மனித உரிமை
காத்திருக்குது தூக்குக் கயிறு
- இரா. முல்லை கோ
 |
ஏதோ ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன். உனக்காய் உனக்காய் எல்லாம் செய்வேன். எனக்காய் எனக்காய் என்ன செய்வாய் நீ!
இல்லை. இல்லை என்றால் உயிர் துறப்பேன் என்ற இனிய சினிமா வரிகளுக்கு ஏற்றமாய் அமைந்ததுதான் சேலம் முதலாவது கூடுதல் பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தூக்குத் தண்டனை. தீர்ப்-பினை மேல் முறையீட்டுக்குப் பின் உயர்நீதி மன்றமும் உறுதி செய்து நெடுஞ்-செழியன், ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது. கட்சியின் விசுவாசத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவ மாணவியர்கள் பேருந்துகளில் சுற்றுலா சென்ற போது மூன்று மாணவிகளை பேருந்தோடு தீயிட்டு கொடூரமாகக் கொன்றனர்.
பொதுவாக ஒரு வன்முறைக் கொடுமை என்பது திட்டமிடப்படாமல் ஏதோ சூழ்நிலையால் நடைபெறுவது சகஜமே. ஆனால் திட்டமிட்டு மாணவிகள் சென்ற பேருந்தை வழி மறித்து மாணவியர்களைக் கொல்வது என்பது எந்த வகையிலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தூக்குத் தண்டனைக்குட்பட்ட மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். அதில், மூன்று மாணவிகள் மரணம் மிகவும் கொடூரக் கொலை அல்ல. திடீரென ஏற்பட்ட ஒரு நிகழ்வுதான். மீடியாக்கள் இதைப் பெரிதுபடுத்தியதால் நீதிமன்றம் தவறான எண்ணத்தில் மரண தண்டனை அளித்துள்ளது. இறந்தவர்களின் உயிரிழப்பிற்கு வன்முறைக் கும்பலே காரணம். அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வழக்கு இப்பிரிவுக்கு உட்படாது. சந்தேகத்துக்கு இடமின்றி அரசுத் தரப்பில் நீரூபிக்கப்படவில்லை. நேரடி சாட்சியங்களும் தவறானவை என நீதிமன்றங்களுக்கு அறிவு-ரையும் புத்திமதியும் சொல்லியுள்ளனர் மூவரும்.
வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள-தால் 2008 ஜனவரி 10ஆம் தேதி நிறைவேற்றப்-படவிருந்த தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியச் சிறைகளில் குற்றவியல் நடவடிக்-கைகளுக்காகத் தூக்குத் தண்டனைக்காக சுமார் 1150 ஆண் மற்றும் பெண் குற்றவாளிகள் காத்திருக்கின்றனர்.
மனித உரிமை அமைப்புகள் இதுபோல் வழங்கப்படும் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொடிய குற்றங்கள் செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிப்-பது பொதுவான நடைமுறை. குற்றம் செய்து தண்டனை பெற்றவர்களுக்கு கொடுமை இழைத்து சாகடிக்கும் முறையை மாந்த நேயமுள்ளோர் எதிர்க்கின்றனர்.
பாகிஸ்தானில் நடந்த கசூர் கொலை வழக்கில் தொடர்புடையவரெனக் கூறி இராணுவத் தளபதி ஜியா-வுல்-ஹக் பிரதமராக இருந்த பூட்டோ ஆட்சியில், 1979 ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். உலக மக்கள் ஒட்டு மொத்த கண்ணீரும் சிந்திய தினமாகும். இதுதான் அரசியல்ரீதியாக நிகழ்ந்த பழி-வாங்கும் தூக்குத்தண்டனையாகும்.
அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளில் ஈராக் அதிபர் சதாம் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகள் அமெரிக்காவின் கொடுங்-கரங்களால் தூக்கிலிடப்பட்டார். இதுவும் வெகுஜன மக்களை வருத்திய செயலாகும்.
சென்னை நகரில் பல்வேறு பாலியல் கொலைகளும் கொள்ளைக் குற்றங்களும் செய்த ஆட்டோ ஓட்டுநர் சங்கர் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்டார். இது சமூக அவலத்திற்கான தூக்குத் தண்டனையாகும்.
இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னர் விடுதலைப் போரில் ஈடுபட்ட மாவீரன் பகவத்சிங், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற தீர மறவர்களை வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் தூக்கிலிட்டுக் கொன்றது. இந்திய மண்ணில் வணிகம் செய்வதற்காக நுழைந்த வெள்ளையர்கள், குறுநில மன்னர்-களையும், நாட்டின் வளத்திற்குப் பெருமை சேர்த்த மாமன்னர்களையும் சூழ்ச்சி வலையில் விழவைத்து இந்தியாவை ஆளும் அதிகார அமைப்பையே கைப்பற்றிக் கொண்டவர்.
இந்திய நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் 55 பேர்கள் தூக்கிலிடப்பட்டதாகத் தெரிகிறது. 1975 முதல் 1991 முடியவுள்ள காலத்தில் 40 பேர்-களுக்கு பல்வேறு குற்றங்கள் புரிந்தமைக்காக - தூக்கு கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டாலும், தலைநகரிலுள்ள உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றங்களில் மேல் முறையீட்டில் மறு விசாரணை செய்து, ஒரு சில வழக்குகளில் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
தூக்கிலிடப்பட்டவர்களில் முக்கியமான சிலர்: நாதுராம் கோட்சே: அண்ணல் காந்தியைச் சுட்டுக் கொன்றார். சுதந்திர இந்தியாவில் முதல் தூக்கு தண்டனை பெற்றவர்.
சுசாசிங்: 1960 துவக்கத்தில், அப்போதைய பஞ்சாப் முதல்வர் பிரதாப் கைரோனைக் கொன்றதற்காகத் தூக்கிலிடப்பட்டார்.
மக்பூல் பட்: 1984இல் ஜே.கே.எல். எஃப் தலைவர் பயங்கரவாதச் செயலுக்காகத் தூக்கிலிடப்பட்டவர்.
ரங்கா, பில்லா: 1980இல் தில்லியில் பள்ளிக் குழந்தைகள் சோப்ரா, அவரது தம்பி சஞ்சய் சோப்ராவை கொன்றதற்காக தூக்கிலிடப்-பட்டவர்.
சத்வந்த்சிங், கேஹார்சிங்: முன்ள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றதற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
தனஞ்சய் சாட்டர்ஜி: நம் நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு தூக்கிலிடப்பட்ட 55வது கைதி.
உத்திரப் பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்த 240 பேர்களும், பீகார் மாநிலத்தினைச் சேர்ந்த 197 பேர்களும், மகாராட்டிரா மாநிலத்தினைச் சேர்ந்த 97 பேர்களும் தண்டனைக்காகக் காத்துள்ளனர். இவர்களில் 40 பேர்கள் ஜனாதி-பதி அவர்களுக்கு கருணை மனு செய்துள்ளனர். இவர்களில் மூன்று பெண்களும் அடங்-குவார்கள். இந்திய நாடாளுமன்றக் கட்டடத்-தின்மீது தாக்குதல் நடத்திய காஷ்மீர் தீவிரவாதி முகமது அப்சலை தூக்கிலிட உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. முந்தைய ஜனாதிபதியின் கருணை கேட்பு மனு, பரிசீலனையில் இதுநாள் வரை நீதிமன்றத்தில் உள்ளது.
பொதுவாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு நாடுகள் பரவலாக கருத்து கொண்டுள்ளது. இந்தியாவில் தூக்குத் தண்டனை முறையுள்ளது. இருந்தபோதிலும் குறைந்த அளவிலேயே தண்டனை நிறை-வேற்றப்-பட்டு வருகிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் கடுமையாகக் கூறியுள்ளது.
தூக்குத் தண்டனை வழங்கும் முறை மனித நேய அடிப்படையில் குறைக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் அணுகுமுறையை பலநாடுகள் ஆதரித்த போதிலும் ஈரான், ஈராக் போன்ற வளைகுடா நாடுகளிலும், சீனா போன்ற தொன்மையான நாடுகளிலும் அதிகாரத்தின் உச்சாணியிலுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மரண தண்டனை வழங்கும் நடைமுறை இன்னும் அமலில் உள்ளது.
குற்றவாளிகளை கொடுமைப்படுத்தி சாகடிக்கும் முறையை மனித உரிமை அமைப்பு-கள் வன்மையாக எதிர்த்து வருகின்றன. இது மறு சிந்தனை மேற்கொள்ளப்பட வேண்டிய மாந்த நேயச் செயலே. |