தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
புதிய தலைமுறை
அண்ணா அம்பேத்கர்
பிறமொழிகளில் பெரியார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
பகுத்தறிவு
மருத்துவம்
தமிழர்கள்
நூல் அறிமுகம்
ஹாலிவுட் கலை - 17
அணுஅணுவாய் - 7
பதிலடி
உலகப் பார்வை
பளீர்... பளீர்...

 

 

அணுஅணுவாய் - 7

அணுகுண்டுக்குத் தப்பிய ஜெர்மனி

- சமா. இளவரசன்

உலகில் அதுவரை யாரும் கண்டிராத ஓர் அழிவு சக்தியை உருவாக்கும் பணி மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. ஜெர்மானிய அரசு, அதன் விஞ்ஞானிகளைக் கொண்டு அணு குண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது என்று உலகெங்கும் அச்சம் நிலவியது. அமெரிக்க விஞ்ஞானிகளின் தொடர்பு வற்புறுத்தலால் அமெரிக்காவும் அணு குண்டு தயாரிப்பில் மும்மரம் காட்டத் தொடங்கியது. (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்). இதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் மன்ஹாட்டன் திட்டம்.
முத்துத் துறைமுகம் (Úarl Harbour) மீது ஜப்பான் நடத்திய தாக்குதலுக்கு முதல் நாள் தான் அணுகுண்டு தயாரிப்பிற்கான திட்டம் தொடங்கப்பட்டது. முத்துத் துறைமுகம் தாக்குதல் அதனை இன்னும் வேகப்படுத்தியது. 1942 ஜூன் மாதம் இத்திட்டத்திற்கு மன்ஹாட்டன் திட்டம் எனப் பெயரிடப்பட்டது. ஜெர்மனி தயாரிப்-பதற்கு நாமும் தயாரித்து விடவேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறி இத்திட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்குவதற்கு முன்பே 1945 மே 7ஆம் நாள் ஜெர்மனி தன் சரணாகதியை அறிவித்து-விட்டது. ரஷ்யாவின் வெற்றியைப் பொறுக்-காமலும் தான் உயிருடன் பிடிபடாமல் இருக்கவும் தற்கொலை செய்து கொண்டான் ஹிட்லர். அதே ஆண்டு பிப்ரவரியில் நடந்த யால்டா மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி ஜெர்மனி முறியடிக்கப்பட்டபின் உடனடியாக ஜப்பானுடனான போரில் கலந்து கொள்ள ரஷ்யா தயாரானது.
ரஷ்யா பெற்ற இந்த வெற்றியை அனுபவிக்க அதுவரை அமெரிக்க அதிபராக இருந்து போரை நடத்திக் கொண்டிருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்டுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஜெர்மனின் சரணாகதிக்கு இரண்டு வாரங்-களுக்கு முன்பே 1945 ஏப்ரல் 12இல் திடீரென இறந்து போனார் ரூஸ்வெல்ட். அவரைத் தொடர்ந்து அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவராக இருந்த எஸ்.ட்ரூமென்னுக்கு அமெரிக்காவின்------குடியரசுத் தலை-வராகும் வாய்ப்புக் கிடைத்தது.
அதுவரை துணைக் குடியரசுத் தலைவராக இருந்தாலும் அதிபர் ரூஸ்வெட்டுக்கு வரும் தகவல்களும் முடிவெடுக்குமுன் அவர் விவாதிக்கும் விஷயங்களும், அவரது நேரடி மேற்பார்வையில் உருவான திட்டங்களும் பற்றி முழுமையான ட்ரூமென்னுக்கு தெரிய வாய்ப்-பில்லை. எனவே அதிபர் பொறுப்பேற்றதும் முதல்வாரம் முழுக்க இத்தகைய விவரங்களை அறிவதிலேயே கழிந்தது.
போர்ச் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சனும் தளபதி லெஸ்லி க்ரூவ்ஸூம் புதிய அதிபர் ட்ரூமென்னைச் சந்தித்தனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த இச்சந்திப்பது போரின் அன்றைய நிலை, மன்ஹாட்டன் திட்டம், அணுகுண்டு தயாரிப்பின் இறுதிக் கட்டம் என்று அனைத்தும் விளக்கப்பட்டது. அணுகி அணுகிக் கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெற்றார் ட்ரூமென் எதிர் வரப்போகும் மாபெரும் அறிவியல் வளர்ச்சியில் ராணு-வத்தில் அணுவின் பங்கு அணுகுண்டுத் தயாரிப்-பின் அவசியம் மற்றும் அதற்காக செய்யப்பட்ட செலவு என்ன என்பதை ட்ரூமென்னு அழுத்த-மாகப் புரிய வைத்தனர்.
ஆனால் யாரைச் சொல்லி அணு குண்டு தயாரிக்கத் தொடங்கினார்களோ, அந்த ஜெர்மனி ரஷ்யாவிடம் வீழ்ந்துவிட, தயாரித்த குண்டை யார் தலையில் போடுவது என்ற கேள்வி பெரிதாய் எழுந்தது. இன்று அணு-குண்டு வைத்திருக்கிறார். உயிரியல் ஆயுதம் வைத்திருக்கிறார் என்று வாய்க்கு வந்தபடி புழுகி ஈராக்கின் மேல் யுத்தம் தொடுத்து, கடைசியில் சதாம் உசேனின் கடை வாய்ப் பல்லிலாவது இருக்கிறதா என்று தேடி அங்கும் கிடைக்காமல் போகவே, அல்கொய்தாவுக்குத் தொடர்பு என்று உளறி, பின்னர் ஜனநாய-கத்தை நிலைநாட்ட இந்தப் போர் என்-றெல்லாம் சமாளிபிகேஷன் ஆப் அமெரிக்கா செய்வததைப்போல அன்றும் ஏதாவதொரு சமாளிபிகேஷன் தேவைப்பட்டது.

இன்னும் இருக்கும் ஒரே எதிரி யார்? ஜப்பான் மட்டும்தான். அதன்மேல் அணு-குண்டு போடுவதை மக்கள் உள்ளங்களின் நியாயப்படுத்த இருக்கவே இருக்கிறது முத்துத் துறைமுகம் தாக்குதல். மற்றபடி தன்னைச் சுற்றி இருக்கும் அரசியல் நெருக்குதல்களுக்கு இதுவே தீர்வு என்றுணர்ந்தார் ட்ரூமென்.
ஜப்பானைப் பழிவாங்க ஏற்கனவே இரு-முறை டோக்கியோ மீது குண்டு வீசி 1,80,000 பேரை பரமண்டலத்திலிருக்கும் பிதாவைத் தரிசிக்க அனுப்பி வைத்தாயிற்று- வேறு வழி-யில்லை... கடைசி வரை ஜப்பான் போராடும். எனவே அவர்களது தொடர் போரைத் தடுக்க, உலகில் ஜனநாயகத்தைக் காக்க இப்படி ஒரு தாக்குதல் அவசியம் என்று ஒரு அறிக்கை தந்து விட்டால் போகிறது.
1944ன் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட 509ஆவது ஒருங்கிணைந்த நடவடிக்கைக்குழு ஏற்கெனவே தனது பயிற்சியைத் தொடங்கி-விட்டது. 5500 பவுண்டு எடையுள்ள ஒரே ஒரு குண்டைத் தங்களது பி-29 விமானத்திலிருந்து போடுவதற்கு தொடர்ந்து பலமுறை பயிற்சி-யெடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்குள் ஒரு சந்தேகம் தோன்றியிருந்தது. ஏதோ ஒன்று பெரிதாக நடக்க விருக்கிறது. அதற்குத்தான் இந்தப் பயிற்சி என்ற அளவில் பால் டிப்பெட்சும் அவரது குழுவினரும் தெரிந்து வைத்திருந்தார்கள்.
இந்நிலையில்தான் ஜெர்மனி சரணடைந்தது. எனவே தங்களது அடுத்த தாக்குதல் இலக்கு ஜப்பான் தான் என்பதால் இந்தக் குழுவினரும் டினியன் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். அங்-கிருந்தபடி தான் ஏற்கனவே மற்ற விமானங்கள் ஜப்பான்மீது குண்டு போட்டுக் கொண்டி-ருந்தன.
மே மாதத் தொடக்கத்தில் அதிபர் ட்ரூ-மென்னின் அனுமதியுடன் ஸ்டிம்சன் அணு ஆயுதத்தை முறையாகப் பயன்படுத்துவதற்கும், போருக்குப் பிந்தைய காலங்களில் அணுக் கொள்கையில் அமெரிக்காவின் கரம் வலுப்-படும்படியான தீர்வுகளை எடுக்கவும் இடைக்-கால அறிவுறுத்தல் குழு ஒன்றை அமைத்து, அதன் தலைவராக அவரே பொறுப்பேற்றுக் கொண்டார். வேன்னவர் புஷ், ஜேம்ஸ் கோனன்ட், கார்ல் டி.காம்ப்டன், ரால்ப் ஏ.பார்ட், உள்துறைத் துணைச் செயலாளர் வில்லியம் எல்.க்லேடன், ஜேம்ஸ் பைர்னஸ் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றிருந்த உயர் அலுவலர்கள்.
மேலும் அக்குழுவின் அறிவியல் பிரிவில் ராபர்ட் நபர் ஹெயமர், என்ரிகோ பெர்மி, ஆர்தர் காம்ப்டன், எர்னஸ்ட் லாரன்ஸ் ஆகி-யோர் இடம் பெற்றிருந்தனர்.
மே 31ஆம் தேதியும் ஜூம் முதல் தேதியும் இக்குழு கூடியது. இரண்டாம் நாள் கூட்டத்தில் டூபான்ட் நிறுவனத்தின் சார்பில் வால்டர் எஸ்.கார்பென்டர், டென்னளி ஈஸ்ட்மென் நிறுவனத்தின் ஜேம்ஸ் சி.ஒயிட், வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் ஜார்ஜ் ஹெச் புக்கர், யூனியன் கார்பைடு சார்பில் (ஆம் அதே போபால் புகழ் யூனியன் காரிபைடுதான்) ஜேம்ஸ் ஏ. ரெப்பெர்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ராணுவ ரகசியக் கூட்டத்தில் வியாபார நிறுவனங்களுக்கு என்ன வேலை என்று ஆச்சரியப்பட வேண்டாம். அமெரிக்காவின் எந்த நடவடிக்கையும், வியாபார நோக்கில்-லாமல், வியாபார நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் இருக்காது. குறிப்பாக ராணுவ நடவடிக்கைகள். மேற்கண்ட நிறுவனங்கள்-தான் மன்ஹாட்டன் திட்டத்தின் வியாபாரம் பிரிவில் பொறுப்பானவை.
சரி, இப்படிக் கூடிய மே 31ஆம் தேதி எர்னஸ்ட் லாரன்ஸ் ஒரு யோசனையை முன்வைத்தார். அணு ஆயுதத்தின் விளைவை ஜப்பானுக்கு விளக்கும் வகையில் ஒரு மாதிரி குண்டு வெடிப்பை நிகழ்த்திக் காட்டி, ஜப்பானை மிரள வைத்து, மிரட்டி பணிய வைப்பது... அதாவது சரணடைய வைப்பது என்று அவர் திட்டத்தை விவரித்தார். ஆனால் இதை குழு ஒப்புக் கொள்ளவில்லை. மிக முக்கியமாக இந்த ஆயுதம் பயன்படுத்தப்-படுவதால் உருவாகக் கூடிய அதிர்ச்சி விளைவை இப்படி முன்மாதிரி செய்து காட்டி மிரட்டுகிற திட்டம் கெடுத்துவிடும். எனவே நேரடியாக ஜப்பான் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது, அதுவரை அணு ஆயுதப் பற்றிய செய்திகளை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது என்று ஜூன் 6ஆம் நாள் அதிபர் ட்ரூமென்னுக்கு இக்குழு பரிந்துரை செய்தது. திடுமென ஒருநாள் பேரழிவை உண்டாக்கினால் தான் சுவாரசியமாக இருக்கும் என்பதை ட்ரூமென்னும் ஒப்புக் கொண்டார். அதற்கிடையில் உலக நாடுகளோடு ஏதேனும் சந்திப்புகள் நடைபெற்றதால் அமெரிக்கா, ஜப்பான் போரில் புது விதமான குண்டு ஒன்றைப் பயன்படுத்தவிருக்கிறது என்றளவில் தகவலைத் தருவது என முடிவானது.
ஆனால் இந்த முடிவினை மன்ஹாட்டன் திட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து அறிவிய-லாளர்களும் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே இந்த இரண்டாம் கருத்து பற்றி ஆய்வு செய்ய விரும்பிய ஆர்தர் காம்ப்டன் ஆய்வுக் குழுவின-ருக்குள் ஒரு குழு அமைத்தார் ஜேம்ஸ் பிரான்க் தலைமையில் க்ளென் சீபோர்க் மற்றும் லியோ ஸ்சிலார்டு ஆகியோர் அக்குழுவில் இருந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.
அணு ஆயுதத்தை நேரடியாக ஜப்பான் மீது பயன்படுத்துவதை எதிர்த்த அந்த அறிக்கையில், அப்படிச் செய்வது தொடரும் காலத்தில் அணு ஆயுதப் போட்டியை உருவாக்கும் என்று வாதிட்டனர். எனவே, மாதிரி அணு வெடிப்பை நிகழ்த்தி ஜப்பானைப் பணிய வைக்கலாம் என்று கூறினர். ஆனால் அதை அறிவியல் குழுவின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த ராபர்ட் ஓபன் ஹய்மர் உள்ளிட்ட குழுவினர் ஒப்புக் கொள்ளவில்லை.
எந்த மாதிரி வெடிப்பையும் காட்டி மிரட்டாமல், நேரடியாக ஜப்பான் மீது குண்டு வீசுவது என்று முடிவு செய்யப்பட்டு எங்-கெங்கு குண்டு போடுவது என்று தீர்மானிக்க மீண்டும் கூடியது இடைக்காலக் குழு. அது இடங்களை எப்படித் தேர்வு செய்தது என்பதை நாம் முந்தைய அத்தியாயங்களிலேயே பார்த்தோம்.
பிறகு ஏன் அணுகுண்டுச் சோதனை நடத்தப்பட்டது டிரினிடி வேதனை என்னும் பெயரில்...

(அடுத்த இதழில்)