தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
பொருளாதார அளவுகோல்
மலிவான வாதம்
இந்த ஆண்டே அமலாகும்
இட ஒதுக்கீடு தேவையே!
இந்துத்துவா
இவர்தான் பெரியார்
உலகப் பகுத்தறிவாளர்கள்
கவிதை
சிறுகதை
உண(ர்)வகம்
பகுத்தறிவு
இலக்கியம்
சிறந்த நூலிலிருந்து
அறிவியலார்
நூல் அறிமுகம்
சோழர் காலத்தில் பரவிய
அணுஅணுவாய்
பளீர்... பளீர்...

 

 

பகுத்தறிவு

கோழியா? முட்டையா? மரமா? விதையா?

- பேராசிரியர் ந.வெற்றியழகன் எம்.ஏ.,பி.எட்.,

அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி (3)

பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியுமா?

அந்நஜாத் ஏட்டின் கட்டுரை மேலும் இவ்வாறு தொடர்கிறது:
தாங்கள் கர்ப்பப்பையில் இருந்ததையோ, சிறு பிராயத்தில் செய்தவற்றையோ பகுத்தறி-வால் பகுத்தறிய முடிகிறதா? கருப்பையில் கருவாக இருந்ததை அறிவது பகுத்தறிவு என்று இவரிடம் எவர் சொன்னார்?
பல்வேறு அறிவியல் முறையிலான ஆய்வு-களால் இதனை அறிந்து கொள்ள முடியுமே! பல்வேறு கால கட்டங்களில் கருப்பையில் உள்ள நம் கருவின் நிலைகளை - தோற்றங்களை, வளர்ச்சிகளை ஸ்கேன் மூலம் படம் பிடித்துப் பார்க்கலாமே! படம் பிடித்துக் காட்டு-கிறார்களே!
அண்மையில் சுவீடன் நாட்டைச் சார்ந்த டாக்டர் பெர்சன்ட் ஸ்ட்ராம் என்னும் அறிவியலாளரும், லென்னார்ட் நில்சன் என்பவரும் மின்னணு நுண் பெருக்காடி வழியாக பெண்ணின் சினை முட்டை ஆணின் உயிரணுவும் சந்திக்கும் நிகழ்ச்சியிலிருந்து கருவாகி அது குழந்தையாகி, பின் வெளிவரும் வரையில் உள்ள வளர்ச்சி நிலைகளைத் தெளிவாக, படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

வாரந்தோறும் காணப்படும் வளர்ச்சி நிலை

3ஆவது வாரம் கருவில் மென்மையான பள்ளம்; 4-ஆவது வாரம் மூன்றரை மில்லி மீட்டர் அளவு கரு இருக்கிறது; அதில் கைகள் துளிர்விடத் தொடங்குகிறது. சில நாள்களில் கால்கள் எட்டிப் பார்க்கின்றன.
5-ஆவது வாரத்தில் ஒரு முந்திரிப் பருப்பு அளவு வடிவாகக் கரு உள்ளது. அரை அங்குலத்துக்கும் குறைவு. முகம், தலைப்பகுதி, மூக்குத் துளைகள், வாய், இவை உருவாவதைக் காட்டுகிறது.
மென்மையான பள்ளம் கண் ஆகிவிட்டது. வயிற்றுப் பகுதியில் இதயம் துடித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒரு வால் காணப்படுகிறது.
6-ஆவது வாரம் வரை, பூனை, எலி, பறவை, மாடு, மனிதன் ஆகிய எல்லாக் கருக்களும் ஒரே மாதிரிதான் தோற்றம் அளிக்கின்றன.

மாதாந்தர வளர்ச்சி

2-ஆவது மாதம், ஆண் அல்லது பெண்ணின் பாலின உறுப்புகள் தோன்றுகின்றன. 3-ஆவது மாதம், செரிமான உறுப்புகள் எலும்புகள் தொடக்கம்.
4-ஆவது மாதம், ஏறக்குறைய முழுக் குழந்தையின் வடிவம்; 5-ஆவது மாதம், தலைமுடி, நகம், பால்பற்களின் முளைகள்; 6-ஆவது மாதம், கண் திறந்து மூடுகிறது; 7-ஆவது மாதம், குழந்தை அழுகிறது, மூச்சு விடுகிறது; 8,9-ஆவது மாதம், குழந்தை பிறப்பதற்கு அணியமாகிறது.
இவை எல்லாம் செம் (sem) எனப்படும் மின்னணுக் கருவி கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் தெளிவாகத் தெரிகின்றன.
மாந்தர்களின் எல்லாக் கருக்களும் கருப்பை-யில் இந்தப்படித்தான் காணப்படும்.
பகுத்தறிவாளர்களின் கருவும் இப்படித்-தானே?
முன்னேற்பாட்டின் எம் கரு வளர்ச்சியை செம் மூலம் பெற்றோர்கள் படம் பிடித்து வைத்திருந்தால் பார்த்தறிந்து கொண்டு விடலாமே?
அப்படி இருக்க, தாயின் கருப்பையில் கருவாக இருந்ததைப் பகுத்தறிய முடிகிறதா? என்று கட்டுரையாளர் அசட்டுத்தனமாக வினா எழுப்புவானேன்?

சின்னஞ்சிறு வயதினிலே

இதே போலத்தான்,
சிறு வயதில், நாம் இருந்த தோற்றத்தையும், செயல்களையும், வளர்ச்சி நிலைகளையும், ஒளிப்படம், வீடியோ, ஆடியோ சி.டி முதலியன மூலமானப் பதிவு செய்து நம் பெற்றோர்கள் வைத்திருந்தால் அவற்றைப் பார்த்தோ, கேட்டோ நாம் தெரிந்து கொள்ள முடியுமே?
சொல்லாமலே தெரிந்து கொள்ளலாமே!
மேலும் ஒரு வினாவினைக் கட்டுரையாளர் இவ்வாறு எழுப்புகிறார்:
தான் இதுவரை போகாத சைனா, சிங்கப்பூர் பற்றிய விவரங்களை - அனுபவங்-களைப் பகுத்தறிய முடியுமா?
இந்த இடங்களைப் பற்றிய விவரங்களை நேரிலே அங்கு போய்த்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லையே? ஏற்கெனவே அங்கு போய் வந்தவர்கள் கூறும் தகவல்கள் கொண்டு அறிந்து கொள்ளலாமே?
அவற்றின் ஒளிப்படங்கள், தொலைக்-காட்சிப் படங்கள், திரைப்படங்கள், வீடி-யோக்கள், செய்தித்தாள்கள் முதலான புதிய கருவிகள், ஊடகங்கள் வாயிலாகவும் தெளி-வாகத் தெரிந்து கொள்ளலாமே?
இந்தக் கட்டுரையாளர் இந்த 21ஆம் நூற்றாண்டில்-தான் இருக்கிறாரா? அல்லது கற்காலத்தில் வாழ்கிறாரா?
அந்த இடங்களின் அனுபவங்களைப் பகுத்-தறிய முடியுமா? என்று ஓர் அபத்தமான கேள்வி கேட்கிறார்.
ஒரு பொருள் அல்லது இடத்தினை அய்ப்புலன்களால் நுகர்ந்து பெறும் பட்டறிவு-தானே அனுபவம் என்பது?
போகாமலே பார்த்தறியாமலே எப்படி, பட்டறிவு - அனுபவம் ஏற்படும்? எப்படி அந்த, பெறாத அனுபவங்களைப் பகுத்தறிய முடியும்? குழப்பத்தின் கொடுமுடியில் ஏறி நின்று தவிக்கிறாரே! அந்தோ! என இரங்கல் தெரிவிக்-கத்தான் எம்மால் இயலும்!
அலறித் துடிப்பது ஏன்?
எதற்கெடுத்தாலும் பகுத்தறிவால் முடியுமா? என இவர் வினவுகிறார்! பகுத்தறிவு பற்றி இவர் என்ன கருதிக் கொண்டிருக்கிறார்?
அறிவின் பல்வேறு முறைகளில் - துறை-களில், வகைகளுள் பகுத்தறிவும் ஒன்று.
திருவள்ளுவர், பேரறிவு, கூரறிவு, அய்யறிவு, மெய்யறிவு, வாலறிவு, நூலறிவு முதலான 16 வகையான அறிவுக் கூறுகளைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
அவற்றுள் மெய்ப்பொருள்காணும் அறிவுக்-கூறு பகுத்தறிவு ஆகும்.
மற்ற அறிவுத்துறை கொண்டு பல்வேறு செய்திகளை - நடப்புகளை, பொருள்களை ஆய்வு செய்து உண்மை காணலாம்.
இவர், எதற்கெடுத்தாலும் பகுத்தறிவு - பகுத்தறிவு கொண்டு பார்க்க முடியுமா? என்று ஏன் அலறுகிறார்? பகுத்தறிவுப் பயநோயாக இருக்குமோ?

வீணான வினா!

அந்நஜாத் மேலும் இவ்வாறு வினவுகிறது:
பகுத்தறிவு கொண்டு மரணத்தின் பின் உள்ள வாழ்வு பற்றிப் பகுத்தறிய முற்பட்டால் அது விவேகமான செயலாகுமா?
இப்படி ஒரு வினா! வீணான வினா!!
மரணத்தின்பின் மறுவாழ்வு, மறுபிறவி என்பவையெல்லாம் மதக் கருத்து; மெய்ப்பிக்-கப்படாத பொய்ம்மைக் கருத்து; கற்பனைக் கருத்து; மூடநம்பிக்கை.

இறந்த பிறகு ஏது வாழ்வு?

மரணம் அல்லது இறப்பு என்பது என்ன?
மூச்சுறுப்பு மண்டிலம், குருதியோட்டம் அல்லது இதய இயக்கம், நரம்பு மண்டிலம் அல்லது மூளை இயக்கம் இவற்றுள் ஒன்றோ இரண்டோ அனைத்துமோ செயலிழப்பது தான் இறப்பு.
உடலின் இயக்க ஆற்றலின் மறுபெயர்தான் உயிர் என்பது; உடல் வேறு; உயிர் வேறு அன்று. உடல் அழிந்தபின் உயிர் என்னும் இயங்காற்றலும் அழிந்துபடுகிறது. உடல் அழிந்தபின் உள்ளிருந்த உயிர், உடலினின்றும் வெளியேறி மறு(மை) வாழ்வோ, மறுபிறப்போ எய்துகிறது என்பது இல்லை.
அப்படி இருக்க, மரணத்தின் பின் உள்ள வாழ்வு பற்றிப் பகுத்தறிவு கொண்டு அறிய முற்படுவது விவேகமானதா? எனக் கட்டு-ரையாளர் வினவுவது விவேகமானதா?

எது முந்தி, எது பிந்தி?

கட்டுரையாளர் தொடர்ந்து பின்வரும் வினாக்களை எழுப்புகிறார்:
விதையிலிருந்து மரமா? மரத்திலிருந்து விதையா? என்பதைப் பகுத்தறிந்-திருக்-கிறார்களா?
முட்டையிலிருந்து கோழியா? கோழியி-லிருந்து முட்டையா? பகுத்தறிந்து உண்-மையைக் கண்டறிந்து விட்டார்களா?
முதிர்ச்சியில்லாத - குழந்தைத்தனமான வினாக்கள் இவை!
கோழியா? முட்டையா? மரமா? விதையா?
எது முதலில் தோன்றியது? நாமும் கொஞ்சம் அலசுவோம்.

தர்க்கவாதம் தரும் உண்மை

உடலுடன் இணைந்தே தோன்றுவது காமவுணர்வு; இது வெட்ட வெளியில் தோன்றாது.
கோழியில்லாமல் காமவுணர்வு தோன்றாது.
காமவுணர்வு உந்தப் பெற்று ஆண்-பெண் கோழிகள் உடலுறவு கொள்கின்றன.
அதன் விளைவாக உருவாவதே முட்டை! முட்டை முதலில் தோன்றுவது இல்லை!
அதுபோல, விதை என்பது ஒரு தாவரக் கரு. உயிருள்ள மரம் தோன்றாமல் அந்தரத்தில் வெட்ட வெளியில் விதை தோன்றாது.
மரம் தோன்றி அதன் கருவாக உருவாவதே விதை கல்து வித்து. எனவே, கோழிதான் முதலில், மரம்தான் முதலில் தோன்றியது என அறிந்து கொள்வது தர்க்க முறையில் ஆன விளக்கம்.

அறிவியல் ஆய்வு முடிவு

முதலில் தோன்றியது உறுப்பில்லாத ஒரு செல் உயிரிகள் காலப்போக்கில் பல செல் உயிரிகளாகி பரிணாமம் அடைந்து தாவர, விலங்குயிரிகள் தோன்றின. விலங்குயிரிகளின் உச்சகட்ட உருமலர்ச்சியே மனித இனம்.
எனவே, தொடக்ககால உயிரி முட்டையிலிருந்து தோன்றவில்லை. ஆண் பெண் பறவைகள் இணைவதால் உருவாவதே முட்டை; ஆண்-பெண் விலங்குயிரினம் இணைவதால் உருவாவதே கரு. கொடி, செடியின் மலரிலுள்ள ஆண் பகுதியும் பெண் பகுதியும் இணைவதால் உருவாவதே விதை. முட்டை, கரு, விதை இவையாவும் இயல்பில் ஒரு தன்மையனவே!
இதுதான் விடை! என்ன செய்யப் போகிறார்?
கோழிதான் முந்தி, முட்டை பிந்தி; மரம் தான் முந்தி, விதை பிந்தி; கட்டுரையாளரின் வினாக்களுக்கு அளவை (Logic), அறிவியல் முறையிலான விடைகள் இவை.
இப்பொழுது அந்நஜாத் கட்டுரையாளர் என்ன சொல்லப்போகிறார்?
மீண்டும் மீண்டும் இதே வினாக்களைக் கேட்டுக் கொண்டே செவிபொத்தி, விழி மூடிக் கிடக்கப் போகிறாரே?

படைப்பன்று; பரிணாமம்

கட்டுரையாளர் பின்வருமாறு தொடர்-கிறார்: விண்ணையும், மண்ணையும் இன்னும் எண்ணற்ற கோள்களையும் படைத்து, அதிசயிக்கத்தக்க வகையில் அவற்றை, அவற்றின் ஓடு பாதையில் ஒரு வினாடி முன்பின் ஆகாமல் பல்லாயிரம் கோடி ஆண்டுகள் எவ்வித இடையூறு இல்லாமல் சுழலவைத்திருக்கும் அந்த ஒரே இறைவன் இவர்களின் பகுத்தறிவில் அடைபடவில்லை என்பதால், அந்த இறைவனை மறுப்பவர்கள் எந்த அளவு அறிவீனர்களாக இருக்கமுடியும்?
விண், மண், கோள்கள் முதலானவை இயல்பாகத் தோன்றியவை, அவை எவருடைய படைப்பும் அல்ல.
ஆற்றலின் அழிவின்மைத் தத்துவ அடிப்-படையில் அவை, பொருளாக இருந்து ஆற்றலாக மாறினாலும், ஆற்றலாக இருந்து பொருளாக மாறினாலும் என்றும் இருப்பவை; என்றும் அழிவற்றவை.
தோற்றமும் முடிவும் அற்றவை. எனவே, என்றும் இருக்கும் ஒன்றைப் புதிதாகப் படைக்க எவனும் தேவையில்லை.
ஆகவே, படைப்பாளன் எனப்படும் இறைவன் தேவையில்லாதவன்; இல்லாதவன். எனவே விண், மண் கோள்கள் இறைவன் என்பவனால் படைக்கப்படாதவை. இறைவன் எனப்படுபவனே இல்லை என்கிறபோது அவன்தான் அவற்றைப் படைத்தார் என்று கதைப்பதும் அறிவற்ற கூற்று ஆகும்.

இயற்கை இயக்கவிசைகள்

கோள்களின் ஓடு பாதையில் ஒரு வினாடி முன்பின் ஆகாமல் - இடையூறும் கோளாறும் இல்லாமல் இறைவன் சுழலவைத்துள்ளான் என்கிறார் கட்டுரையாளர்.
கோள்களின் சுழற்சிக்கும் ஓடு பாதை இயக்கத்துக்கும் அவற்றின் சுழற்சி விசை, மய்ய நோக்கு விசை, ஈர்ப்பு விசை முதலான ஆற்றல்கள் எனப்படும் இயற்கை இயக்க விசைகள் தான் காரணம்.
இறைவன் எனப்படும் கற்பனைக் கடவுள் தேவையில்லை.

தடம் மாறும் தகவல்கள்

இந்தக் கோள்கள் முதலானவை, முன்பின் மாறாமல் தம் ஓடு பாதைகளில் சுழல வைத்திருக்கிறானாமே இறைவன்! கதைக்-கிறாரே கட்டுரையாளர்!
கீழ்வரும் தகவல்களைப் பாருங்கள்: வானத்திலேயே அதிக ஒளியுள்ள விண்-மீனாகிய சிரியஸ் ஒழுங்காத்தான் ஓடு பாதையில் செல்லாமல், கோணலான பாதையில் நகர்வதை விஞ்ஞானிகள் அறிந்-திருந்தனர் (முனைவர் ம.அ.தங்கராஜ் எம்.ஏ., பிஎச்.டி., டொராண்டோ, இயற்பியல் துறைப் பேராசிரியர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி - எழுதிய வாழ்வளிக்கும் சூரியன் நூல் பக்கம் 108)
யுரேனஸ் கிரகத்தின் போக்கைக் கவனித்து வந்த வான் விஞ்ஞானிகள் அதன் தாறுமாறான போக்கைக் கண்டு கவலையுற்றனர் (ஷஷஷ பக்கம் 69)
வானவீதியில் திங்களின் இயக்கம் மிக மிக ஒழுங்கற்றதாக இருக்கிறது (ஜேம்ஸ் பிக்கரிங் நூல்: கதிரவனின் கைதிகள் பக்கம் 96)
சூரியன் இப்போது தனது அச்சில் ஒரு தடவை சுழல்வதற்கு அநேகமாக முழுதாக ஒரு மாதம் ஆகிறது. சூரியன் இவ்விதமாக எப்போதுமே மெதுவான வேகத்தில் சுழன்று கொண்டிருக்கவில்லை. சூரியமண்டலம் புதிதாகத் தோன்றிய சமயத்தில் சூரியன் மிக மிக வேகமாக இன்று வியாழன் சுழலும் வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது (ஆர்.எஸ்.கிரிகர் நூல்: பிரபஞ்சத்தின் வரலாறு பக்கம் 107).

விலகி ஓடும் விண்பொருள்கள்

என்ன தெரிந்து கொண்டோம்? சிரியஸ் விண்மீன் பாதை மீறி (மாறி)ப் பயணம் செய்கிறது. யுரேனஸ் கோளின் போக்கு தாறுமாறாக உள்ளது. நிலாவின் இயக்கம் ஒழுங்கற்றதாக உள்ளது. சூரியனின் சுழற்சி வேகம் தொடக்கத்தில் உள்ளதைவிட இப்பொழுது குறைந்துள்ளது.
என்னும் தகவல்களை அறிந்து கொண்டோம் அல்லவா?

கையாலாகாத 'கடவுள்'

ஆனால், அந்நஜாத் ஏடு, கோள்களின் சுழற்சியில் ஓடுபாதைகளில் ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் இறைவன் சுழலவைத்-துள்ளான் என்கிறதே?
இறைவன் கட்டுப்பாட்டினை மீறி, தாண்டி தவறி, விலகியல்லவா அவை இயங்குகின்றன?
தனது படைப்புகளே தன்னை மீறி, தடம்புரள்வதை இவனால் தடுக்கவோ, கட்டுப்படுத்துவதற்கோ முடியாத - கையா-லாகாத கடவுள் ஆக அன்றோ இவன் இருக்கிறான்!
இதுதான் இவன் தோள்களைச் சுழல வைத்திருக்கும் இலட்சணமா? வாய்விட்டுச் சிரிப்போம்! இவனை மறுப்பவர்கள் அறிவீனர்களாம்! யார் இவரா? பகுத்தறி-வாளர்களா?
கனியிருப்பக் காய் கவர்பவர்.
கட்டுரையாளர் பல இடங்களில் பகுத்தறி-வாளர்களை, விவேகமற்றவர்கள், அறிவற்ற-வர்கள், மூடர்கள், அதிகப்பிரசங்கிகள் என்-றெல்லாம் பழித்துரைக்கிறார்.
இவரைப்போல நாம் கூற மாட்டோம். கனியிருப்பக் காய் கவரும் இவர் போன்ற-வரல்லவே பகுத்தறிவாளர்கள்!

பச்சை விளக்கினைப் பார்க்கட்டும்!

பகுத்தறிவு - பகுத்தறிவாளர்கள் இத்துணை ஆத்திரமும் அவதூறும் கொண்டு எழுதியுள்ள அந்நஜாத் ஏட்டிற்கும் கட்டுரையாளருக்கும் ஓர் அருமையான மேற்கோள் ஒன்றை நினை-வூட்டி நிறைவு செய்கிறோம்.
ஏமன் மாநில ஆளுநராக ஜபல் என்பவரை முகமது நபிகள் நாயகம் அவர்கள் நியமித்-தார்கள்.
நீர் எந்தச் சட்டப்படி ஆட்சி நடத்துவீர்? என நபிகள் நாயகம் அவரிடம் கேட்டார். திருக்குர்-ஆன் சட்டப்படி ஆட்சி நடத்து-வேன் ஜபல். குர்-ஆனில் விளக்கம் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்? உங்கள் வாக்குகளைப் பின் பற்றி நடப்பேன் அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வீர் எனது பகுத்தறிவைப் பயன்படுத்துவேன் அதுதான் சிறந்த வழி என்று கூறி, பகுத்தறிவுக்குப் பச்சை விளக்குக்காட்டி விட்டார் நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (தகவல்: உண்மை பிப்ரவரி 1-15, 2008),
இந்தப்பகுத்தறிவுப் பச்சை விளக்கு, பகுத்தறிவாளர்களைப் பழித்துரைக்கும் அன்றைய ஏமன் - ஆளுநர் ஜபல் அவர்களுக்கு மட்டுமா?
இன்றைய அந்நஜாத் - கட்டுரையாளர் அய்யூஃபாத்திமா அவர்களுக்குக் கூடத்தான்!

- (நிறைவு)