ஆசிரியர் பதில்கள்

கேள்வி 1: புராணங்கள் ஒரு மனிதனை புடம் போடுகின்றனவா? இல்லை புண்படுத்துகின்றனவா?
- வி.ஆர். சங்கர், விடப்பாக்கம்
பதில்: இரண்டும் இல்லை; பண்பாட்டுப் படையெடுப்பைப் படம் காட்டுகின்றன.
கேள்வி 2: உலகத்தில் உள்ள ஒவ்வொருத்தரும் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தால் வறுமையும் பொருளாதாரச் சிக்கல்களும் அறவே இருக்காது இல்லையா?
- வி.ஆர். சங்கர், விடப்பாக்கம்
பதில்: ஆனால் எப்படி நிற்பது என்பது-தானே இன்றைக்கு எழும் கேள்வி. இன்னும் உலக சமதர்ம சமுதாயம் மலரவில்லையே!
கேள்வி 3: இன்று செர்பியாவிலிருந்து கொசாவோ விடுதலை. நாளை அடுத்து இலங்கையிலிருந்து ஈழம்தானே?
- காஞ்சி தி.இரமணன், தண்டையார்பேட்டை
பதில்: அங்குள்ளது போன்ற நீதி, நியாயங்கள் இங்கு இருந்திருந்தால் முன்பே தமிழ் ஈழம் மலர்ந்திருக்குமே!
கேள்வி 4: அரசு நிலத்தை (சில ஏக்கர்) ஆக்ரமிப்பு செய்தவர்கள் (விஜயகாந்த்) நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
- காஞ்சி தி.இரமணன், தண்டையார்பேட்டை
பதில்: விஜய டி.ராஜேந்தர் அவர்கள் சரியான கேள்வி கேட்டார். இன்னும் பதில் சொல்ல வேண்டியவர்கள் பதில் அளிக்கவில்லையே!
கேள்வி 5: பால் விலை உயர்ந்து விட்டதே?
- அ. தமிழ்க்குமரன், ஈரோடு
பதில்: மாடுகளை பராமரிப்போருக்கு நியாயமான வருமானம் கிடைக்க வேண்டாமா? அரிசிக்கு விலை, கோது-மைக்கு விலை என்று அந்த விவசாயிகள் நலனில் காட்டும் அக்கரை இவர்கள் பாலும் தமிழக அரசால் காட்டப்-படுவதுதானே நியாயம்? மற்ற மாநிலங்-களைவிட குறைவான விலை-யேற்றம்-தான்!
கேள்வி 6: நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள்கூட 2011இல் முதல்வராவேன் என்று சொல்கின்றனர். வைகோ ஏன் வாய் திறக்காமல் உள்ளார். அவருக்கு அந்த ஆசை ஏன் இல்லை?
- வீர. செல்வம், பூம்புகார்
பதில்: அவருக்கு யதார்த்தம் புரிந்திருக்-கிறது என்றே நினைக்க வேண்டியுள்ளது!
கேள்வி 7: சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாட ஆறுமுகசாமியை அனுமதிக்காத தீட்சிதர்கள் தற்போது தேவாரம் பாட எல்லாரையும் அனுமதிக்கின்றனரே...
- பாவலர் அறிவரசன், திருலோக்கி
பதில்: அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமே!
கேள்வி 8: முன்னேறிய வகுப்பில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்வது குறித்து தங்கள் கருத்து?
- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: இது குறித்து விடுதலை ஞாயிறு மலரில் பதில் வந்திருக்கிறது! கொடுக்க முன்வந்தால், எல்லா ஏழைகளுக்கும் கொடுக்க முன் வருவதுதான் முறை. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகும். |