தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
பொருளாதார அளவுகோல்
மலிவான வாதம்
இந்த ஆண்டே அமலாகும்
இட ஒதுக்கீடு தேவையே!
இந்துத்துவா
இவர்தான் பெரியார்
உலகப் பகுத்தறிவாளர்கள்
கவிதை
சிறுகதை
உண(ர்)வகம்
பகுத்தறிவு
இலக்கியம்
சிறந்த நூலிலிருந்து
அறிவியலார்
நூல் அறிமுகம்
சோழர் காலத்தில் பரவிய
அணுஅணுவாய்
பளீர்... பளீர்...

 

 

அமெரிக்க இராணுவ வீரர்களின் நிலை

ஒவ்வொரு நாளும் அய்ந்து அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இராக் போர் தொடங்கும் முன்பு அதாவது 2002இல் 350 தற்கொலை முயற்சிகள் இருந்தன. 2007இல் இது 2100 ஆக அதிகரித்துவிட்டது. தொடர்ச்சியான போர்ப் பணியின் காரணமாக அமெரிக்க இராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்கிறது அமெரிக்க இராணுவ வீரர்கள் பற்றி எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு.

எட்டு பேர் பேசும் மொழி

இந்தியாவில் திராவிடம், இந்தோ-ஆரியன், ஈரானியன், அஸ்ட்ரோ-ஆசியாடிக், திபெத்தோ-பர்மியன் ஆகிய அய்ந்து மொழிக் குடும்பங்களோடு ஆறாவதாக அந்தமான் மொழியும் இருந்தது என்று டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலையின் மொழியில் துறை பேராசிரியர் அன்விதா அபி கூறியுள்ளார். இம்மொழி குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ள இவர், அந்தமான் மொழி என்பது 10 மொழிகளின் தொகுப்பு. இந்த மொழியை தற்போது எட்டு பேர் மட்டுமே பேசி வருகின்றனர் என்றார்.


பளீர்... பளீர்...

பிராமணன் வீட்டிற்கு வந்தால் தீட்டு!

"பிராமணர்கள் வீட்டிற்கு வந்து சென்றவுடன் தீட்டு பட்டு விட்டதாக எண்ணி வீட்டைச் சுத்தம் செய்யும் பழங்குடியை அறிந்திருக்கிறோமா?
குறிச்சன் பழங்குடியினர் பிராமணர்களிடம் மிகுந்த வெறுப்புடையவர்கள். பிராமணன் ஒருவன் குறிச்சன் இல்லத்திற்கு வந்து போவானாயின் அவன் புறப்பட்டுப் போனவுடன், அவன் உட்கார்ந்திருந்த இடத்தினைச் சாணியால் மெழுகித் தீட்டு நீக்குவர் (தர்ஸ்டன் 1909, 4:157) என்பதை கவனத்தில் கொண்டுள்ளோமா?

- பக்தவத்சல பாரதி (சமூக விஞ்ஞானம், மலர் 5 இதழ் 19, பக்கம் 21)


மீனவர்களை கொச்சைப்படுத்துவதா?

சமீப காலமாக திரைப்படங்களிலும், சின்னத்தி ரையில் ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர்களிலும், சித்தரிக்கப்படுகின்ற வில்லன்கள் மீனவர்களாகவும், அவர்களின் கூடாரமாக, மீன்பிடித் துறைமுகங் களையும், பயணக் கைதிகளை விசைபடகுகளில் கடத்தி வந்து வைத்திருப்பது போலவும், தனக்கு ஆகாதவர் களை கொன்று கடலில் தள்ளுவது போலவும், சகட்டு மேனிக்கு கதா பாத்திரங்களை சித்தரித்து வருகின்றனர். அதேபோல ஒரு தொலைக்காட்சியில் சிரிக்க வைக்கி றேன் என்ற பேரில், ஒரு நபர், ஒரு பெண்ணைப் பார்த்து, உன்னை பார்க்கும்போது தெரியுது, எந்த குப்பத்திலிருந்து வர்ற? என்று கொச்சையாகப் பேசுவது. ஒரு உழைக்கும் சமூகத்தையே இழிவுபடுத்துவது ஆகும்.
பாரம்பரியமாக மீன்பிடித் தொழில் செய்து, மீனவ மக்களால் பிடித்து வரப்படும் மீன்களை, வாங்கிச் சென்று நகரின் பல பகுதிகளிலும், விற்பனை செய்யும் தொழிலை செய்து வரும் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் குறிப்பாக பெண்கள், ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே குவியும் இடமும், கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நம் நாட்டிற்கு அந்நியச் செலாவணியாக பல ஆயிரங்கோடியை ஈட்டித் தருகின்ற இடமும், மீன்பிடித் தொழிலுக்கு தேவையான சார்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் உழைத்துச் சிந்தும் வியர்வை புரளும் இடமும் ஆகிய மீன்பிடி துறை முகத்தை ரவுடிகளின் கூடாரமாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
ஒவ்வொரு நாளும் இயற்கையுடன் போராடி, உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித் தொழில் செய்து வரும், மீனவர்களைப் பற்றி இனிமேலும் இதுபோன்ற கதா பாத்திரங்களாக சித்தரித்தாலும், மீனவ மகளிரை கொச்சைப் படுத்தும் வகையில் காட்சிகளும் அமையு மானால் மீனவ மக்களின் வீட்டைப் பெருக்கமட்டுமே உபயோகப்படுத்திவந்த துடைப்பத்தை திரைப்படம், சின்னத்திரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களுக்கு எதிராக தூக்குவோம்.
மீன்பிடி துறைமுகத் தளத்தை சினிமா படபிடிப்பிற்கு வாடகைக்கு விட்டு வசூல் செய்து வரும் மீன்பிடித் துறைமுக அதிகாரிகள், இனிமேலும் மீனவர்களை ரவுடிகளாகவும், மீன்பிடித் துறைமுகத்தை ரவுகளின் இருப்பிடமாகவும், குற்றம் நடைபெறுகின்ற இடமாக காட்டுகின்ற வகையில் சினிமா படம் எடுக்க அனுமதிப்பார்களேயானால் மீனவர்களின் போராட்டம் மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கு எதிராகவும் நடக்கும்.

-'புரட்சிக்கயல்' பிப்ரவரி, 2008 சிற்றிதழின் தலையங்கம்


இருட்டு

உலகில் 160 கோடி மக்கள் மின்சார வசதி இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். அரிக்கேன் விளக்கு களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு அரசு மானிய உதவி வழங்க முன்வரவேண்டும்

- அறிவியலாளர் ஆர்.கே. பச்சோரி

விண்வெளிப் பயணம்


1961 ஆம் ஆண்டு யூரி காரின் முதல் முறையாக விண்வெளிப் பயணம் மேற் கொண்டார். அதன்பின்னர் இதுவரை 450 பேர் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். 2004ஆம் ஆண்டு முதல் முறையாக தனியார் விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது. வர்ஜின் காலாக்டிக் என்ற விண்வெளிப்பயண தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 90 ஆயிரம் பேர் விண்வெளிப் பயணத்திற்காக பதிவு செய்துள்ளனர். 27 நாடுகளைச் சேர்ந்த இவர்களில் 80 சதவீதத்தினர் ஆண்கள் 20 சதவீதத்தினர் பெண்கள்.