மலிவான வாதம்
 |
இடஒதுக்கீடு என்றாலே பார்ப்பனர்களைவிட அதிகமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வக்கீல் விஜயன் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துக் கூறும்போது, (ஜூனியர் விகடன் 16.4.2008).
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு, முன்பு சாதிகள் இருந்திருக்கலாம். ஆனால், சாதியின் அடிப்படையில் மக்கள் வேறுபடக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் தந்து இயற்றப்பட்டதுதான் அரசியல மைப்புச் சட்டம். அதற்குப் பிறகும் நீதிமன்றங்களில் சாதிகளை உறுதி செய்வது போல வரும் தீர்ப்புகள், இந்தியாவில் சாதிகள் இன்னும் அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரசெய்யும் அவலத்துக்கு வழி வகுத்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
சாதி ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் நமது கருத்து. ஆனால் விஜகடன் கூறுவது போல சாதியின் அடிப்படையில் மக்கள் வேறுபடக்கூடாது என்பதற்கு முக்கியத்துவம் தந்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படவில்லை. இந்துலா வலியுறுத்துகிறது.
சட்டப்படி பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்னும் சூத்திரரே என்று ஆக்கும் வருணதரும இந்துச் சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் காத்து நிற்கிறது என்பது 372ஆவது சரத்து மூலம் (Article - 372) சட்ட சம்மதம் பெற்றுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இழி பிறவி மக்களாகத்தான் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த மண்ணில் வாழ்கிறார்கள். விஜடனுக்கு உள்ளபடியே சாதி மீது வெறுப்பு இருந்தால் சட்டத்தில் சாதியை பிரிவை நீக்குவதற்கு குரல் கொடுக்கலாம்; போராடலாம்; வழக்குப் போடலாம்.
சமூக ரீதியாக, இந்து மத ரீதியாக, சட்ட ரீதியாக ஜாதியை வைத்துக்கொண்டு ஜசாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பது எவ்வளவு பெரிய மோசடி. இந்தக் கருத்து இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் மலிவான வாதமே தவிர வேறல்ல. இந்த தீர்ப்பு குறித்து கருத்துக் கூறிய பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், (நக்கீரன், 16.4.2008) பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இந்த பொருளாதார அளவுகோல், தாழ்த்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் பின்பற்றப்பட்டால் வரவேற்கத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று சிண்டு முடிந்திருக்கிறார்.
கிரீமிலேயர் என்பது பிற்படுத்தப்பட்டவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி ஆகும். அது கூடாது என்பது நமது வாதம். ஆனால் பார்ப்பான் புத்தி எப்படி உள்ளது பார்த்தீர்களா? தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரீமிலேயர் கொண்டு வரவேண்டுமாம். இதற்குப் பெயர் தான் பார்ப்பனீயம். தனக்குக் கீழே பல படி நிலைகளை ஏற்படுத்தி, நமக்குள்ள வேற்றுமையை உருவாக்கிட பார்ப்பனீயம், இந்தக் கருத்தின் மூலம் தாழ்த்தப்பட்டவர் களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மேலும் இடையே பிளவை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
- பெரியாரிடி
வழக்கு விசாரணையின்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 1.1.2005 தேதி நிலவரப்படி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 5.24 சதவிகித இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலை பார்க்கின்றனர். இது மொத்த சதவிகிதத்தில் மிகவும் குறைவு. இதில் பெரும்பாலும் துப்புரவுத் தொழிலாளர்களே உள்ளனர். இதற்குக் காரணம், கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாததுதான். ஏற்கெனவே, மண்டல் கமிஷன் அறிக்கையில் 27 சதவிகித வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே, இன்னும் நிரப்பப்படவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம். கல்வி இடஒதுக்கீட்டின் மூலம் பிற்பட்ட மக்கள் உயர் பதவிகளுக்கு வர வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையிலாவது சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருப்பதைச் சொல்லி வாதிப்பட்டது.
- குமுதம் ரிப்போட்டர் 17.4.2008
|