ஹாலிவுட் கலைவாணர்-16
சாப்ளினின் இளமை ரகசியம்
- சு.அறிவுக்கரசு
 |
1920களில் அவர் எடுத்த “தி அய்டில் கிளாஸ்” (The Idle Class) என்ற படத்தின் தலைப்பிலேயே தம் கருத்தை வெளியிட்டு விட்டார். பணக்காரர்கள், சோம்பேறிகள் என்ற உண்மையை உடைத்துச் சொல்லிவிட்டார்.
உடல் நலத்திற்காக ஓய்வு எடுப்பதற்கும், உல்லாசக் கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அமைக்கப்பட்ட ரிசார்ட் (Resort)டுக்கு வசதி இல்லாதவர். நடந்தே வருவார். விடுதியில் இருக்கும் பணக்காரர்கள் ஒரு பெரிய காரில் ஏறிக் கொண்டு ஊர் சுற்றிப் பார்க்கப் போவார்கள். சாப்ளின் அதே காரில் தொற்றிக் கொண்டு பயணம் செய்வார். பணக்காரர்களும் இவரும் போக விரும்பிய இடம் ஒன்றே. பயணம் செய்யும் முறையும் ஒன்றே, காரில்! ஆனால் இடம்தான் மாறுபாடு. வசதி படைத்தவர்கள் உள்ளே! வசதியற்ற சாப்ளின் காரின் வெளியே! இது ஏழைகளின் நிலை என்பதை எடுத்துக் காட்டுவார்.
ஒரு காட்சியில் தன் மனைவியின் ஒளிப்படத்திற்கு முன்னால் அமர்ந்திருக்கும் சாப்ளினின் முதுகுக்குப் பின் காமரா இருக்கும். சாப்ளினின் தோள்கள் குலுங்கிக் கொண்டே இருக்கும். ஆட்டோ-கிராஃப் படத்தில் சேரனின் தோள்கள் குலுங்குவதைப் போல! எல்லாரும் நினைத்துக் கொள்வார்கள், தன் மனைவியின் படத்தைப் பார்த்து சாப்ளின் அழுகிறார் என்று! ஆனால் கேமரா அவரை முன்பக்கமாகச் சென்று படம் பிடித்துக் காட்டும் போதுதான் விசயம் தெரியவரும். அவர் “காக்டெய்ல்” தயாரித்துக் கொண்டிருப்பார்.
காக்டெய்ல் (Cocktail) என்பது பலவகை மதுபானங்களைக் குறிப்பிட்ட அளவில் கலந்து கலப்பட மது தயாரிப்பது இந்த மதுவகைகளைச் சீராகக் கலப்பதற்கு ஏதுவாக காக்டெய்ல் ஷேக்கர் என்கிற கருவியைப் பயன்படுத்துவார்கள். அதைப் பயன்படுத்திக் காக்டெய்ல் செய்யும் சாப்ளின் மகிழ்ச்சிப் பெருக்கில் தம் தோள்களைக் குலுக்கிக் காட்டிப் படம் பார்ப்பவர்களின் வயிறுகளை வலிக்கச் செய்து விட்டார், சிரிப்பால்!
பணக்காரர்களைக் கேலி செய்யும் காட்சிகளைப் படத்துக்குப் படம் சேர்த்துக் காட்டியதால் இவர் கம்யூனிஸ்ட் முத்திரை குத்தப்பட்டார், அமெரிக்காவால்! தாம் கம்யூனிஸ்ட் அல்ல, ஹ்யூமனிஸ்ட் (Humanist) என்றார் சார்லி சாப்ளின்! மனிதாபிமானி (ஹ்யூமனிஸ்ட்) என்ற போர்வையை கம்யூனிஸ்ட் போர்த்திக் கொள்கிறார்கள் என்று வக்கணை பேசியது அமெரிக்க அரசு.
ஹிஸ் ரீஜெனரேஷன் (His Regeneration) அவனது மறுபிறவி எனும் பெயர் கொண்ட ஒரு சிறு படத்தில் சாப்ளின் நடித்தார். அவர் தயாரிக்காத படம். அதில் கதாநாயகன் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு ஆடம்பர வாழ்வு வாழ்பவன். ஒரு மது அருந்தும் கேளிக்கை விடுதியில் ஆண்களும் பெண்களும் குடித்துக் கும்மாளம் போடுவார்கள். விடுதியில் மாடியும் உண்டு. வசதி படைத்தவர்கள் மட்டுமே அங்கு போக முடியும். அந்த இடத்திற்கு சாப்ளின் வருவார். மிக ஆடம்பரமாக உடை அணிந்து வருவார்.
அமர்ந்து மது அருந்துபவர்களையும், அருந்திவிட்டு ஆணும் பெண்ணுமாக ஆடிக் கொண்டிருக்கும் ஜோடிகளையும் பார்ப்பார். தனியாக இருக்கும் ஆண்கள் தங்கள் காந்தப் பார்வையால் பெண்களைக் கவர முயற்சிப்-பதையும் பார்ப்பார். ஆண்களுக்கு வலை வீசும் பெண்கள், பெண்களைக் கையைப் பிடித்து இழுக்கும் ஆண்கள், இந்தக் களேபரத்தில் கைகலக்கும் நபர்கள் என எல்லாரையும் ஒரு பார்வையால் அளந்து விட்டு மாடி ஏறுகிறார். அங்கேயும் அதே மாதிரி நிலைதான்.
 |
கீழே இறங்கிய சாப்ளின் வெளியே போய்விடுவார். கதாநாயகனான திருடன் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கப் போவான். எதிர்பாராவிதமாக ஒரு கொலையைச் செய்யும்-படி ஏற்பட்டு விடுகிறது. போலீஸ் வருகிறது. ஒரு பெண் இவரைத் தந்திரமாகத் தப்ப வைத்து விடுகிறாள். அவனும் ஓடி விடுவான். போலீஸ் போன பிறகு தன் அறைக்குத் திரும்பிய அப்பெண் ஒரு கடிதத்தைத் தன் படுக்கையில் பார்க்கிறாள். எதையும் திருடிப் போகாத திருடன் கடிதத்தை விட்டு விட்டுப் போய் இருக்கிறார்.
அதை எடுத்துப் படிக்கிறாள். காட்டிக் கொடுத்து விடுவாய் என நினைத்தேன்; நீயோ புதுப்பாதை காட்டியிருக்கிறாய். நன்றி என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
புதுப்பாதை என்று எழுதியவன், அதைக் கடைப்பிடிக்கிறான். உழைத்துச் சாப்பிடுகிறான். தெருவில் சாதாரணமாக நின்று கொண்டிரு-க்கும் போது ஒரு போலீஸ்காரர் வருகிறார். மாஜி திருடன் சிகரெட்டைத் தன் உதட்டில் வைத்துக் கொண்டு அவரிடம் தீக்குச்சி கேட்கிறான். அவர் தருவார். அந்தப் போலீஸ்-காரர்தான் இவன் செய்த கொலைக்காக இவனைப் பிடிக்க வந்தவர். அவரை இவனும் அடையாளம் கண்டு கொள்வான். அவன் முகத்தில் மகிழ்ச்சி. சிரிப்பு. பலவகை உணர்ச்சி-கள். போலீஸ்காரன் என்றாலே மண்டுகள்-தானா? அல்லது கண்டுபிடிக்க முடியாதவாறு திருடன் மாறிவிட்டானா? (இந்தப் படத்தை சார்லி சாப்ளினின் படங்கள் அடங்கிய டி.வி.டி.யில் காணலாம்).
1915இல் ஒர்க் (Work) என்று ஒரு படம் வந்தது. சாப்ளினின் படங்களில் மிக முக்கியமான படம். ஆலிவுட் இப்போது இருப்பதைப் போல பெருநகரமாக இல்லாமல் கிராமமாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட படம்.
ஆலிவுட்டில், நாம் நினைப்பதைப் போல, எல்லா ஸ்டுடியோக்களும் இல்லை. எம்.ஜி.எம். நிறுவனம் கல்வர் சிட்டி (Culver CIty)யில் உள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் (Purbank) பர்பாங்க் என்ற இடத்தில் உள்ளது. 20ஆம் செஞ்ச்சுரி ஃபாக்ஸ் நீறுவனம் வெஸ்ட்வுட் (Westwood) எனும் இடத்தில் உள்ளது. இந்த ஸ்டுடியோ கட்டிய பிறகு ஊர் உருவானது. அதற்கு செஞ்ச்சுரி சிட்டி என்றே பெயர். அதுபோல லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சுற்றியும் பல படிப்பிடிப்பு நிலையங்கள் உள்ளன. ஆனாலும் அமெரிக்க சினிமா என்றாலே ஆலிவுட் என்றாகி விட்டது. அதை வைத்து நம்மூரில் பாலிவுட், கோலிவுட், என்றெல்லாம் பெயர் வைக்கிறார்கள்.
ஒர்க் படத்தில் வண்டி இழுப்பவராக சாப்ளின் சுவர்த்தாள் ஓட்டும் பணியாளர் ஒருவரின் கடமான்களை ஏற்றிக் குதிரைக்குப் பதில் இவரே இழுத்துப் போவார். வண்டியில் முதலாளி ஏறிக் கொள்வார். ஒருநாள் முதலாளி தன் நண்பனையும் ஏறிக் கொள்ளச் செய்வார். பாரத்துடன் இரண்டு ஆள்களையும் ஏற்றி இழுத்துச் செல்வது எவ்வளவு சிரமம் என்பதைத் தம் முகத்தில் காட்டுவார். ஒரு கூட்டத்தில் கேமராவை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படம் பிடித்திருப்பார். மலை மீது வண்டியை இழுத்துச் செல்வது போலத் திரையில் தெரியும். இப்படி அவர் தன்முதலில் படம் பிடித்துக் காட்டியதை இன்றுவரை நம் தமிழ்ப் படங்களில் கூடக் காப்பி அடித்துக் காட்டுகிறார்கள். ஆனால் சார்லி சாப்ளின்தான் இதற்கும் முன்னோடி.
சுவர்த்தாள் ஓட்டவேண்டிய வீட்டுக்குக் கொண்டு போய் வண்டியை நிறுத்துவார். வீட்டின் உள்ளே நுழைவார். வீட்டுக்-காரருக்கும் வீட்டுக்காரிக்கும் தகராறு. மண்ணெண்ணெய் ஸ்டவ் எரியவில்லை, உணவு தயாரிக்க முடியவில்லை என்று சண்டை. சாப்ளின் அந்த ஸ்டவ்வை இப்படியும் அப்படியும் இரண்டு தட்டு தட்டுவார். ஸ்டவ் எரியும். இவரே அதை அணைத்துவிடுவார்.
வீட்டுக்காரர் நன்றியுடன் சிரித்துக் கொண்டே ஸ்டவ்வைப் பற்ற வைப்பார். அது எரியாது. சாப்ளின் தட்டிக் கொடுத்தப்பின் அது எரியும். இப்படி உயிரற்ற ஜடப் பொருள்-களைக் கொண்டும் நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தவர். இப்படியாகப் பல காட்சிகள் படம் முழுவதும் இருக்கின்றன. பார்த்தவர்கள் மனத்தில் சார்லி சாப்ளின் நகைச்சுவை அரசராக உயர்ந்து நிற்கிறார்.
நம்மூர்ப் பாஷையில் சொல்வதென்றால் தொழில் பக்தி அவருக்கு மிக அதிகம். படத் தயாரிப்பிலிருந்தும் நடிப்பிலிருந்தும் ஓய்வு பெற்று விட்ட பிறகும் கூட தன்னுடைய எல்லாப் படங்களையும் தம் மாளிகையில் அமைக்கப்பட்ட திரைப்பட ஸ்டுடியோவில் பார்த்து. மீண்டும் எடிட் செய்து, புதுப்-பின்னணி. இசை அமைத்துப் படத்துடன் இணைத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவை இன்றளவும் வெளிவரத் தொடங்-கியுள்ளன.
அவர் அமெரிக்காவில் வாழ்ந்து, படம் எடுத்து, பணம் சேர்த்துச் செல்வச் சீமானாகத் திகழ்ந்தாலும் அமெரிக்கக் குடிமகனாக ஆகவில்லை. அதனால் அவர் பட்ட இன்னல்-கள், அவமானங்கள், நடவடிக்கைகள் ஏராளம். அமெரிக்கா கருதிய அவரின் குறைபாடே, அவருக்குப் பெருமையைத் தேடித் தந்தது. ஆம், பிரிட்டிஷ் பிரஜையாகவே நீடித்த அவரை இங்கிலாந்து அரசி தக்க முறையில் பெருமைப்-படுத்தினார். (Knighthood) வீரர் பெருமை அளித்து சர் பட்டம் தந்தார். அவர் சர். சார்லி சாப்ளின் ஆனார். ஆனால் அவர் அதனை ஒரு போதும் விரும்பாதவர் ஆதலால் இறுதிவரை சார்லி சாப்ளின் ஆகவே இருந்தார்.
நடுத்தர வயதுக்காரர் ஆன பிறகும்கூட அவர் இளவயதுக்காரராகவே காட்சியளித்தார். இளமையின் ரகசியம் என்ன என்பதை வெகு காலம் கழித்தே வெளியிட்டார். அவர் யோகா செய்து வந்தார். யோகாசனம், யோகாப்பியாசம் என்றெல்லாம் சொல்லப்-பட்டு ஏதோ பார்ப்பனப் பண்பாட்டின் ஓரங்கம் என்பதைப் போலச் சொல்லப்படும் யோகக் கலை சிந்து வெளி நாகரிகக் காலத்திலேயே திராவிடர்களுடைய கலையாக இருந்து வந்தது. பார்ப்பனர்களும் பண்டாரங்-களும் அதைப் பரப்பிப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள், இப்போது? ஆனால் 1910களில் மேலை நாடுகளில் அதுபற்றி அறிந்தவர்களே இல்லாத நிலையில் அதனைக் கடைப்பிடித்தவர் சார்லி சாப்ளின்.
தனி நபர் அந்தரங்கங்களில் மூக்கை நுழைத்து அதைப் பற்றித் தரக்குறைவாக எழுதும் பழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. சம்பந்தப்பட்டவர் திருந்த வேண்டும் என்கிற மாதிரி உயர்ந்த நோக்கமெல்லாம் இவர்களுக்கு இருப்பதாகக் கூறமுடியாது. பேர் பெற்ற ஒருவரின் பெயரைக் கெடுக்க வேண்டும் அல்லது அதைச் சொல்லி மிரட்டிப் பணம் பறிக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் காரணம். எழுதப்படும் செய்திகளைத் தாங்கி வரும் ஏடுகளை மஞ்சள் ஏடுகள் என்பர். ஆனால், அசிங்கமான சேதிகளைக் கொண்டு நூலாகவே வெளிவந்தது. நூல் சார்லி சாப்ளினைப் பற்றி எழுதப்பட்டது. எழுதியவன் அவருடைய திரைப்பட நிறுவனத்தில் வேலை பார்த்தவன். நடந்த ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு தன் கற்பனையைப் பெரும் அளவில் கலந்து கவர்ச்சிகரமாக ஒரு கட்டுக் கதையை எழுதி நூலாக்கிவிட்டான்.
அந்நூல் வெளிவருவது பற்றிய விளம்பரம் வெளிவந்த செய்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த சாப்ளினுக்குத் தெரிவிக்கப்பட்டது. சட்டப்படி அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவரும் நியூயார்க் நகருக்கு விரைந்து வந்து வழக்கும் தொடர்ந்தார். ஆனால்...
|