பதிவுகள்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ 116 கோடி செலவில் கடலோர மேலாண்மை மய்யம் அமைக்க உலக வங்கியுடன் மத்திய அரசு ஜூலை 22 இல் ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கினை முதலமைச்சர் கலைஞர் ஜூலை 24 இல் ஏற்றி வைத்தார்.
ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் அருகே உள்ள ஏவுதளத்திலிருந்து, எதிரி நாட்டின் ஏவுகணையினை நடுவானிலேயே மோதித் தகர்க்கும் அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணையான அழிப்பு ஏவுகணை ஜூலை 26 இல் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் பயணிகள் விமானம், ஜூலை 28 இல் மலையின் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 152 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெப் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு செய்யும்முறை ஜூலை 29 இல் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக குரேஷி ஜூலை 30 இல் பொறுப்பேற்றுள்ளார்.
கடல்நீரைக் குடிநீராக்கி, சென்னை நகருக்கு விநியோகம் செய்வதற்கான திட்டத்தினை மீஞ்சூரில் ஜூலை 31 இல் முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக, பிரவீன் குமார் ஜூலை 31 இல் பதவி ஏற்றுள்ளார்.
ரூ. 380 கோடி செலவில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்காவினை (டைடல் பார்க்) முதலமைச்சர் கலைஞர் ஆகஸ்ட் 2 இல் திறந்து வைத்துள்ளார்.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம், வீட்டு உரிமையாளர்கள் அதிகமான மின் கட்டணத்தை வசூலித்தால் 3 மாத சிறைத் தண்டனையுடன் 1 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என்று மின்சார ஆணையம் ஆகஸ்ட் 4 இல் அறிவித்துள்ளது.
நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வரும் விவாகரத்து வழக்குகளை, விரைவில் விசாரித்து முடிக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மேல் சபையில் ஆகஸ்ட் 4 இல் தாக்கல் செய்துள்ளார்.
காஷ்மீரில் ஆகஸ்ட் 5 இல் பெய்த கனமழைக்கு 147 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை துறைமுகம் அருகே 2 சரக்குக் கப்பல்கள் ஆகஸ்ட் 7 இல் மோதிக்கொண்டதில், ஏராளமான எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
காஞ்சி, மதுரை, நெல்லை உள்பட 10 மாவட்டத் தலைநகரங்களில் நடமாடும் நீதிமன்றங்களை அமைக்க, ஆகஸ்ட் 7 இல் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக பள்ளி மாணவ மாணவிகள் தொழிற்சாலைகளில் நேரடி அனுபவம் பெறும் திட்டத்தை, ஆகஸ்ட் 6-இல் மேயர் மா. சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.