இந்த ஆண்டே அமலாகும்
அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தீர்ப்பால் உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயனடைவார்கள்.
உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இனி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் எந்த முட்டுக் கட்டையும் இல்லை.
- மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்
|