செய்திக்கூடை
முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணச் சலுகையை www.tndte.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதினை, 62 லிருந்து 65 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெற்றோரைத் திட்டும் பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத்தண்டனை அளிக்கும் சட்டத்தை மகாராஷ்டிர அரசு கொண்டுவந்துள்ளது.
இலக்கியத்தில் சிறந்த பங்களிப்புக்காக, கொங்கணி எழுத்தாளர் ரவீந்திர கேலேகருக்கு ஞானபீடவிருது (2006) வழங்கப்பட்டுள்ளது.
சூரியனைவிட 320 மடங்கு பெரியதும், 1 கோடி மடங்கு பிரகாசமானதுமான புதிய நட்சத்திரத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து மான்ஸ்டர் ஸ்டார் என்று பெயரிட்டுள்ளனர்.
ரயில் விபத்தைத் தடுக்கும் வகையில் ரயில் ஓட்டுநர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள மோதிரம் போன்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளுவன் கல் பொற்றை என்ற மலையும், வள்ளுவ நாடு என்ற ஒரு நாடும் இருந்ததாக கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு மய்யம் கண்டுபிடித்துள்ளது.
இராணுவ வீரர்களுக்கான இணையதளங்களை, பெங்களூரில் உள்ள பாதுகாப்புத்துறைக் கணக்குத் தணிக்கைப் பிரிவின் முதன்மைக் கட்டுப்பாட்டு அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. விபரங்களுக்கு. www.paoascblr.gov.in. www.paomegblr.gov.in, www.paocmpblr.gov.in, www.paopctcblr.gov.in, www.paomlibgm.gov.in, www.paoparablr.gov.in.
குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கைப்பேசியைப் (செல்போன்) பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.