நெசந்தானுங்க...

 |
அமெரிக்காவின் அடிமை வாணிகத்தை தடை செய்த மாபெரும் தலைவர் யார்? என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர்.
சார், அடிமை வாணிகம்னா என்ன சார்? என்று கேட்டான்.
உட்காரு, அதாவது மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக சந்தையில் நிறுத்தி அவர்களை காய்கறிகளைப் போல ஆடுமாடுகளைப் போல விலைக்கு விற்பார்கள். காசு வைத்திருப்போர் ஏலத்தில் இவர்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கிய மனிதர்கள் எஜமானர்கள் என்றும், வாங்கப்பட்ட மனிதர்கள் அடிமைகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
இப்படி விற்கப்படும் மனிதர்களில் நல்ல திடகாத்திரமும் நன்கு உழைக்கும் திறனும் பெற்ற அடிமைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்படி வளர்க்கப்பட்ட அடிமைகள் தங்கள் ஆயுள் முடியும் வரைக்கும் எஜமானனுக்கு உழைக்க வேண்டும். அடிமையைப் பிடிக்கவில்லையென்றால் வேறொருவருக்கு விலைக்கும் விற்று விடலாம்.
இம்மாதிரி விற்பதற்கென்றே ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்கள் கப்பல்களில் கடத்தி வரப்பட்டனர். இந்த அடிமை முறை வாணிபம் உலகெங்கும் நடந்து வந்தது. இதை அமெரிக்காவில் கடுமையாகப் போராடி ஒழித்தவர்தான் ஆபிரகாம் லிங்கன் என்றார் ஆசிரியர்.
சார், அப்படின்னா மனிதனை ஏலத்தில் எடுத்து வேலைக்கு வைத்துக் கொள்வது தான் அடிமை முறையா? என்றான் மாணவன்.
ஆமாம்ப்பா என்றார் ஆசிரியர்.
சார் அப்படின்னா, அய்.பி.எல். கிரிக்கெட்டுக்காக 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறாரே டோனி. அப்படின்னா அவரு அடிமையா? சார். என்னைய குறைச்ச விலைக்கு ஏலத்தில எடுத்திருக்காங்கன்னு ரிக்கி பாண்டிங் புலம்பியிருக்காரே சார். இதெல்லாம் அடிமை வாணிகமா சார் - அப்ப லிங்கன் சார்?
ஆமாப்பா... இன்னைக்கு நிலைமைக்கு லிங்கன் வந்தாலும் அவருக்கும் ஏலம் வச்சிடுவாங்க!
***
கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற, கோடைக் காலத்தில் மழை வர, மழைக் காலத்தில் மழை நிற்க, ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல, தக்காளி நல்ல மகசூல் பெற என்ற சீசனுக்கேற்றாற் போலவும், உலக அமைதிக்கு, மக்கள் நன்மைக்கு போன்ற ஸ்டேன்டிங் மேட்டருக்காவும் யாகம், பிரார்த்தனை, ஜெபக்-கூட்டம் நடத்துவதற்கென்ற பிசினஸ் மேன்கள் ஏராளம். அதுபோல் இப்போது தேர்வு சீசனல்லவா? அதுதான் இந்த பிசினஸ். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற, ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா மந்திரத்தை சொல்லி ஜெபித்தால் போதுமாம்.
அப்படியானால் தேர்வு விடைத்தாளிலும் கூட இந்த மந்திரத்தை மட்டும் எழுதி வைத்தால் போதுமல்லவா?
***
கிரிக்கெட்டில இப்பவெல் லாம் ரன் அவுட், ஸ்டம்பிங் மட்டுமில்லாம கேட்ச், நோபால், எல்.பி.டபிள்யூன்னு எல்லாத்துக் குமே மூணாவது அம்ப்பயர்கிட்ட கேக்க ஆரம்-பிச்சிட்டாங்க. தப்புத்தப்பா அவசரப்பட்டு அம்ப்யர் எல்.பி.-டபிள்யூ சொல் லிட்டாலும், இந்த வேகத்தில இவ்வளவு உயரத்தில் போன வந்து கண்டிப்பா ஸ்டெம்-பைத் தாக் காது அதனால முடிவு தப்புன்னு டி.வி.யில படம் போட்டுக் காட்டி மானத்தை வாங்கிடறாங்க..
அப்புறம் என்னாத்துக்கு இந்த லைன் அம்பயரும் லெக் அம்பயரும் ஆட்டத்தில நடுவுல போய் நிக்கிறாங்க? தேவையில்லையேன்னு ஒரு யோசனை.
அப்புறம் தான் தோணிச்சு... அட, நம்ம பந்து வீசுறவரோடு தொப்பி, கண்ணாடி, ஸ்வெட்டரை யெல்லாம் வாங்கி வச்சுக்கிறதுக்கு ஆள் வேணுமில்ல... என்ன நான் சொல்றது.
***
பரத முனிவருக்குக் கோவில் கட்டறேன்னு முன்னாள் முதல்வர் அய்யங்கார் அம்மையாரிடமிருந்து, பரத நாட்டியத்தின் ஒட்டு மொத்தக் குத்தகையாளர் பார்ப்பனப் பெண்மணி அரசு நிலத்தை வாங்கினாரால்யோ? அதை பண்பாட்டு மோசடின்னு சொல்லி இப்போதைய சூத்திரத் தமிழர்களின் ஆட்சி திருப்பி வாங்கிடுச்சு. இதில பொலம்ப ஆரம்பிச்சிட்டா அந்த பொம்மனாட்டி. அதோட விட்டா அது பார்ப்பனப் புத்தியில்லியே... அதனால நாட்டியத்தையும் சிற்பத்தையும் வச்சு முதல்வர் கதை வசனத்தில எடுக்கப்படுற படத்தில பார்ப்பனரல்லாத நடன இயக்குநர் விரட்டிட்டு, இவர் போய் உட்கார்ந்து அப்படியே காய் நகர்த்தி ஏதாவது பண்ண முடியுமான்னு முயற்சிக்கிறாளாம்.
இவாளண்ட சூழ்ச்சியெல்லாம் கலைஞராண்ட நடக்குமோ?
***
இரண்டு பெண்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் திசுக்களை வச்சுகிட்டே குழந்தையை உருவாக்க முடியும்னு இப்போ வந்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்பைப் பத்தியும் லெஸ்பியன்னு சொல்லப்படுகிற ஓரினச் சேர்க்கை பற்றியும் விவாதம் தமிழ் - தளம் ஒண்ணுல நடந்தது. அடடே! இதென்ன விசேசம்... அணுகுண்டு தொழில்நுட்பம், க்வாண்ட்டம் தியரி, பேரண்டத்தைப் பற்றி விளக்கும் பிக்பாங்-னு எந்த அறிவியல் கண்டுபிடிப்பு வந்தாலும் இது எங்க இந்து மதத்தில இல்லாததான்னு கச்சை கட்டிண்டு... மன்னிக்கணும் பஞ்ச கச்சம் கட்டிண்டு களத்தில இறங்கி ஆதாரம் காட்டுறதுக்குன்னே சுஜாதா உள்ளிட்ட க்ரூப் இருக்குமே. எங்க அவாளயெல்லாம் காணோம்?... சரி போறது. நாமளே சொல்லிவிடுவோம்னு கிளம்பியாச்சு... அய்யப்பன், கிருஷ்ணன் - நாரதன்னு ஹோமோ பத்தி மட்டும் தான் இந்து மதத்தில இருக்கா?
லெஸ்பியன் என்ன இங்கிலிஷ்காரா கண்டுபிடிப்பா? எங்க இந்து மதத்தில கிடையாதோ...? யார் சொன்னா? பசீரதப் பிரயத்தனம் பண்ணி கங்கையை இமய மலையிலிருந்து கொண்டு வந்த பகீரதன் இருக்கானோல்யோ... அவனோட தங்கைகள் ரெண்டு பேரும் சேர்ந்து கசகசப்பில் உண்டான வியர்வையில் குழந்தை பிறந்ததா நம்ம புராணம் சொல்றது வோய். புரியறதா... லெஸ்பியனும் சரி, பொம்மனாட்டிகளே சேர்ந்து குழந்தை பெக்கிறதும் சரி! இந்து மதத்தில இல்லாததா என்ன? ஹெ... ஹெ.... ஹெ....
- பவானந்தி |