பகுத்தறிவு
மரபணுச் சோதனை எனும் அறிவியல் வளர்ச்சி
- பேராசிரியர் ந. வெற்றியழகன் எம்.ஏ.,பி.எட்.,
 |
அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி -2
கூப்பிட்ட குரலுக்கு
கட்டுரை மேலும் பின்வருமாறு தொடர்கிறது:
பகுத்தறிவாளர்களாகிய நீங்கள் உங்கள் தாயையும் தந்தையையும் அவர்கள் உங்களைப் பெற்றெடுக்கும்போது உங்கள் கண்ணால் பார்த்துப் பகுத்தறிந்து தான் ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஒரு பிள்ளை, தான் பிறக்கும்போது அது எப்படித் தன் பெற்றோரைத் தெரிந்து கொள்ள முடியும்?
தெரிந்து கொள்ள வேண்டிய தேவைதான் என்ன?
பெற்றோரை மட்டுமல்ல, பிறந்த இடத்தில் காணப்படும் பிறபொருள்களைக் கூட எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?
தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையானம் -தான் என்ன?
பிறந்த குழந்தை, வளர்ச்சியடையாத தன் அறிவினைப் பயன்படுத்தாமலேயே வளர, வளர, தன் இயல்பான உடலில், உயிரியல் தொடர்பால் கண்ணால் பார்த்தும், காதால் குரலைக் கேட்டும் தன் தாயினைத் தெரிந்து கொள்கிறதே?
அழுகிற ஒரு குழந்தை, தன் கட்புலனால் அறிவதற்கு முன்பே தன் செவிப்புலனால் தன் தாயை, தந்தையை அறிந்து கொள்ளுமே?
தன் தாய் வெளியிலே எங்கோ சென்றிருந்த போது, இடைவிடாமல் அழுது, அரற்றி எவர் வந்து தூக்கினாலும் அமைதிப்படுத்தினாலும் அழுகையை நிறுத்தாத குழந்தை, என் கண்ணே! அழாதே! இதோ வந்துவிட்டேன்! என்று தன் தாய் குரல் கொடுத்தவுடனேயே அழுகையை நிறுத்தி குரல்வந்த பக்கம் கூர்ந்து நோக்கி சட் என அழுகையை நிறுத்தி விடுகிறதே?
இதோ! எந்தன் அன்னை முன்னாலே!
எவர் தூக்கினாலும் அடம்பிடித்து அழும் குழந்தை தன் தாய் தன் மேல் கை வைத்துத் தொட்டவுடன் அந்தத் தொடு உணர்ச்சியால் தாய் வந்து விட்டாள்! என்று தெரிந்து கொண்டு அமைதி அடைவதும் இந்த முறையில்தானே?
குழந்தையானது வளர வளர, பாலூட்டி, தாலாட்டி, பரிவுகாட்டி, பேணி வளர்க்கும் தன் தாய் தந்தையை சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் அய்ம்புலனாய், பழக்கத்தால் நன்கு அடையாளம் கண்டு கொள்கிறதே?
வேண்டாத வீண் அலட்டல்
மேலும் எழுதுகிறார்:
எங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும்-போது தாய் என்றும் தகப்பன் என்றும் தெரிய வந்ததை நம்பித்தான் தாயையும் தந்தையையும் ஏற்றுக் கொண்டோம் என்று மட்டுமே நீங்கள் சொல்ல முடியும்!
என்று விவரம் தெரியத் தொடங்கும்போது, ஏற்கனவே எம்மால் சொல்லப்பட்ட வழி முறைகளால் இனம் காணும் குழந்தை, நாளடைவில் தெரிய வந்ததை நம்பி பின் அதனை ஏற்றுக் கொண்டு பெற்றோரை உறுதி செய்து கொள்கிறது.
புலன் நுகர்வு - பட்டறிவு உணர்த்துவதை ஏற்பது தானே நம்பிக்கை. நம்பிக்கை வைப்பதே தவறா? மூடநம்பிக்கை கொள்வதுதான் குற்றம்! நன்னம்பிக்கை வைப்பது குற்றமல்லவே!
பெற்றோரை மட்டுமல்ல, தன் உடன் பிறப்பாளர்களை, மற்ற உறவுக்காரர்களையும் இப்படித்தானே குழந்தை நம்பி ஏற்றுக் கொள்கிறது!
மீண்டும் கேட்கிறோம்!
அன்று பிறந்த குழந்தை, தன் தாய் யார்? தந்தை யார்? என அறிந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? நோக்கம் என்ன? அது பெறும் நன்மை என்ன? அறியாவிட்டால் வரும் தீமை என்ன?
ஏன் கட்டுரையாளர் இவ்வாறு வீணாக அலட்டிக் கொள்ள வேண்டும்?
அதுதான் அதிகப்பிரசங்கித்தனம்:
மேலும் கடுமையாக எழுதுகிறார்:
தங்களை மாபெரும் பகுத்தறிவாளர்கள் எனப் பீற்றிக் கொள்ளும் ஒரு சிலர், அதிகப் பிரசங்கித்தனமாக மரபணுச் சோதனை மூலமாக எங்கள் தாயையும் தந்தையையும் பகுத்தறிந்து கொள்வோம் எனப் பீற்றலாம்.
ஆமாம், மெய்தான்!
மரபணுச் சோதனை - டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் பெற்றோரை இனம் காணலாம்.
இப்படிக் கூறுவது அறிவியல் வழியில் தீர்மானிக்கப்படும் அடிப்படை உண்மையல்லவா? இதைப் பீற்றிக் கொள்வது என்று கட்டுரையாளர் ஏன் கூற வேண்டும்.
வீணாக - பொய்யாக - புளுகாக பறை சாற்றுவது-தானே பீற்றிக் கொள்வது?
உண்மையைக் கூறுவது எப்படிப் பீற்றிக் கொள்வதாகும்? இப்படி அவர் சாற்றுவது தான் அதிகப்பிரசங்கித்தனம்!
தாயும் யாரோ? தந்தையும் யாரோ?
கட்டுரையாளர் மேலும் அதிகப்பிர-சங்கித்தனம் (சொற்றொடர் அவரது நன்கொடை தான்) ஆக எழுதுகிறார் பின்வருமாறு:
இது காலம் வரை, தங்களின் தாயாக, தந்தையாக நம்பி ஏற்று இருந்தவர்கள், தங்களின் தாயுமல்ல, தந்தையும் அல்ல என மரபணுச் சோதனை மூலம் அறிந்து கொண்டபின் அந்த மரபணுச் சோதனை மூலம் தங்களை உண்மையிலேயே பெற்றெடுத்த தாயையும் தந்தையையும் அறிய முடியுமா?
அதாவது, இவ்வுலகிலுள்ள குறைந்தது தங்கள் ஊரிலுள்ள அனைவரையும் தங்களின் மரபணுச் சோதனைக்கு உட்படுத்த முடியுமா? சாத்தியமா?
அறிவியலின் அரிய சாதனை!
மரபணுச் சோதனை மூலம் தங்கள் தாய் தந்தையர் இவர்கள் அல்லர் என அறிந்து கொள்ள முடியும் என்கிறார் கட்டுரையாளர். இந்த மரபணுச் சோதனை அறிவியல் - பகுத்தறிவு வளர்ச்சியின் விளைவு அல்லவா?
கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத இந்த பகுத்தறிவு - அறிவியல் வளர்ச்சிப் போக்கு இந்த அளவில் உள்ளது என்றால் என்ன பொருள்?
முன்னர் இல்லாத அறிவு தற்காலம் வளர்ந்து வருகிறது என்பதுதானே? பகுத்தறிவை - அறிவியலை எள்ளி நகையாடி, ஏளனம் செய்து இழித்துரைக்கும் இவர் தம்மையறியாமலேயே அதன் மாண்பினை, தேவையை, அருமையை ஒத்துக் கொண்டு விட்டாரே?
முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை:
தன் தாய் தந்தையர் இவர்கள் அல்லர் என மரபணுச் சோதனை மூலம் உறுதிப்படுத்துவது மட்டுமே முடியும்.
அதே சோதனை மூலம் பெற்ற தாய் தந்தை-யரை அறிய முடியாது, ஒருபோதும் முடியாது என இவர் எப்படிக் கூறலாம்?
இப்போது முடியாது! என்று வேண்டு-மானால் இவரனையார் கூறலாம். எப்போதும் - ஒரு போதும் முடியாது என்று எப்படிக் கூறலாம்!
இவருக்கு இந்த உரிமையை யார் தந்தது? பெற்றோரை மரபணுச் சோதனை மூலம் அறிய முடிவதை முடியாது! என இவர் கூறுவது சரியல்லவே? முடியாது என்பது முட்டாள்-களின் வார்த்தை என்பது பொன்மொழி!
வேண்டாத வீண் வேலை
மரபணுச் சோதனை எப்போது நிகழ்கிறது?
இந்தப் பெண்ணை நான் தொட்டதில்லை; கை விட்டதில்லை; இவள் பெற்ற பிள்ளைக்கு நான் அப்பனல்ல! - என்று வழக்கு வரும் போது தானே இந்தச் சோதனை நிகழ்த்தப்-படுகிறது?
ஆம்! சோதனைப்படி இந்தக் குழந்தை இவரது உயிரணுவுக்குப் பிறந்தது தான்! என்றோ, இல்லை! இவரது உயிரணுவுக்குப் பிறக்கவில்லை என்றோ அறிவியல் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
ஊரிலுள்ள அனைவருமா, இப்படித் தங்கள் பெற்றோர் இவர்தாம் என்றோ, இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள அலைகிறார்கள்? இதனால் இவர்களுக்கு நன்மை என்ன? வேண்டாத - வீண் வேலையில் ஏன் இவர்கள் இறங்கப் போகிறார்கள்?
அறிவியல் ஆய்வினால் அறிய முடியுமே!
மரபணுச் சோதனை மூலம் தன் பெற்றோர் இவர் என்று எப்படி அறிய முடியும்? ஒருபோதும் முடியாது! என்று கேட்கிறார் இவர்? ஏன் முடியாது?
குற்றம் சாட்டப் பெற்றவன் உண்மையான குற்றவாளி அல்லன் என்று காவல்துறைப் புலன் விசாரணையில் தெரிய வந்தவுடன் யார் உண்மையான குற்றவாளி என அறிய எத்தனையோ வழிமுறைகளைக் காவல் துறையினர் கையாள்கின்றனரே?
அதற்காக, உலகிலுள்ள, ஊரிலுள்ள அத்தனை பேரையுமா பிடித்து வந்து அல்லது இழுத்து வந்து புலன் விசாரணை நடத்து-கிறார்கள்? இல்லையே?
சந்தேகத்திற்கு உரியவர்களை, இவர்கள் குற்றவாளிகளாக இருக்கலாமோ எனக் கருதப்படுபவர்களை மட்டும், உயித்தறிந்து, உசாவியறிந்து, கடந்த காலத்தில் அவர்தம் குற்ற நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து குறிப்-பிட்ட சிலரை மட்டும் காலத் தாழ்ச்சி (னுநடயல)க்குப் பிறகாவது விசாரணை செய்து குற்றம் புரிந்தவர்களைக் கண்டு பிடித்து குற்றவாளிக் கூண்டிலே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள்.
அதுபோல, அய்யத்திற்குரியவர்களை உசாவியறிந்து அவர்களிடம் மரபணுச் சோதனை செய்து உண்மைகளை, பகுத்தறிவின் அடிப்படையிலான அறிவியலால் முடியாதா? முடியும்! எப்படி?
எப்படி? எப்படி? அறிந்தது, எப்படி?
நீங்கள் திருமதி வளர்மதி அவர்களின் மகள்தானே?
ஆமாம், உங்களுக்குத் தெரிந்தது எப்படி?
எனக்கு உங்கள் அம்மாவை நன்கு தெரியும்! அவர்களின் பொதுவான உருவ அமைப்பு உங்களுக்கு இருப்பதோடு உங்களின் பேச்சு, அவர் பேசுவது போலவே இருக்கிறதே?
இன்னோர் உரையாடல்:
தம்பி, நீ வாழப்பாடி வடிவேலுவின் மகன் தானே?
ஆமாம், அய்யா! எப்படித் தெரிங்சு-கிட்டீங்க?
வடிவேலுவோட முகச்சாயல் அப்படியே உங்களிடம் தெரிகிறதே?
இப்படிப்பட்ட உரையாடல்களை நாம் பல்வேறு இடங்களிலே வாய்ப்புகளிலே கேட்டிருப்போம்.
ஏன் நாமே கூட அடுத்தவரைப் பார்த்துக் கேட்டிருப்போம்!
நம்மிடம் மற்றவர்கள் கேட்டிருக்கவும் கூடும்.
பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு
இனப் பெருக்க உயிரணுக்களிலுள்ள பண்புக் காரணிகள், பண்புக்காரணி அலகுகள் ஆகியவை பெற்றோரிடமிருந்து பிள்ளை-களுக்கு மரபியல் பண்புகளை எடுத்துச் செல்கின்றன.
எடுத்துச் செல்பவைதான் பண்புக் காரணி-களிலுள்ள டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. எனப்படும் மூலக்கூறுகள்.
ஒரு பண்புக் காரணி அலகில் நிறம், கண்கள், மயிர் இவற்றின் நிறம், மூக்கின் அமைப்பு, உடலளவு, உயரம், நீண்ட அல்லது சுருண்ட தலைமயிர் முதலியவை பெற்றோரின் மூலம் பிள்ளைகட்கு வருகின்றன.
இவற்றை, அறிவியல் வழி ஆய்ந்து உறுதிப்படுத்துவதான் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. சோதனை ஆகும்.
துப்புத் துலக்கலாம்!
இத்தகு தன்மைகள் மேலே சொல்லிய வண்ணம் தோற்றம், நடை, பாவனை, உடலமைப்பு முதலியவற்றை வைத்தே தந்தை யாராக இருத்தல் கூடும் என்பதைக் கண்டறிய முடியும்; துப்புத் துலக்க முடியும்!
இதேபோல் உள்ள பலரையும் மரபணுச் சோதனை மூலம் இனம் காண முடியும்.
சந்தேகப்படும்படியானவரைத் தேர்வு செய்து, புலன் விசாரணைக்குள்ளாக்கி குற்றவாளிகளை உறுதிப்படுத்தும் காவல்துறை முறை தான் இது!
இப்படியிருக்க,
அனைவரையும் மரபணுச் சோதனைக்கு உட்படுத்த முடியுமா? சாத்தியமா? என, அந்நஜாத் ஏடு பொறுப்புணர்வின்றி, தேவையும் இல்லாமல் வினவுவது முற்றிலும் சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?
பெற்றோர் எல்லாம் நெறி பிறழ்ந்தவர்களா?
தங்கள் பெற்றோர் எல்லாம் ஒழுக்கம் தவறிய நடத்தையால்தான் தம்மை ஈன்றெடுத்-துள்ளனரோ? என அய்யப்பட்டு, இப்படிப்-பட்ட வினாக்களை எழுப்புவது நாகரிகம் அற்ற பண்பாட்டுக் குறைவான போக்கு அல்லவா?
பகுத்தறிவைக் கொச்சைப்படுத்த இது ஒரு வழியா? முறைமையா?
அசிங்கத்தை அள்ளி வீசுவதா?
கட்டுரையாளர் மேலும் இவ்வாறு எழுதுகிறார்:
தாயின் கர்ப்பப்பை உலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த பின்னர் தங்களின் மழலைப் பருவத்தில் தாங்கள் செய்த அசிங்கமான செயல்களையாவது பகுத்தறிவு கொண்டு அறிய முடிகிறதா?
அதாவது அந்தக் குழந்தைப் பருவத்தில் பெற்ற தாய் சிறிது கவனமில்லாமல் இருக்கும்போது ஒன்றிற்கும் இரண்டிற்கும் போய் அவற்றைக் கைகளால் பிசைந்து அதை வாயில் வைத்து சப்பியதை எல்லாம் தங்களின் பகுத்தறிவால் பகுத்தறிய முடிகிறதா?
அசிங்கத்தை இத்தனை விளக்கமாக, நேரடி வருணனை போல விவரிக்கும் அசிங்கம் வேறு உளதா?
உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும்:
பிறந்த பிள்ளைக்கு அய்ம்புலன்களின் முதிர்ச்சியிருக்காதே! உலகிலுள்ள பொருள்கள், நிகழ்வுகள் பொறிகள் வழி மூளையில் பதிந்து அந்தத் தகவல்கள் முழுமையாக உணரப்படாத நிலையில்தானே பிள்ளையின் மூளை வளர்ச்சி இருக்கிறது.
வளர்ந்து, முழுமையாகப் புலன்கள் முதிர்ச்சி பெற்ற பின்தானே அதனைப் பகுத்தறிய முடியும்!
பகுத்தறிவும் அப்பிள்ளைக்கு முழுமையோ முதிர்ச்சியோ பெற்றிராதே? புலனுணர்வு, பகுத்தறிவு இவற்றைப் பற்றிய அரிச்சுவடி அறிவே இல்லாமல் இப்படி எழுதலாமா? பகுத்தறிவை அசிங்கப்பகுத்தலாமா?
மேற்சொல்லப்பட்ட பிள்ளைப் பருவச் செயல்களை உலகிலுள்ள எல்லாக் குழந்தை-களும் தானே செய்கின்றன?
அவற்றை நேரடியாகப் பார்த்து நாமும் மழலைப்பருவத்தில் இப்படித்தானே செய்திருப்-போம் - என்று உய்த்துணர்ந்து ஊகித்து அறிவது உய்த்தறிவு இல்லையா? பகுத்தறிவைக் கொண்டு வந்து போட்டுக் குழப்புகிறாரே?
விவரமறியா சின்னக் குழந்தைத்தனமான மனநிலையில் இவர் இருக்கிறாரே? அசிங்-கத்தைக் குழந்தை வாயில் வைத்துச் சப்புவது போல இவரும் அதனை எழுது கோலில் தொட்டு எழுதுகிறாரே?
- (தொடரும்)
|