தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
நாட்டு நடப்பு
அன்னை மணியம்மையார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
மனித உரிமை
ஹாலிவுட் கலை - 16
பகுத்தறிவு
இதுதான் பார்ப்பனீயம்
நினைவு நாள்
புதிய கண்டுபிடிப்பு
நேர்காணல்
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : தன் கணவரைக் கொன்றவரை சோனியா காந்தியே மன்னித்து விட்டபிறகு, இங்குள்ள பார்ப்பனியம் மட்டும் இன்னமும் பகையைக் கக்கிக் கொண்டிருப்பது ஏன்?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: ராணியைமிஞ்சும் ராணி விசுவாசிகள் எப்போதும் அப்படித்தான். சோனியா அம்மை யாருக்குள்ள மனிதாபிமானம் கூட அவர்களிடம், ஆதாயம் எதிர்பார்க்கும் அரசியல்வாதிகளிடம் இல்லையே. வேதனை கலந்த வெட்கம்!

கேள்வி : பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்கிறாரே ராஜபக்சே.. ஏன் இலங்கையில் நீதிமன்றங் களே இல்லையா? குற்றவாளிக் கூண்டிலே யார் நிற்பது என்ற பயமா?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: கொக்குத் தலையில் வெண்ணெய்யை வைத்துப் பிடிக்கும் அதிபுத்திசாலி அதிபர் ராஜபக்ஷோ

கேள்வி : இன்று பலர் பிரச்சினைகளை அணுகுவதில் பேசுவதிலேயே திருப்திப் படுவதற்கும், செயலில் இறங்குவது தேவையற்றது அல்லது சிக்கலாகுமோ என்று கருதுவதற்கும் மக்கள் புரிந்து கொண்டு விட மாட்டார்கள் என்பது தான் காரணமா?
- வடகாடு கரு.காளிமுத்து
பதில்: அல்ல அல்ல; அவர்களது அறிவுத்திறன் அவ்வளவுதான் என்பது தான் பரிதாபத்திற்குரிய உண்மை!

கேள்வி : சட்டம் பொதுவானதாக இருக்கை யில் சில காரணங்களுக்காக, சட்டத்தைத் திருத்திக் கொள்வதும் - தீர்ப்பை பிற மாநிலத்தை முன்னுதாரணம் காட்டி நியாயப்படுத்துவதும் சரிதானா? கடுமையான குற்றங்களுக்கும் இது பொருந்துமா?
- எஸ். சற்குணராஜ்
பதில்: பொத்தாம் பொதுவில் சரி, தப்பு என்று கருத்துக் கூறமுடியாது; குறிப்பிட்ட நிகழ்வை வைத்துத்தான் நியாய, அநியாயம் பேசமுடியும்!

கேள்வி : கலைஞர் தங்களை மறப் பதில்லை, அதுபோல தளபதியும் தங்களை மட்டுமே மாநாட்டுக்கு அழைத்து பேச வைத்துள்ளாரே! இதுதான் தொப்புள் கொடி உறவா?
- வீர. செல்வம், பூம்புகார்
பதில்: உண்மையான கொள்கைக் குடும்பப் பாசம்!

கேள்வி : 26.2.2008 தினமணியில் டி.ஜே.எஸ். ஜார்ஜ் என்பவர், கடவுள் - கருணநிதி - பழம் பெருமை, கட்டுரையில் ஒருவேளை பிராமணிய அரசியலானது. திராவிட அரசியலை வெற்றி கொண்டுவிடக் கூடும் என்று கூறுகிறார் எப்படி?
- சு. கொண்டல் சாமி, ஒட்டநத்தம்
பதில்: ஆர்.எஸ்.எஸ். கட்சிக்கு குத்தகை விடப்பட்ட எக்ஸ்பிரஸ் ஏட்டின் ஆஸ்தான எழுத்தாளர் இப்படியெல்லாம் கனவு காண்பது அவரது உரிமைபோலும்

கேள்வி : மும்பையில் கலவரம் எல்லாம் முடிந்து ஓய்ந்த பிறகு அத்வானி மிகவும் பொறுமையாகப் பேசியிருக்கின்றாரே?
- எ.டபிள்யூ. ரபீ அகமத், சிதம்பரம்
பதில்: ஒப்பாரி வைக்கும் நம் பெண்களில் பலர் இப்படித்தான். அவர்கள் எதனையோ நினைத்து காலம் தாழ்ந்தாலும் ஒப்பாரியை ஒழுங்காக வைத்துப் பழகியுள்ளனர்!

கேள்வி : திரைப்படங்கள் தமிழ் இளைஞர் களுக்கு நல்வழி காட்டுவதில்லை என்று இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் கூறுகிறாரே... அது பற்றி....
- பாவலர் அறிவரசன், திருலோக்கி
பதில்: சரியான கருத்து; துணிவான கருத்து!

கேள்வி : இராமன் துதித்த சிவன் நம்மிடம் இருக்கும்போது பார்ப்பானைத் துதிக்கும் இராமன் நமக்கு எதற்கு என்பதை நடுநிலை மையாளர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டது மாதிரி தெரிகிறதே?
- சடகோபாலன், இளையான்குடி
பதில்: இல்லாத இராமனை வைத்து இப்படி பல கற்பனைகளாக!

கேள்வி : தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித் துள்ள நிலையில் இவ்விழாவை எவ்வாறு கொண்டாடலாம்?
- வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில்: வரும் ஆண்டு முதல் மிகப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும்!