தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
பொருளாதார அளவுகோல்
மலிவான வாதம்
இந்த ஆண்டே அமலாகும்
இட ஒதுக்கீடு தேவையே!
இந்துத்துவா
இவர்தான் பெரியார்
உலகப் பகுத்தறிவாளர்கள்
கவிதை
சிறுகதை
உண(ர்)வகம்
பகுத்தறிவு
இலக்கியம்
சிறந்த நூலிலிருந்து
அறிவியலார்
நூல் அறிமுகம்
சோழர் காலத்தில் பரவிய
அணுஅணுவாய்
பளீர்... பளீர்...

 

 

அணுஅணுவாய் - 8

பிறந்தது அணு யுகம்

- சமா.இளவரசன்

சோதனை செய்து ஜப்பானை மிரட்டுவது என்ற யோசனைக்கு நோநோ என்று தலையாட்டி மறுப்புத் தெரிவித்தவர்கள் பிறகெதற்கு டிரினிடி சோதனை நடத்தினார்கள்? காரணமில்லாமல் இல்லை. பேரழிவை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்ற ஆயுதம் என்ற வகையில் தான் அது பற்றி அறிந்திருந்ததார்களே தவிர, அது விளைவிக்கும் அழிவின் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.
அதைவிட இன்னொரு சிக்கலும் இருந்தது. யுரேனியம் 235 வேதிப் பொருளைக் கொண்டு உருவாக்கப்படும் அணுகுண்டை வெடிக்கச் செய்ய துப்பாக்கி மாதிரி (Green Type assembly method) பயன்படுத்தப்பட்டது. யுரேனியம் தயாரிப்பதை விடவும் புளூட்-டோனியம் தயாரிப்பது இன்னும் எளிதாக இருந்தது. 1942இல் என்ரிகோ பெர்மி, தனித்து வடிவமைக்-கப்பட்ட நியூக்ளியர் ரியாக்ஷின் துளை விளை-பொருளாக (by product) புளூட்-டோனியத்தைச் கண்டுபிடித்தார். இது விளை-விக்கக்கூடிய அழிவு இன்னும் அதிகமாக இருக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதை வெடிக்கச் செய்ய முந்தைய துப்பாக்கி மாதிரி வெடிப்பு பயன்-படாது.
எனவே இதனை வெடிக்கச் செய்ய இம்ப்ளோசன் (Implosion) முறையில் உயரிய வெடிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த முறையில் ஒரு சிக்கல் இருந்தது. நடுவில் வைக்கப்-பட்டுள்ள புளூட்டோனிய அணு சரியாக வெடிக்க வேண்டுமானால் அதனைச் சுற்றிய வெடிப்பும் சரியாக இருக்கவேண்டும். சுற்றியுள்ள வெடி மருந்துகள் சம அளவில் வெடித்தால் தான் புளூட்டோனியம் தன் அழிவுத் திறனைக் காட்ட முடியும். இல்லை-யெனில் மதிப்புமிக்க புளூட்-டோனியம் புஸ்வானமாகி வீணாகி-விடும். எனவே நேரடியாக களத்தில் பயன்படுத்துவதற்கு முன் ஒருமுறை சோதனை செய்து பார்த்து விடுவது சிறந்தது என்று மன்ஹாட்டன் திட்டத்தின் ராணுவத் தளபதி ஜென்ரல் லெஸ்லீ குருவ்ஸூம், அறிவியல் பிரிவுத் தலைவர் ராபர்ட் ஓபன்ஹெஸ்மரும் முடிவெடுத்-திருந்தார்கள்.
யுரேனியத்திற்கென வடிவமைக்கப்-பட்ட வெடிப்பு மாதிரியில் எந்த அய்யமும் இல்லை, அதுவுமில்லாமல் அணு-வெடிப்-புக்களை தேவையில்லையென முடிவு செய்யப்பட்டு நேரே அது பயன்-பாட்டுக்குக் கொண்டு செல்லப்-பட்டது.
மறுபுறம், புளுட்டோனியம் சோதனைக்கான இடம் அலமோ கேர்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ராணுவப் பயிற்சிக்களமாகவும் வெடி-குண்டு சோதனைக்களமாகவும் இருந்த அந்த பாலைவனப் பகுதிக்கு இறப்பிற்கான பயனார் என்றும் பெயரிருந்தது.
லாஸ் அலமாஸில் இருந்து 210 மைல் தொலைவில் இருந்தது சோதனைக்-களம். 1945 மே மாதம் சோதனைக் களத்தின் சுற்றுப் பகுதி முழுக்க விரிவான ஆய்வுகள் நடத்தப்-பட்டன. மே 7ஆம் நாள் 108 டன் டி.என்.டி. வெடித்து சோதனை செய்யப்பட்டது. மே, ஜூன் மாதங்களில் களத்தைத் தயார் செய்யும் பாயி முழுக்க நடைபெற்ற ஜூலை துவக்கத்தில் நிறைவு பெற்றன. சரியாக வெடிப்பு நிகழப் போகும் இடத்திலிருந்து (Ground Zero) 10000 யார்டு (ஏறத்தாழ 10 கி.மீ.) தொலைவில் வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் தொலை உளர் மையங்கள், கண்காணிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டன.
அதற்கடுத்து 16 கி.மீ தொலைவில் தென் கிழக்கில் ஒரு மையமும், 32 கி.மீ. தொலைவில் வட மேற்கில் கம்பேனியா மலையில் மூன்றாவது மையமும் அமைக்கப்பட்டன.
கேட்ஜெட் (The Gadget) என்று பெயரிடப்-பட்டிருந்த அணுகுண்டு 20 மீட்டர் உயர இரும்புத்தூணின் மேலிருந்து தூக்கி எறிவதற்கு ஏதுவாக வைக்கப்பட்டிருந்தது. விமானத்தி-லிருந்து தூக்கி எறியப்பட்ட பின் தரை-யிறங்கும் முன் வெடிப்பு நிகழ்ந்தால் அதன் சக்தி அபரிமிதமாக இருக்கு:ம என்ற கணிப்பை சோதிக்க இவ்வாறு செய்யப்பட்டது. ஒருவேளை வெடிப்பு சொதப்பலாக முடிந்தால் புளூட்டோனியம் வீணாகாமல் இருக்க அணுகுண்டை ஜம்போ என்று பெயரிடப்-பட்ட கலனில் வைத்து வெடிக்க வைக்கலாம் என்று யோசனை செய்யப்பட்டது. பின்னர் அம்முடிவு கைவிடப்பட்டு ஜம்போ தூணின் அருகிலேயே வைக்கப்பட்டு விட்டது. அணுகுண்டு மட்டும் தூணின் உச்சியில் பொருத்தப்பட்டது.
1945, ஜூலை 16 அதிகாலை 4.00 மணி என்று நேரம் குறிக்கப்பட்டது. பணிகள் மும்மரமாக நடைபெற்றன. ஆனால் காலநிலை ஒத்துழைக்கவில்லை. மழை பெய்து கொண்டி-ருந்தது. கூரிய தடுப்புகளுக்குப் பின்னால் கூடிய மட்டும் பாதுகாப்பாக அனைவரும் அவரவர் இடத்தில் நிலை நிறுத்தப்பட்டனர்.
ஆனால் திட்டமிட்டபடி 4 மணிக்கு சோதனை நடத்த வாய்ப்பில்லை. இன்னும் கொஞ்ச பொறுக்க முடிவு செய்யப்பட்டது. 10 கி.மீ. தொலைவிலிருந்த கண்காணிப்பு மையத்தில் இருந்த க்ரூவ்ஸ் ஒபன்ஹெய்மர் உள்ளிட்டோர் 5.30 மணிக்கு சோதனை நடத்துவது என முடிவு செய்தனர்.
இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்வது என்ரிகோ பெர்மி பந்தயம் கட்டினார். இந்தச் சோதனை எத்தகைய அழிவை ஏற்படுத்தும்? அணுகுண்டு வெடிக்குமா? இது மெக்ஸிகோவை அழிக்குமா? இல்லை உலகையே சிதைக்குமா? என்றார். அணுகுண்டு தயாரித்தவரான ஒபன்ஹெய்மர் வாய்ப்பேயில்லை. வெடிக்காது என்று 10 டாலர் பந்தயம் கட்டினார். ஜார்ஜ் கிஸ்டியா கோவ்ஸ்கி தனது ஒரு மாதச் சம்பளத்தை பந்தயம் கட்டினார். கண்டிப்பாக வெடிக்கும் என்று.
இன்னொரு பக்கம் எட்வர்ட் டெல்லர் அந்த விடியாத அதிகாலை நேரத்தில் சன்ஸ்கிரீன் லோசனை எடுத்து தடவிக்-கொண்டு மற்றவருக்கு:ம கொடுத்து தடவச் சொல்லி பீதியைக் கிளப்பினார்.
நடக்கப்போவது என்னவென்று உறுதி-யாகச் சொல்ல முடியாது. ஏதும் விபத்து நடந்தால் மேலும் திட்டத்தைத் தொடர்வதற்கு யாராவது ஒருவர் எஞ்சியிருக்க வேண்டும். எனவே ஓபன்ஹெய்மர் 10 கி.மீ. தொலைவில் உள்ள மையத்திலும், லெஸ்லி குரூவ்ஸ் 16 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள கண்-காணிப்பு மையத்திற்குச் செல்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
வெடிப்பினால் ஏற்படும் வெப்பம், காற்று வேகம், அதிர்வுகள், இவற்றுக்கெல்லாம் மேலாக கதிர்வீச்சு ஆகியவற்றின் அளவு, தன்மை குறித்து ஆராய வேண்டியது முக்கியம். கவுண்ட் டவுன் தொடங்கியது. அனைவரும் பாதங்கள் குண்டு வெடிக்கும் இடத்தை நோக்கியபடி இருக்க தரையில் படுத்து-விட்டனர்.
உலகை அழிக்கப் புறப்படப்போகும் பூதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தப் பாலைவனத்தில் மயான அமைதி நிலவியது; அறிவிக்கப்படும் நொடிக் கணக்கு தவிர வேறு ஒலி இல்லை. நேரம் நிமிடத்தில் வந்தது. நிமிடம் ஒன்றானது. இஷிடோர் ரபி தளக்-கருகில் படுத்திருந்த க்ரீஸனைக் கேட்டார் உனக்குப் பயமாக இல்லையா? இல்லை என்றான் க்ரீஸன். நொடிகள் இத்தனை நீளமாக இருக்குமா என்று அப்போது தான் அவர்கள் உணர்ந்தார்கள்.
நொடிக்கணக்கு பத்துக்கு வந்தது. கிரீஸன் ரபியைப் பார்த்து இப்போது எனக்குப் பயமாயிருக்கிறது என்றார்.
நொடிக் கணக்கு மூன்றாது; உருகி இரண்டாவது; குறுகி ஒன்றானது...
சாம் ஆலிசன் கத்தினார் இப்போது....!
1945 ஜூலை 16 காலை 5.30க்கு பிறந்தது அணுகுண்டுயுகம்.

- (தொடரும்)