தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
பொருளாதார அளவுகோல்
மலிவான வாதம்
இந்த ஆண்டே அமலாகும்
இட ஒதுக்கீடு தேவையே!
இந்துத்துவா
இவர்தான் பெரியார்
உலகப் பகுத்தறிவாளர்கள்
கவிதை
சிறுகதை
உண(ர்)வகம்
பகுத்தறிவு
இலக்கியம்
சிறந்த நூலிலிருந்து
அறிவியலார்
நூல் அறிமுகம்
சோழர் காலத்தில் பரவிய
அணுஅணுவாய்
பளீர்... பளீர்...

 

 

இட ஒதுக்கீடு தேவையே!

தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் முன் னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முக்கிய தீர்ப்பை எழுதினார்; மற்ற நீதிபதிகளும் தனித்தனி தீர்ப்பு எழுதினார்கள். ஆனாலும் அனைவரும் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லும் என்றே தீர்ப்பளித்துள்ளனர்.
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தனது தீர்ப் பில் கூறி இருப்பதாவது: இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கான 93 ஆவது திருத்தம், அரசு நிர்வகிக்கும் கல்வி நிறுவனங்-கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கட்டமைப்பை மீறுவதாக ஆகாது. அரசமைப்பு சட்டத்தின் 15(5) ஆவது பிரிவு அரசமைப்புச்சட்டத் தின்படி செல்லத்தக்கதே. அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 15 (4) மற்றும் 15 (5) ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை அல்ல
அரசமைப்புச் சட்டப் பிரிவு 15(5)லிருந்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு தவிர்ப்பு அளிக்கும் மற்ற நீதி பதிகளின் முடிவை தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் ஒரு தனிப்பட்ட பிரிவைச் சேர்ந்தவை; இதர அரசமைப்புச் சட்டப் பிரிவுகளால் அவற்றின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்ப-தால் அரசமைப்பு சட்டப் பிரிவு 15 (5) அரசமைப்புச் சட்டப் பிரிவு14 அய் மீறுவ தாகக் கருதமுடியாது என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களை சமூக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறச் செய்ய, சமத்துவம் என்ற அடிப்படைத் தத்துவத்தை உருவாக்கிக் காத்து வளர்க்கப்பயன்படும் பல கருவிகளில் இட ஒதுக் கீடும் ஒன்று. சமூகத்தில் சமத்துவம் நிலவுவதற்கு இடையூறாக இருக்கும் முட்டுக்கட்டைகளைக் களைய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பல் வேறுபட்ட சமூகங்கள் சுதந்திரத்தை நுகரவும், அரசமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ள பயன்களைப் பகிர்ந்து கொள்ளவும் இயன்ற படி செய்வதும் அரசின் கடமையாகும்.
கல்வியைப் பொறுத்தவரை, அறிவு, தகவல், கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதையும், இந் தியாவின் மிகுந்த வேறுபாடுகள் கொண்ட பிரிவினரிடையே கல்விகற்பதை ஊக்குவித்து வளர்ப்பதும் பாராட் டப்பட வேண்டிய-வையாகும். குழப்பங்கள் மற்றும் பதற்றம் ஏற்படுத்தும் பிரச்சினைகள் பல நிலவும் நவீன உலகினைப் புரிந்து கொண்டு செயல்பட கல்வி மிகவும் இன்றியாமையாததாகும். அத்தகைய கல்வி வாய்ப்பும் வசதியும் படைத்த ஒரு சிலரின் பயன்பாட்டுக் கானதாக மட்டுமே ஏகபோக உரிமையாக நீடிக்க இயலாது. இட ஒதுக்கீடு இல்லையேல், பல்கலைக் கழகக் கல்வி பெற-வேண்டும் என்ற தங்களின் கனவு என்றுமே நிறைவேற இயலாத நிலையில் உள்ளவர் களுக்கு இந்தஇட ஒதுக்கீடு கூடுதல் பயனை அளிப்பதாகும். இட ஒதுக்கீடு என்னும் இந்த கூடுதல் சலுகை தேவை யானதே
இட ஒதுக்கீட்டுக்கு எந்த காலவரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை என்ற காரணத் துக்காக இந்தச் சட்டத்தைச் செல்லாது என்று கூறிவிட முடியாது. “27 விழுக்காடு அளவுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானதல்ல. இந்த 27 விழுக் காடு அளவை நிர்ணயிக்கும் போது நாடாளு-மன்றம் தொடர் புடைய அனைத்து சூழ்நிலை களையும் கருத்தில் கொண்டே செயல்-பட்டிருக்கும் என்று கருதவேண்டும்.”