Home | Contact us
 

ஆகஸ்ட்1631_2010


முதலில் உன் வாலை அறு

கருணாநிதிங்கறது கெட்ட வார்த்தையா? ஜெயலலிதா அப்படி கூப்பிட்டா இவரு ஏன் கவலைப் படணும். அப்படின்னு ரொம்ப அக்கறையா கவலைப்பட்டிருக்கிறாரு நம்ம தினமணி வைத்தியநாத அய்யர். கருணாநிதின்னு பெயர் சொல்லி மட்டுமா அந்தம்மா கூப்பிட்டாங்க...

மரியாதைக் குறைவான சொற்களை அவங்க பயன்படுத்தினப்போ, இப்படி பேசலாமா?ன்னு பேனாவை அந்தப் பக்கம் திருப்பாதவரு, இப்போ அதுக்கு பதில் கலைஞர் சொன்னதும் கோபப் படுறாரு. தனியா கலைஞரை மட்டும் சொல்ல முடியுமா.. அப்புறம் நடுநிலைமை நாயகம் பட்டம் போயிடாது. அதனால் ஜெயலலிதா உள்ளிட்ட இன்னும் சிலரையும் சேர்த்துக்கிடாரு. பொதுத் தொண்டில் இருப்பவர்கள் இப்படி நினைக்கலாமா? அப்படின்னெல்லாம் குறைபட்டுக்கிட்டவரு, ச்சும்மா போவாரா? பெரியார் மேல் கைவைக்காட்டா அரிக்காதா பூணூல்? வர்றார்.

தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாச்சார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதை பெரியாரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை தோழர் ராமசாமின்னு அழைக்கச்சொல்லி தனது மனைவி நாகம்மையாரையும் அப்படியே அழைக்கச் செய்த தலைவர் தான் பெரியார். உனக்கு ராமசாமின்னு கூப்பிடப் பிடிக்கலைன்னா மயிருன்னு கூப்பிடு என்ன குறைஞ்சு போச்சு என்று கேட்டவர் தான் பெரியார்.

சரி, அடைமொழி வைத்து அழைப்பதை திராவிடக் கலாச்சாரம்னு அடையாளப்படுத்தி கிண்டலடிக்கிற அய்யர்வால்கிட்டயும் நமக்கு ஒரு அய்யம் இருக்கு? பாவம். இவாள்லாம் அற்ப மானிடாள்.. அடைமொழிக்கு ஆசைப்படுறா.. எல்லாத்தையும் துறந்து தண்டத்தை மட்டும் சுமந்து திரிய வேண்டிய (அப்படி திரியவில்லை என்பது வேறு விசயம்) சங்கராச்சாரி சுவாமிகள், தங்களோட பெயருக்கு முன்னாடி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத் குரு லோக குருன்னெல்லாம் முழ நீளத்துக்கு பட்டப்பெயரோட சுத்திண்டு வர்றாளே.... அவாளை என்னைக்காச்சும் கேட்டிருக்கா உங்க பேனா?

இல்லை துறவியானதுக்காக புலனடக்கத்துக்கு பொன் விழான்னு கொண்டாடுறாளே (50 நாள் எதுவும் சும்மா இருந்திருப்பாரோ?அதுதான் பொன்விழாவா சினிமா பாணியில?) அதையெல்லாம் கருமாந்திரம், அசிங்கம்னு எழுதத் தோணலியோ? பெரியவா, நடுப்பெரியவா, பால பெரியவா எல்லாருக்கும் தொங்கிண்டிருக்கிற வாலை முதலில் அறுத்துட்டு அப்புறம் வாருங்காணும்...


  Bookmark and Share