தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
நாட்டு நடப்பு
அன்னை மணியம்மையார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
மனித உரிமை
ஹாலிவுட் கலை - 16
பகுத்தறிவு
இதுதான் பார்ப்பனீயம்
நினைவு நாள்
புதிய கண்டுபிடிப்பு
நேர்காணல்
தமிழர்கள் மீதான
பெட்டிச் செய்திகள்

 

 

நாட்டு நடப்பு

கிரிக்கெட்டும் ஜல்லிக்கட்டும்!

- சிவகாசி மணியம்

இந்தியத் துணை கண்டத்தின் தேசிய விளையாட்டு ஹாக்கியாம். வெளிச்சத்தில் மிதப்பதோ கிரிக்கெட்தான்!
அய்ந்து நாள் ஆட்டம், ஒரு நாள் போட்டி, 20க்கு 20 போன்ற உட்பிரிவுகள் வேறு! வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள், வார இதழ்கள் எல்லா ஊடகங்களும் கிரிக்-கெட்டைத் தத்து எடுத்திருப்பது காலத்தின் கோலம்! அந்த விளையாட்டைத் தொலைக்-காட்சியில் பார்க்க நேர்கின்ற போது சிரிப்புத்தான் வரும்!
கையளவு அடக்கமான சின்னப் பந்து ஒன்று வீசப்படுகிறபோது மட்டை பிடித்-திருப்பவர் தம்மை பாதுகாத்துக் கொள்ள காட்டும் முன் எச்சரிக்கையும், தடுப்பு நடவடிக்கையும் நம்மை கிறங்க அடிக்கின்றன. உடலின் ஒவ்வோர் அங்கங்களையும் காப்-பாற்றிக் கொள்ள அவர்கள் காட்டுகின்ற ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது. பாதா தி கேசம் வரை கவசங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துவிட்ட விளையாட்டு வீரர்களின் காட்டில் நல்ல மழை! 19 வயதில் விளையாட வருகிறார்கள். 25 வயது நெருங்குவதற்குள் அரண்மனை போன்ற பங்களா, விலை உயர்ந்த வெளிநாட்டுக்கார், சொந்தத்தில் நட்சத்திர விடுதி, தனி மருத்துவர், தணிக்கையாளர் என செல்வச் செழிப்பில் மிதப்பதை அறிய முடியும். விளம்பர ஒப்பந்தங்கள், விசேடப் பரிசுகள் என்று பணம் கொட்டிக் கொண்டே இருக்கும். இவர்களுக்கு கிடைக்கும் பேரும் புகழும் பிற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை.
கிரிக்கெட்டைக் குறி வைத்து கைப்பற்று-பவர்கள் யார் என்பதை ஊன்றிக் கவனித்தால் ஓர் உண்மை தெரியவரும். இதுநாள் வரை இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களின் பெயர்களை ஆய்ந்தால், 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் சர்மாக்களும், சாஸ்திரிகளும். மக்கள் தொகையில் மூன்றே விழுக்காட்டினர் எப்படி எல்லை கடந்து வர முடிந்தது?
பாதுகாப்பான, எளிதான, வெளிச்சமுள்ள விளையாட்டைத் தேர்ந்தெடுத்து செல்வமும், புகழும் குவிக்கும் சாமர்த்தியம் நம்மவர்களுக்கு வராமல் போனது ஏன்?
பாரம்பரியப் பற்றிலிருந்தும், உயிரை துச்சமென மதிக்கும் துணிச்சலிருந்தும் விடுபட நம்மவர்களால் இயலாமற் போனதே காரணம்.
டூ விலர் ஓட்டுபவர்களை பாதுகாக்கக் கூட ஹெல்மெட் வைத்துக் கொள்ளச் சொல்லும் சட்டம் இருக்கிறது. ஆனால், எந்தவிதமான முன் எச்சரிக்கையும், பாதுகாப்புக் கவசமும் இல்லாமல், கொம்பு சீவப்பட்ட கொழுத்த காளைகள் துள்ளிப் பாய்ந்து வரும் போது அவற்றை எதிர்கொள்ளும் நம் காளையர்மீது கழிவிரக்கம் கொள்ளத்தான் முடிகிறது.
எந்த விநாடியும் உயிருக்குக் கேடு விளைய-லாம் என்று தெரிந்தே களத்தில் குதிக்கிறார்கள். பன்நெடுங்காலமாக இதனை வீர விளையாட்டு என்று சொல்லி வீரமரணம் அடைந்தவர்கள் ஏராளம்! பட்டியலிட்டோமானால் கணக்-கிலடங்க மாட்டார்கள். அவர்களின் பெயர்-களை நினைவில் வைத்திருப்பவர்கள் யாராவது உண்டா? உயிரிழந்த மக்களின் குடும்பங்களின் இன்றைய நிலையை அறிந்தவர்கள் யார்? மனைவி மக்கள் என மகிழ்ச்சியில் திளைந்-தவர்கள் குடும்பத்தை தவிக்க விட்டுப் போன சோகக் கதைகள் ஒன்றா இரண்டா?
டூரிங் சினிமா தியேட்டர்களில் பழைய கருப்பு வெள்ளைப் படங்களை திரும்பத் திரும்ப சளைக்காமல் பார்த்துக் கொண்டிருப்-பார்கள். அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப் படங்கள். சிலம்பாட்டம், கத்திச் சண்டை, மல்யுத்தம் என ரசிகர்களைக் காடிப் போட்டவர் அவர்.
சினிமாதான், நடிப்புத்தான் என்றாலும் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ வீரத்தின் அடையாளம் அவற்றில் வெளிப்பட்டது.
ஒரு படத்தில் புலியுடன் சண்டையிட்டு வெற்றி பெறுவார் (படம்: குலேபகாவலி).
இன்னொரு படத்தில் முரட்டுக் காளையை அடக்குவார் (படம்: தாய்க்குப் பின் தாரம்).
யாருக்கும் அடங்காத குதிரையை வசப்-படுத்தி சவாரி செய்வார். (படம்: ராஜா தேசிங்கு).
சிங்கத்துடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டு வீழ்த்துவார் (படம் - அடிமைப்பெண்). அவருடைய எல்லாப் படங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட எதிரிகளைத் தனி ஆளாக எதிர்கொள்வார்.
கொடிய விலங்குகள்தான், பழக்கப்-பட்டவைதான், அவை அனைத்தும் பொம்-மைகள்தான் என்றாலும் தனி ஒருவராக எதிர்த்துப் போராடி வென்று முடிப்பதே அவரது பாணி. அதைத்தான் வீரம் என்று அக்காட்சிகளின் மூலம் நுட்பமாக வெளிப்-படுத்தினார்.
ஜல்லிக்கட்டில் அப்படியா? பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ஓர் உயிரின் மீது விழுந்து அழுத்துவது, கண்களில் மிளகாய்ப் பொடி-யைத் தூவுவது, மண்ணை வாரி இறைப்பது, வாலைப் பிடித்து இழுத்து துன்புறுத்துவது இதையெல்லாம் ரசிக்கவா முடியும்?
வீரம் என்பது எதிரியிடம் காட்டப்பட வேண்டியது. மாடு மனிதனின் எதிரியல்லவே! மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர அவனோடு சேர்ந்து சொல்லப்போனால் மனிதனை விட கடினமான பெரும் உழைப்பைத் தந்து உயர்த்தும் உண்மை நண்பன் மாடு. மாடாய் உழைத்தேன் என்போரும் அதேதான். மேழி போற்று என புதிய ஆத்திச்சூடி சொல்வது போல மேழிச் செல்வத்தை பேணி வளர்க்க வேண்டியது நம் கடமை அல்லவா!
வாய் திறந்து சொல்லாது என்பது தெரிந்திருந்தும் பலரும் சுற்றி நின்று துன்புறுத்துவது என்ன நியாயம்?
வீரத்திற்கான இலக்கணமெல்லாம் மாறி வருகிறது, இன்றைய போர்முனையில் முதுகில் அடிபட்டுச் செத்தாலும், மறைந்து நின்று எதிரியை வீழ்த்தினாலும் அவன் வீரன்தான். புறநானூற்று வீரமெல்லாம் வரலாறாகி வெகு காலமாகிவிட்டது.
கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் பார்த்தா-வது தெரிந்து கொள்ள வேண்டாமா! குடும்ப நலன், தமது எதிர்காலம் இவற்றைக் கருதி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்மைச் சார்ந்திருக்கும் ஓர் உயிரை வருத்தாமல் விளையாடி மகிழ வேண்டும்.
கொன்று தின்பதற்கும், ஓட ஓட விரட்டி ஒரு உயிரை சித்ரவதை செய்து விளையாடு-வதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!