இலக்கியம்
அதோ ஒரு கூண்டுக் கிளி விந்தன் எனும் விந்தை மானுடன்
- சந்தனத்தேவன்
 |
ஒரு குறிப்பிட்ட இன எழுத்தாளர்களை மட்டுமே தமிழக இதழ்கள் வட்டாரம் தலையில் தூக்கி வைத்து கும்மியடித்தன. அந்த ஓரவஞ்சனை இன்றும் தொடர்கிறது.
இலக்கிய சாதனைகள் புரிந்த புதுமைப்-பித்தன், கு.அழகிரிசாமி நாரண துரைக்-கண்ணன், விந்தன், வல்லிக் கண்ணன், டி.எஸ். சொக்கலிங்கம், சாமி சிதம்பரனார், நகர தூதன் மணவை ரெ.திருமலைசாமி, அறிஞர் அண்ணா, அரங்கண்ணல், எஸ்.எஸ். தென்னரசு போன்ற மறைந்த எழுத்துலகச் சிற்பிகள், ஆனமட்டும் மறைக்கப்பட்டனர். பலர், முகத்திரை குத்தப்-பட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டனர். `அவாள் எழுத்தாளராக இருப்பின் வண்ணார, கணக்கு எழுதிய குறிப்புச் சீட்டை கூட சாவா இலக்கியமாக சித்தரிக்கப்பட்டது. வஸந் படியேறினான் என்பதை படி ஏறி என செங்கல் சுமந்த எழுத்தாளர், சாகத்ய விருது பெறாமல் கண் மூடிவிட்டாரே என அகாதமி குருடா அல்லது செவிடா என தூற்றத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், இதைவிட நியாயமான புகழுடைய நம்மவரின் முதுகைத் தடவிய பார்த்த பின்பு புறக்கணிக்கப்பட்ட கொடுமை சுனாமியைவிட கொடிது.
இந்த ஆதிக்க பாரபட்ச வெறியையும் கொம்பு முறித்து வென்றவர்களும் உண்டு. அதில் நம் கண்களுக்குத் தெரிந்தவர் நாவலூர் கோவிந்தன் என்ற விந்தன்.
1945-50-ல் புதுக்கோட்டையிலிருந்து மாத இதழாக பெருக்கெடுத்து திராவிட இயக்-கத்துக்கு வளமை சேர்த்த இதழ் பொன்னி. அவாள் இதழ்களான ஆனந்த விகடன், கல்கி, கலைமகளுக்கு சவால் விட்டதோடு வெளி-யீட்டு எண்ணிக்கையில் மிஞ்சி, அச்சுறுத்தியது. ஆசிரியர் பொறுப்பில் முருகு சுப்பிரமணியமும் நிருவாக மேம்பாட்டில் அரு. பெரியண்ணனும் மிளிர்ந்து, புதுக்கோட்டை செந்தமிழ் பதிப்-பகத்தையே படை வீடாக நடத்தினர். மானம் காக்க ஒரு இனமான இதழ் கிடைத்தமைக்கு தமிழகமே பெருமைப்பட்ட காலகட்டம் அது.
பொன்னி இதழ் கண் திறக்குமா? என்ற தலைப்பில் தொடர் கதையை தொடங்கியது. எங்கும் எதிலும் அதைப்பற்றியே பேச்சு. எழுத்து நடை, விறுவிறுப்பு, படித்தோரை பரவசப்படுத்தியது. அந்த சமயத்தில் கோலோச்-சிய காங்கிரஸ் அரசையும் பொறுப்பில் நடமாடியவர்களையும் அப்படியே ஒளிவு மறைவு இன்றி படம் பிடித்துக் காட்டியது. கதையில் வந்த கதை மாந்தர்களை நையாண்டி செய்ததில் தனித்துவும் தெரிந்தது.
அந்தப் பேனா நம்மை குத்தி பதம் பார்க்காதா என ஏங்கித் தவித்தவர்கள் ஏராளம். இப்படி உண்மை நிலவரத்தை தோலுரித்துக் காட்டும் நபர் யார் என பூதக்கண்ணாடி வைத்து தேடியது எதிர் வட்டாரம். நக்கீரன் எழுதும் கண் திறக்குமா? என விளம்பரத்தில் பெயர் வந்ததே தவிர, அந்தப் புனைப் பெயருக்கு உரிமையாளர் யாரென தெரியாத எழுத்-துலகமே தவியாய் தவித்தது. புலன் விசாரணை பொய்த்ததே தவிர, நக்கீரனின் முகமூடியை யாராலும் தூக்கிப் பார்க்க முடியவில்லை. புனைப் பெயர் இரகசியம் இப்படி பொன்னி நிர்வாகத்தால் பாதுகாக்கப்-பட்டது.
1947 வாக்கில் தற்செயலாக நான் புதுக்கோட்டை பொன்னி ஆசிரியரின் வீட்டின் மேல் மாடிக்கு அவரைத் தேடி போன-போது, முருகு என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை தந்து, எதிரே அமர்ந்திருந்த நண்பரை சுட்டிக்காட்டினார். இவரை உடன் அழைத்துப்போய் உணவருந்த வைத்து, சென்னை ரயிலில் வசதியாக ஏற்றிவிட அன்பு கட்டளை இட்டார்.
எதிரே இருந்த நாற்காலியில் தன் உடலை குறுக்கிக் கொண்டு, சாய்ந்திருந்த நண்பர் கதராடையில் தோற்றம். அவர் அட்டகருப்பு, மேனி மறைத்த கதராடை வெண்ணிறம் என்பதால் நல்ல பொருத்தமே. இருப்பினும் அது அவரது உடம்போடு ஒட்டவில்லை. ஒத்-துழையா சட்டைப் பித்தான்கள், தொளதொள சட்டையாக, என்பதைப்பற்றியும் கவலைப்-படாத குணத்தவராக எனக்குப் பட்டது.
அப்போது ஆட்டோ அபூர்வமான வாகனம். கண்ணில் பட்டது குதிரை வண்டிதான்! இருவரும் அதில் பயணித்தோம். புதுக்-கோட்டை மானஸரோசவா காபிக்கு மணம் பெற்றது. அவரை அங்கே அழைத்துப் போவ-தில் எனக்குப் பெருமை. இரண்டே இட்லியை சாப்பிட்டு விட்டு காபி சாப்பிடு-வதில்லை என அவரோ தவிர்த்தார். இதைச் சாப்பிட்டதற்கே அவருக்கு பலமுறை விக்கலும் ஏப்பமும் வந்தது. இரயிலடி போனதுமே, நாங்கள் இவ்வளவு ஆவேசப்-பட்டு வந்திருக்க வேண்டாமே எனப் புரிந்தது. ராமேசுவரம் - சென்னை வண்டி ஒரு மணி நேரம் தாமதம் என்றார்கள்.
அனாதையாகக் கிடந்த சிமிண்ட் பெஞ்சில் சாவதானமாக அமர்ந்திருந்தோம். குணமே அப்-படியா இல்லை கூச்ச சுபாவமா எனத் தெரியாத புதிர் எவ்வளவு நேரந் தான் பேசாது இருப்பது, அவருக்கு வேண்டுமானால் மவுனம் அவரது மொழியாக இருக்கலாம். எனக்கு வாய் அரித்தது. மெள்ள ``அய்யா! என்றேன். என்னை திரும்பிப் பார்த்த அவர் தன் சிறு தோல் பை திறந்து சிறிய கையேட்டை எடுத்து என் வசம் நீட்டினார். கையேட்டின் அட்டை-யில் பெரிய அச்சு எழுத்தில் பெரியார் அரிச்சுவடி என அச்சாகி இருந்தது. கையேட்டை பிரித்தால் என் கண்களிலே குட்டக் குட்ட குனிபவன் முட்டாள்
நூலோர் எல்லாம் மேலோர் அல்ல
கைம்பெண்ணேயாயினும் காதலி
கிளர்ச்சியின்றி வளர்ச்சி இல்லை
வரிகள் பட்டன. இது அவரே தயாரித்த பதிப்பு. .``அடடே! நம்ம ஆள்!`` என துள்ளி குதிக்க நினைத்து எழுந்தவன், இடத்தின் நிலை கருதி, அவரை நெருங்கி வந்தேன். என் உணர்வுகளை பார்வையாலேயே கணித்த அந்த கருப்பர், `என் பெயர் விந்தன். இப்போது `கல்கி` ஆசிரியர் குழுவில் வேலை. அதுவும் இந்த நிமிடம் வரையில், நாளை எதுவும் நடக்கலாம் என்று முதன் முதலாய் வாய் திறந்தார்.
``ஏன்? - என்று நான் பதறினேன். ``அதுக்கு நான்கு காரணங்கள். என் தோல் கருப்பு. இரண்டாவது நக்கீரன் என்ற புனைப் பெயரில் நான் பொன்னியில் கண் திறக்குமாவென தொடர் கதை எழுதியது கொலை குற்றமாம். மூன்றாவது என்னை விட்டுப் பிரியாது அடிக்கடி வரும் இந்த விக்கல்.
இதைச் சொன்னதும் அவரை வியந்து பார்த்தேன். நாவலூர் ஜெமீன் நாயக்கர் குடும்பத்தில் பிறந்து, பின்பு நொடித்துப்போய், அச்சுக் கோர்ப்பவராக வாழ்வைத் தொடங்கி, கல்கி இதழ் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று, பாலும் பாவையும் என்ற சிறு நாவல் எழுதி புகழின் உச்சாணி கொம்பை ஏறித் தொட்ட, அந்த தொழிலாளி விந்தனா இவர்! என் கண்களை நம்பவே முடியவில்லை. தன் கதை மாந்தர்களாக, நலிந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்களாக தேர்வு செய்த இவரா ஜெமீன் குடி! பக்தி என்றும் ஆச்சாரம் என்றும் பலப்படுத்துவதில் தொடங்கி, வயது வளர வளர பகுத்தறிவு சிந்தனையாளனாக பெரியார் வழி நடந்த இவரா விந்தன்!
ராமேசுவரத்திலிருந்து புறப்பட்ட துரித வண்டி சென்னை கூட சேர்ந்திருக்காது. `கல்கியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் விந்தன். அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. அதனால் அவர் மனம் தளரவில்லை. மனிதன் என்ற இதழை துவக்கி, பிறகு பதிப்பகம் ஆரம்பித்து சினிமாவிலும் தடம் பதித்தார். எம்.ஜி.ஆர். - சிவாஜி இணைந்து நடித்த கூண்டுக்கிளிக்கு வசனம் எழுதியவர் இவரே. என்ன இருந்தாலும் அவரது திராவிட நிழல் அவரை விடாது பின் தொடர்ந்தது. புகழின் உச்சிக்கு போக இருந்தவரை ஏணியை எடுத்துவிட்டு வேடிக்கை பார்த்தவர் அனேகர். அதொரு சதி என்றே கூறலாம். வறுமையும் உடல் உபாதைகளும் கை கோர்த்து அவரது மன உறுதியை தாக்கி சிதைத்தன. புகழ் ஏக்கம் மறுபக்கம் அரித்தது. தட்டிக் கொடுக்க ஆள் இல்லாதது, திட்டமிட்ட புகழ் மறைப்பும் சேரவே, உன்னதமான படைப்புகளை - சிந்தனையாளனை தமிழகம் இழந்தது. இது வாழையடி வாழையாக தமிழ் இனத்தின் மீது நடக்கும் படையெடுப்பு! இதை உஷார் படுத்திய பெருந்தகை பெரியாருக்கு நாம் என்றென்றும் கடமையாளிகள். |