குரல்

இந்தியாவில் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் தலையீடு வந்ததால் இந்திய விஞ்ஞானிகள் நாம் திரும்பும் சூழல் அமையவில்லை.

- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்


மும்பைக்குள் வெளி மாநிலத்தவர் நுழைய லைசன்ஸ் முறை கொண்டு வரப்பட வேண்டும்.

- சிவசேனா கட்சி


ஆந்திர, கருநாடகப் பகுதிகளில் பழந்தமிழனின் தொடர்ச்சி இல்லாததால் அங்கு காப்பியங்கள் என்றாலே ராமாயணம், மகாபாரதம் என்றாகி விட்டது. தமிழ் என்றால் பகை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

- நிதி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன்


மத சுதந்திரம் வேண்டும் என்பதைவிட, மதத்திலிருந்து சுதந்திரம் வேண்டும். மத நிறுவனங்களின் வருமானத்திற்கு வரிபோட வேண்டும்.

- ஆந்திர நாத்திக மையத் தலைவர் டாக்டர் விஜயம்


யாராவது உங்களை (பெண்களை)த் தாக்க வந்தால் குடை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் திருப்பித் தாக்குங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.

- சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன்.


குடும்ப நீதிமன்றங்கள், வீட்டைப் போல் இருந்தால் பெண்கள் தைரியமாகப் புகார் அளிக்க வருவார்கள்.

- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே