதிரியக்க அயோடின் நல்ல விளைவை உண்டாக்கும்.
அறுவை மருத்துவம்: மருத்துவத்தின் மூலம் குணமாக்க முடியாத நோயாளிகளை அறுவை மருத்துவத்தின் மூலம் சரியாக்கலாம். மருந்து-களின் ஒவ்வாமை, நீண்ட நாட்கள் மருந்துகள் சாப்பிட்டும் சரியான பலன் இல்லாமை, கழுத்துக் கழலை மிகப் பெரிய அளவில் வளர்ந்து, பார்க்க சகிக்காத நிலையில் இருத்தல், மீண்டும் மீண்டும் அதிகமாகும் தைராய்டு சுரப்பி ஆகிய நிலைகளில் அறுவை மருத்துவம் சிறந்த பலனைத் தரும். தைராய்டு சுரப்பிகளை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அறுவை மருத்துவம் மூலம் எடுப்பதன் மூலம் நோயைக் குணமாக்கலாம். சில நோயாளிகள் தைராய்டு முழுமையாக நீக்கப்பட்ட நிலையில், தைராய்டு குறைபாடு ஏற்படும் நிலை உண்-டாகும். அவர்களுக்கு தைராக்சின் மாத்தி-ரைகளைக் கொடுக்க வேண்டும்.
எளிதில் சரியான மருத்துவம் மூலம் குணமாக்கக் கூடிய தைராய்டு சுரப்பி வியாதி-கள் நோயாளிகளின் அறியாமையால் மிகவும் அதிகமாகும். சரியான ஆய்வுகள் சரியான மருத்துவ ஆலோசனை, சரியான மருத்துவம் ஆகியவை நல்ல பலனை கொடுப்பதால், எளிதில் நோயை சீராக்கி, நல் வாழ்வு பெறமுடியும்.