தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
மூடநம்பிக்கை
நாட்டு நடப்பு
அன்னை மணியம்மையார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
மனித உரிமை
ஹாலிவுட் கலை - 16
பகுத்தறிவு
இதுதான் பார்ப்பனீயம்
பட்டுக்கோட்டை
புதிய கண்டுபிடிப்புக்குப்
நேர்காணல்
மக்கள் கருத்து
பெட்டிச் செய்திகள்

 

 

பெட்டிச் செய்திகள்

பளீர்... பளீர்... - இந்தியப் பள்ளிக் கல்வி இப்படி...

- வட இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள 53 சதவிகிதப் பள்ளிகளில் மட்டுமே பாடம் நடத்தப் படுவதாக திடீர் ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது என 1999இல் அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது வரை இந்நிலைகளில் மாற்றமில்லை.
- 2005இல் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், 35 சதவிகித பள்ளிக் குழந்தைகளுக்கு வாசிக்கத் தெரியவில்லை என்பதும் 41 சதவிகித குழந்தை களுக்கு கணக்குப் பாடத்தில் வகுத்தலோ, கழித்தலோ தெரியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
- 2006இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி முதல் வகுப்பில் சேரும் குழந்தைகள் எட்டாம் வகுப்பு வருவதற்குள் அவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விடுகிறது.
- 2007இல் எடுத்த கணக்கெடுப்பின்படி 30 சதவிகிதப் பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கணக்குகளும், 17 சதவிகிதக் குழந்தைகளுக்கு எழுதவும், படிக்கவும் தெரியவில்லை.


பளீர்... பளீர்... - பெண்களே இயக்கிய விமானம்

இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று முற்றிலும் பெண்களே விமானம் இயக்கி புதுமை படைத்தனர். பெண்கள் விமானி-யாக ஏற்கெனவே இயக்கி வருகின்றனர். ஆனால், அப்போது துணை விமானியாக ஆண் விமானியே உடன் செல்லுவார். ஊழியர்களும் ஆண்களாகவே இருப்பதுதான் இதுவரை வழக்கம்.
முதல் முறையாக இவ்வாண்டு மகளிர் தினத்தன்று (மார்ச் 8) ஏர் இண்டியாவின் விமானம் (அய்சி 573) சென்னையிலிருந்து கொழும்புவுக்குப் பறந்தது. இதனை இயக்கியவர் தீபா என்ற பெண் விமானி. துணை விமானி வேதாபகவதி மற்றும் ஊழியர்களும் பெண்களே. அன்று பிற்பகல் 12.20க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் கொழும்பு சென்று மாலை 4.25க்கு சென்னை திரும்பி, புதிய வரலாற்றைத் தொடங்கி வைத்துள்ளது.


பளீர்... பளீர்... - தங்கம்

1982ஆம் ஆண்டில் இந்தியாவில் பயன் படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு 65 டன். தற்போது இது 500 டன்களாக உயர்ந்துள்ளது. இதில் 80 சதவீதம் நகைகள் செய்யப் பயன் படுகிறது. 15 சதவீதத் தங்கத்தை முதலீடு செய்வோர் வாங்கு கின்றனர். 5 சதவிகிதத் தங்கம் தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.


பளீர்... பளீர்... - தீட்சிதர்களின் கொள்கை

“வேத வழிபாடு என்றால் பூஜை மொழியும் வேதம் சொன்ன வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லித் தான் தமிழுக்கு எதிராக மல்லுக்கு நிற்கிறார்கள்.
சூத்திரர்களைத் தோற்கடிக்க வேண்டும். அவர்களின் பாஷையான தமிழை முற்றாக மறுதலிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர் களின் கொள்கை. இவர்களைப் போய் தில்லை வாழ் அந்தணர்கள்னு சுத்தத் தமிழில் அடைமொழி போட்டு யார் கூப்பிட்டதோ.”
-அண்மையில் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடுவதை எதிர்த்த தீட்சிதர்கள் குறித்து (12.3.2008) ஜூனியர் விகடனில்

- ராமானுஜ தாத்தாச்சாரியார்


பளீர்... பளீர்... - சிங்கள அரசின் உளவியல் போர்

சிங்கள அரசு விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியில் வெல்ல முடியாது என்பதை உணர்ந் துள்ளது என்பதை அண்மையில் அது மேற்கண்ட சில நடவடிக்கைகளில் இருந்து அறிய முடிகிறது. சிங்கள அரசின் இயலாமையை உலகம் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருவதாக பன்னாட்டு ஊடகவியலாளர்கள் கருத்துரைக்கிறார்கள். உளவியல் ரீதியில் ஈழத் தமிழர்களை பலவீனப் படுத்திதான் பிரபாகரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது; செயல்பட முடியாத நிலையில் உள்ளார் என் றெல்லாம் செய்தியைப் பரப்புகிறதாம் சிறீலங்கா அரசு. ஆனால் சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சிவநேசன் எம்.பி.க்கு இருதி மரியாதை செலுத்த பிரபாகரன் நேரில் வந்து சிங்கள அரசின் முகத்தில் கரியை பூசிவிட்டார். சிங்கள அரசின் முழு ஒத்துழைப்போடு பிரபாகரன் என்ற பெயரில் சிங்கள மொழித் திரைப்படம் ஒன்றையும் துஷாரா பெய்ரிஸ் என்பவர் தயாரித்துள்ளார். இப்படம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தைப் பரப்புமாம். மேலும் LTTE in the Eyes of Tamil Nadu என்ற ஒரு நூலையும் சிங்கள அரசின் தகவல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளியான செய்திகள் மட்டுமே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.


பளீர்... பளீர்... - தாயார் வைத்த குழம்பு மீன்

கேள்வி: சமீபத்தில் நீங்கள் ரசித்துப்பார்த்த திரைப்படம்; நீங்கள் ரசிக்கும் டி.வி. நிகழ்ச்சி?
பதில்: தம்பி சத்தியராஜ் பெரியாராக நடித்த படம். வாரந்தோறும் தமிழருவி என்ற தலைப்பில் வழங்கப்படும் என் எளிய நடை கவிதைகள்.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த உணவு?
பதில்: வாலிப வயதில் என் தந்தை தூண்டிலில் பிடித்து, என் தாயார் குழம்பு வைத்த மீன். இன்று தந்தையும் இல்லை; தாயும் இல்லை; டாக்டர்கள் அனுமதித்துள்ள பட்டியலில் மீனும் இல்லை.

- முதல்வர் கலைஞர் ‘இந்தியா டுடே’யில் (மார்ச், 19, 2008)


பளீர்... பளீர்... - புகை பிடித்தால் பக்கவாதம் வரலாம்

அமெரிக்க பொது சுகாதாரம் பற்றிய துலேன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள், 40 வயதுக்கு மேற்பட்ட 83,533 ஆண்களையும், 86,336 பெண்களையும் வைத்து எட்டு ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தினர்.
இவர்களில் ஆண்களில் 60 சதவீதம் பேரும் பெண்களில் 13 சதவீதம் பேரும் புகை பிடிக்கும் பழக்கமுள்ளவர்கள். இந்த 8 ஆண்டு காலத்தில் 6,780 பேருக்கு பக்கவாதம் வந்தது. அவர்களில் 3,979 பேர் இறந்துவிட்டனர். ஆண்களில் 14.2 சதவீதம் பேருக்கும் பெண்களில் 7.1 சதவீதம் பேருக்கும் பக்கவாதம் ஏற்பட புகை பிடிக்கும் பழக்கம் ஒரு காரணமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தினம் ஒரு பாக்கெட் அல்லது அதற்கு மேல் சிகரெட் பிடிப்பவர்களுக்கு மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் பக்கவாதம் நோய் தாக்க 51 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


பளீர்... பளீர்... - படிப்பு - பதக்கம் - பசன்னா

இடஒதுக்கீடு சமூகநீதி என்று பேசும் போதெல்லாம் தகுதி - திறமை பேசுவது பார்ப்பனியத்தின் பழக்கம். வாய்ப்பு மறுக்கப் பட்டதாலேயே கல்வித் திறமை வெளிப் படமுடியவில்லையே தவிர, ஆற்றல் இல்லாமை யால் அல்ல என்பதை இன்னுமொரு தாழ்த்தப் பட்ட சமூகத் தோழர் மெய்ப்பித்துள்ளனர். கர்நாடகா, ஆலந்த் வட்டாரம், சரசம்பா என்ற சிற்றூரில் பிறந்த பசன்னா தன் தாயின் கூலி வேலையில் கிடைத்த வருவாயில் வாழ்ந்தவர். வறுமையிலும் விடாப்பிடியாகப் படித்து தற்போது குல்பர்கா பல்கலையில் எம்.ஏ., (கன்னடம்) பயின்று முதல் மதிப்பெண் பெற்று ஏழு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்கமாட்டேன். விடுதியில் பிறர் உறங்கிக் கொண்டிருக்கும்போது நான் படித்துக் கொண்டிருப்பேன். வசதிகளையும் உணவையும் பற்றியெல்லாம் கவலைப் பட்டதில்லை. ஆராய்ச்சிப் படிப்பை முடித்து கல்லூரி விரிவுரையாளராவது என் விருப்பம் என்கிறார் பசன்னா.


பாலில் சோப்புத்தூள்

நம் நாட்டில் ஏராளமான தனியார் பால் நிறுவனங்கள் புற்றீசலாக முளைத்து வருகின்றன. இவர்கள் அனைவருக்கும் எங்கிருந்து பால் வருகிறது என நம்மாழ்வார் அவர்களிடம் கேட்டோம் அவரின் பதில் நம்மை உறைய வைத்தது.
தனியார் நிறுவனத்தில் தயார் செய்யப்படும் பால் முழுக்க முழுக்க செயற்கையானதாகும். 50 விழுக்காடு பவுடர், 30 விழுக்காடு சோயா மொச்சைப் பவுடர், 5 விழுக்காடு சோப்புத் தூள் (தேநீர் கடைகளில் பாலை ஆற்றும் போது நுரை வருவதற்காக) 5 விழுக்காடு பிளவரிங்தூள் (வாசனைக்கு) இந்த அடிப்படையில்தான் பால் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் ஒன்றுதான் கலப்படமற்றது. எனவே குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஆவின் பால் தவிர வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது.


டி.வி.சீரியல் பற்றி கவலைப்படும் பெண்கள்!

ஒரு மாநிலத்திலிருது இன்னொரு மாநிலத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். எங்களுக்கு மத நம்பிக்கைதான் முக்கியம் என்று சிலர் பேசுகிறார்கள். அதேசமயம், பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்ற கருத்தில் மட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒற்றுமை இருக்கிறது.
பெண்களுக்காக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அது பற்றி கவலைப் படாமல் டி.வி. சீரியல் பற்றி பெண்கள் கவலைப்படும் நிலை இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மகளிர் தினம். இன்று தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் பெரியார்போன்ற தலைவர்கள்தான்!
பெண்கள் உரிமை, சுயமரியாதையை விட்டுத் தரக் கூடாது. பொது வாழ்வில் இருக்கும் பெண்களை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது.
பெண்களுக்கு எதிரான ஆயுதங்களை பெண்களே எடுத்து வீசக் கூடாது.

- கனிமொழி (நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்)