மடல் ஓசை
ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா? தலையங்கம் ஜூன் உண்மை இதழில் படித்தேன். சிங்கப்பூரின் நவீன சிற்பி ஷி குவான் யூ கூற்றுப்படி, கொடுங்கோலன் ஆயிரம் இட்லர்முசோலினியைவிட இனவெறி பிடித்ததிருத்த முடியாத தமிழ்ப்பகைவன் பக்சே என்பது 100க்கு 100 முழு உண்மை. சிங்களர்கள் போன்றே தமிழர்களும் இலங்கையின் பூர்வீகக் குடிகளே என்பதுதான் வரலாற்று உண்மையாகும். அடங்கிக் கிடக்க மாட்டான் தமிழன், ஆர்ப்பரித்து தோள் தட்டி, மங்காத வாழ்வுடைய சிங்கத் தமிழன் பொங்கி எழுவான் என்ற சிங்கப்பூரின் அரசியல்ஞானி, தீவிரவாதி, பயங்கரவாதி அரக்கன் ராஜபக்சே பற்றிக் கூறியது மிகச் சரி. யுத்தக் குற்றவாளியான சிங்கள வெறியன் பயங்கரவாதி ராஜபக்சேவுக்கு, தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு பாடம் கற்பிப்பதுடன், தமிழர்தம் நல்வாழ்க்கைக்கு ஆவன செய்ய வேண்டுமென தாங்கள் சொன்னது நன்று. தந்தை பெரியாரின் தமிழ்மொழி குறித்த கட்டுரை தமிழே, தெலுங்கு, கன்னடம், மலையாளமாக உள்ளதென அய்யா பெரியார் மொழிவது அறிவுப் பொருத்தமானது - வே.ரா. கோவிந்தசாமி உண்மையில் (ஜூன் 1630) வை. ஜவஹர் ஆறுமுகம் எழுதிய ஆன்மீகத்தில் அசல் என்ன? நகல் என்ன? கட்டுரையைப் படித்தேன். என் எண்ணத்தைப் பிரதிபலித்திருந்தது. சேற்றில் கால் வைத்து வழுக்கி விழுந்தால்... எழுவதுதான் இயல்பு, அது அவமானம் அல்ல. ஆனால், சாரு நிவேதிதா விழுந்ததை அவமானமாக நினைத்துச் சேற்றிலேயே புரண்டுகொண்டு இருக்கிறார். ஏமாந்து விட்டேன்... இனி எச்சரிக்கையாக இருப்பேன் என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. இவரோ, தன்மூக்கு அறுபட்டது போதாதென்று அனைவரையும் மூக்கறுந்த மூளிகளாக்கவே முனைகிறார். எச்சரிக்கை. கட்டுரைக்குப் பாராட்டுகள். -டி.ஆறுமுகம், விஜயமங்கலம். உண்மையில் ஆசிரியர் எழுதி வெளிவரும் அய்யாவின் அடிச்சுவட்டில் எனும் தொடர் கட்டுரை படிக்க மிகவும் விறுவிறுப்பாகவும், ஆவலாகவும் உள்ளது. அய்யா பெரியார் வாழ்ந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது. அய்யா காலத்தில் நிகழ்ந்த சின்னஞ்சிறு நிகழ்வுகளை மிகவும் நுணுக்கமாகவும், தெளிவாகவும் படைத்திருப்பது ஆசிரியர் அவர்களின் கடுமையான முயற்சியையும், உழைப்பையுமே சாரும். அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையை, திராவிடனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் படித்து, திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாய் அமையும். - வெங்கட. இராசா, ம.பொடையூர் |
||||