Home | Contact us
 

ஆகஸ்ட்1631_2010


குரல்

இணைய தளத்திலிருந்து மற்றவர்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதால் மாணவர்களின் தனித்தன்மை வெளிப்படாமல் போகிறது. இது, மாணவர்களின் அறிவுத்-திறனை முற்றிலுமாகப் பாதிக்கிறது.

- பவான் டங்கல், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்

அகழ்வாராய்ச்சி நடத்தும்போது, நாடுகளிடையே இருந்த வணிகத் தொடர்புகள், பழங்கால மக்களின் வாழ்க்கைமுறை தெரிய வரும். கடல்வாழ் இடமான பூம்புகாரிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

- நடன காசிநாதன்
மேனாள் இயக்குநர், தொல்லியல் துறை

என் தாய்நாடு தற்போது அணு ஆயுதம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஆனால், இன்னும் அங்கு தண்ணீர்ப் பிரச்சினை உள்ளது. வறுமையிலிருந்து மீள்வதற்கு லட்சக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர்.

- ராஜ்மோகன் காந்தி (காந்தியாரின் பேரன்)

அரசுகளே பெரிய அளவிலான வழக்கு-தாரர்களாக உள்ளன. நீதிமன்றங்களில் வழக்கு-கள் அதிகரித்துக் கொண்டு போவதைத் தடுக்கவும், நிலுவை வழக்குகளைக் குறைக்கும் நோக்கிலும் நீதிமன்றத்தை அரசுகள் அடிக்கடி அணுகுவதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

- பிரதிபா பாட்டீல், இந்தியக் குடியரசுத் தலைவர்

தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் தாய் மீது மிகவும் அன்பாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி, அறிவு வளர்ச்சி அதிகமாகும்.

- குஷ்பு, திரைப்பட நடிகை


  Bookmark and Share