இவர் பகுத்தறிவாளர்
ஜூலியா கிலார்ட்
பெயர்: ஜுலியா கிலார்ட் (Julia Eileen Gillard)
பிறப்பு: செப்டம்பர் 29,1961
பிறந்த இடம்: பேரி நகரம், வேல்ஸ் நாடு
துறை: அரசியல் (ஆஸ்திரேலியப் பிரதமர்)
வகித்த பதவிகள் : 1998 ஆம் ஆண்டு நாடளுமன்ற உறுப்பினராகவும், 2007 முதல் 2010 வரை ஆஸ்திரேலிய துணைப் பிரதமரா கவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார்.
வகிக்கும் பதவிகள்: ஆஸ்திரேலிய தொழிற்கட்சித் தலைவரான இவர், ஆஸ்திரேலியா நாட்டின் 27 ஆவது பிரதமராக இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதனை: ஆஸ்திரேலிய நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சிறப்பு: தனது கல்லூரிக்காலங்களிலேயே தொழிற்சங்கங்களில் ஈடுபட்டுப் பணி யாற்றியவர். இடதுசாரிச் சிந்தனையாளரான இவர், சோசலிசக் கொள்கைகளுக்காக அரசியல் இயக்கங்களில் பங்கெடுத்தார். எல்லோருக்கும் சமமான கல்வி குறித்து தொடர்ந்து குரல் எழுப்பியவர்.தனது சுயகுறிப்புகளில் தான் எந்த மதத்தையும் சேராதவர் என்று குறிப்பிடுகிறார்
பத்திரிகையாளர்: உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா?
ஜுலியா கிலார்ட்: நான் ஒரு தீவிர கிறித்துவ குடும்பத்தில் பிறந்து அதன் வழிமுறையில் வளர்க்கப்பட்டிருந்தாலும், நான் அந்த மதத்தை சாராதவள். எனக்கு சுத்தமாக கடவுள் நம்பிக்கை கிடையாது. மற்றவர்களின் மத உணர்வுகளை மதிக்கிறேன்,ஆனாலும் எனக்கு மத நம்பிக்கையில்லை.
- புருனோ