தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
புதிய தலைமுறை
அண்ணா அம்பேத்கர்
பிறமொழிகளில் பெரியார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
பகுத்தறிவு
மருத்துவம்
தமிழர்கள்
நூல் அறிமுகம்
ஹாலிவுட் கலை - 17
அணுஅணுவாய் - 7
பதிலடி
உலகப் பார்வை
பளீர்... பளீர்...

 

 

மருத்துவமும் மூடநம்பிக்கையும்

நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் இன்றைய மக்கள் சமூகத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலான நோயாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் (Hypergly clemia) தோன்றும் நோயே இது. இன்றைய நிலையில் இந்திய மக்கள் 50 வயதிற்கு மேல் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏராளமாக உண்ணுதல், வறுத்த உணவுகள் (Fried Foods) கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், இனிப்பு வகைகள் அதிகம் உண்ணுதல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, விளையாட்டு-களை புறக்கணித்தல், சோம்பல் வாழ்க்கை, எப்பொழுதும் எதையாவது கொறித்துக் கொண்டு, தொலைக்காட்சியை பார்த்த வண்ணம் பொழுதை கழித்தல், அதிகமாக தூங்குதல் ஆகியவை இந்நோயை இரு கரம் கூப்பி வரவேற்கும் நிலைப்பாடாகும். பாரம்-பரிய நோயாகவும் இந்நோய் பலருக்கு வரும் வாய்ப்பும் உண்டு. பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டாலும், நிறைய பேருக்கு இந்நோய் இருப்பதே தெரியாமலேயே வாழ்கின்றனர். உடல் மெலிதல், அதிகம் உண்ணும் விருப்பம், இளவயதிலேயே பற்கள் ஆடி உதிர்தல் போன்றவை ஏற்பட்டால், நீரிழிவு நோய்க்கு சோதித்துக் கொள்வது அவசியம். ஒரு சிலர் எனக்கு லேசாக சர்க்கரை உள்ளது. நான் எந்த மருத்துவமும் செய்து கொள்வதில்லை. உணவு கட்டுப்பாட்டிலேயே சரி செய்து கொள்கிறேன் என்பர். வேறு சிலரோ நான; யோகா செய்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பர். வேறு சிலரோ நான் தியானம் செய்து இந்நோயை கட்டுப்-படுத்துகிறேன் என்பர். இன்னும் சிலரோ நான் கடும் உடற்பயிச்சி செய்து இந்நோயி-லிருந்து தப்பிக்கிறேன் என்பர். இதெல்லாம் சரியா? நோய் கட்டுப்பாட்டிற்கு இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளலாமா என இனி நோக்குவோம். நீரிழிவு நோய் ஒரு கடுமையான நோயாகும். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கும் உயிராபத்தையும் ஏற்படுத்தும் நோய் இது. உடலின் வளர் மாற்றங்களை பாதிப்பதால், மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, நீர், ஊட்டச் சத்துகள் வளர் மாற்றங்கள் (Carbohydrates, Protein, Fat, Water, Electolytes Metabolism) முழுமையாக பாதிக்கப்படுகின்றன.
செல்களுக்கு தேவையான ஊட்டச் சத்தின்-மையால், அவற்றின் இயக்கங்கள் தொய்-வடைகின்றன. இதனால் உடற் கோளாறுகள் அதிகமாகி, உடலின் முழுச் செல்பாடுகளும் பாதிப்படைகின்றன. உடலின் எல்லா உறுப்புகளும் பாதிப்படைந்தாலும், கண்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பாதிப்பு மிக அதிகமாகும். நீரிழிவு நோயால் கண்கள் குருடானவர்களும், சிறுநீரக செய-லிழப்பு அடைந்தவர்களும் நிறைய பேர். இந்நோயை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்-தாமல் விடுவதால் உடலின் பல உறுப்புக்கள் சிறிது சிறிதாக பாதிக்கப்பட்டு, கடைசியில் முழுவதுமாக செயலிழக்கக் கூடிய நிலை ஏற்படும். முழுமையாக பாதிக்கப்பட்ட உறுப்புக்கள், மீண்டும் பழைய நிலைக்கு, இயக்கத்திற்கு (Irreversable Demage) வரமுடியாத சூழ்நிலை உண்டாகும்.
நோய் காரணீயம்: (Aetiology) நீரிழிவு நோய் இரண்டு வகைப்படும். முதல் நிலை நீரிழிவு நோய் (Primary - Idiopathic Diabetes) இரண்டாம் நிலை நீரிழிவு நோய் (Secondary Diabetes) என இரண்டு வகைப்படும்.
முதல் நிலை நீரிழிவு நோய்: பெரும்பாலான மக்கள் இந்த வகை நீரிழிவு நோயால்தான் பாதிக்கப்படுகின்றனர். பரம்பரை: பெரும்பாலான நோயாளிகள் வழிவழியாக இந்நோயை பெறுகின்றனர். வீட்டில் பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ நீரிழிவு நோய் உள்ளவராக இருப்பின் அவர்களின் பிள்ளைகளுக்கும் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 80 சதவிகிதம் நோயாளிகள் 50 வயதை கடந்தவர்களாகவே இருக்கின்றனர். பெரும்-பாலும் 60 வயது முதல் 70 வயது வரையுள்ள-வர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இளவயதுக்காரர்களில் பெண்களை விட, ஆண்களே அதிகமாக நோயால் தாக்கப்படு-கின்றனர். நடுத்தர வயதுக்காரர்களில் பெண்கள் அதிகளவு நோயைப் பெறுகின்றனர். பெண்-களில் சிலருக்கு, கருவுற்ற காலங்களில் இந்நோய் உண்டாகலாம். (Gestation Diabetes) பருத்த உடல் உள்ளவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்புக்-கள் அதிகம். சிலவகை தொற்று நோய்-களில், நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். மன உளைச்சல், உடலில் ஏற்படும் அடி போன்றவை கூட நீரிழிவு நோயை உண்டாக்கக் கூடும். ஸ்டீராய்டு மருந்துகளை சாப்பிடும் நோயாளி-களுக்கு இந்நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
இரண்டாம் நிலை நீரிழிவு நோய்: கணயப்-பையில் ஏற்படும் அழற்சி, புற்று நோய் போன்றவை முதல் நோயாக இருந்து கணயப்பை செல்களை அழித்துவிடும். அதனால் இன்சுலின் சுரப்பது நின்று விடும். இதன் இரண்டாம் விளைவாக நீரிழிவு நோய் உண்டாகும். வளர்ச்சி சுரப்பிகள் (Growth Hormones) உடலுக்கு செலுத்துவதால், பின் விளைவாக நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். நோய் கூற்றியல்: நமது உணவில் மாவு சத்து குடலில் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலந்த உடனே, கணயப் பையில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் சுரப்புகள் தூண்டப்-படுகின்றன. உடனே இன்சுலின் சுரந்து, இரத்தத்தோடு கலந்து உடலின் அனைத்து திசுக்களுக்கும் பரவும். திசுக்களில் உள்ள செல் சுவர்கள் இன்சுலினால் தூண்டப்படும். உடனே அவை விரிந்து கொடுக்கும். சுவர்கள் விரிவடைவதால் அதில் உள்ள துளைகள் விரிவடையும். அதனால் மாவுச் சத்து துகள்-கள் எளிதாக செல்லின் உள் சென்று விடும். இதனால் செல்லின் இயக்கம் தங்கு தடையன்றி சீராக இயங்கும். உணவில் உள்ள மாவுச் சத்து கல்லீரலில் கிளைகோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படும். உணவு உண்ணாத வேளையில் உடல் உழைப்பின் போது தேவைப்-படும் மாவுச் சத்தை, கல்லீரலில் இருந்தே உடல் உறுப்புக்கள் பெறும். அதிகம் உழைக்கும் பொழும், மாவுச் சத்து அதிகளவு தேவைப்-படும். அப்பொழுது கல்லீரலில் உள்ள கிளை கோஜன் மீண்டும் மாவுச்சத்து துகள்களாக மாறி இரத்தத்தில் கலக்கும். உடனே இன்சுலின் சுரந்து செல்களுக்கு தேவையான மாவுச் சத்தை செல்களுக்கு உள்ளே செலுத்தும் சாதாரண நிலையில் இரத்தத்தில், மாவுச் சத்தின் அளவு 80 மிகி முதல் 120 மிலி வரை இருக்கும். இந்த அளவை விட குளுகோஸ் (மாவுச்சத்து) அளவு குறைந்-தால், உடன் கல்லீரலிலிருந்து கிளைகோஜன் சிதைவு ஏற்பட்டு குளுகோஸாகி மாறி இரத்தத்தில் கலந்து செல்களுக்கு செல்லும். நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் அல்லது முழுமை-யாக இன்சுலின் சுரக்காமலே போகும். இதுபோன்ற நிலைகளில் மாவுச் சத்து செல்களில் ஊடுருவாமல் இரத்தத்-திலேயே தேங்கத் துவங்கும். 120 மிக அளவி-லிருந்து இரத்த குளுகோஸ் அளவு அதிகமாகும். 180 மி.கி. அளவு வரை இரத்தம் குளுகோஸைத் தாங்கும். அதற்கு மேல் போனால் சிறுநீரகங்களில் குளுகோஸ் வெளித்-தள்ளப்படும். அதிக அளவு குளுகோஸை வெளியேற்றுவதற்கு நீர் அதிகம் தேவை. சாதாரணமாக உடலில் உள்ள நீர் முழுவதும் சிறுநீரகங்களுக்கு வந்து சுத்தகரிக்கப்பட்டு, பெரும்பாலான நீர் மீண்டும் உறிஞ்சப்பட்டு விடும். ஆனால் நீரிழிவு நோயில் அதிக சர்க்கரை (குளுகோஸ்)யை கரைக்க, அதிக அளவு நீர் தேவைப்படுவதால், நீர் மீண்டும் உறிஞ்சப்படாத நிலை உண்டாகும். அதிக அளவு சர்க்கரை நீரோடு கலந்து வெளியேறு-வதால் அதிகளவு சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்நிலை காரணமாக அதிகம் தாகம் எடுக்கும். அதேபோல் இரத்தத்தில் இன்சுலின் இல்லாததால், மாவுச்சத்து செல்-களுக்கு செல்ல முடியாது. இதனால் செல்லின் செயல்பாடுகள் தடை-படும். உடனே செல்கள் நரம்புகளைத் தூண்டி, மாவுச் சத்தை கேட்கும். நரம்புகளோ, மூளையைத் தூண்டி, பசி எடுக்க வைக்கும் அதனால் அதிக அளவு பசி எடுக்கும். நாளா-வட்டத்தில் அதிக அளவு தேக்கமாகும் சர்க்கரை இரத்தக் குழாய்களின் உட்சுவர்களில் படியும். அதனால் இரத்தக் குழாய்களில் சுருங்கி விரியும் தன்மை தடைபடும். நாளடைவில் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும். இதயத் தமனியில் ஏற்படும் அடைப்பு மாரடைப்பு உண்டாக்கும். மூளைக்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். சிறுநீரகங்களில் உள்ள தந்துகிகள் மிகவும் நுண்ணியவை அங்கு ஏற்படும் அடைப்-புக்கள் சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்யும். இதுபோன்ற பல முக்கிய அவயங்களும் பாதிப்படையும்.

- மருத்துவம் தொடரும்