பளீர்
இந்தியாவில்
இந்தியாவில் 8 மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக அய்.நா. ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதுமுள்ள இந்திய உணவுக் கிடங்குகளில் 60 லட்சம் டன் உணவு தானியங்கள் இடப்பற்றாக்குறை காரணமாக, திறந்த வெளியில் போதுமான பாதுகாப்பின்றி சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் 61,000 டன் உணவு தானியங்கள் அழுகி விட்டதாக மத்திய அரசு அதிகாரப் பூர்வமான தகவலைக் கூறியுள்ளது.
மேலும், பஞ்சாப் அரியானா மாநிலங்களில் 15.5 லட்சம் டன் கோதுமை பாதுகாக்கவும் முடியாமல், விற்கவும் முடியாமல் உள்ளதாம். கிடங்குகளில் சேமித்து வைக்கப்-பட்டுள்ள உணவு தானியங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் ஏழைகளுக்காவது கொடுத்து விடுங்கள் என்று உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் தலைமையிலான குழு ஆய்வு செய்ததில், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள மக்களுக்கு, பொது விநியோகக் கடைகள் மூலம் விற்றுவிடலாம் என அரசுக்கு இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
உணவுக் கிடங்குகளில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பின்றி வைக்கப்-பட்டு உபயோகமின்றிப் போனது பல ஆயிரம் டன்கள். மீதமுள்ள உணவு தானியங்களை எலிகள் வயிராற உண்டு கொழுக்கின்றனவாம். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள _ மேல் உள்ள மக்களுக்கு இந்த உணவு தானியங்கள் உடனடியாகப் (ஓரளவு நல்ல நிலையில் உள்ளபோதே) பயன்படாதாம்.
முதுகை ஒடிக்கும் புத்தகச் சுமை
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகள் தங்கள் உடல் எடைக்குச் சமமான அளவில் புத்தகங்-கள், தண்ணீர் பாட்டல், மதிய உணவு அடங்கிய பையினை முதுகில் சுமந்து பள்ளிக்குச் செல்கின்றனர். காலை-யில் பள்ளி ஆரம்பமாகும் நேரம் 8.30 _ 9 மணிக்குள் இருப்பதால் காலை உண-வினைச் சரியாகச் சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளே அதிகம்.
இப்படியொரு சூழ்நிலையில், புத்தகச் சுமையுடன் பேருந்தில் ஏறி இறங்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளியினுள் செல்லும்போதே சோர்வடைந்தும் விடுகின்றனர். பள்ளியிலும், எந்த நேரமும் படிப்பு, பயிற்சி வகுப்புகள் என இருப்பதால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கும் ஆளா-கின்றனர். புத்தகப் பைகளைத் தொடர்ந்து சுமந்து செல்வதால் குழந்தைகளின் வளர்ச்சியும் பெரிதளவில் பாதிக்கப்-படுகிறது.
பள்ளி செல்லும் குழந்தைகள் அதிக எடையுள்ள புத்தகப் பையைச் சுமந்து செல்கின்றனர். இதனால், அவர்களின் முது-கெலும்பு, தண்டுவடம் பகுதி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. தசை நார்கள் கெட்டுப் போகிறது. முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, வாரத்திற்குச் சுமார் 10 பள்ளிக் குழந்தைகள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
5 வயது முதலே குழந்தைகள் முதுகு வலிக்கு ஆளாகின்ற நிலைமை தற்போது உண்டா-கியுள்ளது. மேலும், அதிக எடையால் புத்தகப்பை பின்னோக்கி இழுக்கப்படும் போது அக்குளில் இருந்து கைகளுக்குப் போகும் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதுவே தொடர்ந்து நிகழ்ந்தால், கைகள் செயலிழந்து போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் விளை-யாட்டு, பொழுதுபோக்கு என சந்தோசமாக இருக்க வேண்டும். அப்போது-தான் குழந்தைகளின் மனநிலை சரியாக இருக்கும் என்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை எலும்பு மூட்டு சிகிச்சைப் பிரிவின் தலைவர் (டீன்) டாக்டர் முகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.