சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
இயற்கை: செய்திகள் சிந்தனைகள்
 |
வேதிப் பொருள்கள், நீர்நிலைகள், மலைகள், தாவரங்கள், சங்கு சிப்பிகள், மீன்கள், பூச்சி புழுக்கள், ஊர்வனவும் பிறவும், பறவைகள், இயல்கள், பொதுச் செய்திகள், மணிமொழிகள், வழக்குகள், பெயர்கள் சொற்கள், முக்கிய நூல்கள், வரலாற்றுச் சுருக்கம், வரைப்படங்கள் என இயற்கை குறித்து 18 தலைப்புகளில் அகராதி போல எழுதப்பட்டுள்ள சிறந்த நூல் இது.
நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் பல செய்திகளுக்கு சரியான விளக்கங்களை நூல் அளிக்கிறது. இனி நூலிலிருந்து...
மண் என்பது பல்வேறு வேதிப் பொருட்-களின் கூட்டுச் சேர்க்கை ஆகும். இவ்வேதிப் பொருட்களின் அமைப்பு இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. வளம் நிறைந்த இயற்கையான மண்ணில் சோடியம், பொட்டாசியம், மக்னீ-சியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரம், குளோரின், சிலிக்கான், கந்தகம் முதலிய பொருட்கள் இருக்கும். உயிரினங்களின் சிதைவு, கழிவு மட்கிப் போகும்போது நைட்ரஜன் சேர்ந்த கரிமப் பொருட்கள் மண்ணுக்குக் கிடைக்கின்றன. ஆக இயற்கையான இப்-பொருள்களின் கூட்டணிக்குத் தான் (Chemical Compound) மண் என்று பெயர். இதிலுள்ள வெவ்வேறு வேதியல் மூலப் பொருட்களின் அளவுக்குத் தக்கவாறு இதில் வெவ்வேறு செடி, கொடி, மர வகைகள் செழித்து வளர்கின்றன.
. . . பூமியின் மேல் மண்ணில் ஆக்சிஜன் 49.85 சதவிகிதம், சிலிக்கான் 26.03 சதவிகிதம், அலுமினியம் 7.28 சதவிகிதம், இரும்பு 4.12 சதவிகிதம், சுண்ணாம்பு 3.18 சதவிகிதம், சோடியம் 2.3 சதவிகிதம் இருக்கின்றன.
. . . யுரேனியம்: 13,50,000 கிலோ நிலக்கரியி-லிருந்து கிடைக்கும் ஆற்றலை கால் கிலோ யுரேனியத்தில் இருந்து பெற முடியும்.
. . . கதிரவனின் வயது: இப்புவியில் மட்டு-மேயுள்ள பல்லாயிரக்கணக்கான உயிரினங்-களின் மூல அடிப்படை தேவையான தாவரங்-கள் செழித்து வளர கதிரவனின் ஒளி அத்தி-யாவசியம். அந்த கதிரவனின் ஆயுள் சுமார் 1000 கோடி ஆண்டுகள் என்று அறிவியலாளர் கணக்கிட்டு உள்ளனர். இதோடு, நாளுக்கு நாள் கதிரவனின் எரிபொருளும் தீர்ந்து கொண்டே வருவதாகவும், இன்னும் 460 கோடி ஆண்டு-களுக்குப்பின் எரி பொருள் முற்றிலும் தீர்ந்து ஒளி பொழிவது நின்று, சிதைந்து விடும் என்றும் விண்ணியலாளர் கண்டறிந்துள்ளனர்.
. . . ஆதவன் என்பது சுயமாக ஒளிரக் கூடிய-தொரு சிறு நட்சத்திரமாகும். அதாவது நமக்கு அருகே உள்ள விண்மீனான இது கிட்டத்தட்ட 92 விழுக்காடு ஹைட்ரஜன் வாயுவினால் ஆன தொரு கனிம உருண்டை இதன் உட்புறத்தின் வெப்பம் ஒன்றரை கோடி டிகிரி சென்டிகிரேட். இதில் ஒவ்வொரு வினாடியும் 79 கோடி டன் ஹைட்ரஜன் 69.5 கோடி டன் ஹீலியமாக மாறுகிறது. இதன் ஹைட்ரஜன் அணுக்-கருக்கள் அணு இணைப்பு அல்லது பிளவு மூலம் ஒன்று சேர்ந்து ஹீலியமாக மாறி வருவ-தால் தான் வெப்பமும், ஒளியும் தோன்று-கின்றன. இந்த வெப்பமும் ஒளியும் இன்னும் சுமார் 450 கோடி ஆண்டுகளுக்குத்தான் இருக்கும். அதன் பிறகு இந்த சூரியக் குடும்பம் இருளில் மூழ்கிவிடும்.
. . .
எஃகு என்றால் என்ன? இரும்பு மற்றும் கரிமத்தின் கலவை. சுத்தமான இரும்பு வளையக்கூடியது. அல்லது வளர்க்கக் கூடியது. இதை தேனிரும்பு என உருக்குத் தொழில் முறையாக கட்டுவார்கள். ஆனால் உறுதியான பணிகளுக்கு தேனிரும்பு பயன்படாது. எஃகு ஒரு வகை வலிமை மிக்க இரும்பாகும். மேலும் மாங்கனீஸ், மாலிப்டினம், நிக்கல், வெனடியம், சிலிக்கன், காரீயம், குரோமியம், டங்ஸ்டன், அல்லது கந்தகம் போன்ற தனிமங்கள் கலந்து தயாரிக்கப்படுகையில் எஃகு வெறுமனே கடினத்தை அல்லது மென்மையை மட்டுமல்ல உறுதி, உரம், நெகிழ்மை, அரிமானமற்ற திண்மை, வேலைக்கான உகந்த நிலை, வளை-தன்மை என்று ஏராளமான தொழில் பண்புகளை இவ்வுலோகம் பெற்றுவிடுகிறது.
12,000 டன் சரக்கு இரயிலிருந்து, குண்டூசி, சிறு கடிகாரத்தின் நுண்ணிய பற்சக்கரங்கள் வரை எல்லாம் இரும்புமயம்தான். உலகெங்கும் ஆண்டுக்கு சுமார் 80,00,00,000 டன் எஃகு உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கையின் பல கனிமங்களில் மிக முக்கிய கனிமமாக இரும்பே மதிக்கப்படுகிறது.
. . .
உலகின் தண்ணீர்: உலகம் 75 விழுக்காடு நீரால் மூடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 146 கோடி கன கிலோ மீட்டரில் மொத்த நீர் உள்ளது. இதில் பெருங்கடல், கடல், குடாக்கள், 97.3 சதவிகிதம், குளங்கள், பனியாறுகள், பனி மலைகள், நன்னீர் ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் போன்றவை 2.7 சதவிகிதம்.
. . .
சுனாமி: (துறைமுக அலை) கடலுக்கு அடியில் உண்டாகும் நிலநடுக்கம் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகளை உண்டாக்கும். 100 அடிகளுக்கு மேல் உயரம் எழும்பும் இவ்வலைகள் மணிக்கு 500 கி.மீ. வேகத்திற்கு மேல் சென்று, பல நூறு கி.மீ. கடந்து கரையில் உணரப்படுகின்றன.
. . .
நீர் நிலைகள்: இந்தியாவில் பெரிய ஆறுகள் 14, சிறிய நதிகள் 44, எண்ணற்ற நீரோடைகள், ஏரி, குளம், குட்டைகள், நிலத்தடி நீர் என இருந்தும், இன்னும் 70 விழுக்காடு மக்களுக்குப் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
. . .
உயரும் நீர்: இலண்டன் மாநகரை மூழ்கடித்து விடப்போவதாக நிலத்தடி நீர் அச்சுறுத்துகிறது. நம் நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டு போகும் இத்தருணத்தில் ஒரு வியப்பைக் கவனிக்கலாம். லண்டனில் நிலத்தடி நீரின் மட்டம் இப்போது 40 மீட்டராக உயர்ந்து உள்ளது. ஆண்டுக்கு 3 மீட்டர் என்ற கணக்கில் உயர்ந்து வரும் நீர் மட்டம், கோடிக்கணக்கான லிட்டர் தினமும் உறிஞ்சப்படாததாலும், குறையாததாலும் சுரங்கப் பாதைகள், கட்டிடங்களின் அஸ்தி-வாரங்கள் ஆகியவற்றினுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. இதை சரி செய்திட 50,000 கோடி பவுண்டு வேண்டும் என்பதாகக் கணக்கிடப்படுகிறது. தற்போது ஒரு நாளில் சுமார் 5 கோடி லிட்டர் நிலத்தடி நீர் விரையமாக பம்ப் செய்து அகற்றப்படுகிறது. ஆனால் நிலைமை சீரடைய இன்னும் 10 கோடி லிட்டர் நீரை அகற்ற வேண்டியிருக்கும் என அங்குள்ள தண்ணீர் மற்றும் சுற்றுச் சூழல் முகவாண்மைக் கழகம் தெரிவிக்கிறது.
குடிநீர்: நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடந்த இரண்டாவது உலகக் குடிநீர் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட செய்திகளில் 12 கோடி மக்களுக்கு இன்னும் சுத்தமான குடிநீர் கிடைத்தபாடில்லை. 290 கோடி மக்களுக்குக் கழிவை அப்புறப்படுத்த மோதுமான வசதிகள் இல்லை. அழுக்கு நீரால் பரவும் வியாதிகள் காரணமாக ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் பேர், அதில் பெரும்பாலும் குழந்தைகள் இறக்கின்றனர்.
. . .
கன்ஜன்ஜங்கா இந்தியாவிலேயே உயரமான மலை. இதன் உயரம் 8598 மீ. இதுவும் இமயமலைத் தொடரில் ஒரு சிகரமே.
. . .
இமயமலைத் தொடரின் மொத்த நீளம் சுமார் 2400 கி.மீ. இம் மலைத் தொடர் 200 கோடி ஆண்டுகட்கு முன்னர் ஏற்பட்ட கண்டங்களின் இடப்பெயர்ச்சி மோதலால் எழுந்து உருவானது. இன்றும் உயர்ந்து கொண்டே இருப்பதாக அறிவியல் கூறுகிறது.
. . .
455 எரிமலைகள்: உலகிலுள்ள எரிமலை-களை உறங்கும் / உறங்கா எரிமலைகள் என புவியியலாளர் பிரித்துள்ளனர். இவற்றில் சுமார் 455 எரிமலைகள் உறங்கா எரிமலைகள் என பதிவு செய்துள்ளனர்.
. . . 2100 வகை மரங்கள்: இந்தியாவில் சுமார் 2100 வகை மரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் உயரமான மரம் தேவதரு. உயரம் குறைந்த மரம் இடமுறுக்கி, (காய்கள் தருகி, திருகி இருப்பதால் இப்பெயர்). இது 7 அடி உயரமுடையது. இவை ஆங்கிலத்தில் முறையே னுநடினயச, ளுஉசநற வசநந என்று அழைக்கப்படுகின்றன.
. . .
குளவிகள் (Wasp). எறும்பு, தேனீ, கருவண்டு ஆகியவை தனித்த சிறு குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவை. கூட்டமாகவும், தனியாகவும் வாழும் குளவிகள் பல நிறம், பல வடிவம், பல அளவுகளில் காணப்படும். சில குளவிகள் மண்ணைக் குழைத்தெடுத்துப் போய் குடம் போன்றும், குகை போன்றும், கூடுகளைக் கட்டும், மற்றும் சில சிறிய ஓட்டைகள், பொந்துகள் ஆகியவற்றில் கூடு கட்டும். இவை முற்றிலுமாக பூச்சி உண்ணிகள். கரப்பான், வெட்டுக்கிளி, சிலந்தி, பாச்சை மற்றும் பூந்தேன் ஆகியவை குளவிகளின் உணவுகள். பொதுவாக எல்லாக் குளவிகளும் நச்சுக் கொடுக்குக் கொண்டவை அல்ல. ஒரு சில குளவிகள் மட்டுமே தங்கள் பாதுகாப்புக்கும், உணவைப் பிடிக்கவும் வீரியும் குறைந்த நஞ்சைப் பெற்றுள்ளன. ஆனால் மனிதருக்கு இங்கு தீங்-கற்றவை. வேளாண்மைக்கு ஊறு விளைவிக்கும் பூச்சி, புழுக்களை குளவிகளை உண்பதால் இதுவும் உழவனின் நண்பன் என மகிழ்ந்து போற்றப்பட வேண்டும். ஏறத்தாழ ஒரு லட்சம் வகைக் குளவிகள் உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
. . .
கரையான்கள் மண்புழுக்களைப் போல நன்மை செய்பவை. மட்கிப் போக நெடுங்காலம் எடுத்துக் கொள்ளும் உறுதியான மரம், இலை போன்றவற்றை உண்டு கரைத்து மண்ணில் கலப்பதோடு, மண்ணை அடிக்கடிப் புரட்டிப் போட்டுக் காற்றும், ஈரம் உடுருவ வழி வகுகின்றன. மேலும், இவற்றின் கழிவுப் பொருட்கள் மண்ணின் உரவளத்தை அதிகப்-படுத்துகின்றன. கரையான்களின் ஆண், பெண் இனப்பெருக்க சாதிகள் சிறகுள்ளவை. அவையே ஈசல்கள் ஆகும்.
. . . உண்மைத் தேன்: பூவினுள் அடிப்ப பகுதியில் இருக்கும் ஒருவகைத் தெள்ளிய இனிப்பான திரவமே பூந்தேன் எனப்படும் சூநஉவயச. தேனீ தனது நீண்ட உறிஞ்சிக் குழலை பூவினுள் செலுத்தி பூந்தேனை உறிஞ்சும் போது அது தேனியின் மார்பு பைக்குள் போய்ச் சேர்ந்து அங்குள்ள ஒருவித நீர்ம வேதிப் பொருளுடன் கலக்கிறது. இதைத் தம் கூட்டினுள் எடுத்தூற்றி திரும்பிவிட, மற்ற தேனீக்கள் தமது சிறகால் விசிறி விட்டு அத்தேனில் உள்ள நீரின் ஒரு பகுதியை ஆவியாக்கி பக்குவப்படுத்தி தம் உணவுக்காகத் தேனைச் சேமித்து பாதுகாக்கின்றன.
. . .
1000 வகைத் தேள்கள்: உலகம் முழுவதிலுமுள்ள சுமார் 1000 வகைத் தேள்கள் வீரியம் குறைந்த சிறு நஞ்சைப் பெற்றுள்ளன. அரை அங்குலம் முதல் ஏழு அங்குலம் வரை காணப்படும் நமது தேள்கள் வாயால் கடித்தாலோ, இடுக்கி போன்ற தன் கைகளால் பற்றினாலோ ஆபத்து இல்லை. பெரிய காட்டுத் தேள்கள் ஒருபோதும் மனிதரைக் கொட்டு-வதில்லை. சின்னஞ் சிறிய செந்தேள்களே தற்செயலாக மனிதனைக் கொட்டி விடுகின்றன.
. . .
கட்செவி: காது அல்லது புறச் செவி இல்லாமையால் பாம்புகள் ஒலியின் அதிர்-வினை உணர்ந்து அத்திசையில் நோக்குவதால் மக்களில் பலர் பாம்புகள் கண்ணையே காதாகவும் பயன்படுத்துகின்றன என்று கருதுகின்றனர். இதனால்தான் தமிழில் பாம்பின் செவி கட்செவி எனப்பட்டது.
. . .
படம் எடுத்தல்: நல்ல பாம்பின் கழுத்துப் பகுதி உப்பி விரியும் தன்மை கொண்டது. எதிரியை அச்ச மூட்டுவதற்காக பாம்பு, தன் கழுத்தை விரிக்கிறது. மகுடி ஊதுபவன் அதன் முகுத்துக்கு நேரே ஊதும் போது மகுடிக் காற்று பாம்பின் முகத்தில் படுகிறது. அச்சத்-தால் கழுத்துச் சதையை விரித்துக் காட்டும் பாம்பு நிலைக் குத்திட்டு நேரே பார்க்கிறது. (இது படம் எடுத்தல், அதாவது பின் கழுத்-திலுள்ள இரண்டு கண் வடிவ அடையாளத்-தைக் காட்டுதல்) பாம்பாட்டி தன் விரல்களை மடக்கிக் கொண்டு வலது கையை பாம்பின் முன் இடமும் வலமும் ஆட்டுகிறான். கையையே காணும் பாம்பு அதோடு சேர்ந்து அசைவதை இசைக்கேற்ப ஆடுவதாகவும், மயங்குவதாகவும் நம்புவது அறியாமையாகும்.
. . .
பாம்பின் நஞ்சு (Venom) என்பது தூய புரோட்டீன் ஆகும். இதிலிருந்து மனிதருக்கான பல்வேறு மருந்துகள் செய்யப்படுகின்றன. மேலும் பல கொடிய, பெரிய நோய்களுக்கான மருந்தெனக் கருதப்பட்டு மேலை நாடுகளில் ஆராய்ச்சிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
. . .
மூடநம்பிக்கை: பாம்பு கடிக்கு பல வித நாட்டு வைத்திய முறைகள் சொல்லப்-படுகின்றன. மந்திரம் ஓதுதல், பாடம் அடித்தல், பச்சிலை வைத்தியம், தொலைபேசி சிகிச்சை, கம்பியூட்டர் சிகிச்சை, வாழைப் பட்டைச்சாறு என எத்தனை எத்தனையோ! இவை யாவும் புகழ்பெற்ற மூட நம்பிக்கைகளே. நம்பகமான நல்லதொரு சிகிச்சை மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக் கொள்வதுதான்.
. . . வெறும் கற்பனை: நல்ல பாம்பு, சாரைப்பாம்பு இணைவது, பின்னிக் கொள்வது, உடலுறவு கொள்வது என்ப-தெல்லாம் வெறும் கற்பனைகளே. அதனதன் இனத்திலேயே ஆண்-பெண் உண்டு.
. . .
மகுடியின் இசைக்குப் பாம்பு மயங்கு-வதில்லை. இந்தக் கற்பனை அந்நியப் பண்பாட்டில், இலக்கியத்தில் உருவாகி நமது பண்பாட்டில் புகுத்தப்பட்டு உண்மையாக்-கப்பட்ட பெரிய பொய். இதன் சார்பாகவே புன்னாகவராளி என்ற பாம்பு இராகமும் கண்டுபிடிக்கப்பட்டது.
. . .
வெள்ளைப்புலிகள் சாதாரணப் புலிகளுக்கு பிறப்பவையே. ஆனால், நிறமிக் குறை-பாட்டுடன் பிறப்பது அல்பினோவால் (Albino) அல்ல. மனிதர்களுக்கு வரும் லூகோ டர்மாவைப் போல கருவிலேயே உருவாகி விடுகின்றன. சிங்கம், புலிகளில் வெள்ளை நிறமும், சிறுத்தைகளில் கருப்பு நிறமும் காட்டில் எப்பொழுதாவது தோன்றுவதுண்டு.
. . .
ஒரு மின்னல் 0.1 வினாடி முதல் அதிகபட்சம் 1.6 வினாடி நேரம்தான் மின்னுகிறது.
. . .
மின்சாரம்: ஒரு முறை மின்னல் அடிக்கும்-போது குறைந்தது 3 கோடி வோல்ட் மின்சாரம் வெளிப்படுகிறது. இந்த வெப்பத்தின் அளவு 30000 டிகிரி செல்சியஸ். மின்னலின் மின்சாரம் மிக உயரழுத்தம் கொண்டது. இது கண்டறியப்-பட்டாலும், கட்டுப்படுத்தி வைப்பது மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை.
. . .
இப்பூமியின் வயது: தொன்மையான பாறைகளின் பகுப்பாய்வு அடிப்படையில் இப்பூமியின் வயது சுமார் 500 கோடி ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்புவியின் மொத்தம் பரப்பளவு 51,01,00,500 ச.கி.மீ. இதில் மொத்த நிலப்பரப்பளவு 14,89,50,800 ச.கி.மீ., நீர்ப்பரப்பளவு 36,11,79,700 ச.கி.மீ. மண் அடுக்கு சராசரியாக 40 கி.மீ. தடிமன் உடையது. இதில் இந்தியாவின் பரப்பளவு 32,88,000 ச.கி.மீ. அதாவது 32.9 கோடி ஹெக்டர். இதில் 6 கோடி ஏக்கர் மட்டுமே காடுகள்.
|