தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மார்ச்-8 மகளிர் தினம்
பிடல் காஸ்ட்ரோ
இவர்தான் பெரியர்
நேர்காணல்
கவிதை
சிறுகதை
வரலாறு்
தமிழ் பேசுவோரெல்லாம்
ஹாலிவுட் கலை - 15
மருத்துவமும்
சிறந்த நூலிலிருந்து
அணு அணுவாய் - 6
தமிழர்கள் மீதான
நெசந்தானுங்க...
திரைப்பார்வை
பெட்டிச் செய்திகள்

 

 

தமிழர்கள் மீதான பண்பாட்டு படையெடுப்பு - 7

ஆரியத்திற்கு அடிபணிந்த மன்னர்கள் பற்றி இந்த கட்டுரையில் காண்போம். மனுமுறைதவறா மன்னர்களாக ஆண்ட கொடுமையினால் பண்பாட்டுப் படையெடுப்பு பாதுகாப்-பானதோர் இடத்தை நம் சமுதாயத்தில் பெற்றது!
சமஸ்கிருத மயமாக்குதல் என்ற கருத்தரங்கு கட்டுரைத் தொகுப்பு வெளியீடு ஒன்றில், (பக்கம் 113) தமிழறிஞரும் மேனாள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான டாக்டர் பொற்கோ அவர்கள்,
... வடமொழிச் செல்வாக்கு சமயங்களையும் அரசர்களையும் தன்னுள் அகப்படுத்திய பிறகு சமுதாய வாழ்விலும் ஊடுருவப் பரவியது. சங்ககாலத் தமிழரசர்களின் பெயர்களையும் பிற்காலச் சோழ, பாண்டிய வேந்தர்களின் பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், வடமொழிச் செல்வாக்கு வளர்ச்சி தெளிவாகப் புலப்படும்.
ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்கன், விக்ரமன், ராஜகேசரி, பரகேசரி முதலான பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயராக இல்லை.
மாறவர்மன், சடையவர்மன், குலசேகரன் முதலான பெயர்களும் வடமொழிச் செல்வாக்கின் உச்சநி-லையை நமக்கு உணர்த்துகின்றன. அரசர்-களின் பெயர்களே இப்படி மாறிவிட்ட பிறகு அவர்கள் வழங்கும் பட்டங்களும் சிறப்புப் பெயர்களும் எப்படி இருக்கும்? அவையும் வடமொழிமயமாணு என்று தெளிவாகக் குறிப்பிடுவதிலிருந்து பண்பாட்டுப் படை-யெடுப்பு மன்னர்களின் மகுடத்தையே ஆக்கிர-மித்த நிலையில் குடிமக்கள் நிலை பற்றி கூறவா வேண்டும்?
தமிழ்நாட்டின் தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரி-யரான பேராசிரியர் தி.வை. சொக்கப்பா எம்.ஏ.எல்.டி. அவர்கள் இதுபற்றி ஒரு கட்டுரையில் (சமஸ்கிருத-மயமாக்கல் - கருத்தரங்க கட்டுரையில்) குறிப்பிடுவது மிகவும் சிந்தனைக்கு விருந்தானதாகும்.
... கி.மு. ஆயிரத்து அய்ந்நூறு ஆண்டளவில் காந்தார நாட்டிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்து நம் நாட்டில் புகுந்த இனம் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தோடு போராடி, அவர்களின் சிறந்த நாகரிக (சிந்து வெளி நாகரிகம்) வாழ்வை அழித்து பல பகுதிகளில் குடியேறிற்று.
பேரினமாயிருந்த திராவிடர்களைக் கொன்று வெற்றி காண்பது எளிதானதல்ல-வெனக் கண்டு அவர்களோடு உறவாடி அடிமைப்படுத்தி ஆள முற்பட்டது.
ஆரியரும் எழுத்துக்கலையும்
வேதங்களை இயற்றியவர்களுக்கு எழுத்துக் கலை தெரிந்திருந்தது என்பதற்கான சான்றோ ஆதாரமோ இல்லை என்று நாகரிக வரலாற்-றின் ஆசிரியர் வில் டு ராண்டும் ஆரியர்கள் நாகரிக உலகோடு தொடர்பு கொள்வதற்கு முன்பாக எழுத்துக் கலை அறியாதவர்கள் என உலக வரலாற்று ஆசிரியர் எச்.ஜி. வெல்சும் எழுதியுள்ளார்கள். பல்வேறு நாடுகளில் பரவிய ஆரியர்கள் அவர்கள் குடியேறிய நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்களின் எழுத்துக்களையே பயன்படுத்தித் தங்கள் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டார்கள் என அறிய கிடக்கிறது. அநாசாஸ் எனத் தங்களால் எள்ளி நகையாடப்பட்ட திராவிடர்களின் எழுத்துக்-களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே தங்கள் எழுத்துக்களை அமைத்துக் கொண்டார்-கள் என்று ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். ஆரியர்களின் வேதங்கள் சுருதியாக எழுதாக்-கிளவியாக இருந்து தலைமுறை தலை-முறையாக செவி வழியாகவே நெடுங்காலம் நிலவிவந்ததற்கு அவர்கள் எழுதும் முறையை அறியாமையே காரணம் ஆகும். ஆரியருடைய முதனூலாகிய ரிக்கு வேதத்தில் பல தமிழ்ச் சொற்கள் - அணு, இராத்திரி, கணம், பழம், பூசனை போன்றவை - ஆளப்பட்டுள்ளன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
உணவு உற்பத்திக்காக ஏர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்-கொள்வது பாவம் ன மனுநீதிமூலம் ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக்கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை அத்தொழிலில் ஈடுபடுத்தி ஏற்றம் கொண்டனர். ஆக்கம் பெற்றனர். வேதமொழியும் வட-நாட்டில் நிலவிய பிராகிருதமும் கலந்து உருவான சமற்கிருதக் கலவை மொழியைத் திராவிடர்கள் கற்க வேண்டியதாயிற்று. இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதனையே திராவிடர் மொழியில் ஆரிய மயமாக்கப்-பட்டனர் எனக் குறிப்பிடுகிறார்.
அகத்தியரும் தமிழும்
ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க, ஆரிய முனிவராகிய அகத்தியர் பொதியமலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும் இலக்கணமும் வகுத்தார் என்ற கதையைப் புனைந்து தமிழர்களை இன்றளவில் நம்ப வைத்துள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப்பேயாகும். பல்வேறு காலங்-களில் - நீண்ட இடைக்காலத்-திற்-கிடையில் - அவ்வையார் வாழ்ந்து பாடியதாக இலக்கி-யத்தில் காட்டப்படுவதுபோல், அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் செயற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்-கக்கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள் மூச்சங்க வரலாறு - அவைகளின் காலக்குறிப்பு, புலவர்களின் எண்ணிக்கை போன்ற-வற்றை நோக்குமிடத்து - அறிவுக்குப் பொருந்-தாது, உண்மைக்குப் புறம்பானது என்று மாற்றார் அறையும்போது அலமந்து போகிறார்கள்.
தமிழ் இலக்கியத்தின் தொன்மைச் சிறப்-பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது, தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமி எழுத்தினின்றும் கிரந்த எழுத்-தினின்றும் தோன்றியதென்றும் சாதித்தனர்.
தமிழ் நெடுங்கணக்கு பழைமையானது
சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்துக்-கள் தோன்றியிருக்கவேண்டும் என்பது பேராசிரியர் லாங்கன் டாக்டர் ஹண்டர். சர்.அலெச்ண்டர் ஆகியோரின் முடி-பாகும். தமிழ்நாட்டுக் குகை எழுத்துக்களுக்கும் பிராமி எழுத்துகட்கும் நெருங்கிய தொடர்-பைக் காணலாம். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் காலம் கி.மு. அய்ந்-நூற்றுக்கு முந்தியது எனத் திட்டவட்ட-மாய் நிறுவி கி.மு. எழுநூறு என்று சொல்-வதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சி-யாளர்கள் தந்துள்-ளார்கள். அத்தகைய ஆரிய இலக்கியம் தோன்றுவதற்குமுன் எத்தனை யெத்தனை நூல்கள் இருந்திருக்கவேண்டும், அவற்றிற்கு எவ்வளவு காலத்திற்கு முன்பாகத் தமிழ் நெடுங்கணக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்திக்க மறுக்கலாமா?
தமிழ் இலக்கியம் ஆரிய மயமானது
தமிழர்களின் மறைநூல், மந்திர நூல் போன்ற ஆரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு, மூலநூல்களை அழித்துவிட்டு வடமொழியினின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தன போலக் காட்டினார்கள். பிராமணர்கள் எனத்தாம் எழுதிய தமிழ் வரலாறு என்ற நூலில் (ப. 29-33) பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி-யார்) எழுதுகிறார். தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில் பெயர்க்-கப்பட்ட பின் அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின என்று தமிழர் வரலாறு என்ற தம் நூலில் ஞா.தேவநேயப் பாவாணர் விரிவாக விளக்கியுள்ளார்கள். இவ்வழிப்புப் பணியால் இந்திய நாகரிகம் பெருமளவு ஆரியருடையது எனவும் அதன் சிறு கூறே திராவிடரது என்றும் கருது-மாறு செய்யப்பட்டுவிட்டது. அகத்தி-யத்தை தமிழ் முதனூல் என்றனர். தொல்-காப்பியத்தில் வேண்டாத சமஸ்கிருதச் சொற்களையும் ஆரியக்கருத்துக்களையும் புகுத்தினார்கள். திருவள்ளுவரைச் சீவல்லபர் என்ற ஆரியராக்கியதோடு, திருக்குறளின் அறத்துப்பால் வடமொழி தர்மசாத்திரத்தையும், பொருட்பால் அர்த்த சாத்திரத்தையும், காமத்துப்பால் காம சூத்திரத்தையும் தழுவின எனக் கூறவும் தலைப்பட்டனர். திருக்குறளுக்கு உரைவகுத்த தூய தமிழ்ப்பெயர் தாங்கிய பரிமேலழகர் தம்முடைய உரையில் ஆரியக் கருத்துக்களை வலிந்து புகுத்தித் தமிழர் கருத்துக்களை மறைத்துள்ளார்.
தமிழ் இலக்கிய மறைப்பு இடைக்-காலத்திலும் தொடர்ந்தது. பெரிய புராணம் உபமன்யு பக்த விலாசத்தையும் திருவிளை-யாடல் புராணம் ஆலாசிய மான்மி-யத்தையும், சிவஞானபோதம் ரவுரவாகமத்தின் இறுதிப் பகுதியையும் முதனூலாய்க் கொண்ட வழி நூல்கள் என்றார்கள். மூவர் தேவாரப் பதிகங்களை தில்லையம்பலத்தில் மறைத்து சிதல் அரிக்கவிட்டார்கள். (திருமுறைகண்ட புராணத்தைக் காண்க) தமிழ்க் கருத்துக்களை சமற்கிருதச் சொற்களால் மூடிமறைத்து அவற்றைத் தங்களுடையதாகக் காட்டிக் கொள்ளவும் துணிந்து இறங்கினார்கள். அறம்பொருள் இன்பம் வீடு என்பவை முறையே தர்மார்த்த காமமோட்சம் என்றதன் மொழி பெயர்ப்பு எனவும் முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதன் சொல்லாக்கமே எனவும் கூறினர். தமிழரின் அய்ந்தெழுத்து பஞ்சாட்சர-மாயின வெகுளி, மயக்கம், காமம் என்ற மும்மாசுகள் ஆணவம், மாயை, காமியம் எனக் குறிப்பிடப்பட்டன. மேலெழுந்த வகையாய்ப் பார்த்தால் சொல் மாற்றச்சூழ்ச்சி தெரியவராது. கருத்துக்கள் சொல்லால் விளக்கம் பெறு-கின்றன. சொல்லில்லையேல் கருத்துமில்லை-யாகிறது. சொல்லால் மறைக்கப்பட்ட கருத்தின் சொந்தக்காரர் சொல்லுக்குரியவராகிவிடுகிறார்.
வடமொழி இலக்கணத்தை வலிந்தும் நலிந்தும் தமிழுக்குப் பொருத்தி வீரசோழியம், பிரயோக விவேகம் முதலிய நூல்கள் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தில் கூறப்-பட்டுள்ள இருபத்தாறு செய்யுளுறுப்புக்கள் ஆறாகக் குறைந்தன. சமஸ்கிருத ஆதிக்கத்தால் தென்னாடெங்கும் நிலவிய தமிழ் மொழியி-லிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் முளைத்தெழுந்தன. வடமொழிக் கலப்பால் தமிழும் சமற்கிருதமும் சரிக்குசரி கலந்த மணிப்பவழ நடை இடைக்காலத்தில் வழங்-கிற்று. சமற்கிருத ஊடுருவலால் நூற்றுக்-கணக்கான தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப்-போயின. பா-கவிதையாயிற்று; பாட்டு காதையாயிற்று. கழுவாய் (பிராயச்சித்தம்) சுடலை (மயானம்), திருச்சுற்று (பிரகாரம்), திரையல் (பீடா), பலகணி (சன்னல்) வலக்காரம் (தந்திரம்), முதுசெம் (பிதிரார்ஜிதம்), கூற்றுவன் (யமன்) முதலிய சொற்கள் (கவிப்புக் கோட்டிற்குள் இருக்கும் சமற்கிருதச் சொற்கள் நம்முடையதாகவும்) ஆதரிப்பாரின்றி அநாதை-யாகிவிட்டன. சோறு, மிளகுநீர் போன்ற சில சொற்கள் இழிந்தனவாகக் கருதப்பட்டு உயர் மட்டத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்பட்டு விட்டன. -தொடரும்