குரல்

பிற்படுத்தப்பட்ட இன பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.வில் எழுப்பமுடியாது.

- பாரதிய ஜனசக்தி தலைவர் உமாபாரதி


அப்போதைய உ.பி.முதலமைச்சர் கல்யாண்சிங் (பா.ஜ.க) உச்சநீதிமன்றத்திலும் தேசிய ஒருமைப்-பாட்டுக் கூட்டத்திலும், மத்திய அரசிடமும் பாபர் மசூதி பாதுகாக்கப்படும் என்று மீண்டும் வாக்குறுதி அளித்தார். அப்போதைய நரசிம்ம-ராவ் அரசு இந்த வாக்குறுதியை நம்பியதுதான் தவறு.

- மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்


மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் கேள்வி கேட்க வேண்டிய உறுப்பினர்கள், நேரத்துக்கு வருவதில்லை; மக்களவையைபு பாதித்த வைரஸ் மாநிலங்களவையையும் பாதித்துவிட்டது.

- மாநிலங்களவைத்தலைவர் ஹமீத் அன்சாரி.


இடது சாரிகளின் ஆதரவுத்தளம் சுருங்கி வருகிறது. அரசியல் களத்தை அவர்கள் இழந்துவிட்டனர். மக்கள் நம்பிக்கையை இடதுசாரிகள் இழந்து வருவது வேதனை அளிக்கிறது.

- முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி.


பாலியல் தொழிலை தடுக்க சட்டத்தால் முடியவில்லை என்றால் அதை ஏன் சட்ட
ரீ-தியாக அங்கீகரிக்கக்கூடாது? தண்டனைச் சட்-டங்கள் மூலம் உலகின் எந்தப் பகுதியிலாவது பாலியல் தொழிலைத் தடுத்ததாக உதாரணம் காட்டமுடியுமா?

- வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர்பண்டாரி, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் கூறியது


இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் தினந்தோறும் ரூ20க்கு கீழ்தான் வருவாய் ஈட்டுகிறார்கள். 27 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள்.

- மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி

Archive's



2010


Warning: include(../../../archives/2009.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/unmaionl/public_html/2010/january/01-15_2010/page19.php on line 110

Warning: include() [function.include]: Failed opening '../../../archives/2009.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/unmaionl/public_html/2010/january/01-15_2010/page19.php on line 110

Warning: include(../../../archives/2008.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/unmaionl/public_html/2010/january/01-15_2010/page19.php on line 111

Warning: include() [function.include]: Failed opening '../../../archives/2008.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/unmaionl/public_html/2010/january/01-15_2010/page19.php on line 111