குரல்
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கு அரசு, நீதித்துறை மற்றும் பார் அசோசியேசன் ஆகியவை இணைந்து கூட்டுமுயற்சி எடுக்க வேண்டும். - மன்மோகன்சிங்,
கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டவரைவு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகிய இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டவரைவுகளை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததற்கு நீதிமன்றத்தின் குறுக்கீடே முக்கியக் காரணமாகும். - கே.ஜி.பாலகிருஷ்ணன்,
காதலித்துக் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கும், கணவனால் கைவிடப்-பட்டவர்கள், விவாகரத்துப் பெற்ற பெண்-களுக்கும் ரேஷன் கார்டு வழங்குவதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. -எ.வ.வேலு ஒவ்வொரு ஆசிரியரும், தான் பெற்ற பிள்ளை எப்படி முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கிறோமோ, அதைப்போல தன்னிடம் படிக்கும் மாணவர்களும் முன்னுக்கு வரவேண்டும் என நினைத்துப் பாடம் நடத்த வேண்டும். - .திருவாசகம்
|
|||||