தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
புதிய தலைமுறை
அண்ணா அம்பேத்கர்
பிறமொழிகளில் பெரியார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
பகுத்தறிவு
மருத்துவம்
தமிழர்கள்
நூல் அறிமுகம்
ஹாலிவுட் கலை - 17
அணுஅணுவாய் - 7
பதிலடி
உலகப் பார்வை
பளீர்... பளீர்...

 

 

பிறமொழிகளில் பெரியார்

தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கு எல்லை கிடையாது. மாந்த இனத்தின் மான வாழ்வுக்காக சிந்தித்த சுய சிந்தனையாளர் அவர். அய்யாவின் மறைவுக்குப்பின் அவரது சிந்தனைகள் உலகம் முழுதும் பயணித்து பரந்துபட்ட அளவில் வாசிக்-கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அய்யாவின் நூல்களை கழகம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. மலை-யாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பெரியாரின் நூல்கள் சில வெளி-வந்துள்ளன. அண்மையில் இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பெரியாரின் கருத்து-கள் தாங்கிய இரு நூல்கள் வெளி-வந்துள்ளன.
பெரியாரின் சமுதாயப் பார்வை குறித்து பெரியார் கே சமாஜிக் வீச்சார் (ஆத்ம சம்மான் அந்தோலன்) எனும் இந்தி நூலை அரவிந்த் குமார் சிறீவஸ்தவா என்னும் சிந்தனையாளர் எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலை 164 பக்கங்கள் அடங்கிய கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதேபோல கன்னட மொழியில் பெரியாரரா ஜீவன சரித்ரே (பெரியாரின் வாழ்க்கை வரலாறு) என்ற நூலை வி.சி.வேலாயுதன் எழுதி வேமண்ணாவின் மொழிபெயர்ப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 340 பக்கங்கள் கொண்ட இந்நூல் அண்மையில் வெளியிடப்பட்டது.