தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஆசிரியர்: கோவி. லெனின், சேரன் வெளியீடு, சென்னை - 83, செல்: 98401 60078
இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவையான ஒரு சிறந்த நூலை கோவி.லெனின் படைத்திருக்கிறார். கலைஞர் என்கிற தமிழினத்தின் ஆளுமையை இலகுவான தமிழ்நடையில் அலசியிருக்கிறார். நூலைப் படிக்கும் போதே நூல் நம்மோடு உறவாடுகிறது; உரையாடுகிறது. கலைஞரின் 25ஆம் அகவையிலிருந்து 84 அகவை வரை அவர் சந்தித்தவை சங்கமிக்கின்றன. அனைத்துமே அரிய கருவூலமாக இருக்கின்றன. கலைஞரிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கின்றன என்பதை நூல் உணர்த்துகிறது. கேள்வி பதில் உத்தியில் சுவைபட எழுதப்பட்ட இந்நூலிலிருந்து....
ஏற்ற இறக்கங்கள், பாராட்டுதல்கள், இழி மொழிகள் எல்லாவற்றையும் கடந்துதான் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும். உங்களின் 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வு அதைத்தான் காட்டுகிறது. இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தபோது, இந்தியாவில் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிற அளவுக்கு ஜனநாயகத்தை மீட்பதற்கான அறவழிப் போராட்டம் நாடு முழுவதும் நடந்ததை இன்றைய தலைமுறையினர் அறிய மாட்டார்-கள். நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வரை இந்திராகாந்தியின் சிறந்த நண்பராக இருந்த நீங்கள், அதன்பின் ஜனநாய-கத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்குத் துணை நின்றதுடன், அந்தப் போராட்டத்தில் உங்கள் ஆட்சியையே இழந்தீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் குடும்பத்தினர் சந்தித்த சோதனை-களை நெருக்கடி நிலையின் போது வேறெவரும் சந்திக்கவில்லை. சோதனைகளை எதிர்கொள்வது உங்களுக்குப் புதிதல்ல, நான் பார்க்காதவையா? ஆனால், உங்கள் குடும்-பத்தினர் அதை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை வந்தபோது, எப்படி உணர்ந்தீர்கள்?
இன்றைக்கும் பல அரசியல்வாதிகள் ஊழல் வழக்குகளுக்காக உள்ளூர் நீதிமன்றப் படிக்கட்டுகளை மட்டுமின்றி, பெங்களூரு நீதிமன்றப் படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கிக் கொண்டு, எனக்கு வந்த சோதனையைப் பாருங்கள் என்று கூக்குரலிடுகிறார்கள். இதுதான் அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய சோதனை என்பதுபோல ஏடுகளும் எழுது-கின்றன. இந்தச் சுதந்திர நாட்டில் ஜனநாய-கத்திற்காக ஒரு போராட்டம் நடந்ததையும், அதில் கழகத்தினரும் குடும்பத்தினரும் எவ்-வாறான சிறைச் சித்திரவதைகளை அனு-பவித்தார்கள் என்பதையும், இந்தச் சோதனை-களையெல்லாம் மீறித்தான் தி.மு.கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது என்-பதையும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஓர் இளைஞன் அரசியலுக்கு வந்தால் அவனது குடும்பம் பாதிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டுமா? நீங்கள் அந்த நிலைமையைச் சமாளித்தது போல மற்றவர்களால் சமாளிக்க முடியுமா?
இந்திய ஜனநாயகத்திற்கு 1975இல் சோதனை வந்தபோது, உன்னைப் போல் இன்னொரு பங்கு வயது எனக்கு! சோதனைக் காலத்தில்-தான் நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். கழகத்தின் இலட்சக்-கணக்கான உடன்பிறப்புகள் உற்ற நண்பர்-களாக விளங்கினர். உற்ற நண்பர்கள் என நினைத்திருந்த பலர் சோதனையை எதிர்-கொள்ளப் பயந்து, மாற்று முகாம் தேடினர். நெருக்கடி நிலைக் காலத்தில் கழக ஆட்சி கலைக்கப்பட்டதும், ஒவ்வொரு ஊரிலும் உடன்பிறப்புகளைக் கைது செய்யும் படலம் ஆரம்பமானது. எனவே சோதனையை முதலில் எதிர்கொண்டவர்கள் அவர்கள்தான். அதன்-பிறகே என் குடும்பத்தை நோக்கிக் குறி வைக்கப்-பட்டது. முரசொலி மாறனையும், முக.-ஸ்டாலினையும் கைது செய்து சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைத்து விட்டனர். தமிழகத்தில் இருந்த மற்ற சிறைகளில் அடைபட்டிருந்த உடன்பிறப்புகளைக் காட்டிலும் சென்னைச் சிறையில் இருந்தவர்கள் சிறப்புக் கவனம் பெற்றார்கள். கைதிகளை இரத்தம் சொட்டச் சொட்ட அடிப்பது, உயிர் போகும் நிலையிலும் கருணை காட்டாமல் உதைப்பது என அந்தச் சிறையிலிருந்த கழக உடன்பிறப்புகளும் தி.க., பழைய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சித்திரவதைகளை எதிர்கொண்டார்கள்.
தமிழகத்தின் மற்றச் சிறைகளில் இருந்த கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திப்-பதற்கு அனுமதித்தார்கள். சென்னைச் சிறையில் அந்த அனுமதியும் கிடையாது. கருணாநிதியின் மகனாக இருந்தாலும் கண்ணாயிரத்தின் மகனாக இருந்தாலும் சிறை நிர்வாகத்திற்கு ஒன்றுதான். யாரையும் பார்க்க அனுமதிக்க-வில்லை. கழக உடன்பிறப்புகள் எல்லோரும் ஒன்றுதான், அவர்களில் பேதமில்லை என்-பதைச் சிறை நிர்வாகத்தினரும் அறிந்து வைத்திருந்தார்கள் போலும்.
சிறைச்சாலைக்குள் என்ன நடக்கிறது என்பதைச் செய்தித்தாள்களிலும் பார்க்க முடியாது. ஏனென்றால் நாளிதழ்களில் அரசாங்-கத்திற்கு எதிரான செய்திகளை வெளியிட-முடியாதபடி தணிக்கை முறை அமலில் இருந்தது. சிறைச் சித்திரவதை என்பது அரசாங்கத்திற்கு எதிரான செய்தி அல்ல. மனித உரிமைகளுக்கு எதிரான செய்தி.
எதிர்காலத் தேவைகளையும் மனத்திற்-கொண்டு சிந்தித்துத் திட்டங்களை நிறை-வேற்றும் உங்கள் நிர்வாகத் திறமையினை அரசாங்க உயரதிகாரிகள் பெருமைப்படச் சொல்-வார்கள். நாளைக்குப் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்பதை யோசித்து இன்றைக்கே அதற்கேற்றவாறு சாலைகளை அமைப்பதும், பாலங்களை அமைப்பதும் உங்களின் நிர்வாகத் திறனுக்கான சான்று.
சென்னை அண்ணா மேம்பாலம் கட்டப்-பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இப்போதுள்ள போக்குவரத்து நெரிசலை கருத்திற்கொண்டு அன்றைக்கே இதனை அமைத்திருக்கிறீர்கள்.
நான் அடிக்கடி மனப்பயணம் மேற்-கொள்ளும்-போது நினைத்துக் கொள்வேன். சென்னையிலிருந்து திருவாரூருக்குச் சாலை வழியே செல்வதென்றால் எத்தனையோ பாலங்கள், மேம்பாலங்கள் இவற்றைக் கடக்க வேண்டும். சென்னை அண்ணா மேம்பாலத்தில் தொடங்கி, திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஓடம் போக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருக்கின்ற பாலம் வரை பெரும் பாலான பாலங்கள் உங்கள் ஆட்சியில் கட்டப்-பட்டவைதாம். நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்ட நீங்கள், தண்ணீர் ஓடும் ஆற்றைக் கடக்கப் பொதுமக்களும் வாகனங்களும் சிரமப்படக்கூடாது என்று அத்தனை பாலங்-களையும் கட்டியிருக்கிறீர்கள்.
தமிழகத்தில் காவிரி அகலக் கை விரித்து, ஆர்ப்பரித்து ஓடும் இடம் திருச்சி மாவட்டம். அங்கே ஒரு கரையில் குளித்தலை. இன்னொரு கரையில் முசிறி. நடுவில் ஓடும் காவிரியின் அகலம் ஏழத்தாழ ஒரு மைல். காவிரி காய்ந்து கிடக்கும் நேரத்தில் சுடுமணலில் நடந்து அக்கரைக்குச் செல்பவர்கள், வெள்ளம் பாயும் நேரத்தில் சுழல் நடுவே பரிசலில் பயணித்து, அக்கரைக்குச் செல்வார்கள். இரு பருவத்திலும் அவதிப்பட்ட மக்களின் வேதனையைக் குளித்-தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த-போதே உணர்ந்துவிட்டதன் காரணத்-தால், நீங்கள் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு அந்த 1 மைல் நீளத்திற்குப் பாலம் கட்டி, பயணத்தை எளிதாக்கிவிட்டீர்கள். தமிழகத்தில், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீளமான பாலம் அதுதான்.
எதிர்காலம் சிறக்க வேண்டும் என்ற இலக்குடன் தானே இந்தப் பயணத்தை நமது இயக்கம் மேற்கொண்டது. ஆட்சி என்கிற வாய்ப்பு கிடைக்கும்போது, அதனை எதிர்கால நோக்குடன் பயன்படுத்தும்போதுதான் மக்கள் நலன் என்பது முழுமையாக நிறைவேற்றப்படும். அதனால்தான் முன்னோடியான - பல திட்டங்களைத் தமிழகத்தில் செயல்-படுத்தி-னோம். பேருந்துகளெல்லாம் முழுவதுமாகத் தனியார் வசம் தான் இருந்தன. எந்தெந்தத் தடத்தில் இலாபம் கிடைக்கிறதோ அந்தந்தத் தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்த காலம் ஒன்றுண்டு. மக்கள் தேவைக்கும் நேரத்திற்கும் பேருந்துகள் கிடைக்-காது. கிராமப்புற மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருந்-தார்கள்.
ஆட்சி என்கிற வாய்ப்பு கிடைத்தபோது, அதனைப் பயன்படுத்திப் பேருந்துகளை அரசுடைமையாக்கி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினோம். கிராமம், நகரம் என அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டன. எல்லாத் தடங்-களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்-பட்டதால், இன்று ஆம்னி என்கிற தனியார் பேருந்து-களும் எல்லா ஊர்களுக்கும் இயக்கப்-படுகின்றன. அரசுப் பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்குக் கூட மினிபஸ் எனப்படும் தனியார் சிற்றுந்துகள் இன்று ஓடிக்கொண்டிருக்கின்றன. மக்களுக்கு அல்லல் நீங்கி, வசதியான பயணம் வாய்க்கப் பெறுகிறது.
அதுபோலத்தான், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் காலங்காலமாக இருந்த கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டது. மனிதனை வைத்து மனிதனே இழுப்பது என்பது மானமுள்ள செயல் ஆகாது. அது சுயமரியாதைக்கு எதிரானது. அடிமைத்தனத்தின் அடையாளம் என்பதனால் கை ரிக்ஷாக்களைக் கழக ஆட்சியில் ஒழித்தோம். அதற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்களும், மோட்டார் பொருத்-திய ரிக்ஷாக்களும் வழங்கப்-பட்டன. இத்தகைய செயல்பாடுகளெல்லாம் மக்கள் நலன் சார்ந்தது-டன், நம் கொள்கை வழியில் அமைந்த-வையுமாகும். அதனால்தான் பல மாநிலங்களும் இத்தகையத் திட்டங்களை ஆர்வமுடன் பின்பற்றுகின்றன.