தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
புதிய தலைமுறை
அண்ணா அம்பேத்கர்
பிறமொழிகளில் பெரியார்
கவிதை
சிறுகதை
இவர்தான் பெரியார்
பகுத்தறிவு
மருத்துவம்
தமிழர்கள்
நூல் அறிமுகம்
ஹாலிவுட் கலை - 17
அணுஅணுவாய் - 7
பதிலடி
உலகப் பார்வை
பளீர்... பளீர்...

 

 

பதிலடி

அதென்ன காலம் காலமாய் வந்த மரபு?

- சமா. இளவரசன்

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்-பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 )
இது தினமணியில் வந்த செய்தி.
அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்-பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்-கூடாது." என்று.
இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது;
இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது
இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்-தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒருவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் தலைவருமான சரத்-குமார் அவர்கள்.
இந்தக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் தலையிடக்கூடாது என்பதை பற்றியெல்லாம் பின்னால் பேசுவோம்.
அதற்கு முன்னால் "காலகாலமாய் கடைப்-பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே...." இதைப்பற்றி யோசிப்போமா?
அதென்ன 'காலம்காலமாய் கடைபிடிக்கப்-பட்டு வந்த மரபுகள்?'
அவர் எந்த ஜாதியை நம்பி 'சமத்துவக்' கட்சியை தொடங்கியுள்ளாரோ, அதையே கருத்தில் கொள்வோமா?
"பறையனைத் தொட்டால் தீட்டு ; சாணானைக் கண்டாலே தீட்டு" என்ற சொலவடை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? காலம்காலமாய் கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகளில் ஒன்றுதான் இது.
பனையேறும் தொழில் செய்யும் எங்கள் தமிழனை சாணான் (நாடார்) என்று அடையாளப்படுத்தி, அவர்களைப் பார்ப்பது கூட தீட்டு என்று பார்ப்பனர்கள் வரையறுத்து வைத்திருந்தார்கள். பார்ப்பான் நடந்து வரும்-போது, பனைமரத்தின் உச்சியில் இருக்கும் தொழிலாளி, இரண்டு கைகளையும் தட்டி, "சாமி நான் மரத்தில ஏறியிருக்கேன்" என்று கூவ வேண்டுமாம்; அப்போதுதான் கீழே நடந்துபோகும் பார்ப்பான் மேலே பார்க்க மாட்டானாம். அவனது நிழலையொட்டி நடக்க மாட்டானாம்.
இவன் பார்க்கக் கூடாது என்பதற்காக மரத்தில் ஏறியிருப்பவன் கைகளை விட்டுவிட்டு கைதட்டி சொல்ல வேண்டும் என்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?
இதெல்லாம் மரபுவழிப்பட்டது தான் சரத்குமார் அவர்களே! தொடர்ந்திருக்க வேண்டுமா இந்த முறை?
இதோ "இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா" என்ற நூலிலிருந்து சில வரலாற்றுச் செய்திகள் உங்களுக்கு இவையெல்லாம் தெரியுமா என்று பாருங்கள்.
* நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று 1829 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசாங்கமே உத்திரவிட்டது என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
* 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், நகைஅணியவே, மாட்டிடமிருந்து பால் கறக்கவே, ரவிக்கை அணியவே , இடுப்பில் தண்ணீர்க்-குடம் எடுத்துச்செல்லவே பார்ப்-பனர்-கள் தடை போட்டிருந்தார்கள் என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
* சென்ற நூற்றாண்டில் நாகர்கோயில் பகுதியில் குறிப்பிட்ட சில சாதிப்பெண்கள், மார்பை மூடி, ரவிக்கைப் போடக்கூடாது என்ற முறை இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
* 1895 ஆம் ஆண்டுகளில்- நெல்லை மாவட்டம் கழுகுமலை கிராமப்பகுதிகளில் நாடார் சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போக தடை போடப்பட்டது என்பதும், இதற்குப் பதிலளிக்கும் வகையில் அப்பகுதி நாடார்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ-மதத்தில் சேர்ந்துவிட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
* 1874 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபடவந்த நாடார்களை- பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு - அது தொடர்பாக நடந்த வழக்கில் - நாடார்கள் கோயிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்-பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
* வேலை கேட்டு மனுச் செய்த ஒரு நாடார் சமூகத்தைச் சார்ந்த டாக்டருக்கு தென்னங்-கன்றுகளை வாங்கிக் கொடுத்து, குலத்-தொழிலை செய்யச் சொன்னவர், திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சி.பி ராமசாமி அய்யர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
* திருத்தங்கல் பகுதியில் உள்ள நாடார் சமூகத்தினர் கோயிலுக்குள் நுழையக் கூடாது தேங்காயும் உடைக்கக் கூடாது என்று 1878ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் தீர்ப்பு வழங்கினார் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
இவையெல்லாம் மரபு வழி வழக்கம் என்றும் ஆகமம், கர்ம பலன் என்றும் பல பெயர்களைச் சொல்லி வழக்கத்தில் இருந்ததே தெரியுமா சரத்குமார் உங்களுக்கு?
* திருச்செந்தூர் முருகன் கோவில் வாசலில், பஞ்சமர்களும், சாணார்களும் உள்ளேநுழையக்-கூடாது என்று கடந்த 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரபு இருந்ததே தெரியுமா சரத்குமார்?
இந்த மரபுகளையெல்லாம் கண்டபிறகும் பொறுமை காப்பீர்களா? இதுதான் நீங்கள் சமத்துவம் காக்கும் லட்சணமா? இனி விளம்-பரத்துக்காகக் கூட காமராஜர் படத்தையோ, தந்தை பெரியார் படத்தையோ போடாதீர்கள்.
கருப்பு எம்.ஜி.ஆர் என்று ஒருவர் விளம்பரம் செய்துகொள்வதைப் போல, தொப்பியில்லாத எம்.ஜி.ஆர் என்று வேண்டுமானால் விளம்பரம் செய்து கொள்ளுங்கள். ஆனால் அதுவும் மாபெரும் தவறு. ஏனெனில் எம்.ஜி.ஆர் தான் மகராஜன் குழு அமைத்து அனைத்து சாதியினர் அர்ச்சகர் உரிமை பற்றி ஆய்வு செய்யச் செய்தவர். மரபு வழி எழுத்துகள் என்றிருந்தவற்றை மாற்றி பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளை அரசு முறைப்-படுத்தியவர்.
உடன்கட்டை ஏறுதல், விதவை முறை, பொட்டுக் கட்டும் முறை, தோளில் சீலை அணியக்கூடாது என்னும் முறை எல்லாமே மரபு, மதம், ஆச்சாரம், சடங்கு, சம்பிரதாயம், சாங்கியம் என்னும் பெயரில் நடந்து-கொண்டிருந்தவை தான் சரத்குமார்.
அப்புறம் ஏதோ சொல்லியிருக்கிறீர்களே, என்ன மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பற்றி ஆகமங்கள் சொல்லி இருக்கின்றன என்று!
தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினால் ஓடிவிடுவான் என்றால், தமிழில் வேண்டுதலை தெரிவித்தால் கடவுளுக்குக் கேட்காதென்றால்... அவன் இருந்தென்ன? இல்லாமலிருந்தென்ன?
ஹீப்ரூ மொழியில் பேசிய இயேசுவுக்கு இங்கிருக்கும் தமிழ் புரிகிறது என்று 'பரலோ-கத்தில் இருக்கும் பரமபிதாவை' பூலோகத்தில் இருந்த படி மைக்செட் போட்டு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நக்கீரனோடு சங்கத்தில் சத்தம் போட்டவர், தமிழ்க் கடவுள் முருகனை ஈன்றவர், தென்னாடுடைய சிவன் என்றெல்லாம் கூப்பாடு போடுகிறீர்களே, அந்த சிவனுக்கு, தில்லை நடராஜனுக்கு தமிழில் பாடினால் புரியாது... தீட்டு என்றால்... அந்த சுடுகாட்டு வாசியை சுடுகாட்டிலேயே புதைத்துவிடலாமே?
கோயில் வாசலில் கூட அல்ல, கோயில் இருக்கும் தெருக்களில் கூட அனுமதிக்கப்-படாத எங்கள் தமிழன், கருப்புத் தோலோடு இன்னும் சில மாதங்களில், தமிழகத்தின் பெரும் கோயில்களின் கர்ப்பகிரகங்களில் மணி-யாட்டப் போகிறானே.. அதையும் மரபுவழிக்கு எதிரானது என்று எதிர்க்கப் போகிறீர்களா சமத்துவக் கட்சியின் ஹீரோவே?
உங்களுக்குத் தெரியாத மேலே படித்த அடிமை வரலாற்றை உடைத்தெறிந்து, அத்தனையையும் புரட்டிப்போட்டு, இன்று உங்கள் பின்னால் இருப்பதாக நீங்கள் கற்பனை செய்துகொண்டிருக்கும் நாடார் சமூகம் உள்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வெற்றி கண்டு, சட்டமியற்றி, உங்கள் வழிபாட்டு உரிமையை மீட்டு, சக மனிதர்-களாக கோயிலுக்குள்ளும் நடமாடவிட்டிருப்ப-தெல்லாம் கடவுள் மறுப்பு பேசும் இயக்கத்-தினர் தான்.. கடவுள் மறுப்பாளர்கள் தான்!
சரத்குமாருக்குப் போய் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதா என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒன்று.
"இது சரத்குமாருக்கு மட்டுமல்ல; நம்மோடு சிங்கங்களாய்ப் பிறந்து இங்கு குரங்குகளாய்க் கூனி நிற்கும் அத்தனை ஈனர்களுக்கும், மான-மற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். கூறுவ-தென்ன... முகத்தில் அறைகிறேன் உண்மையை...." (அட, குதர்க்கம் பேசுற எல்லா அரை வேக்காடுகளுக்கும் தான்)