தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
பொருளாதார அளவுகோல்
மலிவான வாதம்
இந்த ஆண்டே அமலாகும்
இட ஒதுக்கீடு தேவையே!
இந்துத்துவா
இவர்தான் பெரியார்
உலகப் பகுத்தறிவாளர்கள்
கவிதை
சிறுகதை
உண(ர்)வகம்
பகுத்தறிவு
இலக்கியம்
சிறந்த நூலிலிருந்து
அறிவியலார்
நூல் அறிமுகம்
சோழர் காலத்தில் பரவிய
அணுஅணுவாய்
பளீர்... பளீர்...

 

 

இவர்தான் பெரியார்

வெற்றி பெற்று விட்டேன்

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.
இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும்.
ஆகவே, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்.

- தந்தை பெரியார், குடிஅரசு, 11.10.1931