தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
பொருளாதார அளவுகோல்
மலிவான வாதம்
இந்த ஆண்டே அமலாகும்
இட ஒதுக்கீடு தேவையே!
இந்துத்துவா
இவர்தான் பெரியார்
உலகப் பகுத்தறிவாளர்கள்
கவிதை
சிறுகதை
உண(ர்)வகம்
பகுத்தறிவு
இலக்கியம்
சிறந்த நூலிலிருந்து
அறிவியலார்
நூல் அறிமுகம்
சோழர் காலத்தில் பரவிய
அணுஅணுவாய்
பளீர்... பளீர்...

 

 

சிறுகதை

வந்தது வந்தாள்

- சிவகாசி மணியம்

இயக்குநர் இனியன் அலைபேசியை காதில் அணைத்தப்படி குறுக்கும் நெடுக்குமாக பரபரப்புடன் நடமாடிக் கொண்டிருந்தார். உதவி இயக்குநர்களிடமும், மற்றவர்களிடமும் எரிந்து விழுவதிலிருந்து அவர் யாரையோ தேடுகிறார், எதையோ எதிர் பார்க்கிறார் என்று மட்டும் புரிந்தது.
அப்போது அங்கே வந்த ஒருவர், ``சார் அவங்க வீடு பூட்டியிருக்கு. வாட்ச் மேன் கிட்டேயும், அக்கம் பக்கத்திலேயும் விசாரிச்சேன், எல்லாருமே தெரியாதுனு சொல்றாங்க என்றார்.
``ரீலிசிக்கு நாள் குறிச்சி விளம்பரமும் கொடுத்தாச்சு, விநியோகஸ்தர்களுக்கு என்ன பதில் சொல்றதுதுனு தயாரிப்பாளர் வேறு கேட்டுக்கிட்டிருக்கார் என்று இயக்குநர் தனக்குள் முணுமுணுப்பது அருகிலிருந்தவர்களுக்கும் கேட்டது.
``படம் முடிஞ்சு போச்சுனு சொல்லிவிட்டோம். அதனால் ஹீரோயின் எங்கேயாவது டூர் போயிருப்பாங்கூ என்றார் ஓர் உதவி.
``ஆமாய்யா, படம் முடிஞ்சுதான் போச்சு. படத்தைப் போட்டுப் பார்த்தப்ப ஒரே ஒரு சீன் சேர்த்திட்டா இன்னும் நல்லாயிருக்கும்னு நான் சொல்லித் தொலைச்சிட்டேன், கண்டிப்பாக சேர்த்திடுங்கனு தயாரிப்-பாளரும் சொல்லிவிட்டார். ஒருநாள் படப்பிடிப்புதான்னு நினைச்சு சொன்-னது தப்பாபோச்சு. டூப் போட்டு எடுக்கிற மாதிரியும் காட்சி இல்லே. செல்போன்ல சிக்கவே மாட்டேங்-கிறார்களே. சாத்தி வச்சிருக்காங்க. இப்பவே சூட் பண்ணி ஆகணும். எங்கே போய் தொலைச்சாங்களோ என்று சிவகாசி பட்டாசாய் வெடித்தார் இனியன். அப்போது அவரது அலைபேசி சிணுங்கியது வெறுத்துப்போய் காதில் வைத்தபோது எதிர் முனையில் பெண் குரல்!
``சார் நான்தான் தேன்மொழி பேசுறேன்...
``காதுல தேன் பாய்ஞ்-சது மாதிரி இருக்கு. எங்கேயிருந்து பேசுறீங்க! ஊரெல்லாம் வலைபோட்டு தேடிட்டிருக்கோம் என்றார் முகம் மலர.
``என் வேலைதான் முடிஞ்சுபோச்சே, விழாவுல கலந்துக்கலாமா? அடுத்த படத்துக்கு பூஜையா?
``படமே இன்னும் முடியலையே, ஒரே ஒரு சீன் கதைக்கு ரொம்பத் தேவைப்படுது. நீங்கதான் பண்ண வேண்டியிருக்கு. எங்கே இருந்தாலும் உடனே புறப்பட்டு ஸ்டியோவுக்கு வரணும்...
``நான் இப்போ வெளியூர்ல இருக்கேன்... சூட்டிங்கை நாளைக்கு வச்சுக்கலாமா சார்
``இப்பவே எல்லாம் ரெடி. பரவாயில்லே. நாளைக்கு கண்டிப்பா வந்தரணும்
``ஒகே சார், உங்ககிட்ட சொல்ல வேண்டிய விசயம் ஒன்று இருக்கு, வந்து சொல்றேன். நாளை காலை எட்டு மணிக்கு நீங்க சொல்ற இடத்துல கட்டாயம் இருப்பேன். ஒரு நாள் கால்சீட்டுதான்.
``ரொம்ப நன்றியம்மா பெருமூச்சு விட்டபடி சாத்தினார் அலைபேசியை.
``சார் ஹீரோயின் கிடைச்சுட்டாளா கேட்டார் ஒரு துணை நடிகர்.
``கிடைக்காம எங்கே போவாங்க. ஒரு பொண்ணு திடீர்னு காணாம போனா யாராச்சும் கடத்தியிருக்கணும், இல்லே யார் கூடயாச்சும் ஓடிப்போயிருக்கணும். சினிமா ஸ்டார்னா கேட்கவே வேணாம்...`` என்று தன் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார் இயக்குநர்.
மறுநாள் சுதா ஸ்டியோவில் படப்பிடிப்பிற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்துகொண்டிருந்தன. இயக்குநர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார். `தேன் மொழி வந்தாச்சு என்ற குரல் கேட்டது. ஸ்டுடியோ வாசலைக் கடந்து கார் ஒன்று வந்து நின்றது. அதன் கதவு திறந்தபோது வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன் இறங்கினான். அவரைத் தொடர்ந்து இறங்கியவர் தேன்மொழி. அவர்களைப் பார்த்ததும் ஒருவித தவிப்பில் இருந்து இனியன் கவுரவம் பார்க்காமல் ஓடிப்போய் அவர்களை வரவேற்றார்.
தன்னை உரசினாற்போல் நிற்கும் வாலிபனைக் காட்டி `இவர்தான் என்று தேன்மொழி சொல்ல ஆரம்பிக்க, தெரியும், தெரியும் ராத்திரியே எனக்கு நியூஸ் வந்தாச்சு. இன்னிக்கு பேப்பர்லேயும் போட்டிருக்காங்கூ என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே அவ்விருவரும் இயக்குநரின் பாதம் தொட்டு நிமிர்ந்தார்கள்.
``வாழ்த்துக்கள்.. நாங்கள்லாம் இருந்து நடத்த வேண்டியது...
``சாரி சார். ஊரைக்கூட்டி ஆடம்பரமா நடத்தறது இவருக்குப் பிடிக்கலே. எனக்கும் சரின்னு பட்டுது... ஸ்கூல்ல ஆரம்பிச்சது. இவர் ஒரு இன்ஜினியர். பேரு மதியழகன். ஊட்டிக்காரர். அங்கேதான் பதிவுத் திருமணம்...
``பரவாயில்லே... பரவாயில்லே. வரவேற்பு விருந்துனு ஆள் கிளப்பிடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், என்ன தோன்றியதோ சட்டெனத் தலையை சொரிந்தபடி இருக்கையில் உட்கார்ந்தவர் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார்.
இக்கட்டான சூழல் ஒன்று உருவாகியிருப்பதைப் புரிந்துகொண்டவர்கள் செய்வதறியாது இயக்குனரின் வாய் அசைவிற்காக காத்திருந்தனர். மின் தடை ஏற்பட்டதும் இயங்குவதை நிறுத்திக்கொள்ளும் இயந்திரங்களைப் போல அங்கிருந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்பட அத்தனைபேரும் அப்படியே நின்று போனார்கள். இணையர் இருவரும் ஏதும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிலையானார்கள்.
அரைக்கணத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இயக்குநர் இருக்கையைவிட்டு எழுந்தார். சுற்றிலும் ஒருமுறை கண்களை சுழலவிட்டார். தன்னைக் கவனித்தப்படி நின்று கொண்டிருக்கும் புது மாப்பிளையின் அருகில் சென்றார். தோளில் கை போட்டபடி, ``கொஞ்சம் இப்படி வர்றீங்களாஊ` என்றார். ஏதும் புரியாமல் பின் தொடர்ந்தார் மாப்பிள்ளை மதியழகன்.
இயக்குநரின் தனி அறைக்குள் இருவரும் நுழைந்ததும் கதவு சாத்தப்பட்டது. அந்த குளிர் அறையில் அவர்கள் இருவர் மட்டுமே, இருக்கையில் அமர்ந்ததும் சிகரெட் ஒன்றை பற்றவைத்தார் இயக்குநர். சிகரெட் பெட்டியை மதியழகன் முன் நீட்டியபோது, பழக்கமில்லை என்ற பதில் வந்தது.
வேறு ஏதாவது கொண்டு வரச் சொல்லட்டுமா?
நோ.. தேங்கஸ்
சிரெட்டை வேக வேகமாக இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு அதை அணைத்ததும் பேச ஆரம்பித்தார்.
பதிவுத் திருமணம்னு சொல்றீங்க... அப்படின்னா பெத்தவங்க சம்மதம் இல்லாமலா?
அவங்களோட முழு சம்மதம் மட்டுமில்லே. மனப்பூர்வமான வாழ்த்தும் கிடைச்சுது. ரிஜிஸ்டர் ஆபிசிலே சாட்சி கையெழுத்துப் போட்டதே அவங்கதான்.
மாலைய மட்டும் மாத்திக்கிட்டு கல்யாணத்தை முடிச்சுக்கிட்டீங்க.
ரெண்டு பேர் வீட்டிலேயும் வற்புறுத்துனாங்க. மறுக்க முடியலே. தாலி கட்ட வேண்டி வந்தது. தேன்மொழி கழுத்தல கிடக்கிறதை நீங்க பார்த்திருக்கணுமே. எனக்கு மட்டுமில்லே. தேன்மொழிக்கும் இதுல கொஞ்சம்கூட இஷ்டமில்லே. தொழிலுக்கு இடஞ்சலா இருக்கும். அடிக்கடி கழற்றி வைக்கணும். இதெல்லாம் தேவையான்னு கேட்டா...
சரியாத்தான் சொல்லியிருக்காங்க. அவங்க கழுத்துல இருக்குறதை நானும் பார்த்தேன். எடுக்கப்போற சீன்ல தாலியும் முக்கியமாய் படுது. நாங்களும் டம்மியா ஒண்ணு தயாரா வச்சிருக்கோம்.
இதைச் சொல்லவா என்னைத் தள்ளிட்டு வந்தீங்க...? வேறு ஏதோ ஒன்றைச் சொல்ல தயங்கிறார் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.
இதைக் கேளுங்க மிஸ்டர் மதி, இப்ப எடுத்து முடிச்சிருக்கிற முடிந்த கதைங்கிற படத்துல கதாநாயகன் கடைசியிலே ஒரு விபத்துல செத்துப் போறான். கணவனோட பிரிவைத் தாங்க முடியாம கதாநாயகியும் தற்கொலை பண்ணிக்கிறா. அவ சாகுறதுக்கு முன்னே தூக்கத்துல கனவு ஒணணு வருது. அந்தக் கனவு சீனை மட்டும் எடுத்து படத்துல சேர்த்துட்டா ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைக்கிறோம். கிராமங்கள்ல சர்வ சாதாரணமா நடக்குறதுதான். அதை இப்ப எடுக்கப் போகிறோம்.
அப்படியே செய்தாப் போச்சு. எதுக்கு இவ்வளவு தூரம் யோசிக்கணும்.
உங்களையும் உட்கார வச்சுகிட்டு, உங்க முன்னால எப்படிப் பண்றதுனுதான் தெரியலே...
விபரமாகச் சொன்னீங்கன்னா என்னால ஆனதைச் செய்ய முடியும்
சற்றுத் தயங்கியப்படியே காட்சி பற்றிய முழு விவரத்தையும் சொல்லி முடித்தார் இனியன். அவர் சொல்வதை மிகச் சாவதானமாகக் கேட்க ஆரம்பித்த மதியழகனுக்கும் போகப் போக அடிவயிற்றில் அமிலம் பரவியது போலிருக்க, என்ன சார் விளையாடுறீங்களா? இதையெல்லாம் முன்னமே யோசிச்சிருக்கணும். இரண்டு நாளைக்கு முன்னே கூட இதை நீங்க செய்திருக்கலாம். இந்த நிலைமையில... நினைக்கவே சங்கடமா இருக்கு என்று சொல்லிக்கொண்டே இருக்கையை விட்டு எழுந்தான். சட் என அவன் கரங்களைப்பற்றி இருக்கையில் மீண்டும் உட்கார வைத்தார் இனியன்.
கோவிச்சுக்காதீங்க தம்பி. வேற வழி இல்லே. தயாரிப்பாளர் நிறைய செலவு பண்ணிட்டார். எல்லோரையும் வரச் சொல்லியாச்சு. எல்லாமே தயாரா இருக்கு. முதல்ல உங்க சம்மதம் வேணும்தான் இங்கே கூட்டி வந்தேன்? தேன்மொழியை சம்மதிக்க வைக்கிறது உங்க கையிலதான் இருக்கு. உங்களைத்தான் நம்பியிருக்கேன் என்றார் காலில் விழாத குறையாக.
மதியழகனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு இயக்குநர் எழுந்து வெளியே போனார். சிறிது நேரத்தில் அரக்க பரக்க அறைக்குள் நுழைந்தாள் தேன்மொழி.
நீங்க இங்கே என்ன பண்றீங்க என்றாள்
சொல்றேன். இப்படி உட்கார்....
வாயசைவை எதிர் நோக்கியபடி அவனெதிரில் உட்கார்ந்தான். தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தான் மதி.
இப்ப எடுக்கப் போற காட்சிபற்றிச் சொன்னார்.
காரணம் இருக்கு. படத்தோட கதைப்படி ஹீரோ செத்துப்போனாலும் ஹீரோயின் தற்கொலை பண்ணிக்கிறா
ஆமா
தற்கொலைக்கு முன்னாலே, ராத்திரி தூக்கத்துல அவளுக்கு ஒரு கனவு வருது. அதைத்தான் இப்ப எடுக்கப் போறாங்க...
ப்பூ. இவ்வளவுதானா? ஏதோ முதலிரவு, கற்பழிப்பு, குளியல் காட்சினு நெருடல் சமாச்சாரமா இருக்குமோணு நினைச்சேன்.
கொஞ்சம் பொறுமையா கேளு. இதெல்லாம் எங்க கல்யாணத்துக்கு முன்னே எடுத்திருக்கணும். இப்ப எப்படிங்கனு கேட்டேன்.
புதிர் போடுறீங்களா? டென்சனை கிளப்பாதீங்க...
தான் சொல்லப் போவதை எப்படி எதிர்கொள்வாளோ என்ற தவிப்பும், தடுமாற்றமும் இருந்தபோதிலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு விசயத்தைச் சொல்லி முடித்தாள்.
அதைக் கேட்டதும், கலகலவென்று சிரித்தாள். நடிக்க வந்தாச்சு. அப்புறம் என்ன? அரவாணி வேசம் போட்டா ஆம்பளை குரல் பேசித்தானே ஆகணும். இந்த செண்ட்டிமென்ட்டெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். யாரும் காதுல போட்டுக்கலே. ஆனா ஒன் கண்டிசன். கதையின் முடிவை மாத்திக்கணும். ஹீரோயின் சாகமாட்டா. மறுமணம் பண்ணிக்குறா, படத்தோட பேரு மீண்டும் வாழ்வேன்னு இருக்கணும். ரெண்டு நாட்களுக்கு சூட்டிங் வச்சுக்கலாம். சம்மதமானு டைரக்டர் கிட்ட கேட்டுட்டு வாங்க. இப்பவே மேக்கப் போட்டுக்கிறேன் என்றாள்.
அடுத்த விநாடியே எழுந்து வெளியே போனவன் சீக்கிரமே திரும்பி வந்தான். இயக்குநர் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டதை அவளிடம் சொன்னாள். தேன்மொழி மேக்கப் அறைக்குள் நுழைவதைப் பார்த்த இனியனுக்கும், மற்றவர்களுக்கும் நம்பிக்கை வந்தது என்பதைவிட உயிர் வந்தது என்பதே சரி.
ஒப்பனை முடித்து வெளியே வந்தாள். அலங்கரிக்கப்பட்ட சிலை ஒன்று உயிர்பெற்று அசைந்து வரும் அழகை ரசித்தபடி அனைவரின் கண்களும் அவள் மீதே இருந்தன.
காட்சியின் தன்மைபற்றி இயக்குநர் ஆர்வத்துடன் விளக்குகிற போதே தேன்மொழியின் முகம் இறுக்கமானது.
படப்பிடிப்பு குழுவினர் சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார்கள். விளக்குகள் ஒளிர்ந்தன. ஒருவர் கிளாப் அடித்தார். ஆக்ஷன் என்றார் இயக்குநர். கேமரா இயங்கியது.
நரை விழுந்த மூதாட்டிகள் சிலர் அவள் கரம் பற்றி அழைத்து வந்தார்கள். ஒரு இருக்கையில் இருக்க வைத்தார்கள். அவர்களுடன் இன்னும் பல பெண்கள் சேர்ந்து கொண்டு சுற்றி நின்று என்னென்னவோ சொல்லி அரற்றினார்கள். மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தார்கள். தேன்மொழியின் முகத்தில் சோகம். கண்களில் ஈரம். ஒவ்வொன்றாக உடைத்தெறிவதை, காதிலும், கழுத்திலும், மூக்கிலும் மின்னிய பொன் ஆபரணங்களை ஆளுக்கு ஒன்றாக அப்புறப்படுத்துவதை, பின்னிய கருங்கூந்தலை விரித்து விளையாடியதை, மணம் வீசும் ஒரு கூடை மலர்கொத்தை தலையிலிருந்து எடுத்து தரையில் எறிந்ததை, நெற்றியில் வட்டமிட்டிருந்த குங்குமச் சிவப்பை அழித்ததை, கழுத்தில் தொங்கிய மஞ்சள் நிற மாங்கல்ய கயிற்றை அறுத்து வீசியதை, விதவைக் கோலத்தில் அவள் விசும்பவுதை, விம்முவதை, துடிப்பதை, துவளுவதை கேமரா பல்வேறு கோணங்களில் பதிவு செய்தது.!
நடிப்புத்தான் என்றாலும் ஒரு பெண் என்பதால் உள்ளுக்குள் உறுத்தல் இருக்கும். நிஜமாகவே தரையில் விழுந்து அழுது புரண்டு புலம்பத் தோன்றும்!
அப்படி எதுவும் நிகழவில்லை
தன் காதல் கணவனின் முகம் பார்த்து கண் சிமிட்டினாள், மெல்ல சிரித்தாள்!