தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
பொருளாதார அளவுகோல்
மலிவான வாதம்
இந்த ஆண்டே அமலாகும்
இட ஒதுக்கீடு தேவையே!
இந்துத்துவா
இவர்தான் பெரியார்
உலகப் பகுத்தறிவாளர்கள்
கவிதை
சிறுகதை
உண(ர்)வகம்
பகுத்தறிவு
இலக்கியம்
சிறந்த நூலிலிருந்து
அறிவியலார்
நூல் அறிமுகம்
சோழர் காலத்தில் பரவிய
அணுஅணுவாய்
பளீர்... பளீர்...

 

 

அறிவியலார்

ஒரு சகாப்தத்தின் முடிவு

சர் ஆர்தர் சார்லஸ் கிளார்க் பல நாள் நோய் வாய்ப்பட்டிருந்தார். கடைசியில் சாவு வந்தேவிட்டது. ஆம், ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரைத்தான், கொல்லியர்ஸ் என்சைக்ளோபீடியா வர்ணித்தது: உலகின் மிகச் சிறந்த அறிவியல் கதை எழுத்தாளர்!

அவர்தாம் 1945 இல் அறிவியல் வட்டாரத்-தில் அறிமுகம் ஆனார்; உலகின் சுற்றுப்-புறத்தில் நடக்கும் நிகழ்வுகளை ரேடியோ அலைகள் மூலம் கண்காணித்துச் செய்திகள் அனுப்பிடும் செயற்கைக் கோள்களைப் பறக்க-விட முடியும் என்று எழுதினார். 20 ஆண்டு-களுக்குப் பிறகு அது மெய்ப்பிக்கப்பட்டது.

இன்றோ, ஏராளமான தொலைக் காட்சிகள் உயிர் வாழ்வதும் அதனால்தான். லட்சக்-கணக்கான தொலை பேசி அழைப்புகள், பேச்சுகள் சாத்தியமாவதும் அதனால்தான். நாம் நன்றி காட்ட வேண்டாமா, அவருக்கு? செய்தித் தொடர்புக்குரிய விண்வெளிப் பாதை அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது, கிளார்க் பெல்ட் என்று!

பல சாதனைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் கணித்துக் கதைகளில் எழுதி விட்டார்; தொலைப் பதிவி, கைப் பேசி, கணினி மூலம் உலகின் அனைத்தும் அனை-வரும் பெறக் கூடிய வசதி, தொலைக்காட்சி என்று பலவும் கிடைப்பதற்கு முன்னாலேயே எழுதிக் காட்டிய தொலைநோக்காளர்.

1954 இல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணமானார். அங்கே உள்ள உலகின் மிகப் பெரிய பவழப் பாறை வளர்ச்சியைப் பார்க்கப் போனார். சேதுக் கால்வாய்த் திட்டத்திற்காக இடிக்கப்பட வேண்டிய ஆதாம் பாலம் போன்ற மணல் மேட்டுப் பகுதி இது. கொழும்பில் கப்பல் நின்றபோது அரைநாள் அவகாசத்தில் ரோட்னி ஜான் கிளாஸ் என்பவரைச் சந்தித்தார். அவர் கொழும்பு விலங்குக் காட்சி-யகத்தின் உதவி இயக்குநர். உலகப் பெரும் பவழப் பாறையைப் பார்த்துத் திரும்பும் வழியில் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் நீலை ஆராய்ந்து பார்த்திட வருமாறு கிளார்க்கை அவர் கேட்டுக் கொண்டார். உறுதியாக எதையும் கூறாமல், கிளார்க் புறப்பட்டுப் போய் ஆஸ்திரேலியாவில் அவருடைய நண்பர் மைக் வில்சன் என்பாரைச் சந்தித்தார்.

இருவருமாகக் கடல் நீரின் மேலும் கடலுக்கு அடியிலுமாகப் பல ஆய்வுகளைச் செய்தனர். அப்பொழுது அவர்கள் இருவவரும் எடுத்த முடிவுதான், அடுத்த ஆய்வுத் தளம் இந்திய மாக்கடல்தான் என்பது!

1956 ஜனவரியில் கிளார்க் கொழும்பு வந்தார். ஜான்க்ளாஸ், வில்சன் ஆகிய இருவருடன் சேர்ந்து தென் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுக்குச் சென்றார். சில ஆண்டுகளிலேயே ஆழ்கடலில் அமிழ்ந்து கிடந்த பல கப்பல்களின் உடைசல்களைக் கண்டுபிடித்தார். அவற்றில் பல வரலாற்றுச் சிறப்புப் பெற்றவை. அவற்றில் ஒரு கப்பலில் முகலாயர் காலத்து வெள்ளி நாணயங்களும் பல பீரங்கிகளும் அடக்கம். அதனை விவரணப் படமாக்கியுள்ளனர். பெரும் மணல் திட்டுகளின் பொக்கிஷம் என்ற தலைப்பில்!

சில ஆண்டுகள் மட்டுமே இலங்கையில் தங்கலாம் என்று வந்தவர் அந்நாட்டின் சிந்தை கவரும் அழகில் மயங்கி அங்கேயே தங்கிவிட முடிவு செய்துவிட்டார். இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு அற்புதமானது; எனவே இங்கேயே நிரந்தரமாக இருக்கப் போகிறேன் என்று அறிவித்துவிட்டார். இந்த நாட்டின் நம்பிக்கைகள், மதக் கூறுகளை நான் ஏற்கவில்லை. என்றாலும் என்னைக் கவர்ந்து விட்டதால் என் நூல்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டேன் என்று அவர் பின்னாள்களில் குறிப்பிட்டார்.

திமிங்கிலங்கள் எப்படி ஆழ்கடலில் கருத்தரிக்-கின்றன என்பது பற்றி எழுதப்பட்ட அவரின் Deep Range எனும் நாவல் 1957 இல் வெளிவந்தது. புத்த நெறி எந்த அளவுக்கு அவர் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இந்நூலில் காணலாம். அந்த நெறிக்கு இருந்த மூன்று பெரிய போட்டிகளைச் சமாளித்தும் மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்தும் மகத்தான கொள்கைகளைக் கொண்டி-ருக்கும் ஒரே மதம் புத்தம்தான் என்று அதில் எழுதியிருக்கிறார். தற்போது என் இல்லம் இங்கிலாந்து அல்ல; இலங்கைதான். நான் இதை ஒப்புக்குச் சொல்லவில்லை; இதைத் தவிர வேறு இடம் எதுவும் உண்மையாகப் புலப்படவில்லை என்று ஒரு நாவலில் குறிப்பிட்டிருக்கிறார்.

சர் கிளார்க் எழுதிய முதல் நாவல் Against the fall of night இங்கிலாந்தில் 1948 ல் வெளியிடப்-பட்டது முதல் எழுதத் தொடங்கினார். ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் The Final Odyssey என்ற தலைப்பில் 1997 இல் வெளிவந்த நாவல் அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. சர் ஆர்தர் சி. கிளார்க் ஒரு சிறந்த பகுத்தறி-வாளர். கடவுள், மத நம்பிக்கைகள் அற்றவர். மனித வாழ்க்கையில் மதச் சடங்குகளுக்கு இடம் அறவே கிடையாது என்று கூறியதோடு அதைக் கடைப் பிடித்தவர், தம் இறப்புக்குப் பிறகும்! ஆம், மதவாரியாகச் சுடலைகள் உள்ள உலகம் இது! இந்து, புத்த, கிறித்துவ, இசுலாமிய, யூத இடுகாடுகள் என்று எல்லா நாடுகளிலும் தனித்தனிச் சுடலைகள் இருக்-கின்றன. இவற்றில் எவற்றிலும் தம் உடல் புதைக்கப்படக்கூடாது என்கிற தம் முடிவைத் தம் உதவியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அவருக்கு மனைவியோ மக்களோ கிடையாது. உதவியாளர்கள் அவ்வாறே மதச் சார்பற்ற (Secular) சுடலையில்தான் அவரைப் புதைத்-துள்ளனர், இலங்கையில் !
ஒரு சகாப்த முடிவுக்கு வந்துவிட்டது.

- செங்கோ